Wednesday, September 23, 2015

On Wednesday, September 23, 2015 by Unknown in , ,    

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

நமக்கு நாமே சுற்றுப்பயணத்தின் நான்காம் நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு துறையைச் சேர்ந்த மக்களிடம் உரையாடினார். ஸ்ரீவைகுண்டம் பகுதியில்  விவசாய மக்களுடன் உரையாடினார். அங்கு 46ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் எப்படி 7ஆயிரம் ஏக்கர் என்ற அளவுக்கு சுருங்கிப்போயிற்று இதை கேட்கும்போதும், இந்த ஆட்சியில் விவசாயத்தின் வீழ்ச்சியை கண்ணுறுவதும் மிக்க வேதனையைத் தருகிறது என்றார்.

தொடர்ந்து அவர் தூத்துக்குடியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் தங்களுடைய வணிகத்துக்கு அரசு கடன்கள் வழங்காதது குறித்தும், சுய உதவிக்குழுவின் கட்டமைப்பு எவ்வாறு படிப்படியாக சரிந்து வருகிறது என்பதையும் பகிர்ந்துகொண்டனர். அ.தி.மு.க. அரசு, சுய உதவிக் குழுக்களுக்கு 25 சதவிகித மானியத்தில் 10 லட்ச ரூபாய் கடன்கள் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அதுபோன்ற கடன்கள் எதுவும் இந்தப் பகுதியிலுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படவில்லை என்றார்.


தொடந்து தூத்துக்குடியில் உள்ள உப்பளத்திற்கு சென்று தொழிலாளர்களை சந்தித்தார். கடினமான இந்த தொழிலுக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது. எப்பொழுதும் வேலை கிடைக்கிறதா என்பது பற்றி கேட்டறிந்தார். பின்னர் தூத்துக்குடி வஉசி மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சென்றார். பின்னர் அவர், ஹோட்டல் பானு பிரிந்தாவனில் மாணவர்களோடு கலந்துரையாடி, அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.



அப்போது மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிகளை விரைவாக அறிவிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்களை விடுத்துனர். அப்போது ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதில் எங்களைவிட நீங்கள் நம்பிக்கையாக இருக்கிறீர்கள். உங்களின் நம்பிக்கை நிறைவேறும். அப்போது உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார். 

0 comments: