Monday, September 29, 2014
திருப்பூரை சேர்ந்தவன் 8 வயது சிறுவன். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 3–ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அந்த சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த சிறுவனை தனது ஆட்டோவுக்கு அழைத்து சென்றார். அங்கு, அந்த சிறுவனை ஆட்டோவின் பின்புற இருக்கையில் உட்கார வைத்து, செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
அந்த வழியாக வந்தவர்கள், ஆட்டோ டிரைவரின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். உடனே அவர் ஆட்டோவை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி அந்த சிறுவனின் பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த ஆட்டோ திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதை திண்டுக்கல் ராஜாக்காபட்டியை சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், ரவிசந்திரனின் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆட்டோ நிறுத்தத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர் ரவிசந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி ராமசந்திரன் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
காங்கயத்தில் நேற்று 2–வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டதாலும், பஸ்கள் இயக்கப்படாததாலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் காங்கயத்தில் அ.தி.மு.க.வினர் தீர்ப்புக்கு எதிராக கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று கடைகளை அடைக்க வலியுறுத்தியும் கருணாநிதி உருவ பொம்மையை எரித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து காங்கயத்தில் நேற்று முன்தினம் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்
நேற்று முன்தினம் இரவு பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் அனைவரும் வேலை முடிந்து அவரவர்கள் வீடுகளுக்கு நடந்தே சென்றனர். இந்நிலையில் நேற்று 2–வது நாளாக அ.தி.மு.க.வினர் கடைகளை அடைக்கச்சொல்லி கூறியதால், காங்கயத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரம் போலீசார் கடைகளை திறக்க சொல்லி கேட்டுக்கொண்டதால் காலை 10 மணிக்கு மேல் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டது. இதை அறிந்து சிலர் மீண்டும் கடைகளை அடைக்க சொல்லி கூறியதால் மாலை வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதேபோல பஸ்கள் காலை 11 மணிக்கு மேல் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன. சிறிது நேரமே பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து சென்றன. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையமே வெறிச்சோடி கிடந்தது.
தொடர்ந்து 2 நாட்களாக பஸ்கள் இயக்கப்படாததாலும், கடைகள் அடைக்கப்பட்டதாலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
உடுமலை, பொள்ளாச்சி ரோட்டில், உணவு வழங்கல் துறை தனிதாசில்தார் (கூ.பொறுப்பு) தயானந்தன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் வீ.மணிமுத்து, சந்திரசேகரன், தருமன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராகல்பாவி பிரிவி அருகே ரோட்டோரத்தில் 6 கேன்கள் கிடந்தன. அவற்றை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 160 லிட்டர் மண்எண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த மண்எண்ணெய் கேன்களை கைப்பற்றி கொண்டு வந்தனர். மேலும் அந்த மண்எண்ணெய் கேன்களை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாநகரில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
நள்ளிரவு வரை பெய்த இந்த பலத்த மழையால் இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், பாளையக்காடு, 2–வது ரெயில்வேகேட் பகுதியில் உள்ள ஒற்றைக்கண் பாலம் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நள்ளிரவு வரை பெய்த இந்த பலத்த மழையால் இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், பாளையக்காடு, 2–வது ரெயில்வேகேட் பகுதியில் உள்ள ஒற்றைக்கண் பாலம் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 40–வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 40–வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஆ.கிறிஸ்டினாள் மேரி சுகுணவதி வரவேற்றார். விழாவில் முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் கி.குமாரசாமி கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மாணவர்களின் கல்வி பயணத்தில் பட்டமளிப்பு விழா என்பது முக்கிய அடையாளமாக அங்கம் வகிக்கிறது. பட்டமளிப்பு என்பது முறைசார் கல்வியின் முடிவாகவும், தொழிற்பயணத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. உயர் கல்விக்கும் பட்டமே முதல் படியாகும். பட்டம் பெறல் எதிர்காலத்தில் உங்கள் செயல்கள் எதை சார்ந்து இருக்க வேண்டும் என்பதனையும், நீங்கள் ஏற்க வேண்டிய செயல்கள் எவை என்று உங்களுக்கு உணர்த்துவதாக அமைகிறது. எவ்வகை எதிர்காலம் நமக்கு முன்னாள் இருக்கிறது என்பதை நாம் அறிய இயலாது.
ஆனால் நம் முன் இருக்கும் அனைத்து சவால்களையும், சிக்கல்களையும் தீர நெஞ்சத்துடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் முயற்சியால் அனைத்து செயல்களும் வெற்றியாகட்டும். விண் கலங்களை விண்ணில் செலுத்தும் அளவிற்கு ஏற்றமிகு எதிர்காலத்தை தன்கையில் கொண்டுள்ள இந்தியாவில் வாழும் நீங்கள் அதன் ஏற்றத்தை மட்டும் எண்ணாமல் இந்தியாவில் நிலவும் ஏழ்மை, ஊட்டக்குறைபாடு, எழுத்தறிவின்மை மற்றும் நோய்கள் ஆகியவற்றை அறிந்து அவற்றை நீக்கிட மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் ஆராய வேண்டும். கல்வி என்பது நாகரீகத்தையும், காலசாரத்தையும் கடந்து தனிமனித பண்புகளையும், அறிவினையும் மேம்படுத்தும் கருவியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
537
விழாவையொட்டி பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் 537 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராமலிங்கம், வ.கிருஷ்ணன், கு.பரந்தமான், ம.சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
அண்ணா திமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக்கும் வகையிலும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்லடம் கல்லம்பாளைத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ஏ.கே.ராமமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட மகளிரணியினர் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் சித்ராதேவி, நகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி, நகர அவைத்தலைவர் ராயர்பாளையம் தங்கவேல் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கர்நா டகா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து, மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி., கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் நா.சக்திவேல், வளர்மதி கருணாகரன் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் குள்ளி செட்டியார் தெருவில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கருப்பு சட்டை அணிந்து, முதல்வர் ஜெயலலிதா விடுதலை ஆகும்வரை இது தொடரும் என கூறி அமைதியான முறையில் அறப்போராட்டம் இருந்தனர்.
திருப்பூர் மாநகர் மாவட்டட அண்ணா தி.மு.க.மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அறிஞர் அண்ணாவின் 106வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன் எம்.சி.தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் கலைமகள் எம்.கோபால்சாமி எம்.சி.வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந் தன் பேசியதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை இன்று பட்டி தொட்டி எங்கும் அண்ணா தி.மு.க.கொண்டாடி வருகிறது.அவரத ு கொள்கைகளையும், கனவுகளையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் உரிமை அண்ணா தி.மு.க.இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற இடைதேர்தலில் தேர்தலில் தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா நிறுத்திய அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ள்ளனர். தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என அவர் நிறுத்திய அனைத்து வேட்பாளர்களையும் எதிர் அணியினர் டெபாசிட் இழக்கும் அளவில் அமோக வெற்றியை தந்துள்ளனர். மூன்றாவது முறையாக முதல்வர் ஆனபிறகு தமிழக மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றியுள்ளார்.அவரது ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.இதுபோன்று வருகி ன்ற 2016 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234. தொகுதிகளிலும் முதல்வர் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்
மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி பேசியதாவது:-
அண்ணாவின் தத்துவங்கள், அவரது கருத்துக்கள் இப்பொழுதும் மெய் சிலிர்க்க வைக்கும்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம், தம்பி எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.ஒன்றே குலம்,ஒருவனே தேவன், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.என்பது போன்ற தத்துவங்கள் கேட்க, கேட்க சிந்திக்க வைக்கும். நிலச்சுவான்கள், மிட்டா மிராசுதார்கள் தேர்தலில் போட்டியிட்ட நிலைகளை மாற்றி சாதாரண மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தவர் அண்ணா. 1967 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சி மீது நம்பிக்கை இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். குண்டடிபட்ட எம்.ஜி.ஆர் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டார்.அந்த தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றனர்.அவரது மறைவுக்கு பின்னால் முதல்வர் ஜெயலலிதா ஆள்வதற்கு மட்டுமே பிறந்தவர்கள் அண்ணா திமுகவினர் என்பதை மாற்றி காட்டினார். இன்று அவரது உருவம் பதித்த அண்ணா தி.மு.க. கொடி பறக்காத இடமே இல்லை என்று கூறும் வகையில் முதல்வர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை கட்டி காத்து வருகிறார். எனவே, வருகின்ற காலங்களில் இதுபோன்று ஆதரவை அவருக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
கூட்டத்தில் தலைமை பேச்சாளர் கோபி காளிதாஸ், கருப்பசாமி எம்.எல்.ஏ, துணை மேயர் சு.குணசேகரன் வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்.
சார்பு அணி செயலாளர்கள் கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே,என்.சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ், ஜெகதாம்பாள்,கருணாகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், அட்லஸ் லோகநாதன்,எஸ்பி.என்.பழனிசாமி, உஷா ரவிக்குமார், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், ரா ஜேஷ்கண்ணா, கண்ணபிரான், சடையப் பன், சாகுல் ஹமீது, அண்ணா தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசாமி, நகர நிர்வாகிகள் ராஜேந்திரன், சரவணா, ரவிகுமார் உள்ளிட்டவர்கள், அவினாசி நகர செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி, கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம்,பிரியா சக்திவேல், உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார் , அசோக்குமார், ராஜ்குமார், நீதி ராஜன், பி.லோகநாதன்,சுந்தராம்பாள் கேசவன், கோமதி, மும்தாஜ் ரசூல்,பரமராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தவும், சிகிச்சைக்கான உபகரணங்கள், மருந்துகளை தேவைக்கேற்ப வைத்திருக்கவும், லஞ்ச ஊழலைக் களையவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சனியன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்க தெற்கு மாநகரத் தலைவர் ஆறுக்குட்டி தலைமை வகித்தார். இதில் ஏழை மக்களின் ஒரே ஆதாரமாகத் திகழும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள், சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லாமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக இம்மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பியும், அனைத்து மருத்துவ வசதிகளையும் உறுதிப்படுத்த கோரிக்கை விடப்பட்டது
இத்துடன் திருப்பூர் மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்தும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவர் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர் போல் சித்திரித்து தலை மற்றும் உடலில் கட்டுப் போட்டு படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். பலரும் தங்கள் தலையிலும், கைகள், உடலிலும் கட்டுப் போட்டுக் கொண்டு மருத்துவமனை சீர்கேட்டைக் களைய ஆவேச முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், மாநகரச் செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்பட பெருந்திரளான இளைஞர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக ஞானசேகரன் நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...






