Thursday, March 03, 2016

On Thursday, March 03, 2016 by Tamilnewstv in    
திருச்சி 3.3.16
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சிவசேனா கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் மாநில தலைவர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது.
ரமேஷ்பாபு கூறுகையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துத்துவ அமைப்புகளை ஒருங்கிணைத்து பெரும்பான்மை மக்களை மதிக்கின்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கணிசமான இடங்களில் போட்டியிடுவது எனவும் இது தொடர்பாக தமிழக அரசியல் நிலைமையை மும்பை தலைமைக்கு வருகிற 5ம்தேதி நேரில் சென்று தேசிய தலைவர் உத்தவ்தாக்ரே அகில இந்திய செயலாளர் அனில் தேசாய்ஜி ஆகியோருடன் கலந்து பேசி அவர்களின் ஆலோசனைப்படி தேர்தல் சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திண்டுக்கல்லில் பயங்கராவாதம் தலை தூக்குகிறது இந்துக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பேசமுடியவில்லை கருத்து பேசும் இந்து தலைவர்களை பொது இடத்தில் வைத்து தாக்கும் அபாயமான சு10ழ்நிலை உறுவாகிவிட்டது என்றும் இதன் பின்னனியில் தடைசெய்யப்பட்ட அல்உம்மா அமைப்பினர் திண்டுகல்லில் தளம் அமைத்துவிட்டதாக தெரிகிறது இது தேர்தல் காலம் என்பதால் காவல் துறை பயங்கரவாதிகள் மீது மென்மையான போக்கை கடைபிடிக்கக்கூடாது தமிழக முதல்வர் திண்டுக்கல் மீது தனிக்கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் இது போன்ற தருணத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய இயக்கங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது மத்திய மாநில அரசுகள் முழு கவனம் கொடுத்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கோவை குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும் என சிவசேனா எச்சரிக்கிறது எனவும் பெரம்பலூரில் 32 அங்கீகாரம் இல்லாத கல் குவாரிகள் இயங்கிவருகிறது அதை அரசுஏற்று நடத்தவேண்டும் என்றும் கூறினார்
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் நாகை தங்கமுத்து கிருஷ்ணன் மாநில இளைஞரணி தலைவர் பாலஜி மாநில பொதுச்செயலாளர் கலைவாணன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாவை.சிவகுமார் மாநிலசெயலாளர் முருகன் மாநில ஆலோசகர் திருச்சி காளிதாஸ் மற்றும் குருமூர்த்தி ஆகியோர் கலந்த கொண்டனர்.

பேட்டி ரமேஷ்பாபு

0 comments: