Thursday, March 17, 2016

On Thursday, March 17, 2016 by Tamilnewstv in    
திருச்சி 16.3.16                                                                            சபரிநாதன் 9443086297
திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்று அரசியல் பாதை விளக்க தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியபோது பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பாதிப்பும் ஏமாற்றத்தை அளித்துள்ளது இந்த விளை ஏற்றத்தை மக்கள் எதிர்க்க வேண்டும் விலை ஏற்றத்தை எதிர்த்து 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என்றும் 3ஆண்டுகளில் சாதிக்கொலை 89 நடந்துள்ளது சாதிக்கொலையை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று திமுக கூட்டுக்கட்சி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேட்;ட பொழுது அப்போதைய முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் சாதிக்கொலையே இல்லை என்று அதற்கு தனி சட்;டம் தேவை இல்லை என்றும் தெரிவித்தார் அப்பொழுது முக ஸ்டாலின் மௌனம் ஏன் சாதித்தார் மறு;ப்பு தெரிவிக்கவில்லை பின்னர்தான் கோகுல்ராஜ் மற்றும் சங்கர் கொலை நடந்துள்ளது என்றும் பெரியாரின் கோட்பாடு கைவிடப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ்கட்சிக்கு மாற்று பாஜாக இல்லை மாற்று திமுக அஇஅதிமுக இல்லை என்றும் மக்கள்நலக்கூட்டணிதான் இதற்கு மாற்று என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஜங்சன் பகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார் பக்ரூதீன் பாபு வரவேற்புரையாற்றினார் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்  மாநிலக்குழு ஸ்ரீதர் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா சிறப்புறையாற்றினர் பீமநகர் கிளை செயலாளர் சத்தியமூர்த்தி நன்றியுரையாற்றினார்.

0 comments: