Friday, October 31, 2014
மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பசுமை வீடுகள் கட்ட பல்லடம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம், மூகாம்பிகைநகரில் பூமிபூஜை விழா நடந்தது.விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் படையப்பா மூர்த்தி தலைமை தாங்கினார்.விழாவில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தண்ணீர்பந்தல் ப.நடராஜ்,காரைப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஏ.நடராஜ்,கூட்டுறவு சங்க தலைவர்கள் எஸ்.எஸ்.மணியன், சொக்கப்பன், நெசவாளர் கூட்டுறவு வங்கி இயக்குநர், பல்லடம் வட்டார வளர்ச்சிஅலுவலர் மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பல்லடம் .எம்.எல்.,ஏ.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பள்ளி மாணவ-மாணவிகள் 368 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி,மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-
கல்வித்துறையை மேம்படுத்த மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழக அரசு திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக வேண்டும் என ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்ற அரசு கல்விக்காக ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.1 முதல் 10 ம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் கல்வி பெற வேண்டும்; இடைநிற்றலை தடுக்க வேண்டும். என்ற அடிப்படையில் பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன.எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மிதிவண்டி, மடிக்கணினி உள்பட 14 வகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 15486 பேருக்கு ரூ.4.92 கோடி மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள் ளது.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா திட்டங்களால் தான் இன்றைக்கு கல்வியில் தமிழகம் 20-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.திருப்பூர் மாவட்டம் 13-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.திட்டங்களை பெற்று தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் மாணவ, மாணவியர்கள் நன்றாக படிக்க வேண்டும். மடிக்கணினி மூலம் சர்வதேச அளவில் உங்கள் கல்வித்தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.உங்கள் பள்ளியின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா வழிகாட்டுதல் படி கல்வித்துறை அமைச்சரிடம் பேசி இங்கு 30 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 2 கழிப்பறைகள் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசும்போது; மக்கள் முதல்வர் ஜெயலலிதாவழிகாட்டுதல்படி உலகத் தில் எந்த பணக்கார நாட்டிலும் இல்லாத திட்டம் மாணவர்களுக்கு சைக்கிள்,, மடிக்கணினி வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகி றது. 10, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.500 ம், 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2000- என ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ.5000 தமிழக அரசு டெபாசிட் செய்கிறது. உலகத்திலேயே தமிழகத்தில் தான் இவ்வளவு சிறப்பான திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி நீங்கள் ( மாணவர்கள்) முன்னேற வேண்டும் என பேசினார்..
திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசுகையில்;தமிழக அரசு பள்ளிக்குழந்தைகள் கல்வித்தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்விக்காக தமிழக அரசு மடிக்கணினி, சைக்கிள் உள்பட 14 வகை பொருட்களை விலையில்லாமல் வழங்குகிறது. இதை நன்கு பயன்படுத்தி மாணாக்கர்கள் முன்னேற வேண்டும் என்றார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது, மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் உங்கள் தாய் தந்தையால் கூட தர முடியாத திட்டங்கள் வழங்கப்படுகிறது.முந்தய காலத்தில் இது போன்ற திட்டங்கள்எதுவும் இல்லை. ஜெயலலிதா வழிகாட்டுதல்படி அவரது அரசே கல்விக்காக வழங்குகிறது. இதை பயன்படுத்தி ஒவ்வொரு மாணவர்களும் நன்றாக படிக்க வேண்டும் ; ஜெயலலிதாவிற்கு என்றும் நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் பிஷப் உபகரசாமி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில்ரூ.63.30 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் 377 மாணவ, மாணவியர்களுக்கும், ரூ.16.30 லட்சம் மதிப்புள்ள மிதிவண்டிகள் 390 மாணவ, மாணவியர்களுக்கும்,, , ஜெயவாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.45 கோடி மதிப்பில் ஆயிரத்து 454 மாணவியர்களுக்கும், நஞ்சப்பா மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.66.15 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் 394 மாணவர்களுக்கும் மற்றும் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி.அரசு மேல்நிலைப்பள்ளி , மற்றும் அவினாசி கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.
பல்லடம் எம்.எல்.ஏ ,பரமசிவம் அவினாசி எம்.எல்.ஏ.கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன்,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், அவினாசி ஒன்றிய குழுத்தலைவர் பத்ம நந்தினி ஜெகதீசன், பேரூராட்சி மன்றதலைவர் ஆர்.ஜெகதாம்பாள் ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார்.விழாவில் பல்லடம் நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பழனிசாமி, மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன்,கிருத்திகா சோமசுந்தரம்,நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, வசந்தாமணி, பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, பிரியா சக்திவேல், அவினாசி ஒன்றிய செயலளார் மு.சுப்பிரமணியம், நகர செயலாளர் ராமசாமி, தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி, தொழில் அதிபர் கிளாசிக் போலோ சிவராமன், மாவட்ட கல்வி அலுவலர் கரோலின்,கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.மணி, கோகுல், சில்வர் வெங்கடாசலம், மாமன்ற உறுப்பினர்கள் வேலுசாமி, கண்ணப்பன்,செல்வம் லட்சுமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், உதவி அலுவலர் சாய்பாபா, இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடுமலை சட்டமன்றதொகுதி குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சட்டபேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் தலைமையில் ,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C.மகேந்திரன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. தான் படித்த பெதப்பம்பட்டி பள்ளியில் வகுப்பு ஆசிரியர்களை கௌரவித்து C.மகேந்திரன் பொன்னாடை அணிவித்து அனைவரயும் நினைவு கூர்ந்தார் .பொள்ளாச்சி ஜெயராமன் மடிக்கணினி வழங்கி பேசுகையில் சிறந்த மாணவ மாணவிகளை உருவாக்கி IAS, IPS நிலைக்கு வரசெய்யுமாறு ஆசிரிய பெருமக்களை கேட்டுக்கொண்டார்.
எத்தனை ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகிறீர்கள் ? முக்குலத்தோர் புலிப்படையின் நோக்கம் என்ன
?
2014 ம் ஆண்டோடு தொடர்ந்து
7 ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி விழாவிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்
.கல்வி வளர்ச்சி பெற்ற சமூகமாக முழுமையாக மாற்றுவதே முக்குலத்தோர் புலிப்படையின் நோக்கம் ஆகும்
தேவர் ஜெயந்தி விழாவில் 144 தடை உத்தரவு பற்றி
?
144 தடை உத்தரவு அதிகமாக பயன்படுத்திட கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது
.ஆனால் ஒரு தேசிய தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரரின் விழாவில்
144 தடை உத்தரவு போடுவது என்பது நாட்டு பற்றிற்கு போடப்படுகிற முட்டுக்கட்டை ஆகும் .எதிர்கால சந்ததிகளின் சிந்தனையை மழுங்கடிக்கிற செயல் ஆகும்
மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டுகிற கோரிக்கை வலுத்து வருகிறதே ?
இது சம்பந்தமாக ஏற்கனவே 2004 ம் ஆண்டே சுப்ரமணிய சாமி மூலம் மத்திய மந்திரி ஜோஷி அவர்களிடம் வலியுறுத்தினோம்
.ஆனால் அப்போது இருந்த மாநில அரசு முழுமையாக ஆதரவு அளிக்க வில்லை
107 வது தேவர் ஜெயந்தி விழாவில் முக்குலத்தோர் புலிப்படையின் சூளுரை ?
ஒரு பெருத்த சமுதாயம்
.ஏற்கனவே
1995,2005 அரசாணையான கள்ளர் ,மறவர் ,அகமுடையார் சமுதாயத்தை தேவர் இனமாக அறிவிக்கும் அரசாணையை நடைமுறை படுத்த வேண்டும் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
தென் மாவட்டங்களில் பரவலாக நடைபெறும் கௌவரவ கொலைகள் பற்றி ?
என்றுமே
மனித உயிர்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்க முடியாது
.தேவர் திருமகனார் 1957 ல் சொன்னது போல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது என் இதயத்தை பிளப்பதற்கு சமம் என்பதை நெஞ்சில் நிறுத்தி வாழ்பவர்களில்
நானும் ஒருவன் .
