Sunday, March 20, 2016

On Sunday, March 20, 2016 by Tamilnewstv in    
.

பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை ஏற்று கல்லூரியின் செயலர் திரு ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.  இயக்குனர் முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வர் முனைவர் பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக காந்திகராம் பல்கலைக்கழக முன்னால் துணை வேந்தர் திரு இராமசாமி  கலந்து கொண்டார்.

முன்னதாக கல்லூரியின் அறிக்கையை கல்லூரி முதல்வர் திரு பாரதிராஜா பதிவு செய்தார். அதில் மாணவ மாணவிகளின் சாதனைகள்இ பேராசிரியர்களின் சாதனைகளை குறிப்பிட்டார்.

பின்னர் பட்டமளிப்பு உரை நிகழ்த்திய காந்திகராம் பல்கலைக்கழக முன்னால் துணை வேந்தர் திரு இராமசாமி தனது உரையில் முதலாவதாக புதிய பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் தொடர்ந்து பேசுகையில்இ மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை வளர்த்து கொள்வதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார். மேலும் மாணவர்கள் உயர்ந்த எண்ணங்களையும்இ சிந்தனைகளையும் வளர்த்துகொண்டால் வாழ்வில் பல சாதனைகளை படைக்கலாம் என்று கூறினார்.

மீண்டும் ஒருமுறை புதிய பட்டதாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி மேலும் வளர வேண்டும் என  வாழ்த்தினார்.

பிறகு பல்வேறு பொறியியல் பாடபிரிவுகளை சேர்ந்த சுமார் 200 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

பொறியியல் பாடபிரிவுகளில் இயந்தரவியல்இ மின்னியல்இ தொடர்பியல்இ கணினியல் இ தகவல் தொழில்நுட்பம்இ மற்றும் முதுகலை பாடங்களில் மேலாண்மைஇ முதுகலை பொறியியல் பட்ட படிப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.



புகைப்படத்தில்: பல்கலைகழக ரேங் பெற்ற மாணவன் சுரேஷ் குமார் சான்றிதழ் வழங்கும் காந்திகராம் பல்கலைக்கழக முன்னால் துணை வேந்தர் திரு இராமசாமிஇ உடன் கல்லூரி செயலர் திரு ராஜசேகரன்இ இயக்குனர் திரு பாலகிருஷ்ணன்இ முதல்வர் திரு பாரதிராஜாஇ மற்றும் அனைத்து பாடபிரிவுகளின் துறை தலைவர்கள்.

0 comments: