Tuesday, February 18, 2020

On Tuesday, February 18, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பட்டா  கத்தியுடன் திரிந்ததால் திருச்சியில் பரபரப்பு

திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே மத்திய அரசுக்கு எதிராக முஸ்லிம் மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர் காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

அங்கிருந்து வரும் வழியில் புத்தூர் நால்ரோடு  இடத்திற்கு அருகே மீன் மார்க்கெட்  உள்ளது மீன் மார்க்கெட் அருகே அமைந்துள்ள டீக்கடை முன்புறம் ஒரு நபர் குடிபோதையில் பட்டாக்கத்தி உடன் திரிந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது
On Tuesday, February 18, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பிப்17

சென்னையை திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரவில் கூடிய 600க்கும் மேற்பட்ட
மாணவர்கள் -  தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவிப்பு

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில்
இஸ்லாமிய கட்சியினர், அமைப்புக்கள், பல்வேறு கட்சியினர் தொடர்ந்து
போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு சி.ஏ.ஏ க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்.பி.ஆர், என்.சி.ஆர் ஆகியவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில்
கடந்த 15ம் தேதி திடீரென  (சனிக்கிழமையன்று)
இஸ்லாமிய மாணவர்கள்
600க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 போலீசார்
சமாதானப் பேச்சுவார்த்தையில் நடத்தினர். ஆனால் மாணவர்கள்
சட்டமன்ற கூட்டத்தொடரில் சி.ஏ.ஏவை
அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம்  நிறைவேற்றும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள ஜமாத்தார்  அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி திங்கட்கிழமை (இன்று) உங்களது கோரிக்கையின் படி சி.ஏ.ஏ எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் இந்த கூட்டத்தை விட்டு விடுவோம் அல்லது தொடர்வோம் என கூறி கூட்டத்தை கலைந்து போக வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்
சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சபாநாயகர் கூறியதையடுத்து 300க்கு மேற்பட்ட மாணவர்கள் திடீரென இரவு தென்னூர் உழவர் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு கூடியவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த இடத்தை விட்டு கலையாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.


Monday, February 17, 2020

On Monday, February 17, 2020 by Tamilnewstv in ,    
அதிகாலை திருச்சியில் வெல்லப்போவது யார் ?
மாவட்ட காவல் துறையா ?
எல்பின்  ராஜாவா ?  ...

  திருச்சி மன்னார்புரம் பகுதியில் தலைமை அலுவலகம் அமைத்து பொதுமக்களை ஏமாற்றி பல நூறு கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிறுவனம் எல்பின்


இந்த நிறுவனம் பல மாவட்டங்களில் பெரிய பெரிய ஸ்டார் ஓட்டல்களில் பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்தி கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்வது வாடிக்கையாக நடைபெறும் ஒன்று.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் கூட்டம் ஏற்பாடு செய்திருந்த டீம் லீடர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவரை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.  இதனைத் தொடர்ந்து தமிழகமெங்கும் போலீசார் இவர்கள் ஹோட்டல்களில்  கூட்டம் நடத்த தடை விதித்துள்ளானர்  என தகவல்.


இந்நிலையில் தற்போது திருச்சியில் 18. 2. 2020 செவ்வாய் அன்று அதிகாலை 4 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ப்ரீஸ் ரெசிடென்சி ஓட்டலில் நடைபெறவுள்ள அதி முக்கிய  கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய 200 லீடர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என எல்பின் நிறுவன தலைவர் அழகர்சாமி ( எ ) ராஜா ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போனில் அழைத்து கூறியுள்ளார்.
காலை 9 மணிக்கு கூட்டம் முடிந்து விடும் அதன் பிறகு அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்று விடலாம் என்றும் கூறியுள்ளாராம்.
அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை இந்நிறுவனம் கூட்டம் நடத்த தடைவிதித்து இருப்பதால் காவல்துறைக்கு தெரியாமல் அதிகாலையில் இக்கூட்டத்திற்கு எல்பின்  நிறுவனத்தினால் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
காவல் துறையை மீறி இந்த கூட்டம் நடைபெறுமா என எல்பின் லீடர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளதாக தகவல் .

நடத்த விடுவார்களா திருச்சி மாவட்ட காவல்துறையினர் ?
On Monday, February 17, 2020 by Tamilnewstv in ,    


*ரிசர்வ் வங்கி கூட கொடுக்க முடியாத வட்டியை கொடுக்கும் திருச்சி எல்பின் நிறுவனம்.*

திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தொடர்ந்து மோசடி வழிகளில் பணம் சம்பாதித்து வரும் நிறுவனம் எல்பின் நிறுவனம் ஆகும்.

தற்போது மாநகரங்களில் காவல்துறையினர் என்பின் நிறுவனத்தினர் கூட்டம் நடத்த தடை விதித்து இருப்பதால் கிராம புற மக்களை கோடிஸ்வரர்  ஆக்கலாம் என தனது டீம் லீடர்களிடம் கூறி கிராமங்களில் கிராம மக்களின் வீடுகளுக்குச் சென்று மூளை சலவை செய்து வரும் பணி நடைபெற்று வருகிறது தற்போது.
புதிதாக தற்போது எல்பின் டிராவல்ஸ் என்று ஒன்றை ஆரம்பித்து
(இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் ? எந்த முகாந்திரம் வைத்து இந்த ட்ராவல்ஸ் ஆரம்பிக்கப்பட்டது  யார் யார் துபாய் செல்ல உள்ளனர் யார் யார் இந்தியா திரும்ப உள்ளனர் ? என மத்திய புலனாய்வு பிரிவு  போலீசார் விசாரிக்க வேண்டும் ) வரும் மார்ச் 3ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட  நபர்களை துபாயில் உள்ள உயரமான கட்டிடத்தின் மேல் வர்த்தக கூட்டம் நடத்த உள்ளதாக கூறி தலைக்கு ஒரு லட்சம் கட்ட வேண்டும் அப்படி கட்டுபவர்களுக்கு துபாய் டூர் மற்றும் அவர்களது வங்கி கணக்கில் தினமும் 550 ரூபாய் என ஒரு வருடம் பணம் ஏறும் அதாவது ஒரு லட்சம் போட்டால் ஒரு வருடத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம் என நோட்டீஸ் அடித்து மூளை சலவை செய்து வருகின்றனர்.. இதுபோல் பணம் கட்டியவர்கள் பலரும் தற்போது திரும்ப பணம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். முதலில் தினமும் பணம் ஏறியது, பிறகு வாரம் ஒரு முறை ஏறியது, பிறகு மாதம் ஒரு முறை அதன்பின் அதுவும் இல்லை என பொதுமக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
இன்று கிடைத்த தகவலின்படி இந்நிறுவனத்தின் தலைவர் அழகர்சாமி (எ) ராஜா வரும் 24ஆம் தேதி அல்லது ஏதோ மார்ச் அல்லது மே 24 ஆம் தேதி அன்று முன்னணி கட்சியின் மாநில பதவி பெறப் போவதாகவும் அதன்மூலம் நமது நிலை மேலும் உயர போவது என்றும் காவல்துறை நமது பின்னால் நிற்கும்  என்றும் தனது டீம் லீடர் களிடம் உறுதியாக கூறி வருகிறாராம். தற்போது தஞ்சையில் கைதான பிரசன்ன வெங்கடேஷ் அவர்களுக்கு ஜாமின் கூட கிடைக்கவில்லை .அவரது புகைப்பட கலைஞர்கள் மூலம் தஞ்சை நடைபெற்ற கூட்டங்கள் அதன் புகைப்படம் மற்றும் வீடியோ கிளிப்பிங்ஸ் பெற்று தஞ்சை போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனால் பல டீம் லீடர் விலகி போக உள்ளதாக வந்த தகவலை அடுத்து ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் இதுபோன்ற தகவலை பரப்பி வருகின்றாராம். டீம் லீடர் களை குஷிப்படுத்தி கிராமப்புற மக்களை மூளை சலவை செய்து வேறு வழியில் பணம் சம்பாதிக்க செல்ல உள்ளனர் இதை உடனடியாக பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். ஜெய்ஹிந்த்.
என சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய வீடியோவில் கூறியுள்ளார்.

பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*
On Monday, February 17, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி  17.02.2020

திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் மக்கள் பணி விரைவாக செய்திட வழிவகை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
                                                                              திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சியை சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர். கூட்டம் அரங்கில் அமர வைக்கப்பட்ட அவர்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சந்தித்தார்.
அப்போது கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டாக அவரிடம் மனு அளித்தனர்.

 ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டு கணினி முறையில் பணம் பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை அமைத்தல், தெருவிளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட பணிகள் செய்யும்போது தாமதம் ஏற்படுகிறது.

எனவே பழைய முறைப்படி ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையை கையாளும் அதிகாரத்தை தரக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு, செய்தியாளர்களிடம் கூறும்போது....... ஆன்லைன் பரிவர்த்தனை முறையானது மத்திய அரசு கொண்டு வந்த திட்டமாகும். எனவே அதனை மாற்ற இயலாது. அதேசமயம் ஆன்லைன் பரிவர்த்தனையில் சில இடங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கிராம ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அது விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மன் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது....... ஆன்லைன் பண பரிவர்த்தனையால் பல பணிகள் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் பணியை விரைவாக செய்ய பழைய முறைப்படி காசோலையில் கிராம ஊராட்சி தலைவர்கள் கையொப்பமிடும் அதிகாரத்தை வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகம் விரைவாக கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் விரைவில் நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Sunday, February 16, 2020

On Sunday, February 16, 2020 by Tamilnewstv in ,    
காவல்துறைக்கு சவாலாக ELFIN சகோதரர்கள்


புதுகை சத்தியமூர்த்தியின் அடுத்த வீடியோ.



எல்ஃபின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தாலும் தொடர்ச்சியாக இவர்கள் சதுரங்க வேட்டையில் ஈடுபடுகிறார்கள்

நான் தொடர்ந்து ELFIN நிறுவனத்தின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் வீடியோ வெளியிட்டு வருகின்றேன். இதனைத் தொடர்ந்து காவல்துறை துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனம் திருச்சி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற இருந்த கூட்டத்தை தடை செய்தனர்.
தற்போது எல்பின் நிறுவனத்தினர் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி அந்தந்த திருடர்கள் அவர்களின் இல்லத்திலேயே கூட்டம் நடத்த சொல்லி அறம் மக்கள் நல சங்கம் தலைவர் அழகர்சாமி (எ)ராஜா மற்றும் ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதற்கெல்லாம் காரணமாக உள்ள டீம் லீடர்களை பின்தொடர்ந்து விசாரித்தால் இவர்களை விசாரிப்பது மிகவும் சுலபம். மிகவும் துரிதமாக செயல்பட்டுவரும் காவல்துறை அதிகாரிகள் இந்த டீம் லீடர்களைLock லாக் செய்தாலே போதும் இந்த நிறுவனத்தை முற்றிலும் முடக்கி விடலாம் என்பது என் கருத்து . ஜெய்ஹிந்த்
On Sunday, February 16, 2020 by Tamilnewstv in ,    



திருச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர்கள் இன்று  தொடங்கி வைத்தனர்..

 மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சிறிய திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் கடந்த 10 ஆண்டுகளாக 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 2019- 2020 ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து,கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, இறகுபந்து, டென்னிஸ் ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் தடகள போட்டிகள் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது..

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர்  போட்டியை துவக்கி  வைத்தனர்.

மேலும் இப்போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
On Sunday, February 16, 2020 by Tamilnewstv in ,    

திருச்சி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் முதுகலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது

அப்போது காலியாக உள்ள உதவி இயக்குனர் ஏ டி பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் 100% தேர்ச்சி வழங்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரில் விருது வழங்கி ஊக்கமளிக்க வேண்டும் மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள 32 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 46 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மாணவர்களின் நலன் கருதி 12 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு அம்பேத்கர் சிறப்பு வழிகாட்டி புத்தகம் உடனே வழங்க வேண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு முன் ஏற்கனவே பணிபுரிந்து வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலத் தலைவர் செந்தில்குமார் பேட்டியளித்தார்

Saturday, February 15, 2020

On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
THE TAMIL NADU
PROTECTION OF INTERESTS OF DEPOSITORS
(IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997

(TAMIL NADU ACT 44 OF 1997)
(As modified upto 31st October 2018)
CHAPTER -1

1. Short title and commencement:-
(1) This act may be called the Tamil Nadu Protection of Interests of
Depositors (in Financial Establishments) Act, 1997.


(2) It shall come into force at once.
2. Definitions:- In this Act, unless the context otherwise requires:-
(1) “Competent authority” means the authority appointed under section 4;
(2) “deposit” means the deposit of money either in one lump sum or by
instalments made with the Financial Establishment for a fixed period, for
interest or for return in any kind or for any service;
(3) “Financial Establishment” means an individual, an association of
individuals, a firm or a company registered under the companies Act, 1956
(Central Act 1 of 1956) carrying on the business of receiving deposits under any
scheme or arrangement or in any other manner but does not include a
corporation or a co-operative society owned or controlled by any State
Government: or the Central Government, or a banking company as defined in
section 5(c) of the Banking Regulation Act 1949 (Central Act X of 1949).
(4) “Government” means the State Government.
CHAPTER – II
3. Attachment of properties on default of return of deposits:
Notwithstanding anything contained in any other law for the time being in
force,

மேலும் காண்போம்