Sunday, December 28, 2014

On Sunday, December 28, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எள் ஆகிய வேளாண் விளைபொருட்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று காலை நடைபெற்ற ஏலத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகளின் 28 ஆயிரத்து 622 தேங்காய்கள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இந்த தேங்காய்கள் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ.26.80–க்கும், குறைந்தபட்சமாக 1 கிலோ ரூ.16.80–க்கும் ஏலம் விடப்பட்டது.
மேலும் 39 மூடைகள் கொப்பரை தேங்காய்களுக்கு டெண்டர் கோரப்பட்டதில் அதிகபட்சமாக 1 கிலோ ரூ.101.15–க்கும், குறைந்தபட்சமாக 1 கிலோ ரூ.60.15–க்கும் ஏலம் விடப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொப்பரை தேங்காய்களுக்கு ரூ.6.05 வரை கூடுதலாக விலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலங்களில் கரூர், கருமாண்டம்பாளையம், நடுப்பாளையம், சிவகிரி, காங்கயம், முத்தூர் பகுதிகளை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

0 comments: