Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.61.62-ஆக இருந்தது. ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் பணவெளியீட்டு கொள்கையின் மீதான எதிர்பார்ப்பாலும், டாலருக்கான எதிரான தேவை அதிகரித்து இருப்பதாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.61.53-ஆக இருந்தது.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
விருத்தாசலம்: விருத்தாசலம் வழக்கறிஞர்கள் ஜெ.,யை விடுதலை செய்யக் கோரி கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மேலும், கோர்ட் நுழைவாயிலில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து, கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ஜெ., தீர்ப்பை கண்டித்து முழு அளவிலான கடையடைப்பு நடந்தது. நீடாமங்கலம், கொரடாச்சேரி, முத்துப்பேட்டை, வலங்கைமான், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஜெ.,யை விடுதலை செய்யக் கோரி அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
மும்பை : பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என தெரிகிறது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி கொள்ளும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி சர்வதேச சந்தை நிலவரத்தில் கச்சா எண்ணெய் விலை தற்போது குறைந்துள்ளது. இதனையடுத்து இந்தவாரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என தெரிகிறது. பெட்ரோல் விலை 50 காசுகள் முதல் ரூ.1 வரையும், டீசல் விலை ரூ.2 வரை குறைக்கப்படலாம் என தெரிகிறது.

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
வாழப்பாடி: வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வமணி.42. ஜெ., பேரவை நிர்வாகி. இவர், வாழப்பாடியில் உள்ள, 100 அடி உயரம் கொண்ட தூர்தர்ஷன் ஔிபரப்பு டவரில் ஏறி, ஜெ.,வை விடுதலை செய்யாவிட்டால் குதித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். போலீசார், தீ அணைப்பு பிரிவினர், அ.தி.மு.க.வினர் இணைந்து அவரை சமாதனப்பத்தி, டவரில் இருந்து இறக்கினர்
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
பெங்களூரு: கர்நாடகா ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரத்னமாலா, மனுவிற்கு பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இந்த மனு மீதான விசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் இந்தாண்டு இயல்பை விட, 90 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரின் ஆண்டு சராசரி மழையளவு 602.45 மி.மீ., 2012ல், 365.29 மி.மீ., 2013ல், 263.88 மி.மீ., பெய்திருந்தது. கோடை மழை சராசரி 124.20 மி.மீ., ஆனால், இந்தாண்டு 132.22 மி.மீ., பதிவானது.ஜூன் முதல் செப்., வரை பெய்யும் தென்மேற்கு பருவ மழை, முதல் இரண்டு மாதங்கள் ஏமாற்றியது. ஜூன், ஜீலை மாதங்களில், 23 மி.மீ., மழை பொழிய வேண்டும்; ஆனால், 3.4 மி.மீ., மட்டுமே பெய்தது. அதன்பின், பருவ மழை தீவிரமடைந்தது. ஆகஸ்டில் சராசரி 31.94 மி.மீ., மழை பெய்தது. நடப்பு ஆண்டு 101.83 மி.மீ., பெய்தது. செப்டம்பரில் சராசரி மழையளவு, 51.54 மி.மீ., இம்மாதம் 29ம் தேதி காலை வரை, 118.6 மி.மீ., பெய்துள்ளது.வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவ மழை, துவக்கத்தில் பாசன ஆதாரமாக உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தது. அதனால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நிலப்பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், வேளாண் சாகுபடி செய்ய முடியவில்லை.கடைசி இரு மாதங்கள், இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதால், நிலைப்பயிர்கள் மற்றும் சாகுபடி பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதிதாக கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு பருவ மழையும் பெய்தால், கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ள வசதியாக அமையும்,' என்றனர்.


On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கர்நாடகா தனி நீதிமனறத்தில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதை கண்டித்து, 2 வது இன்று காலை 8.00 மணி முதல், மாலை 5 மணி வரை திருப்பூர் புதிய பேருந்து நிலையம் டெலிபோன் அலுவலகம் எதிரில் துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில்  2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வடக்கு தொகுதி செயலாளர் ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் ராதாகிருஷ்ணன், எம்..ஜி.ஆர்., மன்ற செயலாளர்  கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து துணை மேயர் சு.குணசேகரன் கூறியதாவது:​-
ஒரு சாதாரண குடிமகன்கள் கூட இந்த தீர்ப்பு என்பது மனித உரிமை மீறல் செயல் என கூறுகின்றனர் சாதாரண கைதியை கூட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படகூடாது என்று உள்ளது. ஏன் என்றால் அவருக்கு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழக மக்களால் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அடையும் வகையில் நல்ல பல திட்டங்களை மக்களுக்கு அளித்து இந்தியாவிற்கே முன் உதாரணமாகவும், தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாகவும் உருவாக்க அல்லும் பகலும் அயராது பாடுபடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மேல் முறையீடு செய்யகூட வாய்ப்பு அளிக்காத வகையில் அவரை சிறையில் அடைத்து பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சனிக்கிழமை அன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. எத்தனை சக்திகள் வந்தாலும் அவரை அசைக்க முடியாது.அவர் விடுதலை ஆகும் வரை அறப்போராட்டம் தொடரும். 
இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் கூறினார்.
இந்த உண்ணாவிரதத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன், மாணவரணி மாரிமுத்து, பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெகநாதன், சுந்தரமூர்த்தி,வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, தங்கவேல், மாமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், முருகசாமி,விஜயகுமார், பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, அமுதா வேலுமணி, பி.பாலன், திலகர் நகர் சுப்பு, செந்தில்  குமார், சத்தியா, ஈஸ்வரன், சின்னசாமி, சேகர், கிளை கழக செயலாளர்கள் விவேகானந்தன், ராஜேந்திரன், மற்றும் நிர்வாகிகள் பி.எஸ்.டி.செல்வம், சிவகுமார், காலனி செல்வம், மணிகண்டன், சின்னு, கந்தசாமி, பி,பார்த்திபன், மயில்ராஜ், நீதிராஜன், பங்க் என்.ரமேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் அன்னபூரணி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சாதிக் பாஷா, ராமநாதன், வாசுதேவன், வினோத்குமார், முபாரக், ஆகியோர் உள்பட 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள கலந்து கொண்டனர்.
பழி வாங்காதே, பழி வாங்காதே அம்மாவை பழி வாங்காதே, 
ஓய்வு இல்லை, உறக்கம் இல்லை, அம்மா வரும் வரை உறக்கம் இல்லை,
ஜாமீன் கொடு, ஜாமீன் கொடு, அம்மாவிற்கு ஜாமீன் கொடு,
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் மனித மீறலை கண்டிக்கிறோம்.
மீண்டும் அம்மா முதல்வராக வருவார் 
விழித்திடு, விழித்திடு தமிழனமே விழித்திடு,
என்பது போன்ற கோஷங்கள் உண்ணாவிரதத்தில் படிக்கப்பட்டன.

On Tuesday, September 30, 2014 by Unknown in ,    


அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.
 
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, நரேந்திர மோடியை சந்தித்தார். பின்னர் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் விருந்து அளித்தார். மோடி நவராத்ரி நோன்பில் இருப்பதால் அவர் சூடன தண்ணீர் மட்டுமே அருந்தினார். 
 
இந்த விருந்து நிகழ்ச்சிக்கு பிறகு டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள நதேரந்திர மோடி, “அதிபர் ஒபாமாவுடன் அருமையான சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்“ என்று தெரிவித்துள்ளார்.
 
பின்னர் ஒபாமாவுக்கு, நரேந்திர மோடி கீதையின் சிறப்பு பதிப்பு ஒன்றையும், மகாத்மா காந்தியின் விளக்கம் அடங்கிய புத்தகத்தையும் பரிசளித்தார். பின்னர் இரு தலைவர்களும் தங்கள் பதவி ஏற்கும் முன் நடந்த  நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
 
இரு தலைவர்களும் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே தங்கள் பிரச்சாரத்தில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினர். தங்கள் ஆட்சி அமைக்கும் போது இரு தலைவர்களும் தலைநகரத்துக்கு வெளியே உள்ள நகரத்தை சேர்ந்தவர்கள். என்று சையது அக்பரூதின் தெரிவித்தார்.
 
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் சென்றனர்.
 
ஒபாமா, மோடிக்கு விருந்த அளித்தபோது வெள்ளை மாளிகை முன்பு அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் கலாச்சர நிகழ்ச்சிகள் நடனங்கள் ஆடினர்.
 
காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் சீக்கிய அமைப்பை சேர்ந்த சிலர் வெள்ளை முளிகை முன்பு போரட்டத்திலும் ஈடுபட்டனர். சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இரண்டு முறை பாதுகாப்பு விதி முறைகள் மீறப்பட்ட காரணத்தால் பிளயர் இல்லம் மற்றும் வெள்ளை மாளிகை பலத்த பாதுகாப்புடன் இருந்தது.