Wednesday, November 05, 2014

On Wednesday, November 05, 2014 by Unknown in ,    
கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ளஅங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு கலெக்டர் ஜெயந்தி அழைப்பு                       கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என, கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில், 97 அங்கன்வாடி பணியாளர்களுக்கு, ஒரு குறு அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும், 124 அங்கன்வாடி உதவியாளர்களுக்கான காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.விண்ணப்பப்படிவம், காலிப் பணியிட விவரம் மற்றும் இன சுழற்சி குறித்த விவரங்களை, அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன், சுய முகவரியிட்ட அஞ்சல் அட்டை இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர், 10ம் தேதி மாலை, 5.45 மணிக்குள், அந்தந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    

அதிகாரிகள் மெத்தனத்தால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு .................  கரூர் மாவட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வரும் மெத்தனப் போக்கால் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. டீக்கடைகள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை எளிதில் மக்கிப்போகாது. மேலும் மறுமுறை பயன்படுத்தவும் முடியாது. இந்த பிளாஸ்டிக் கப்புகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. வடிகால்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. துப்புரவு பணியிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக் கப்புகளை தடை செய்யவேண்டும் என நீண்ட காலமாக சுற்றுச்சூழல் இயக்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். நகராட்சிகளாக செயல்பட்ட கரூர், இனாம்கரூர், தாந்தோணி பகுதிகளில் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. தற்போது ஒரேநகராட்சியாக இணைக்கப்பட்டு செயல்படுகிறது. ஒருங்கிணைந்த நகராட்சியிலும் தடை தீர்மானம அமலுக்கு வந்தது. இருந்தும் பாலிதீன் பிளாஸ்டிக் பயன்பாடு தடுக்கப்படவில்லை.


அவ்வப்போது நகராட்சி அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்கினறனர். எனினும் உறுதியான நடவடிக்கை எதுவும் இல்லாமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதால் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், கேரி பேக்குகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகளை வழங்கினர். துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து டீக்கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து பேப்பர் கப் அல்லது கண்ணாடி கிளாஸ்களில் தான் டீ வழங்கப்பட்டு வந்தது. தொடர் நடவடிக்கை இல்லாமல் போனதால் மீண்டும் பயன்பாட்டில் அத்தனை பொருட்களும் உள்ளன. மொத்தமாக டீ, காபி போன்றவற்றை வாங்கி சென்று விநியோகிப்பவர்கள் பிளாஸ்டிக் கப்புகளையே பயன்படுத்துகின்றனர்.

தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படாததன் காரணமாக மீண்டும் பிளாஸ்டிக் கப்புகள் டீக்கடை மட்டுமின்றி, திருமண மண்டபங்கள், கூட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவிழாக்களிலும் பிளாஸ்டிக் கப் தான், மேலும் இவை களை மிஞ்சும் வகையில் அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளிலும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டு கொள்ளாத நிர்வாகம்
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், பிளாஸ்டிக் கழிவுகள்  அதிக அளவில் டாஸ்மாக் பார்களில் இருந்து தான் வருகிறது. டாஸ்மாக் பார்கள் அரசின் மேற்பார்வையில் இருப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவோ, அப்புறப்படுத்தவோ உரிய நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால் என்னகாரணத்தினாலேயோ டாஸ்மாக் நிர்வாகம் இதனை கண்டுகொள்வதில்லை. பல மாவட்டங்களில் பேரூராட்சி, பஞ்சாயத்து நிர்வாகங்கள் கூட பிளாஸ்டிக்பொருள் பயன்பாட்டை தடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பல கடைகளில் போர்டு வைத்துள்ளனர். கேரிபேக்குக்குகட்டணம் வசூல் என அறிவித்து அதன் பயன்பாட்டை குறைக்கின்றனர். பெரிய அளவில் பறிமுதல் செய்து அழித்துவிடுகின்றனர். ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் கரூர் மாவட்டத்தில் இல்லை என்று புகார் தெரிவித்தனர்.
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் தேவைக்கேற்ப உரங்களைத் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை ...........                                                                   கரூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப உரங்களைத் தட்டுப்பாடு இல்லாமல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக தொடங்கியதைத் தொடர்ந்து விவசாயிகள் வேளாண் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக, சம்பா நெல் சாகுபடிக்கான நடவுப் பணி  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்குத் தேவைப்படும் ரசாயன உரங்கள் போதுமான அளவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள இரு நிறுவனங்களில் யூரியா உரம் உற்பத்தி இல்லாததை தொடர்ந்து, தமிழக அரசின் முயற்சியால் கரூர் மாவட்டத்துக்குத் தேவையான உரங்கள் பிற நிறுவனங்கள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உயரி ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட சாகுபடி பயிர்களுக்கு தேவையான யூரியா உரம் நவம்பர் மாதத்தில் 1800 மெ.டன் ஆகும். இருப்பினும் பற்றாக்குறை ஏற்படாமல் யூரியா உரத் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக 600 மெ.டன் சேர்த்து 2400 மெ.டன்னுக்கு தமிழக அரசின் மூலம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில், பெருமளவு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்கும் படி வேளாண் இணை இயக்குநரும், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளரும் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர்.

உர விநியோகத்தை கண்காணிக்க கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 74 தனியார் உரக்கடைகளை ஆய்வுசெய்து 9 உர மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இதன் முடிவைப் பொருத்து சட்டரீதியாக அல்லது துறைவாரியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் உரக்கடைகளில் அனுமதி இல்லாத நிறுவனங்களில் இருந்து உரம் பெற்றதை கண்டறிந்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 46 மெ.டன் உரங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. சிறிய குற்றங்கள் மேற்கொண்டமைக்காக 27 உரக்கடைகள் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் தேவைப்படும் உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

ரசீது கேட்டுப் பெற வேண்டும்
உர மூட்டைகளின் மேல் உள்ள விற்பனை விலைப்படியே உரம் விற்பனை செய்யப்பட வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகள் கண்டிப்பாக ரசீதை கேட்டுப் பெற வேண்டும். ரசீது பெற்றால் மட்டுமே தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது சம்பந்தமான புகார்களை அளிக்க விவசாயிகள் யூனியின் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்திலோ அல்லது மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திலோ உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.மேலும், மண்ணின் தன்மைக்கேற்ப மண்மாதிரி முடிவுகளின்படியே உரமிட வேண்டும். அதிகளவு யூரியா இடுவது மண்ணின் வளத்தை பாதிப்பதோடு பயிர்களுக்கும் பூச்சிகளால் அதிக சேதராம் ஏற்படும். ஆகவே, தேவையறிந்து உரமிட்டும், புதிய தொழில்நுட்பத்தை கடைபிடித்தால் விவசாயிகள் அதிக வருமானம் பெறலாம்.
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா         வேலாயுதம்பாளையம் : கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள செட்டிதோட்டம், கற்பக விநாயகர் கோவில், நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிஷேக விழாவையொட்டி, சேமங்கி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள், தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர். பின், கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், திருமஞ்சனம், உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கலந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது.நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    
கரூர் அ.தி.மு.க., தொண்டர் குடும்பத்துக்குநிதியுதவி         வேலாயுதம்பாளையம் : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அதிர்ச்சியில் உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டரின் குடும்பத்துக்கு, நிவாரண நிதி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட தளவாபாளையம், ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் ஜீவா (எ) பாக்கியராஜ், 40. அ.தி.மு.க. தொண்டர். இவருக்கு ரேகா என்ற மனைவியும், சிவதி, 17, ஹரி கிருஷ்ணா, 13, மகன்களும் உள்ளனர்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதித்ததால், அதிர்ச்சியில் பாக்கியராஜ் உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு, நிவாரண நிதியாக, மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், கரூர் தொகுதி செயலாளர் திருவி.கா., காகித ஆலை டவுன் பஞ்சாயத்து தலைவர் கமலக்கண்ணன், துணைத்தலைவர் மார்க்கண்டேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..  
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    

கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே 2 பிரிவினர் மோதல் விவகாரத்தால் போலீசார் தொடர்ந்து முகாம்                                   கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு போலீசார் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். இதனால் அங்கு நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.

 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- நாகவள்ளி. தம்பதியின் மகள் வினிதா (17), கடந்த ஜூன் 23ம் தேதி இப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போதும் இதுவரை குற்றவாளிகள் யார் என்று கண்டறியப்படவில்லை.

