Sunday, December 28, 2014

On Sunday, December 28, 2014 by Unknown in ,    
திருமங்கலத்தில் இன்று, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 8 பஸ்கள் மட்டுமே ஓடியது.

ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் திட்டமிட்டடி நாளை முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் மதுரை திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பணிபுரியும் 665 தொழிலாளர்கள் இன்று, பஸ்களை இயக்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த பணிமனையில் 105 பஸ்கள் உள்ளன. இதில் 8 பஸ்கள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் கிளம்பிச் சென்றன.

திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

0 comments: