Monday, August 17, 2015

On Monday, August 17, 2015 by Unknown in ,    
Displaying 003.jpg
சிவகாசியில் அரசு சார்பில் நடந்த விழாவில் 3131 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை அமைச்சர் வழங்கினார்.
சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில் விலையில்லா பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
இதில், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது: ஏழை மக்கள் பயனடையும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில் 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சிறப்புத் திட்டத்தின் மூலம் கடந்த மூன்றாண்டுகளில் 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 4,5ஆம் கட்டமாக மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்விழாவில் 3131 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வசந்தா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஜி.பாலசுப்பிரமணியம், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சி.சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் சுடர்வள்ளி, சிவகாசி நகராட்சித் தலைவர் கதிரவன், துணைத் தலைவர் அசன்பக்ருதின், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

0 comments: