Wednesday, September 21, 2016

On Wednesday, September 21, 2016 by Unknown in    


திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் திங்கட்கிழமையான நேற்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதையொட்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்க சுமார் 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு இருந்தனர்.இந்தநிலையில், திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த ஜீவானந்தம்(வயது 35), அவருடைய மனைவி கார்த்திகா(28) ஆகியோர் வந்திருந்தனர். அப்போது, அவர்கள் திடீரென தாங்கள் பாட்டிலில் கொண்டு வந்த டீசலை உடலில் ஊற்றி, நீதிவேண்டும், நீதிவேண்டும், எங்கள் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கார்த்திகா கையில் இருந்த டீசல் பாட்டிலை தட்டிவிட்டனர். மேலும் கார்த்திகா, ஜீவானந்தம் ஆகியோர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றியதுடன், அவர்கள் கையில் வைத்திருந்த தீப்பெட்டியையும் பிடுங்கி எறிந்தனர்.ரூ.17 லட்சம் மோசடி

பின்னர் அந்த தம்பதியை மீட்டு, போலீஸ் வேனில் ஏற்றி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்திய போலீஸ் விசாரணையில், அவர்கள், சாமுண்டிபுரத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.17 லட்சம் கொடுத்து 4½ சென்ட் நிலத்தை வாங்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த இடத்தில் திடீரென கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மூர்த்தியிடம் ஜீவானந்தம் கேட்டபோது, அவர் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை ரூ.17 லட்சத்துக்கு விற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் கடந்த 6 மாதமாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும், இதனால் விரக்தி அடைந்த ஜீவானந்தம், தனது மனைவி கார்த்திகாவுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாநகர கமிஷனர் அலுவலகத்துக்கு நாளை(இன்று) வரும்படியும், அப்போது, உங்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி போலீசார் அனுப்பிவைத்தனர்.

On Wednesday, September 21, 2016 by Unknown in    
On Wednesday, September 21, 2016 by Unknown in    
On Wednesday, September 21, 2016 by Unknown in    
On Wednesday, September 21, 2016 by Unknown in    

திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் இலவச வீட்டுமனை பட்டா, உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 2,400 மனுக்கள் கொடுக்கப்பட்டன.கூட்டத்துக்கு, பல்லடம் 63 வேலம்பாளையம் கிராமம் வி.ஆர்.பி.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் குடியிருப்புக்கு பட்டா கேட்டு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.செல்போன் கோபுரங்கள்

பாரத அன்னையர் முன்னேற்ற கழகத்தினர் தலைமையில் வந்த திருப்பூர் மாநகராட்சி 18–வது வார்டு பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் விபத்து அதிக அளவில் நடப்பதால் விபத்தை தடுக்க அடிப்படை வசதிகள் கேட்டும் மனு கொடுத்தனர். நல்லூர் நுகர்வோர் அமைப்பினர் கொடுத்த மனுவில், மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் செல்போன் கோபுரங்களில் பெரும்பாலானவை சேதமடைந்து கீழே விழும் நிலையில் இருப்பதாகவும், அவற்றை உடனே சரிசெய்ய சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.சிவசேனா அமைப்பினர் கொடுத்த மனுவில், காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் தலைமையில் வந்த கட்டுமான பெண் தொழிலாளர்கள், தங்களுக்கும் பேறுகால பயன் 9 மாதம் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.நலத்திட்ட உதவிகள்

பல்லடம் ஆறுமுத்தாம் பாளையம் அறிவொளிநகர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியை தூய்மையாக வைத்திருக்க குப்பை தொட்டிகள் அமைத்து கொடுக்க கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.கூட்ட முடிவில், பல்லடம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு தலா ரூ.12 ஆயிரத்துக்கான மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையும், ஒரு பயனாளிக்கு முதல்–அமைச்சரின் விபத்து நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

On Wednesday, September 21, 2016 by Unknown in    

திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.மாற்றுவழியில் இயக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் உரம் ஏற்றிக்கொண்டு கோட்டயம் நோக்கி சென்ற சரக்கு ரெயில் கொல்லம் அருகே நேற்று அதிகாலை திடீரென தடம்புரண்டது. இதனால் அந்த வழியாக நேற்று ரெயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.இதனால் திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரெயில்கள் நேற்று காலை திருப்பூர் வராமல் ஈரோட்டில் இருந்து கரூர், மதுரை, நெல்லை வழியாக திருவனந்தபுரத்துக்கு மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சென்னை, மும்பை மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் மதுரை, கரூர், ஈரோடு வழியாக இயக்கப்பட்டன.5 மணி நேரம் தாமதம்

இதேபோல் கேரளாவுக்கு சென்று வரும் பல்வேறு ரெயில்கள் நேற்று மாற்று வழியில் இயக்கப்பட்டன. ரெயில் போக்குவரத்து திடீரென மாற்றி அமைக்கப்பட்டதால் பயணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய முடியாமல் அவதி அடைந்தனர்.இதற்கிடையே திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு திருப்பூர் வரவேண்டிய ரப்திசாகர் ரெயில் 5 மணி நேரம் தாமதமாக இரவு 9.10 மணிக்கு வந்து சென்றது. இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருப்பூர் வழியாக ரத்து செய்யப்பட்ட ரெயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் இந்த ரெயில் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு சென்றனர்.

On Wednesday, September 21, 2016 by Unknown in    

திருப்பூர்திருப்பூர் மாநகராட்சி கே.செட்டிப்பாளையம் வெங்கடேஷ்வரா நகரில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு காரணமாக சாக்கடை கால்வாய் கட்டும் பணி தடைபட்டதால் கடந்த 7 மாதங்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை சாலைமறியல் செய்ய திரண்டு வந்தனர்.சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ஊரக போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதானம் செய்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சாக்கடை கால்வாய் கட்டும் பணி தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

On Wednesday, September 21, 2016 by Unknown in    

திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையின் சார்பில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.இலவச பயிற்சி வகுப்பு

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் பயிற்றுவித்தல் பணிகள் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கி பேசியதாவது:–மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., வி.ஏ.ஓ., பி.எஸ்.ஆர்.டி. ஆகிய அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற அக்டோபர் மாதம் 31–ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.இதில் வாரந்தோறும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 2–வது வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் தேர்வு பெறுபவர்களுக்கு பணிநியமன ஆணையை நான் வழங்குறேன்.உதவித்தொகை

ஒவ்வொரு மாதமும் 3–வது வெள்ளிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி அல்லது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் அல்லது தொழில் நெறிக்கருத்துரை வழங்கப்பட்டு வருகிறது.வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டம் மூலம் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து இதுவரை அரசு பணி கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்து ஒருவருடம் முடிந்தவுடன் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு கல்லூரியில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும். இந்த பணிகளை அதிகாரிகள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் எஸ்.ஜெயந்தி கூறினார்.கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி காளிமுத்து, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tuesday, September 20, 2016

On Tuesday, September 20, 2016 by Tamilnewstv