Wednesday, December 18, 2019

On Wednesday, December 18, 2019 by Tamilnewstv   
திருச்சி டிச 17

கோரிக்கை வலியுறுத்தி
விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்
அய்யாக்கண்ணு பேட்டி.

140 ஆண்டுகள் வரலாறு காணாத  வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது,  2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க கோரியும்,  உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும்,  தள்ளுபடி செய்ய மறுக்க கூடாது என்று கோரியும்,  தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும்,  நகை ஏலம்  ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும்,  வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும், காவிரியில்  வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு  திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும்,  கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும்,  இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை,  58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க கோரியும்,  ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம்,  உத்தமபாளையம்,  போடி,  தேனி,  பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு,  திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க கோரியும்,  தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள்  14 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி திருச்சி மாநகர காவல் ஆணையர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்  திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
அய்யாக்கண்ணு
கோரியை முன்நிறுத்தி தமிழக முதல்வரை சந்திக்க சென்றோம், ஆனால் அனுமதி தரவில்லை எனவே திருச்சியில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி வேண்டி மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். அனுமதி வழங்காவிட்டால் தடை மீறி போராட்ட்ததில் ஈடுப்படுவோம் என கூறினார்.
On Wednesday, December 18, 2019 by Tamilnewstv in ,    
*குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து AIYF சார்பாக  திருச்சியில் ஆர்ப்பாட்டம்*

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும்,  மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும்  திருச்சி உறையூர் குறதெரு பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் எம்.செல்வகுமார் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலை ஏஐடியுசி மாவட்ட தலைவர் மாவட்ட தோழர் க.சுரேஷ் தொடங்கி வைத்தார். மறியலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலத் துணைச் செயலாளர் ஜி.ஆர். தினேஷ், மாவட்ட செயலாளர் க.இப்ராஹிம், மாவட்டத் தலைவர் சே.சூர்யா, சி.எம்.தாஸ் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற புறநகர் மாவட்டச் செயலாளர் ஆ. ஜான்சன் ராஜ்குமார் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன், துணைத் தலைவர் ராஜாமுகமது, மாவட்ட பொருளாளர் கே.கே.முருகேசன் மற்றும் அனைத்து இளைஞர் பெருமன்ற ஆ.சுதாகர் ஆகிய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.

Tuesday, December 17, 2019

On Tuesday, December 17, 2019 by Tamilnewstv   
திருச்சி வணிகர் சங்கம்  ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்
பேரமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமை வகித்தார். திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் மனோகரன், தமிழ்நாடு கார் டீலர் அண்ட் கன்சல்டன்ட் வெல்ஃபேர் ஸ்டேட் பெடரேஷன் மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

On Tuesday, December 17, 2019 by Tamilnewstv in ,    


திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது.    வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் குவிந்தனர்.


24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும்,404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,212 பேரும், 3408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
On Tuesday, December 17, 2019 by Tamilnewstv   
சிங்கபூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் இந்தியாவின் சார்பாக தங்கம் மற்றும் ஒட்டு மொத்த பெண்களில் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை பெற்ற திருச்சி சுகித்தாவை திருச்சி மாவட்ட இரயில்வே காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.த.செந்தில்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கடந்த ஒரு வருடத்தில் சிலம்பம் கற்று சிலம்பத்தில் பல புதிய உலக சாதனைகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட தங்கம் 8 வெள்ளி 4 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் மற்றும் பல பரிசிகளை சிலம்பத்தில் மாநில, மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வென்றவர் திருச்சி மேலபுதூர் செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி 6 வகுப்பு படிக்கும் 11 வயது சுகித்தா.

மேலும் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் சங்கம் ஐந்தினை மைந்தர்கள் நடத்திய பாராட்டு விழாவில் சிங்கப்பூர் சிலம்ப தங்க மங்கை எனும் பட்டத்தை கடந்த மாதம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகித்தா எஸ்.பி. த.செந்தில்குமார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார் அப்பொழுது அவர் சுகித்தாவை பாராட்டி  நமது பாரம்பரிய தமிழர் கலையான சிலம்பத்தில் மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார் உடன் சுகித்தாவின் தந்தை மோகன் இருந்தார்.

Friday, December 13, 2019

On Friday, December 13, 2019 by Tamilnewstv   


*இன்டேன் LPG நுகர்வோரின் கவனத்திற்கு*

 *இன்டேன் LPG சிலிண்டரானது டெலிவரிக்கு முந்தைய பரிசோதனைகளான தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்பே விநியோகஸ்தர்களால் விநியோகம் செய்யப்படுகிறது.*

*விநியோகஸ்தர்களால் வழங்கப்படும் இரசீதில் சில்லறை விற்பனை விலை தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும் . வாடிக்கையாளர்கள் சிலிண்டரை பெற்றுக் கொண்டபின் இரசீதில் அத்தாட்சி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் சில்லறை விற்பனை விலை என்பது வாடிக்கையாளரின் சமையலறை வரை சிலிண்டரை டெலிவரி செய்வதற்கான தொகை ஆகும் . வாடிக்கையாளர்கள் இரசீதில் உள்ள விலைக்குமேல் டெலிவரி செய்பவரிடம் மேற்கொண்டு தொகை எதுவும் கொடுக்கவேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் . மேலும் இந்தியன் ஆயில் டிப்ஸ் வழங்குவதை என்றுமே ஆதரிப்பதில்லை . எனவே இரசீதில் உள்ள சில்லரை விலைக்கு மேல் கோரப்பட்டால் , வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட வாடிக்கையாளர் சேவை மையத்தினை காலை 9 . 30 முதல் மாலை 5 . 15 வரை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் .*

*சென்னை : 044 - 24339238 / 24339246 / 9444085646*
*மதுரை - : 0452 - 2533956*
*திருச்சி : 0431 - 2740066*
*கோயம்புத்தூர் : 0422 - 2247396*

*விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண் மற்றும் இத புகார்களுக்கு 18002333555 என்ற டோல் ஃபிரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம்.*

*பொது நலன் கருதி வெளியிடுவோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்*

Monday, November 25, 2019

On Monday, November 25, 2019 by Tamilnewstv in ,    
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு



தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் திருச்சி அண்ணாநகர் அக்பர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமூக விரோதிகள் நடமாட்த்தால் வளர்ந்த கஞ்சா செடிகளை ,


காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு ....
உடன் ரஹ்மத் பள்ளிவாசல் தலைவர் வாஹித் , ரஹ்மத் பள்ளிவாசல் இமாம் அபுபக்கர் சித்திக் ஹஜ்ரத் , ரஹ்மத் பள்ளிவாசல் பொருப்பாளர் ரியாஸ் அஹ்மத் , கிரேசன்ட் மற்றும் நைட்டிங்கேல் பள்ளிகூடம் ஆசிரியர்கள் , தமஜக மாவட்ட பொருளாளர் ரியாஸ் , மாவட்ட துணை செயலாளர் தாஹா , மாவட்ட தொழில் சங்க  ஜாபர் அலி , இணையதள பொருப்பாளர் காஜா மைதீன் ,தென்னுர் பகுதி துணை செயலாளர் ஷேக் , 19வது வார்டு பாஷா ,(  பழைய 49வது வார்டு ) 29வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக இறுதி வரை களத்தில் நின்றனர் ....



மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை உடனடியாக சுத்தம் செய்து , காம்பவுண்ட் சுவர் கட்டபட வேண்டும் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைவர் #Royal #Siddiq அவர்கள் அதிகாரிகளிடம் வைத்தார் ,
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தார்கள் ....
On Monday, November 25, 2019 by Tamilnewstv   
எதிர்வரும் டிசம்பர் 1 ம் தேதியன்று சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் சிலம்பப்போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்றுள்ள திருச்சியைச் சேர்ந்த உலக சிலம்ப சாதனைச் சிறுமி சிலம்பம்



சுகிதா மோகன் அவர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவரை சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரவேற்று வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் ஐந்திணை மைந்தர்கள் குழு, சுகித்தாவின் சாதனையை பாராட்டும்விதமாக நேற்று ஞாயிறு (24/11/2019) மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் முஸ்தபா வணிகவளாகம் எதிர்புறம் அமைந்திருக்கும் ஆனந்தபவன் உணவகத்தின் மேல்தளத்திலுள்ள அரங்கில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அந்நிகழ்வில், சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் ஜேவிகேம் நிறுவனம் & மித்ரா குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான தமிழார்வலர் திருமதி. விஜிஜெகதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான தமிழ்ச்சுடர் திரு. அ. வை. கிருஷ்ணசாமி அவர்கள், தமிழ் இலக்கியக் களம் அமைப்பின் தலைவர், சொல்லின் செல்வர் முனைவர் திரு. இரத்தின வேங்கடேசன் அவர்கள் மற்றும் இலக்கியச் சொற்ப்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் முனைவர் திரு. மன்னை க. இராஜகோபாலன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான திரு.துரை.மருதீசுவரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தமிழார்வலர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். அதனையடுத்து பேசிய சிறப்பு விருந்தினர்கள் அனைவரும், சிங்கப்பூரில் நடைபெறும் முதல் சிலம்ப நிகழ்வில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினர்களாக தங்களை அழைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற நிகழ்வின் மூலம் இனி சிங்கப்பூர் இளைஞர்களும் நமது மரபுக்கலையை கற்றுக்கொள்ள ஆர்வம்காட்டுவார்களெனவும் தெரிவித்தனர். மேலும் சிலம்பத்தின் வரலாறுபற்றியும், அதன் அவசியம்பற்றியும், குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் நமது பெண்பிள்ளைகளுக்கு இதுபோன்ற நமது மரபுக்கலைகள் எப்படியெல்லாம் தற்காப்புத் திறனை வளர்த்துக்கொள்ள உதவுகிறதென பேசியதோடுமட்டுமில்லாமல், இனி சிங்கப்பூரில் இதுபோன்ற சிலம்ப நிகழ்வுகளை அடிக்கடி நடத்தவேண்டு மெனவும் கேட்டுக்கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியின் நாயகி, சாதனைச் சிறுமி சிலம்பம் சுகித்தா மோகன் அவர்களை சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வாழ்த்திப்பேசியதோடுமட்டுமில்லாமல் அந்நிகழ்ச்சின் ஏற்பாட்டுக்குழுவான ஐந்திணை மைந்தர்கள் குழு நண்பர்களின் சார்பாக சிறுமிக்கு நினைவுப்பரிசையும் அணிவித்து பாராட்டினார்.

மேலும் சிறுமி சுகித்தாவின் சிலம்ப ஆசிரியரும் சுருளி ஆண்டவர் சிலம்பக்கூடத்தின் பயிற்சியாளருமான திரு அரவிந்த் மற்றும் மலேசிய சிலம்பக்கோர்வையின் நிறுவனரும், பயிற்சியாளருமான கலைமாமணி திரு.அன்பழகன் குப்புசாமி ஆகியோருக்கு ஐந்திணை மைந்தர்கள் குழு சார்பாக நினைவு கேடயம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நெறியாளராக ஐந்திணை மைந்தர்கள் குழுவின் உறுப்பினர், சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் புக்கிட் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் தலைவர், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் எய்ம் டூ ஹை துணைத்தலைவருமான தமிழ்மகன் (எ) கண்ணன் அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

மாலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியானது இறுதியில் ஐந்திணை மைந்தர்கள் குழுவின் மற்றொரு உறுப்பினரான திரு. வெற்றிவேல் அவர்கள் நன்றியுரை வாசிக்க இரவு 9மணிக்கு இரவு விருந்தோடு நிறைவுற்றது. இந்நிகழ்வில் ஏராளமான சிங்கைவாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர்.

Sunday, October 13, 2019

பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.
 மதுரை அஞ்சல்தலை நாணயவியல் சேகரிப்பாளர் சங்க காதர் ஹிசைன் பயணச் சீட்டினை காட்சிப்படுத்தினார். பயணச்சீட்டு சேகரிப்பில் விகடகவி எண்கள், அலங்கார எண்கள் கொண்ட மாநகர, புறநகர, அரசு விரைவு பேருந்து பயணச்சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன . திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், மூத்த சேகரிப்பாளர் அசோக் காந்தி, சுவாமிநாதன், இளங்கோவன், யோகேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.