Wednesday, January 28, 2015
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ்
சரகத்துக்குட்பட்ட தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன்
(வயது35), ராணுவவீரர். இவரது மனைவி கோமதி (28). குடும்ப பிரச்சினை காரணமாக
இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களின் விவாகரத்து வழக்கு
கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்நிலையில் தொட்டியபட்டியில் கோமதியின் பெரியப்பா பொன்னையாவின் பேரன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கோமதி தனது தந்தை சின்னச்சாமி, தாய் ராமுத்தாய், சகோதரிகள் பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகியோருடன் வந்திருந்தார். அப்போது அங்கு வந்த கமலக்கண்ணனுக்கும், கோமதிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் அவரது சகோதரர் பரமசுந்தரம் ஆகியோர் கோமதி, சின்னச்சாமி, ராமுத்தாய் உள்பட 5 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கொடூரமாக கொன்ற கமலக்கண்ணன், பரமசுந்தரம் மற்றும் உடந்தையாக இருந்த இவர்களின் தாயார் சுப்புலட்சுமி ஆகிய 3 பேரை கைது செய்து உசிலம்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று காலை ஆஜர்படுத்தினர். நீதிபதி கிறிஸ்டின்பபிதா, கொலையாளிகள் 3 பேரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி கமலக்கண்ணன், பரமசுந்தர் ஆகியோர் மதுரை சிறையிலும், சுப்புலெட்சுமி திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று மாலை 5 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்து சின்னச்சாமியின் மகன் தங்கப்பாண்டி, மருமகன் முத்து (கொலை செய்யப்பட்ட பாக்கியலட்சுமியின் கணவர்) ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரின் உடல்கள் மங்கல்ரேவு சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் திடீரென பிணங்களை எரிக்க விடாமல் முற்றுகையிட்டனர்.
அவர்கள் கூறுகையில், 5 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறாகள். ஆனால் இதுவரை யாரும் ஆறுதல் கூட தெரிவிக்கவரவில்லை என்று ஆவேசத்துடன் கூறினர். அப்போது அங்கு வந்த போலீஸ் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment