Saturday, December 27, 2014
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால், அதனை மறுத்துள்ள இராணுவத்தினர், அவை வருடாந்தம் வழமையாக அனுப்பப்படும் சாதாரண வாழ்த்துச் செய்திகளே என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் அமைப்பின் சார்பிலான ஷான் வீரதுங்க அவர்களை கேட்டபோது, இப்படியான ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் திணைக்களத்தின் மூலம் அனுப்பப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்ததாக கூறினார்.
கடந்த சில வாரங்களாகவே இலங்கை இராணுவத்தினர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதை தாங்கள் அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த கடிதங்களில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் படங்களுடன், கடந்த பத்து வருடங்களாக செய்த சாதனைகள் குறித்து சிங்களத்தில் எழுதப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவை தேர்தல் விதிகளுக்கு முரணானவை என்றார் அவர்.
அவை வெறுமனே வருடாந்தம் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு அனுப்பப்படும் சாதாரண வாழ்த்து துண்டுப் பிரசுரங்கள் என்று இராணுவம் கூறுவதையும் அவர் நிராகரித்தார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் தாங்களும் பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் முறைப்பாடு செய்திருந்ததாகவும், அவரும் இவை வெறுமனே வாழ்த்துச் செய்திகள் அல்ல என்பதை புரிந்துகொண்டார் என்றும் குறிப்பிட்ட ஷான் வீரதுங்க, அந்த கடிதங்கள் விநியோகிக்கப்படுவதை நிறுத்துமாறு தபால் மா அதிபருக்கு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளின் சோனி கணினிகளிலிருந்து தகவல் திருடப்பட்டன. இதற்கு வடகொரியாதான் காரணமாக இருக்கும் என அமெரிக்கா கருதியது.
ஏனெனில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ பிரதிபலிக்கும் கதாபாத்திரம் கொண்ட ’தி இன்டர்வியு’ என்கின்ற திரைப்படத்தை சோனி நிறுவனம் வெளியிட இருந்தது. இந்நிலையில்தான் சோனி நிறுவனத்தின் கணினிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டன.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் வடகொரியாவை மீண்டும் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வடகொரியா தேசிய பாதுகாப்பு கமிஷன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ’இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தங்கள் நாட்டின் மீது அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் வெள்ளை மாளிகை, பெண்டகன் உள்ளிட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளாகும்’ என்றும் எச்சரித்திருந்தது
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் வடகொரியாவில் இணையதள சேவை முடங்கியது. இந்த முடக்கத்திற்கு அமெரிக்காவின் சதியே காரணம் என்று வட கொரியா பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில் சோனி நிறுவனம் அறிவித்தபடியே கிறிஸ்துமஸ் தினத்தில், ‘தி இண்டர்வியூ’ திரைப்படத்தை வெளியிட்டது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
தற்போது வடகொரியா பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெப்ப மண்டலக் காடுகளில் உலவும் குரங்குதான் ஒபாமா. அவரது பேச்சும், செயலும் குரங்கிற்கு ஈடானதுதான்' என்று அமெரிக்க ஜனாதிபதியை விமர்சித்துள்ளது.
உடுமலை, : உடுமலை வீதியில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. அதை ஒழுங்குபடுத்த வேண்டுமென எழுந்த கோரிக்கையை அடுத்து காவல்படை அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை கச்சேரி வீதியில் அரசு மருத்துவமனை. தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம்., பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையம் ஆகியவை செயல்படுகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த அலுவலகங்களுக்கு வரும் பெரும்பாலானோர் தங்கள் இரு சக்கர வாகனங்களை வீதியில் தாறுமாறாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அந்த வழியாக மற்ற இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வந்தது. நடந்து செல்வோரும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். தளி ரோட்டிலும் இதே நிலை ஏற்பட்டது.
இதுகுறித்த செய்தி தினகரன் பத்திரிகையில் படத்துடன் வெளிவந்தது. அதையடுத்து தற்போது அந்த வீதியில் போக்குவரத்து இளைஞர் காவல்படையை சேர்ந்த 3 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீதியில் ரோந்து வந்து தாறுமாறாக நிறுத்தி செல்லும் வாகனங்களை பூட்டு போட்டு கைப்பற்றுகின்றனர். ஸ்பாட் பைன் வசூலித்த பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையால் தற்போது கச்சேரி வீதியில் போக்குவரத்து சற்று எளிதாகி உள்ளது.
உடுமலை கச்சேரி வீதியில் அரசு மருத்துவமனை. தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம்., பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையம் ஆகியவை செயல்படுகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த அலுவலகங்களுக்கு வரும் பெரும்பாலானோர் தங்கள் இரு சக்கர வாகனங்களை வீதியில் தாறுமாறாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அந்த வழியாக மற்ற இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வந்தது. நடந்து செல்வோரும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். தளி ரோட்டிலும் இதே நிலை ஏற்பட்டது.
இதுகுறித்த செய்தி தினகரன் பத்திரிகையில் படத்துடன் வெளிவந்தது. அதையடுத்து தற்போது அந்த வீதியில் போக்குவரத்து இளைஞர் காவல்படையை சேர்ந்த 3 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீதியில் ரோந்து வந்து தாறுமாறாக நிறுத்தி செல்லும் வாகனங்களை பூட்டு போட்டு கைப்பற்றுகின்றனர். ஸ்பாட் பைன் வசூலித்த பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையால் தற்போது கச்சேரி வீதியில் போக்குவரத்து சற்று எளிதாகி உள்ளது.
பல்லடத்தில் ஊழியர்கள் விடுமுறை காரணமாக மின் கட்டண வசூல் மையம் திறக்கப்படாததால் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பல்லடம் நகர உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு உள்பட்ட பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
இந்த மின் பொறியாளர் அலுவலகத்தில் இரண்டு மின் கட்டண வசூல் மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மைய ஊழியர்கள் இருவரும், வெள்ளிக்கிழமை விடுமுறையில் சென்று விட்டனர்.
ஆனால், வெள்ளிக்கிழமை, வழக்கம்போல் மின் கட்டணம் செலுத்த பொதுமக்கள் இந்த மையத்துக்கு வந்தனர். ஆனால், இந்த மையம் திறக்கப்படாததால் மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து மின்வாரிய உதவிப் பொறியாளர் சுரேஷ்பாபு கூறியதாவது: மின் கட்டண வசூல் மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவரும் விடுமுறையில் சென்று விட்டனர். இதனால், இணையதள வழியாக மின் கட்டணம் வசூல் செய்ய முடியவில்லை. அதற்கான இனையதள பயனர் பெயர், பயனர் புகு எண்ணை அவ்ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றார்.
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக ஊத்துக்குளி அருகே பெண் உள்பட இருவரை திருப்பூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:
ஊத்துக்குளி விஜயமங்கலம் சாலையைச் சேர்ந்தவர் மனோகர் மனைவி சாந்தி (46), ரெட்டிபாளையம் உடையார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் (55) ஆகியோர் சேர்ந்து, ரூ. 2 லட்சம், ரூ. 1.50 லட்சம், ரூ. 1.25 லட்சம், ஒரு லட்சம் ரூபாய், ரூ. 60 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் என மாதாந்திர ஏலச்சீட்டுகளும், வாராந்திரப் பலகாரச் சீட்டுகளும் நடத்தி வந்தனர்.
இதில், பணம் செலுத்துபவர்களுக்கு அதிக லாபம், வட்டி தரப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி ஊத்துக்குளி அருகே சின்னத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமிக்கவுண்டரின் மகன் தெய்வசிகாமணி(64) உள்பட பலரும் மொத்தம் ரூ.7.46 லட்சம் செலுத்தியிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், ஏலச்சீட்டு நடத்திய அவர்கள், சீட்டுப் பணத்தை திரும்பத்தராமல் மோசடி செய்யதாக தெய்வசிகாமணி திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாந்தி, சுப்பிரமணியம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.பத்மநானுக்கு உடுமலை நகர திமுகவினர் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பையொட்டி, திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதையடுத்து, இல.பத்மநாதன் மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நகரச் செயலாளர் எம்.மத்தீன், அவைத் தலைவர் எம்.ஏ.கே.ஆசாத், முன்னாள் நகரச் செயலாளர் சி.வேலுச்சாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர்.
மதுரை அருகே மேலூர், கீழவளவு உள்பட பல பகுதியில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் அரசுக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பி.ஆர்.பி. நிறுவனம் உள்பட சில நிறுவனங்கள் மீது புகார் செய்யப்பட்டது.
மேலும் பலரது இடத்தை அபகரித்தும், மிரட்டியும் பெற்று கொண்டு கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாகவும் பலர் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து குவாரியில் நடந்த முறை கேடுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் மதுரைக்கு வந்து 2 கட்டமாக விசாரணை நடத்தினார்.
இந்த விசாணையின் போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மற்றும் கிரானைட் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள், போலீசார் என பலதரப்பு சார்பில் சகாயத்திடம் புகார் செய்தனர். மொத்தம் 312 புகார் மனுக்கள் குவிந்தன. 2–வது கட்ட விசாரணையின் போது சகாயம் மற்றும் அவரது குழுவினர் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் கிரானைட் குறித்து விசாரணை நடத்த சகாயத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்கியதை தொடர்ந்து நேற்று மதுரைக்கு வந்து 3–வது கட்ட விசாரணையை தொடங்கினார். அப்போதும் பலர் புகார் மனு அளித்தனர். குறிப்பாக புது தாமரைபட்டியில் டைகர் ஜாங்கிட் நகரில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்ற போலீஸ் துறையை சேர்ந்த சங்கத்தினர் 46 பேர் கையெழுத்திட்ட மனுவை சகாயத்திடம் கொடுத்தனர்.
இதுகுறித்து சங்க தலைவர் கிருஷ்ணன் கூறும்போது:–
‘‘கடந்த 2001–ம் ஆண்டு போலீஸ் கமிஷனராக இருந்த ஜாங்கிட் முயற்சியால் போலீசாருக்கு வீட்டுமனைக்காக புது தாமரைபட்டியில் 27 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. முறையாக அனுமதி பெற்று 367 போலீஸ்துறையினருக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது. இதில் 4 பேர் மட்டும் வீடு கட்டினர். அந்த இடத்தின் அருகே பி.ஆர்.பி. நிறுவனத்தினர் வெடி வைத்து கற்கள் வெட்டி எடுத்ததால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த குடும்பமே பாதிக்கப்பட்டது.
பி.ஆர்.பி. நிறுவனத்தினரின் மிரட்டலுக்கு பயந்து 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியாமலும் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல முடியாத நிலையிலும் உள்ளோம். எனவே பயமின்றி வீடு கட்டி குடியிருக்க வழிவகை செய்து தரும்படி புகார் மனுவில் கூறி இருக்கிறோம்’’ மனுவை பெற்று கொண்ட சகாயம் குழுவினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக கூறினார்.
இன்னும் பலர் சகாயத்திடம் புகார் மனு கொடுத்தனர். அவர் தன் குழுவினருடன் மேலூர், கீழவளவு ஆகிய பகுதிகளில் உள்ள குவாரிகளில் மீண்டும் இன்று ஆய்வு செய்தார்.

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.
இந்த ஜல்லிக்கட்டு, தைப்பொங்கலின்போது நடைபெறும் என்பதால் இந்த ஆண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாலமேட்டில் இன்று அமைதி ஊர்வலம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. பாலமேடு கிராம மகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி, கிராம மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் இணைந்து ஊர்வலத்தை நடத்தப்போவதாக தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ஊர்வலத்திற்கு போலீசார் ‘திடீர்’ தடை விதித்தனர்.
இதனால் பாலமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காந்த சொரூபன் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அலங்காநல்லூரிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

திருமங்கலம் அருகே உள்ளது தொட்டியபட்டி கிராமம்.அங்கு சுமார் 300 ஆண்டு பழமையான பெருமாள்–பூதேவி– ஸ்ரீதேவி கோவில் உள்ளது. கோவில் முன்பு பள்ளிக்கூடம் இருந்து வந்தது. பள்ளிக்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதும், அங்கு சாவடி கட்டப்பட்டது. சாவடி கட்டப்படும் போது வேப்பமரக்கன்று ஒன்று நடப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட வேப்பமரம் நன்றாக வளர்ந்து பெரிய மரமாக உள்ளது. அதில் கடந்த 15 நாட்களுக்கு மேல் பால் வடிய தொடங்கியது. அதைப்பார்த்த கிராம மக்கள் அதிசயமாக பார்த்தனர். தொடர்ந்து பால் நிற்காமல் வடிந்து கொண்டே உள்ளது. வடியும் பாலை சிலர் ருசித்து பார்த்தனர். கசப்பும், இனிப்பும் கலந்த நிலையில் இருந்துள்ளது.
உடனே கிராமமக்கள் மரத்திற்கு மஞ்சள் துணி சுற்றி பூ மற்றும் மஞ்சள் தடவி சூடம் ஏற்றி வழிபடத் தொடங்கி விட்டனர். மேலும் தொட்டிலும் கட்டி வேண்டுதல் வைத்து வணங்கி வருகின்றனர்.
இது குறித்து கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்னண் (வயது75). விவசாயி கூறியதாவது:–
மரம் வைத்து 20 வருடம் இருக்கும். கடந்த 15 நாட்களுக்கு மேல் மரத்தின் இரண்டு கொப்புகளுக்கு இடையே பால் போன்ற திரவம் தொடர்ந்து வடிந்து கொண்டுள்ளது. கிராமத்தில் வேப்ப மரங்கள் நிறைய உள்ளது. அதில் பெருமாள் கோவில் முன்பு உள்ள மரத்தில் மட்டும் பால் வடிகிறது. எங்களுக்கு அதிசயமாக உள்ளது. எனவே மரத்தை சுற்றிபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, திரிசூலம் வைத்து வணங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...