இதனிடையே, கடந்த 2ம் தேதி இரவு சிலர் போதையில் ஒரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக வந்தனர். அப்போது அவர்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்றிரவு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
 இருந்த போதும், நேற்று காலை சிலர் அங்கிருந்த வீடுகளின் முன் இருந்த பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தினர். மற்றும் சிலர் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதில் போலீஸ் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைந்தது. மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த சின்னாதாராபுரம் ஏட்டு ஆனந்தன், கிராமத்தை சேர்ந்த கனகா (18), சித்ரா (17), பூர்ணிமா (16), சுரேஷ் (18) ஆகியோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிந்த மாயனூர் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 40 பேரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிச்சம்பட்டி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வழியாக வருவோர்  தீவிர விசாரணைக்கு பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பிச்சம்பட்டி கிராமத்தில் பெரும்பாலான ஆண்கள் வெளியூருக்கு சென்று விட்டனர். பெண்கள், குழந்தைகள் மட்டுமே உள்ளனர்.மேலும், அக்கிராமத்தில் கரூர் எஸ்பி ஜோஷிநிர்மல்குமார், திருச்சி எஸ்பி ராஜேஸ்வரி, குளித்தலை ஆர்டிஓ சித்திரைராஜ், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வேணி ஆகியோர் தொடர்ந்து முகாமிட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    

கரூர் 80 அடி சாலையில் போலீஸ் அறிவிப்பை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி  -            காவல் துறை அறிவிப்பை மீறி, 80 அடி சாலையில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். கரூர்- கோவை சாலை அருகே 80 அடி சாலை உள் ளது. டெக்ஸ்டைல்ஸ் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளான செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம் பகுதிகளுக்கு வேன்கள் லாரிகள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன. இச்சாலையில் வாகனப்பெருக்கம் காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது., லாரிகள் மினிலாரிகள், வேன்களை இந்த சாலையில் நிறுத்திவைத்துவிட்டு பின் னர் ஓட்டுநர்கள் எடுத்து செல்கின்றனர். இதனால் வழக்கமாக சாலையில் செல் லும் கார்கள், இருசக்கர வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்கொள்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 80அடிசாலையில் வாகங்களை நிறுத்தி வைக்கக்கூடாது என போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். இதுபற்றிய அறி விப்பு பலகையும் இச்சாலை யில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கின்றன., ஆனால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும் அறிவிப்பையும் மீறி வாகனங்கள் தொடர்ந்து இந்த சாலையில் பார்க்கிங் செய்யப்படுகின்றன.

 சனிக்கிழமை டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக உள்ளது. சனிக்கிழமை இந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. எனவே காவல் துறை உயர்அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு வாகனங்களை நிறுத்தாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கி அறிவித்து அந்த இடத்தில் வாகங்களை நிறுத்தி வைக்க அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.             

On Wednesday, November 05, 2014 by Unknown   
ஐவர் தூக்குதண்டனையை எதிர்த்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் பெருந்திரளான மீனவர்களின் ஆர்பாட்டமும் நடைபெற்றது. குப்பத்து மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆர்பாட்டமும் செய்தனர்.


Tuesday, November 04, 2014

On Tuesday, November 04, 2014 by farook press in ,    


திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தொகுதி, குடிமங்கலம் ஒன்றியம்,பெரியபட்டியை அடுத்துள்ள கள்ளபாளையத்தைச் சேர்ந்த டி.மணிகண்டன் என்பவர் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததற்காக வேண்டி உயிர்த்தியாகம்  செய்தார். அவரின் மனைவி பானுமதியிடம் அண்ணா தி.மு.க தலைமை கழகம் சார்பில் ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் ஹமீது, சிறுபான்மைநலப்பிரிவு மாநில துணைச்செயலாளர் எஸ்.இன்பதுரை, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் வி.எம்.சண்முகம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியச்செயலாளர் கே.சுகுமார், மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஜி.வி.வாசுதேவன், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் சுந்தரசாமி, தொகுதி கழக செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் முருகன், உடுமலை நகரமன்றத் துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம்,ஒன்றியக்குழு துணைத்தலைவர் முரளி, ஊராட்சிமன்றத்தலைவர்கள் சி.மாசிலாமணி, ஜனார்த்தனன், வீராச்சாமி, வழக்கறிஞர் சிவா, திலீப்குமார் மற்றூம் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.