Monday, December 22, 2014

On Monday, December 22, 2014 by Unknown in ,    
இன்னுமொருவரும் தூக்கிலிடப்படுவார்-பாகிஸ்தான்
பாகிஸ்தானின் பேஷாவார் நகரில் செவ்வாயன்று நடந்த பள்ளிக்கூட படுகொலைக்கான பதில் நடவடிக்கையாக, இதுவரை மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு இருந்த இடைக்கால தடையை நீக்கி, மேலும் ஒரு கைதியை தூக்கில் இடப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

10 வருடங்களுக்கு முன்னதாக தற்செயலாக ஒரு கொலையை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட போது அந்த குற்றவாளிக்கு 14 வயது மாத்திரமே.
 
பழிவாங்கும் எண்ணத்தில் இரத்தவெறி கொண்ட மரணதண்டனையை மீண்டும் ஆரம்பிப்பது என்பது, பள்ளிக்கூடத் தாக்குதலாளிகளை கண்டறிவதற்கான முயற்சிகளை தடம்புரளச் செய்துவிடும் என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.
 
ஏற்கனவே இரு கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது.
 
தீவிரவாதிகளை சிறைகளில் இருந்து காப்பாற்றுவதற்காக தலிபான்கள் செய்யக் கூடிய எந்த நடவடிக்கையையும் முறியடிக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் சிறைச் சாலைப் பாதுகாப்பிலும் உதவுவார்கள் என்று பாகிஸ்தான் அரசு தற்போது கூறியுள்ளது.

0 comments: