Sunday, December 02, 2018

On Sunday, December 02, 2018 by Tamilnewstv   
திருச்சி :

*விமான நிலையத்தில் 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கம் பறிமுதல்*


மலேசியா, துபாயிலிருந்து இரவு வந்த விமானத்திலும், இன்று காலை  சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது திருவாரூரை சேர்ந்த அகமதுகான், புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலம், குலசேகரபட்டினம் சேர்ந்த அப்துல்காதர், மற்றுமொரு பயணி என 4 பேரிடமிருந்து 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை.

Saturday, December 01, 2018

On Saturday, December 01, 2018 by Tamilnewstv   
திருச்சி      01.12.18

மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்


தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி திருச்சி தில்லைநகர் 5 வது கிராஸில் அமைந்துள்ள மக்கள் மன்றத்தில் தொடங்கியுள்ளது.

இன்று முதல் ஜனவரி 16 வரை நடக்கும் கைத்தறி கண்காட்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி தொடங்கிவைத்தார்.

இந்த விற்பனை கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 52 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 35 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டு சேலை, பட்டு வேஷ்டி, துண்டு, போர்வை விரிப்புகள் மற்றும் கால்மிதி போன்ற ஏராளமான கைத்தறி தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

'இயந்திரங்களை பயன்படுத்தாமல், நெசவாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட கைத்தறி தயாரிப்புகள், சிறப்பு தள்ளுபடி விலையில், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை தரத்தில், மற்ற இயந்திர தயாரிப்புகளை விட உயர்ந்தவை. மக்கள் இதுபோன்ற பொருட்களை வாங்கினால் தான், நெசவாளர்களின் வாழ்வு புத்துயிர் பெரும். அதற்கு இதுபோன்ற கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சிகள் உபயோகமாக இருக்கும்.' என்றார்

தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு .கு.இராசா மணி, கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள்  பங்கேற்றனர்.
On Saturday, December 01, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 1.12.18
திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில்
2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டிற்கு 47,208 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 19 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

முதற்கட்டமாக திருச்சியில் இன்று 2183 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பள்ளிக்கல்வித்துறையினர் அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி 406 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 15 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .இராசாமணி. தலைமையில்,  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று வழங்கினார்கள்.

 விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் விழா பேருரையாற்றியதாவது

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த நல்ல பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். குழந்தைகள் கருவில் இருக்கும் காலம் முதல் பள்ளி படிப்பு, உயர்கல்வி, அரசு பணியில் சேரும் வரை அவர்களுக்காக சீரிய பல திட்டங்களை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்தார்கள். கல்வித்துறைக்கென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு 27,500 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

கல்வித்துறையில் இந்திய திருநாடே வியக்கின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா காலணி, விலையில்லா மதியஉணவு, கலர் சீருடை போன்றவை வழங்கப்படுகிறது.

மாண்புமிகு அம்மாவின் அரசு அற்புதமான அரசு. எனவே மாணவ, மாணவியர்கள் இவ்வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும். வரலாற்று சாதனைகள் படைக்க வேண்டும். தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டும். இந்த சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி எனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளியாகும். எனவே எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பள்ளிக்கு மேலும் கூடுதலாக முதல் தளத்தில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூபாய் 47 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமகிருட்டினன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ராமசாமி, அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு.வேலுச்சாமி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Monday, November 26, 2018

On Monday, November 26, 2018 by Tamilnewstv in    
திருச்சி   25.11. 18

திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி




திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கஜா புயலால்  பாதிப்படைந்த பகுதிகளுக்கு புயல் நிவாரண பொருட்கள் அனுப்ப பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 5வது முறையாக புயல் நிவாரண பொருட்கள் இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 150 காய்கறிகள் மூட்டை  அனுப்பப்பட்டன.அப்போது வெல்லமண்டி நடராஜன் கூறுகையில்,

நேற்று  2000 நபர்களுக்கு திருச்சி சட்டமன்ற தொகுதி சார்பாக பரிமாறப்பட்டது அதேபோன்று இன்று அமைச்சர் செங்கோட்டையன் துரைக்கண்ணு ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசிய பின்பு அவர்களின் முயற்சியில் திருச்சி மாவட்ட சார்பில் வெங்காயம் முட்டைகோஸ் பீட்ரூட் போன்ற காய்கறி மூட்டைகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது மின்சாதன பாதிப்படைந்த பகுதிகளுக்கு மின்சாரம் தயாரிக்கும் பணியும் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்று காலை காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நாளை காலை அரசு அலுவலர்களான BDO போன்றவர்களை அழைத்து நாளைக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

Friday, November 23, 2018

On Friday, November 23, 2018 by Tamilnewstv   

12 மாவட்டங்களில் பிரதமருக்கு 75 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்படும்

 மனித கடத்தல் குழந்தைகள் தொடர்பு குழந்தைகள் கடத்தல் மக்களவையில் நிறைவேற்றம்  பாராட்டப்படுகிறது அதே சமயத்தில் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற வேண்டும் என்பதற்காக மாவட்டங்களில் 75000 தபால்தலை பிரதமருக்கு அனுப்பும் திட்டத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் இந்தியாவில் ஆண்டுக்கு1,20,00000 கடத்தல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் கடத்தப்பட்டுள்ளனர் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது தெரியாது கடந்த ஆண்டு 2017 திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை காணாமல் போனது அதனால் வரை கண்டுபிடிக்கப்படவில்லை  வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து இடம்பெயர்ந்து சென்னை திருச்சி போன்ற பெருநகரங்களில் அவர்கள் வேலை வேலை பார்த்து வருகிறார்கள் அவர்களுக்கு பாதுகாக்க எந்த திட்டமும் இதனால் வரை கிடையாது அவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளதா ஆதார் அட்டை உள்ளதா இதுவரை கணக்கில் இல்லை எனவே இந்த மசோதா ஆள்கடத்தல் தடுப்பு மட்டும்தான் இருந்தது தமிழ்நாட்டில் புது சட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது பிரதமரை வரும் 26ம் தேதி சந்தித்து மனு அளிக்க உள்ளோம் இதில்  முழு கவனம் செலுத்தி பிரதமருக்கு 75 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்படுகிறது 

பேட்டி

தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச்செயலாளர் இந்திரஜித்

Tuesday, November 20, 2018

On Tuesday, November 20, 2018 by Tamilnewstv   
திருச்சி கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் தலைவர் அருண் சித்தார்த் தலைமையில் டெல்டா மாவட்டம் பாதிப்பு அடைந்த இந்த இடங்களுக்கு  நிவாரண பொருட்கள்


திருச்சியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது அவருடன் CTDS tamilnadu நிறுவனர் ஜான்சி ராணி, மக்கள் அரசு கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் அரவிந்த் ஜெய் சென்றனர்..அருண் சித்தார்த் கூறும்பொழுது


 டெல்டா மாவட்ட பகுதிகளில் கஜா புயல் ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது பாதிப்படைந்த மக்களுக்கு அரிசி பருப்பு பிரட் பிஸ்கட் துணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்குவதற்கு திருச்சியிலிருந்து மக்கள் அரசு கட்சி , சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் இணைந்து எடுத்துச் சொல்கிறோம் என்று கூறினார் ....
மேலும் பொருட்கள் தந்து உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்..
தொடர்ச்சியாக பல மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் தர வேண்டி இருப்பதால் மக்கள் உதவி கரம் நீட்ட முன் வர வேண்டும் என்றும் ,இப்பயணம் தொடர்ச்சியாக மக்கள் இயல்பு நிலை திரும்பும் வரை இப்பணி தொடரும் என்றும் கூறினார்...
இவர்களுடன் லால்குடி ஜெயபாரதி, திருச்சி ஐயப்பன் மற்றும் மணிகண்டன் உடன் இருந்தனர்.....
பேட்டி.... அருண் சித்தார்த்

Sunday, November 18, 2018

On Sunday, November 18, 2018 by Tamilnewstv   
திருச்சி ஸ்ரீரங்கம் கட்டளைய சிங்கப் பெருமாள் திருக்கோயில் 17 ஆம் ஆண்டு சகஸ்ர தீப மஹோற்சவம் நடைபெற்றது


இந்நிகழ்ச்சி விளம்பி வருடம் கார்த்திகை மாதம் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டளையை சிங்க பெருமாள் சன்னதியில் சகஸ்ர தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி பொதுமக்களிடையே நடைபெறும்


 மேலும் இந்நிகழ்ச்சியில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் திருமஞ்சனம் தீபாராதனை நாதஸ்வர கச்சேரி சகஸ்ர தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் உபன்யாசம் கட்டளைகள் சிங்கப்பெருமாள் கோயில் நிகழ்ச்சி மிக சிறப்பாக இன்று நடைபெற்றது


 இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மாருதி குழு நண்பர்கள் ஸ்ரீரங்கம் சார்பிலும் ஸ்ரீரங்கம் சார்பிலும் ஏற்பாட்டில் நடைபெற்றது

Saturday, November 17, 2018

On Saturday, November 17, 2018 by Tamilnewstv   
திருச்சி ஆண்டவன் கல்லூரியில் இளம் அறிவியலாளருக்கான இன்ஸ்பையர் பயிற்சி முகாம்.

ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி இந்திய அறிவியல் மற்றும் தொழிற் நுட்பத் துறை ஆதரவுடன் இன்ஸ்பையர் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் ஐந்து நாட்கள் முகாம்  அறிவியலாளர்களை உருவாக்கும் விதமாக நடைபெறுகிறது. முகாமில் பெங்களுர் இந்திய அறிவியல் நிறுவனம், சென்னை இந்திய தொழிற் நுட்பத் துறை, மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் உட்பட பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்கிறார்கள். துவக்க விழாவில் கல்லூரி செயலர் அம்மங்கி பாலாஜி தலைமை வகிக்க பத்மஸ்ரீ முனைவர் வாசுதேவன் முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி இயக்குனர் ராமானுஜம், முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பிச்சை மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உயிர் அறிவியல் துறை கல்விப் புல முதன்மையர் ஜோதி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.

Thursday, November 15, 2018

On Thursday, November 15, 2018 by Tamilnewstv in ,    
திருச்சியில் முதல்முறையாக ஓரே நாளில் நுண்துளை பித்தப்பை அறுவைசிகிச்சை செய்து வீடு திரும்பலாம்

திருச்சி

திருச்சியில் முதல்முறையாக ஓரே நாளில் நுண்துளை பித்தப்பை அறுவைசிகிச்சை செய்து வீடு திரும்பலாம் என்று திருச்சி அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் நுண்துறை நிபுணர் முஹம்மது மன்சூர், மயக்க மருத்துவ நிபுணர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்தார்கள் .


இது தொடர்பாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் நுண்துளை பித்தப்பை தொடர்பான அறுவை சிகிச்சை குறித்து  திருச்சி அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் நுண்துறை நிபுணர் முஹம்மது மன்சூர், மயக்க மருத்துவ நிபுணர் கார்த்திக் ஆகியோர் இன்று நண்பகல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது : திருச்சி அப்போலோ மருத்துவமனையில் ஓரே நாளில் (Day Care) நுண்துளை சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த டே கேர் சிகிச்சையினால் நோயாளிகள் குறைந்த செலவு மற்றும் துரித வீடு திரும்புதல் போன்ற பயன்களை அடைகிறார்கள்.

அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நபர்கள் இரத்த மற்றும் தேவைப்படும் பரிசோதனைகளான கம்ப்ளீட்  பிளட் கவுண்ட், லிவர் பங்கஷன் டெஸ்ட் மற்றும் எக்ஸ்ரே, இதர ரேடியோலஜி பரிசோதனைகள் மேற்கொண்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.இந்த நோயாளிகளை காலை 6 மணிக்கு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு காலை 7 மணிக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு 6 முதல் 8 மணிநேரத்திற்குள் சமிக்கைகள் திருப்தியாயின் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்.

இவ்வித அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை நேரத்திலோ அல்லது அறுவைசிகிச்சைக்கு பின்னோ எவ்வித சிக்கல்களின்றி இருப்பதால் இம்மாதிரியான அறுவைசிகிச்சைகள் இந்தியாவில் தற்போது அதிகமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.இந்த அறுவை சிகிச்சையினை தற்போது திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட வெற்றிச் செல்வி என்ற பெண்மணி கூறுகையில் இந்த அறுவை சிகிச்சையால் எனக்கு எந்தவிதமான சிரமம் இல்லாமல் இருந்தது. இந்த அறுவை சிகிச்சை மூலம் நான் பெரும் பயன் அடைந்து உள்ளேன் என்று கூறினார்.

பேட்டியின் போது அப்போலோ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எஸ். செந்தில் குமார், நிர்வாக அதிகாரி சிவம், மயக்கவியல் நிபுணர் அங்கப்பன், மார்க்கெட்டிங் அலுவலர் டி.பி. கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தார்கள்.