தமிழகத்தில் பழமை என்றால் ஒரு அலாதிதான். தமிழகம்
என்றால் பழமையும், பண்பாடும் தான் நமது பெருமை. ஆனால் நாம் நம் பழமையை
மறக்க தொடங்கிவிட்டோம். அதற்கு அடையாளமாக, மதுரை மாவட்டம் மதிச்சியம்
நடுத்தெருவில் சிவக்குமார் என்பவர் நகை உரிமையாளராக இருக்கிறார்.
இவர் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதுவீடு கட்டுவதற்கு பழைய வீட்டை
ஜேசிபி வைத்து இடித்துவிட்டு ஆழமாக தோண்டினார். அப்போது பழமையான அம்மன்
சிலை ஒன்று கிடைத்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tuesday, December 09, 2014
On Tuesday, December 09, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு
திருச்சி மாவட்ட அமெச்சூர் சிலம்ப கழக பொதுச்செயலாளர் ரமேஷ் மற்றும் அவருடைய குழுவினர் மலேசிய நாட்டில் நடக்க இருக்கும் உலக அளவிலான சிலம்பபோட்டியில் பங்கேற்க நிதி உதவி வழங்க வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீமுரளிதரனிடம் மனு கொடுக்க வந்த போது எடுத்தப்படம்

திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற்காக காத்திருக் கும் பதிவு தாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணி காலியிடங்க ளுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது பதிவுதார்ரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும்வரை காத்திராமல் தனியார் வேலைவாய்ப்பி ற் க்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன சென்னையில் உள்ள ஐ .டி .ஐ மெட்டல் கம்பெனிக்கு அப்ரண்டீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13ம் தேதி காலை 10மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு தேர்ச்சி ,ஐ .டி. ஐ .பிட்டர் ,வெல்டர் ,டிப்ளமோ , டி ம் இ படித்தவர்கள் தேர்வு செய்ப்படவுள்ளனர் விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதி சான்றுகள் சாதிச்சான்று, குடும்ப அட்டை ,வேலைவாய்ப்பு அடையாளட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஜெராக்ஸ்நகல்களுடன் நேரில் வருமாறு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துளார்

திருப்பூரிலிருந்து வீட்டுக்கு தெரியாமல் கோவாவுக்கு சுற்றுலா சென்ற 5 மாணவர்கள் மீட்பு போலீசார், சமூக நலத்துறை அதிகாரிகள் எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
திருப்பூர் சாமுண்டிபுரம், வலையன்காடு, லட்சுமிநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், ஆகாஷ், வாசிம் அகரம் உள்பட 5 மாணவர்கள் குமார்நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9–ம்வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் 5 பேரும் நெருங்கிய நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். இந்தநிலையில் இவர்கள் 5 பேருக்கும் கோவா சென்று சுற்றிப்பார்க்க ஆசை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 5 பேரும் அவரவர் வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் பணம் எடுத்து வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி விட்டதும் திருப்பூர் ரெயில்நிலையம் வந்தனர். அந்தநேரத்தில் வந்த ஒரு ரெயிலில் ஏறி கோவை சென்று அங்குள்ள ஒரு லாட்ஜில் இரவு தங்கினர்.
இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் மாணவர்களை பல்வேறு இடங்களில் தேடி அலைந்து திரிந்து 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். நேற்று காலை தூங்கி எழுந்த மாணவர்களுக்கு எங்கு செல்வது? எப்படிசெல்வது? என்று தெரியாமல் பின்னர் திருப்பூருக்கு வந்து நேராக பள்ளிக்கு சென்றனர். மாணவர்களின் உறவினர் காலையில் மீண்டும் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது பள்ளியில் 5 பேரும் இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் பள்ளிக்கு சென்று 5 மாணவர்களையும் மீட்டு விசாரித்தனர். பின்னர் 15 வேலம்பாளையம் போலீசார் 5 மாணவர்களையும் மீட்டு, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அங்கு அதிகாரிகள் மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் (கவுன்சிலிங்)கூறி மாணவர்களின் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விமலா (25). இவர்களுக்கு ஏற்கனவே 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் விமலா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் விமலாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சை டிரைவர் அய்யப்பன் ஓட்டி வர அதில் மருத்துவ தொழில்நுட்ப பாண்டிசெல்வியும் வந்தார்.
விமலாவை பரிசோதித்த பாண்டிச்செல்வி உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். பின்னர் ஆம்புலன்சு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு மீண்டும் பயங்கர வலி ஏற்பட்டு கதறினார். இதைதொடர்ந்து ஆம்புலன்ஸ் அப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டு விமலாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து 15.வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விமலாவும் குழந்தையும் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டனர். தற்போது தாயும்–சேயும் நலமாக உள்ளதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் பனியன் தொழில் நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை தலைதூக்கியுள்ளதால், தொழிலாளர்களை தேடி செல்ல திருப்பூர் தொழில் துறையினர் தயாராகி வருகின்றனர்.திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகமும், சுமார் ரூ.6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு வர்த்தகமும் பின்னலாடை மூலம் நடைபெற்று வருகிறது. சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், சுமார் 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். உலக அரங்கில் பின்னலாடை தொழிலில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ள திருப்பூர் நகரம், கடந்த சில ஆண்டுகளாகவே நூல் விலை உயர்வு, மின்தடை, தொழிலாளர்கள் பற்றாக்குறை, சாயப்பட்டறை மூடல், டீசல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது.
இதன் காரணமாக திருப்பூரில் இருந்து வெளியேறிவிட்ட பெரும்பாலான தொழிலாளர்களை வரவழைத்து வேலை வாய்ப்பளிக்க திருப்பூர் தொழில் துறையினர் தயாராக உள்ளனர். ஆனால் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்கள் திருப்பூரில் போதிய அளவுக்கு இல்லை என்றும் பொதுவான கருத்து உள்ளது. திருப்பூரில் பணியாற்றி வரும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள். குறிப்பாக தென்மாவட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை திருப்பூரில் அதிகம். இது தவிர பீகார், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் திருப்பூரில் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.
வெளியில் இருந்து வந்து திருப்பூரில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. வீட்டு வாடகை, அட்வான்ஸ் என பல்வேறு தேவைகள் பனியன் தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்றன. இதற்காகவே திருப்பூரில் உள்ள ஏராளமான பனியன் நிறுவனங்கள், தங்குமிடம் இலவசம் என்ற உறுதிமொழியை கொடுத்து தொழிலாளர்களை வேலைக்கு வரவழைக்கின்றன.
தனியாக வசிக்கும் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்கள் வழங்கும் அறைகளில் தங்கிக்கொண்டு வேலைசெய்கின்றனர். ஆனால் குடும்பத்தோடு வரும் தொழிலாளர்கள் இதை விரும்புவதில்லை. இதனால் தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அப்படியே வீடு கிடைத்தாலும் கூடுதல் வாடகை மற்றும் செலவுகளால் திணறுகின்றனர்.திருப்பூரில் 900–க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள், 452 சாய, சலவைப்பட்டறைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிட்டிங், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தையல் நிலையங்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காஜா பட்டன் நிறுவனங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ள அடிப்படை தொழிலாளர்களை தவிர, நிர்வாகப்பணியில் ஈடுபட்டுள்ள மேல் மட்ட ஊழியர்கள், நிர்வாகிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திருப்பூரில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈரோடு, கோவை, கோபி, தாராபுரம், உடுமலை, பாலக்காடு போன்ற பகுதிகளில் இருந்து ரயில், பஸ் மூலம் திருப்பூர் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.திருப்பூர் தொழில் நகரம் சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அடங்கி விடுவதால் பெரும்பாலான தொழிலாளர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள்தான் தங்கள் வீடுகளை அமைத்துக்கொண்டுள்ளனர். இவர்களை அழைத்து வர பனியன் நிறுவனங்கள் சார்பில் பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கடந்த 2011–ம் ஆண்டில் சாயப்பட்டறைகள் மூடப்பட்ட சமயத்தில் ஏராளமானோர் வேலை இழந்து தவித்தனர். அதை தொடர்ந்து திருப்பூருக்கு வந்து நிரந்தரமாக தங்கி வேலை செய்ய தொழிலாளர்களுக்கு பழைய ஆர்வம் ஏற்படவில்லை. ஆனால் இந்த ஆண்டில் நூல் விலை உயரவில்லை. மின் தடை பிரச்சினையும் இல்லை. அதேபோல் வெளிநாட்டு பின்னலாடை உற்பத்திக்கான ஒப்பந்தங்கள் அதிகமாக திருப்பூருக்கு கிடைத்ததால், பின்னலாடை தயாரிக்கும் பணி மும்முரமாக காணப்பட்டது. கடந்த 2010–ம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைதான் திருப்பூரின் பழைய உற்சாகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் திருப்பூரில் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை தலைதூக்குவது வழக்கம். அதற்கு தகுந்தாற்போல் சில நிறுவனங்கள் சார்பில் தென் மாவட்ட பகுதிகளுக்கு சென்று நேர்முக தேர்வு நடத்தி ஆட்களை அழைத்து வருவது வழக்கத்தில் உள்ளது. இந்த ஆண்டில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்களை வெளியூரில் நடத்தி அதன் மூலம் ஆட்களை அழைத்து வர திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:–
சாதாரணமாக அடிப்படை பின்னலாடை உற்பத்தியை தெரிந்துகொள்ள 3 மாத கால பயிற்சியை வழங்கினால் தொழிலாளர்களுக்கு அது போதுமானதாக இருக்கும். இது ஆரம்பகால பயிற்சிதான். இதை தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு சென்று திருப்பூர் தொழில் துறையினரும், தொழிலாளர் துறையினரும் இணைந்து பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். இதற்கான முயற்சிகளை டீமா செய்து வருகிறது. ஆண்டுக்கு 4 முறை பயிற்சி முகாம்களை நடத்தி நன்கு தேர்ச்சி பெற்றவர்களை திருப்பூருக்கு அழைத்து வந்து அவர்கள் மூலம் பின்னலாடைகளை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் வேலை வாய்ப்பை தொடர்ச்சியாக வழங்க முடியும். சர்வதேச அளவில் இறக்குமதியாளர்கள் எதிர்பார்க்கும் நன்கு திறன் மிக்க பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் மூலம் ஆடைகளை தயாரிக்கும் முறை திருப்பூரில் அதிகளவில் பெருகும். அரசை எதிர்பார்ப்பதை விட நமக்கு நாமே என்ற திட்டத்தில் அனைத்து தொழில் அமைப்புகளையும் ஒன்று சேர்த்து இந்த முறையை மாவட்டம் தோறும் உருவாக்கினால் திருப்பூரில் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை இருக்காது.திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முகம் கூறியதாவது:–
வெளிமாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்களை அடிக்கடி நடத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வட மாவட்ட பகுதிகளுக்கு சென்று ஆட்களை அழைத்து வந்தோம். இந்த ஆண்டும் அதே போல் நமது திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகளை ஒன்று சேர்த்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வேலை வாய்ப்பு முகாம்களை உருவாக்கி ஆட்களை அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கு பாதுகாப்பான தங்கும் விடுதி, உணவு, நல்ல சம்பளம் போன்ற விஷயங்கள் இருந்தால் திருப்பூரை விட்டு அவர்கள் போக மாட்டார்கள். தனித்தனியாக செயல்படுவதை விட இந்த விஷயத்தில் அனைத்து தொழில் அமைப்புகளும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்தி செயல்பட வேண்டும்.திருப்பூர் ரோட்டரி ஸ்கிரீன் பிரிண்டிங் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:–இந்த முறை பீகார், அசாம், ஒடிசா பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் திருப்பூருக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களை அழைத்து வருபவர்களிடம் எத்தனை ஆட்கள் தேவை என்பதை கூறினால் போதும், திருப்பூர் தொழில் துறையினருக்கு தேவையான நபர்களை அவர்கள் அழைத்து வருவார்கள். தங்கும் வசதிகள், தண்ணீர், விடுதி, உணவு, சம்பளம் என அவர்கள் மீது அக்கறை காட்டினால் போதும். அவர்கள் திருப்பூரை விட்டு எங்கும் போகமாட்டார்கள். அதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் பயிற்சி வழங்கி அழைத்து வரலாம். ஆனால் திருப்பூரில் உள்ள தொழில் அமைப்பினர் ஒன்று சேர்ந்து தொழிலாளர்களுக்கு தனி அடையாள அட்டையை வழங்க வேண்டும். ஒரு கம்பெனியில் இருந்து மற்ற இடங்களுக்கு மாறி செல்லும்போது அந்த அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தவேண்டும். இதன் மூலம் உரிய அனுமதி இல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கு ஆட்கள் மாறிச்செல்லும் நிலை குறையும். குழப்பங்களும் அகலும். பயிற்சி வழங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு திருப்பூரில் நிறைய மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்பதை விழிப்புணர்வு மூலம் புரிய வைக்க வேண்டும்.
எம்.எல்.எப் தொழிற்சங்க பொதுச்செயலாளர் எஸ்.முத்துக்குமாரசாமி கூறியதாவது:–
திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று ஒவ்வொரு அரசும் அறிவிப்பை வெளியிட்டதோடு சரி, ஆனால் எவ்வித முன்னேற்றப்பணிகளும் நடைபெறவே இல்லை. வசிக்க வீடு கிடைக்காமல் திருப்பூரில் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கூடுதல் வாடகை செலவுகளால் தவிக்கின்றனர். அடிப்படை நிலை பனியன் தொழிலாளர்கள் தங்களுக்கு குடியிருப்பு வசதிகளை அரசு உருவாக்கித்தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை ஒப்பிடும்போது இங்குள்ள தொழிலாளர்கள் நல்லமுறையில் இருக்கிறார்கள் என்று கூறினாலும், சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்போது அங்கு தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட குடியிருப்பு வசதிகள் நல்ல முறையில் உள்ளன. இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் குடியிருப்பு வசதிகளை முறைப்படுத்த நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் தொழிலாளர்களின் இருப்பிடம், உணவு, பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்த விழிப்புணர்வு நிலை அதிகப்படுத்த வேண்டியுள்ளது.
குடியிருப்பு வசதிகளை உருவாக்கித்தந்தால் திருப்பூரை நோக்கி தொழிலாளர்கள் நம்பிக்கையோடு வருவார்கள். நீண்ட காலமாக இருக்கும் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க இதுவும் ஒரு வழியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு அனைத்து தொழில் அமைப்பினரும், தொழிற்சங்கத்தினரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த கோரிக்கை நிறைவேறும் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் பஸ்நிலையங்களில் அதிகரிக்கும் அழகிகள் நடமாட்டம் கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பல்லடம் ரோட்டில் பழைய பஸ் நிலையமும், பெருமாநல்லூர் ரோட்டில் புதிய பஸ்நிலையமும் அமைந்துள்ளது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு தொழில் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகிறார்கள். திருப்பூருக்கு வரும் இவர்கள் புதிய, பழைய பஸ் நிலையத்திலிருந்து டவுன் பஸ்கள் மூலம் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு செல்கிறார்கள். உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ இல்லாமல் புரோக்கர்களை நம்பி திருப்பூருக்கு வரும் தொழிலாளர்கள் நிலை திண்டாட்டம்தான்.
இதைத்தவிர கள்ளக்காதல் ஜோடிகள், குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாய் இருப்பவர்கள், வீட்டை விட்டு ஓடி வரும் காதலர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என பல்வேறு தரப்பினரும் திருப்பூரை வந்தடைகின்றனர். இவர்களை கண்காணிப்பதற்காகவே ஒரு சிலர் பஸ் நிலையங்களில் சுற்றித்திரிகிறார்கள். இவர்கள் இளம் வயது பெண்கள், விதவைகள், சிறுமிகளை குறிவைத்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி தங்கள் வலையில் விழ வைத்து விடுகின்றனர். பின்னர் தங்கள் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்று வீடு கொடுத்து தங்கவைத்துக்கொள்கின்றனர். நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி ஓரிரு நாட்களுக்குள் அவர்களை விபசாரத்தில் தள்ளி விடுகின்றனர். தன் உறவுக்கார பெண் ஒருவரை நம்பி திருப்பூர் வந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது.
இது குறித்து புதிய பஸ் நிலையத்தில் கடை வைத்து நடத்தி வரும் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:–திருப்பூர் நகருக்கு வரும் பலர் இந்த நகரத்தை பற்றி தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். இப்படி திருப்பூருக்கு வரும் பல பெண்கள் விரும்பியோ, விருப்பம் இல்லாமலோ விபசாரம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகின்றனர். இந்த பெண்கள் இரவு நேரங்களில் தங்களை அழகிகளாக காட்டிக்கொண்டு புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் வலம் வருகிறார்கள். இவர்கள் முக்கியமாக வசதி படைத்த ஆண்களையும், இளைஞர்களையும்தான் தங்கள் வலையில் விழவைத்து முதலில் அவர்களிடம் அறிமுகமாகிக்கொண்டு பின்னர் புரோக்கர்களின் உதவியுடன் பேரம் பேசி விபச்சாரத்துக்கு அழைத்து செல்லுகின்றனர். இந்த தகவல் தெரிந்த போலீசார் ரோந்து வந்து அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும், மீண்டும் அவர்கள் வெளியில் வந்து விபசாரத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் பல ஆண்கள் தங்களிடம் இருந்த பணத்தை இழந்து விட்டு பின்னர் நண்பர்களின் உதவியுடன் வீட்டிற்கு செல்லும் நிலையும் இங்கு அடிக்கடி ஏற்படுகிறது.அதிலும் புதிய பஸ் நிலையத்தின் அருகிலேயே டாஸ்மாக் கடை இருப்பதால் குடித்துவிட்டு போதையுடன் வரும் குடிமகன்கள் நள்ளிரவு நேரங்களில் பஸ்நிலைய வளாகத்திலேயே அழகிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி விட்டது. தொழில் தேடி வரும் சில ஆண்கள் இந்த அழகிகளின் மேல் மோகம் கொண்டு தங்கள் பணத்தை எல்லாம் செலவழித்து பெரும் குடிமகன்களாகி போனதுதான் மிச்சம்.இதனால் பஸ் நிலையங்களில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் சுகாதாரம் என்பது பஸ் நிலையங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தால் புதிய பஸ் நிலையத்தில் போதிய கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. திறந்த வெளியையே கழிப்பறையாக பலர் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி நோய்பரவும் அபாயம் ஏற்படுகிறது. பெரும்பாலான நாட்களில் பஸ் நிலையங்களில் உள்ள மாநகராட்சி கட்டண கழிப்பறையும் மூடிய நிலையிலேயே காணப்படுகிறது. பெண்களுக்கென தனி கழிவறை வசதி இல்லாத நிலை உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது ஜேப்படி மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களும் அதிகமாக நடைபெறுகிறது. இதனால் பெண் பயணிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இதனால் அழகிகள் நடமாட்டம் அதிகரித்துள்ள திருப்பூர் பஸ்நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, விபசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஒகேனக்கல் பகுதி கர்நாடகத்திற்கு சொந்தம் என்று கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா கூறி வருகிறார். இரு மாநில உறவுகளை சுமுகமாக நடத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர், தேவையற்ற சர்ச்சைகளை கொண்டுவரக்கூடாது. ஒகேனக்கல் தமிழக பகுதி என்று முடிவாகி விட்டது. இதில் மறுஆய்வுக்கு வாய்ப்பு இல்லை.
இதுபற்றி எந்த விதமான சர்ச்சையும் புதிதாக கொண்டுவர தேவையில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கர்நாடக முதல்–மந்திரி மட்டுமின்றி, கர்நாடகத்தின் பிற அரசியல்வாதிகளும் இந்த பிரச்சினையை எழுப்பக்கூடாது. ஒகேனக்கல் என்னுடைய எம்.பி. தொகுதிக்குள் வருகிறது. அங்கு, ஒரு அடியைக்கூட விட்டுத்தர முடியாது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...