பேட்டியின் போது முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் முத்துமணி
,மாணவர் அணி ஜெகன் ,மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்
மதுரை மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா
தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா மதுரையில்
நடைபெற்றது.தொழிலாளர் நலத்துறை ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன் தலைமை
தாங்கினார். இணை ஆணையர் ராஜா முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர்
செல்லூர்ராஜூ கலந்து கொண்டு வாரிய தொழிலாளர்கள் 1594 பேருக்கு ரூ.43 லட்சம்
மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கி பேசிய போது ,மதுரை மாவட்டத்தில்
அமைப்புசாரா வாரிய உறுப்பினர்களாக 3 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதனை 5
லட்சமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது
பாராட்டுக்குரியது. உழைப்பவரே உயர்ந்தவர் என்ற லட்சியத்தை கொண்டது
அ.தி.மு.க. இயக்கம்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர்
அம்மாவும் தொழிலாளர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பாவித்து பல்வேறு
நலத்திட்டங்களை தந்துள்ளனர். தொழிலாளியின் வியர்வை காயும் முன், ஊதியம்
கொடுக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர் மக்களின் முதல்வர்
அம்மா.தொழிலாளர்களின் குழந்தைகள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வர
வேண்டும் என்ற எண்ணத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர்
அம்மாவும் திட்டங்களை தந்திருக்கிறார்கள்.தொழிலாளர் கள் தங்குவதற்காக
சென்னையில் ஜீவா இல்லம் அமைத்தவர் எம்.ஜி.ஆர். போக்குவரத்து
தொழிலாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தந்தவர் அம்மா. அமைப்பு சாரா நல
வாரியத்தில் கட்டிட தொழிலாளர்களையும் சேர்த்து சலுகைகள் வழங்கியவர் அம்மா.
கருணை உள்ளம் கொண்ட அம்மா, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தொழிலாளிகளின்
தலை எழுத்தையே மாற்றி காட்டினார்.தொழிலாளர் வர்க்கத்திற்கு வரலாற்று
சிறப்புமிக்க திட்டங்களை, சலுகைளை வாரி வழங்கியவர் அம்மா. இதை தொழிலாளர்கள்
ஒரு போதும் மறக்கக்கூடாது.தொழிலாளி இறந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும்
நிவாரணத்தொகை ரூ.1 லட்சம் என்று இருந்ததை ரூ.5 லட்சமாக உயர்த்தினார்.
அப்படிப்பட்ட மக்களின் முதல்வர் அம்மாவுக்கு தொழிலாளர்கள் அரணாக இருக்க
வேண்டும்.சூழ்ச்சியாளர்களால் அம்மாவுக்கு சோதனை ஏற்பட்டபோது தமிழகமே
கொதித்தெழுந்தது. அம்மா விடுதலை ஆக வேண்டும் என்று அவரவர் தெய்வங்களை
வழிபாடு செய்தனர். மக்களின் பிரார்த்தனை பலித்தது. அதுபோல அவருக்கு எதிரான
அநீதியை விரைவில் முறியடிப்பார். மீண்டும் தமிழகத்தின் நிரந்தர
முதல்–அமைச்சராக வருவார். தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு
மக்களுக்கும் திட்டங்களை அள்ளி தருவார்.என உரையாற்றினார்
Thursday, October 30, 2014
கரூர் வைஸ்யா வங்கியின், "மல்டி கரன்சி டிராவல் கார்டு' அறிமுக விழா: கரூர் வைஸ்யா வங்கியின், "மல்டி கரன்சி டிராவல் கார்டு' அறிமுக விழா கோவையில் நடந்தது. கரூர் வைஸ்யா வங்கி, கே.வி.பி., மல்டி கரன்சி டிராவல் கார்டு என்ற பிரிபெய்டு ரீ லோடபிள் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இக்கார்டு மூலம், யு.எஸ். டாலர், ஈரோ மற்றும் எஸ்.ஜி.டி., ஆகிய மூன்று கரன்சிகளை கையாளலாம். வெளி நாட்டு பயணங்களின் போது, எளிதாக கொண்டு செல்லவும், பாதுகாப்பானதாகவும் இருக்க கூடியது. கே.வி.பி., நெட்பேங்கிங் மூலம், இந்த கார்டுதாரர்கள், அதன் இருப்பை தெரிந்து கொள்ளலாம். கார்டு பெறப்பட்ட நாள் முதல், 5 ஆண்டுகளுக்கு, கார்டை பயன்படுத்த முடியும். கரூர் வைஸ்யா வங்கியின் தேர்தெடுக்கப்பட்ட கிளை வாடிக்கையாளர்களுக்கு கார்டு கிடைக்க உள்ளது.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
