Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருப்பூர் பகுதியில் வழிபறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை 15.வேலம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வழிபறி கொள்ளை
திருப்பூரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் பெரியார் காலனி பகுதியில் பிரிண்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ராஜேஸ் கண்ணாவுடன் பணம் வசூல் செய்வதற்காக 15.வேலம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சம்பத்குமார் மற்றும் ராஜேஸ் கண்ணா ஆகியோரை வழிமறித்து அரிவாளை காட்டி பணத்தை கொடுக்கும் படி மிரட்டி உள்ளனர். மேலும் சம்பத்குமாரிடம் இருந்த ரூ.500–ஐயும், செல்போனையும் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓட முயன்ற போது அக்கம்பக்கத்தினர் கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக 15.வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
5 பேர் கைது
விசாரணையில் அவர்கள், திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த அரசு என்பவரின் மகன் வினோத்(வயது 23), கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கெவின் பிரமீஸ்(38), போயம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆதிராஜ் (25), பி.என்.ரோடு பகுதியை சேர்ந்த சர்புதீன்(26), வளையங்காடு பகுதியை சேர்ந்த பாலகணேஷ்(26) என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மொபைல் மற்றும் கிரிக்கெட் மட்டை திருடிய வழக்கிலும், திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் மற்றும் சென்ரல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதன்பேரில் நேற்று முன்தினம் இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
அண்ணா பிறந்தநாளையொட்டி நடந்த சைக்கிள் போட்டியில் திருவள்ளுவர் அரசுப்பள்ளி மாணவ–மாணவிகள் பரிசுகளை பெற்றனர்.
அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு சார்பில் முன்னாள் முதல்–அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 106–வது பிறந்தநாளை முன்னிட்டு 2014–2015–ம் ஆண்டிற்கான சைக்கிள் போட்டி 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
போட்டிக்கு அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சைக்கிள் போட்டியை தொழில் அதிபர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் இராமலிங்கம் வரவேற்று பேசினார். போட்டியில் 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களும், 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் உள்பட 300–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்கள்
இதில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளின் பெயர் வருமாறு:–
15 கிலோமீட்டர் தூரத்திற்கான 13 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷ்குமார் முதல் இடத்தையும், சூரியபிரகாஷ் 2–ம் இடத்தையும், ஜெயக்குமார் 3–ம் இடத்தையும் பிடித்தனர். 20 கிலோ மீட்டர் தூரத்திற்கான 15 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களான ஆகாஷ் முதலிடத்தையும், மணிகண்டன் 2–ம் இடத்தையும், கார்த்திக் 3–ம் இடத்தையும் பெற்றனர். 20 கிலோ மீட்டர் தூரத்திற்கான 17 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் நவீன்குமார் முதல் இடத்தையும், திருப்பூர் சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் நவநீதகிருஷ்ணன் 2–ம் இடத்தையும், திருப்பூர் சின்னச்சாமியம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திகேயன் 3–ம் இடத்தையும் பிடித்தனர்.
மாணவிகள்
10 கிலோமீட்டர் தூரத்திற்கான 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளான சவும்யா, சபீனா, தாரணி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். 15 கிலோமீட்டர் தூரத்திற்கான 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா முதல் இடத்தையும், மைக்ரோகிட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிதர்ஷினி 2–ம் இடத்தையும், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா 3–ம் இடத்தையும் பிடித்தனர். 15 கிலோமீட்டர் தூரத்திற்கான 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளான ரம்யா, சாந்தி, பிரியதர்ஷினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
பரிசு
இதைதொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் முன்னாள் சேர்மன் கிருஷ்ணன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசும், முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ்களையும் வழங்கினார். முடிவில் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுனர் பிரபு நன்றி கூறினார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. 2–ம் மண்டல பாசனத்திற்கு பிரதான கால்வாயில் கடந்த 7–ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனையடுத்து தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் உடுமலை அருகே பிரதான கால்வாயில் பூலாங்கிணறு கிளை வாய்க்கால் ஷட்டர் அருகே இருந்து சர்க்கார்புதூர் கிராமத்தை சேர்ந்த கஞ்சிமலைக்கவுண்டர் மற்றும் அவரது மகன்கள் ராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்திற்கு 4 பைப்லைன் மூலம் தண்ணீர் திருடியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து குழாய்கள் உடனடியாக உடைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று உடுமலை தாசில்தார் சைபூதின் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பூபதி, நிலவருவாய் ஆய்வாளர் சிவனேசன், கிராம நிர்வாக அலுவலர் பால்வாசகம், கிராமஉதவியாளர், பி.ஏ.பி. லஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தணிக்கை செய்தனர். மேலும் இதுகுறித்து தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையினால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு அதிக சேதம் உண்டானது. அதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இதை தொடர்ந்து காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்கும்படி பிரதமர் மோடி இந்திய மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதை தொடர்ந்து காங்கயம் ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் காங்கயம் வாரச்சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களிடம் நிதி திரட்டினர். இதில் பள்ளியின் வரலாறு ஆசிரியை ஏ.சின்னம்மாள் தலைமையில் ஆசிரியர்கள் யசோதா, சிவகுருநாதன் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்டரேக்ட் தொடக்க விழா தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் வக்கீல் பி.ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ந.முத்துக்குமார் வரவேற்றுப்பேசினார். இன்டரேக்ட் சங்கத்தை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பிரிசில்லா சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். சங்க தலைவராக அருண், செயலாளராக ஏசுராஜ் ஆகியோர் பதவி ஏற்றனர். முடிவில் தேஜஸ் ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.நாகநாதன் நன்றி கூறினார்.

Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர்,செப்.17[
திருப்பூரில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 17 அமைச்சர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை யொட்டி பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் முதல் முறையாக சந்தித்த இடமான ரெயில் நிலையம் அருகில் உள்ள புஷ்பா தியேட்டர் அருகில் ரவுண்டாணாவில் அமைக்கபபட்டிடிருந்த அவரது திருவுருவ படத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன்,சமுக நலத்துறை அமைச்சர் ப.வளர்மதி,உயர்க்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்,உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி,கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, கைத்தறி மற்றும் துணி நூல்ததுறை  அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், செய்தித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுசுழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரஹீம்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்,தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவர் தமிழ்மகன் உசேன்,தமிழ்நாடு கேபிள் டி.வி.நிறுவனத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி, அவினாசி எம்.எல்.ஏ.கருப்பசாமி, உத்திரமேரூர் எம்.எல் ஏ.வாலஜாபாத் கணேசன், திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் மலர் தூவி  அஞ்சலி செலுத்தினர். 
நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாமன்ற உறுப்பினர்கள் உமா மகேஸ்வரி வேலுசாமி,  சிணசாமி, சி.பி.வசந்தமணி, கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் நா.சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, சி.எஸ்.கண்ணபிரான், பி.கே.எஸ்.சடையப்பன், ராஜ்குமார், அசோக்குமார்,அன்னபூரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  


On Wednesday, September 17, 2014 by Unknown in ,    

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் வாழ்க்கை

Author

செல்வன் 




அமெரிக்க விசாச் சிக்கல்கள் குறித்து, சென்ற வாரக் கட்டுரையில் அலசினோம். அதன்பின் இணையக் குழுக்களில் அது குறித்துப் பலத்த விவாதம் நடைபெற்றது. அதனால் என் நண்பர்கள், அறிந்தவர்களின் அனுபவங்களைத் தொகுத்து அளிப்பது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுவதால் இப்பதிவு.
 
மாணவனாக இருந்த காலத்தில் அமெரிக்கா வந்ததால் எப்1 எனும் மாணவர் விசாவின் சிக்கல்கள் குறித்து அறிய முடிந்தது. இங்கே கல்லூரிகளில் இரட்டைக் கட்டண முறை அமலில் உண்டு. இதன்படி பல்கலைக்கழகம் இருக்கும் மாநிலங்களின் குடிமக்களுக்குக் குறைந்த கட்டணமும், வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிக கட்டணமும் உண்டு. இந்திய மாணவர்கள் இப்படி அதிக கட்டணம் கட்டும் சூழல் உருவானதுடன், அவர்கள் படிக்கும் காலத்தில் வெளியே பணிபுரிய தடையும் இருப்பதால் அவர்களுள் பலர் சட்ட விரோதமாக இந்திய உணவகம், இந்திய மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் (இவற்றில் பெரும்பாலானவை இந்தியர் நடத்துபவை) ஆகியவற்றில் பணியாற்றுவார்கள்.
 
இவையெல்லாம் சட்டப்பூர்வமான வேலை இல்லை என்பதால் இவர்களுக்குக் குறைந்த சம்பளமே வழங்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ஏழு டாலர் குறைந்தபட்ச கூலி என்றால் இவர்களுக்கு ஐந்து டாலர் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால் இதிலேயே எப்படியும் மாத வாடகை, உணவுச் செலவுகளை ஈடுகட்டிவிடுவார்கள். அவ்வப்போது குடியேற்றத் துறை அதிகாரிகள் ரெய்டு வரும் அபாயம் இருந்தாலும், பல மாணவர்கள் சட்ட விரோதமாக இதில் ஈடுபடுவதைக் காணலாம்.

 
அமெரிக்கப் பெட்ரோல் பங்குகளில் பணிபுரிவதில் உள்ள சிக்கல் என்னவெனில் அங்கே அடிக்கடி கொள்ளை நடப்பதே. இரவில் காரில் துப்பாக்கியுடன் வந்து இறங்குவார்கள். எல்லாப் பெட்ரோல் பங்குகளிலும் உணவு, ஸ்னாக் விற்கும் கடைகள் இருக்கும். கல்லாவில் இருக்கும் நூறு, இருநூறு டாலரைக் கொடுத்தால் பேசாமல் போய்விடுவார்கள். எதிர்த்துச் சண்டை போட்டால் சுட்டுவிடுவார்கள். பெட்ரோல் பங்குகளில் பணிபுரிவதில் இத்தகைய ரிஸ்க் இருப்பதால் அமெரிக்கர்கள் அதிகமாக இதைச் செய்வதில்லை. இந்திய மாணவர்கள் பலர் செய்கிறார்கள். அமெரிக்கப் பெட்ரோல் பங்குகள் பலவற்றையும் குஜராத்திகள், குறிப்பாகப் பட்டேல்கள் எடுத்து நடத்துவதைக் காணலாம்.
 
பல்கலைக்கழகக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த, மிகப் பெரும் தொகை தேவைப்படும். ஊரில் எப்படியோ போலியாக வங்கி பேலன்ஸ், சொத்துக் கணக்கு எல்லாம் காட்டி விசா வாங்கிவிட்டாலும் இக்கட்டணத்தைச் செலுத்தப் பணம் இருக்காது. எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் இதற்குப் பயந்து வயதில் மூத்த அமெரிக்க பெண் ஒருவரைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான். அவருக்கு சுமார் 60 வயது இருக்கும். படிக்கும் காலம் முழுவதும் அவர் வீட்டில் தங்கி, அவருடன் காரில் போய், அவர் இவனது கல்விக் கட்டணம் அனைத்தையும் செலுத்தி, இவனது செலவுகளைப் பார்த்துக்கொண்டார். ஊருக்கு வருடம் ஒரு முறை கோடையில் போய்வரும் செலவையும் ஏற்றுக்கொண்டார். கடைசியில் டிகிரி முடித்து ஊருக்குப் போய் அம்மா, அப்பா பார்த்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு அதன்பின் அந்த அம்மையாருடன் எத்தொடர்பும் இல்லாமல் அவன் மறுபடி அமெரிக்காவில் வேறு ஊருக்குப் போய், செட்டிலாகிவிட்டான். அவனைத் தேடி அந்த அம்மையார் எங்கள் பலரையும் விசாரித்ததும் திட்டியதும் இன்னமும் நினைவில் உள்ளது.
On Wednesday, September 17, 2014 by Unknown in ,    



கடந்த ஆண்டு சிரியாவில் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை வெட்டி எறிந்த வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ். வெளியிட்டது.
 
முன்னதாக இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதாகக் கூறிய பிரிட்டன் அரசு, இன்று வீடியோ உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
 
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.எஸ்.ஐ.எஸ்.-இன் இந்தக் கொடுஞ்செயலை “முற்றுமுழுதான தீமைச் செயல்” என்று சாடியுள்ளார்.
 
மேலும் “இந்த கொடூரக் கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்த எங்கள் அதிகாரத்தினால் இயன்றவை அனைத்தும் செய்யப்படும். இதற்கு எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை” என்று கூறியுள்ளார்.
 
தலைத் துண்டிக்கப்பட்ட ஹெய்ன்ஸின் குடும்பத்திற்கு அரசு தன்னால் ஆன உதவிகளையும் ஆதரவுகளையும் அளிக்கும் என்று பிரிட்டன் வெளியுறவுச் செயலகம் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்க பத்திரிகையாளர்களான ஜேம்ஸ் ஃபோலி மற்றும் ஸ்டீவன் சோல்டாஃப் ஆகியோரின் தலைகளைத் துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த வீடியோவையும் சமீபத்தில் வெளியிட்டது. மேலும் குர்திஷ் மற்றும் லெபனான் ராணுவ வீரர்கள் தலையைத் துண்டித்த வீடியோக்களையும், சிரிய ராணுவ வீரர்களைக் கொன்று குவித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
 
அமெரிக்க பத்திரிகையாளர் சோல்டாஃப் தலையைத் துண்டித்த வீடியோவின் இறுதியில் பிரிட்டன் உதவிப்பணியாளர் ஹெய்ன்சை சிறிது காண்பித்து இவரது தலையும் துண்டிக்கப்படும் என்று இஸ்லாமிக் ஸ்டேட் காண்பித்தது. ஹெய்ன்ஸ் தலையைத் துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடுஞ்செயலை அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாகக் கண்டித்துள்ளார்.
 
ஹெய்ன்ஸ் தலையைத் துண்டித்த அதே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்தால் அழிவு இன்னும் அதிகமாகும் என்று எச்சரித்துள்ளார்.
On Wednesday, September 17, 2014 by Unknown in ,    

இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் 40 ஜப்பான் நிறுவனங்கள்


இந்தியாவில் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் நிறுவனங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில் 40 ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்று வந்தார். அங்கு நடந்த தொழில் அதிபர்கள் மாநாட்டில் பிரதமர் பேசிய போது, இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் என்றார்.

இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை அறிவதில் ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

கட்டுமானப் பொருட்கள், மின்சாரம் போன்ற துறைகளில் நடுத்தர முதலீட்டாளர்கள் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.