Sunday, December 28, 2014

On Sunday, December 28, 2014 by Unknown in ,    
கிரானைட் கற்களுக்காக அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அதிர்ச்சி
மதுரை அருகே மேலூர், கீழவளவு பகுதிகளில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதால் பி.ஆர்.பி. நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் மீது புகார் செய்யப்பட்டது. இதை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் நேற்று முன்தினம் மாலை முதல் 3–வது கட்ட விசாரணையை தொடங்கினர். சகாயம் விசாரணை தொடங்கியது முதல் நேற்று வரை சுமார் 300–க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) கீழவளவு பொக்கிஷ மலையை சகாயம் ஆய்வு செய்தார். அப்போது 71 ஏக்கர் நிலத்தில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நீண்டிருந்த பொக்கிஷ மலையை துண்டு, துண்டாக வெட்டி கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. 1993–ம் ஆண்டு முதல் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
மேலும் மலைக்கு மேல் உள்ள சர்க்கரை பீர் தர்கா, கரைய கருப்பன் கோவிலுக்கான பாதைகளும் அழிக்கப்பட்டு இருந்தன. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 47 ஏக்கர் சிரமாணிக்கம் கண்மாயில் கழிவு கற்கள் கொட்டி வைக்கப்பட்டு இருந்ததால் பல கண்மாய்களுக்கு 5 ஆண்டுகள் வரை தண்ணீர் செல்ல முடியாமல் நூற்றுக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டிருந்ததும் ஆய்வில் தெரியவந்தது. இதை நேரில் ஆய்வு செய்த சகாயத்திற்கு அதிர்ச்சியை அளித்தது.
இதேபோல் வேறு எங்கும் விதி மீறல்கள் நடந்துள்ளதா என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சகாயம் கேட்டபோது அவர்கள் பதில் கூறாமல் மவுனம் சாதித்தனர். இதனால் எரிச்சல் அடைந்த சகாயம், இதேபோல பொதுமக்கள் வேறு புகார்கள் அளித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். மேலும் விதி மீறல்கள் குறித்து சான்றிதழாக தர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதேபோல கீழவளவு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் 200 அடி பள்ளம் தோண்டி கற்கள் வெட்டப்பட்டிருந்ததை கண்ட சகாயம் இது குறித்தும் அதிகாரிகளிடம் விபரம் கேட்டார். ஆனால் அவர்கள் அளித்த பதில் சகாயத்திற்கு திருப்தி அளிக்கவில்லை.
இது குறித்து முழு அறிக்கை தாக்கல் செய்யும் படி ஆர்.டி.ஒ. செந்தில் குமாரிக்கு சகாயம் உத்தர விட்டார்.
இந்த நிலையில் சகாயம் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பாதிக்கப்பட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.
இன்னும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை பி.ஆர்.பி. நிறுவனம் அடி மாட்டு விலைக்கு வாங்கி குவித்துள்ளதாகவும், இந்த இடங்களில் பல பகுதிகளில் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை அடுக்கி வைத்து இருப்பதாகவும் இந்த முறைகேடுகளுக்கு வருவாய்த்துறை, டாமின், கனிமவளத்துறை, சில போலீஸ் அதிகாரிகள், குவாரி அதிபர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக சகாயத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
கடந்த 2 நாட்களாக கீழவளவு பகுதிகளில் ஆய்வு செய்த சகாயம் இன்று புதுத்தாமரைபட்டியில் ஆய்வு செய்தா

0 comments: