Monday, December 22, 2014

On Monday, December 22, 2014 by Unknown in ,    
உலகம் முழுவதும் இணையம் வழியாக நடக்கும் ஒரு மோசமான மோசடிக்கு ஆயிரக்கணக்கான ஆண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.


 
 
ஆங்கிலத்தில் "செக்ஸ் டார்ஷன்" என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மோசடி அடிப்படையில் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பது. இதன் முதற்கட்டம் என்பது சமூக வலைத்தளங்களின் மூலம் ஆண்களை வசீகரித்து இழுப்பது. பிறகு அவர்களை அவர்களின் குடும்பத்தவர் மற்றும் நண்பர்களிடம் காட்டிக்கொடுப்பேன் என்று மிரட்டி பணம் பறிப்பது.
 
இப்படி பணம் பறிக்கும் கும்பல்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கின்றன. சமீபகாலத்தில் இது ஒரு பெருந் தொழிலாகவே வளர்ந்திருப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
 
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருக்கும் குடிசைகள் இந்த இணையவழி மிரட்டல் பணம் பறிக்கும் குற்றக் கும்பல்களின் தலைமையகமாக மாறிவருவதாக காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
 
இந்த மோசடிப்பேர்வழிகள் ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான அமெரிக்க டாலர்களை கறக்கிறார்கள். இப்படி செயற்படும் இணைய மிரட்டல் கும்பல்களை சமீபத்தில் இணைய மோசடிகளைக் கண்டுபிடிக்கும் காவல்துறையினர் சோதனை செய்தபோது இதற்காக முழுநேர வேலையில் இளம் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
 
ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்கள் என்று ஏதோ தொழிற்சாலை பணியாளர்களைப்போல இவர்கள் வேலை செய்கிறார்கள்.
 

0 comments: