Wednesday, February 26, 2020

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
*திருச்சி மக்கள் ஏமாந்தல் காவல்துறை பொறுப்பேற்குமா ? டிஜிபி அனுமதி அளித்தாரா?  உண்மையை கண்டு பிடிக்குமா திருச்சி காவல்துறை ?*

தஞ்சை காவல்துறையினர் பொய்யான வழக்கு தொடுத்துள்ளனர்.

நாங்கள் டிஜிபி சந்தித்து வந்துவிட்டோம் நம்முடைய கூட்டங்கள் தமிழகத்திலிருந்து அனைவரும் திருச்சி மையமாக வைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று டிஜிபியிடம் நாங்கள் உத்தரவு பெற்றுள்ளோம் அதனை திருச்சி காவல்துறை அதிகாரிகளுக்கு அதனை காண்பித்து விட்டோம் நான் தொடர்ச்சியாக திருச்சியில் கூட்டம் நடத்துவோம் என அழகர்சாமி என்கிற ராஜா, ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் இருவரும் தங்கள்  டீம் லீடர் களிடம் கூறி வருவதாக எல்பின் வட்டாரத்தில் கூறப்படுகிறது. உண்மையில் டிஜிபியிடம் அனுமதி வாங்கினர்களா என்பது அவர்களுக்கும் டிஜிபிக்கும் மட்டுமே தெரியும்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது திருச்சியில் இவர்கள் எப்படி கூட்டம் நடத்தி வருகிறார்கள் உண்மையாகவே காவல்துறை உயர் அதிகாரியிடம் (DGP) அனுமதி பெற்று உள்ளனரா ? இவர்களை பழிவாங்கும் எண்ணத்தில் தஞ்சையில் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து எல்பின் நிறுவனத்திற்கு எதிராக அழுத்தம் கொடுப்பது ஏன் என்பது பொதுமக்களுக்கு புரியாத புதிராக உள்ளது. திருச்சியில் இன்று கூட பீரிஸ் ஹோட்டலில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

 காவல்துறை உயரதிகாரிகள் இதுபோன்ற நபர்களை தீவிர விசாரணை செய்து பொதுமக்களை காக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து



பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் என்னை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*
On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி:



திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உடைந்தது. இதற்கு பதிலாக தற்காலிக ஏற்பாடுகள் மூலம் உடைப்பு சரிசெய்யப்பட்டது. சேதமடைந்த தடுப்பணைக்கு பதிலாக அருகில் 387.60 கோடி ரூபாய் செலவில் புதிதாக தடுப்பணை கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தடுப்பணை கட்டுமான பணி நிறைவடைய வேண்டும். இந்நிலையில் இந்த பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டுமான பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கி கூறினர். இதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் வலுவிழந்து உடைந்த பாலத்திற்கு  மாற்றாக புதிய தடுப்பணை அறிவிக்கப்பட்டு 387.60 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தற்போது 35 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. பணிகள் விரைந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதனால் திட்டமிட்டபடி பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிகள் காரணமாக விவசாயம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை தெளிவாக வழங்கியுள்ளார்கள். அதனால் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறிக்கொண்டே தான் இருக்கவேண்டும். ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. நீர் வழங்காமலும் இருக்க முடியாது. நீரை திருப்பி விடவும் முடியாது. கர்நாடகாவின் இத்தகைய செயல்பாடுக்காக யாரையும் குறை சொல்ல முடியாது. டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த பகுதிகளில் மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதோ அந்தந்த பகுதிகள் அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் மட்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது.  10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்.  என்பிஆர்.ல் தற்போது மூன்று கேள்விகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்று மொழி, இரண்டாவதாக பெற்றோர் பிறப்பிடம், மூன்றாவதாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளது.  நாங்கள் மக்களை செல்கிறோம்.   கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள்  ஆகியோர்தான் தேர்தலை நிர்ணயம் செய்வார்கள். ஒரு பொருளுக்கு ஏஜென்சி அளிப்பது போல் உள்ளது.  ராஜ்யசபா தேர்தலில் யார்? யார்? போட்டியிடுவது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும். சீட்டு கேட்பதற்கு அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உரிமை உள்ளது.  குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசின் பரிசீலனையில் உள்ளது. காவிரியாற்றில் எந்த இடத்தில் மணல் அள்ளலாம் என்பதை கமிட்டிதான் முடிவு செய்கிறது. அந்தந்த பகுதிகளில் மட்டுமே மணல் எடுக்கப்படுகிறது. எனினும் தற்போது அனைத்து இடங்களிலும் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது. எம் சாண்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்த அரசு பணிகளுக்கு மட்டுமே தற்போது மணல் பயன்படுத்தப்படுகிறது என்றார்.

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
  காவல்துறை அதிரடி நடவடிக்கை தஞ்சாவூரில் மேலும் ஒருவர் கைது

                   

திருச்சி எல்பின் நிறுவன உரிமையாளர்கள் ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் காலையில் டிஜிபி அவர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகிறது

எதை நோக்கி சந்தித்தார்கள் உள்ளே  என்ன நடந்தது என்று தெரியவில்லை அவர்களுடைய டீம் லீடர் இடையே நாம் இனி கூட்டங்கள் நடத்தலாம் அதில் எந்த பிரச்சனையும் இருக்காது காவல்துறை தலைவர் அவர்களை சந்தித்து உள்ளோம் என்றும் கூட்டம் நடத்த எந்தப் பிரச்சினையும் இருக்காது  என பொய்யானதகவலை பரப்பி வருகிறார்கள்

காவல்துறை திறம்பட செயல்பட்டு வருகிறது அதிலும் தற்போது காவல்துறை தலைவர் பொறுப்பேற்றதில் இருந்து குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அமைதியான சூழலில் காணப்படுகிறது
தஞ்சாவூரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 7ஆம் தேதி ஒருவர் கைது செய்யப்பட்ட தற்போது கிங்ஸ்லி என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

                             

எல்பின் நிறுவன உரிமையாளர் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் திருச்சியை நோக்கி வந்துள்ளார் தஞ்சாவூரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிந்தவர் உடனடியாக திரும்பி சென்றுள்ளார்
திருச்சி வராமல் எங்கு தலைமறைவாக உள்ளனர்
காலையில் டிஜிபி யை சந்தித்து வந்தார்கள் ஆனால் தற்போது அழகர்சாமி என்கிற ராஜா ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் எங்கே சென்றனர் வெளிநாடு ஏதும் சென்று விட்டார்களா என்று தெரியவில்லை காவல் துறையைப் பற்றி
பொய்யான தகவல்களை பரப்பி வருவதே இவர்களுடைய வேலையாக இருக்கிறது
தமிழக காவல்துறை திறம்பட செயல்பட்டு தெளிவாக வருகிறது
வழக்குப்பதிவு செய்து திறம்பட செயல்பட்டு வருகிறார்கள் தஞ்சாவூர் காவல் அதிகாரிகள் மேலும் எல்பின் நிறுவன உரிமையாளர்கள் தற்போது திரைப்படம் எடுத்ததாக தகவல்கள் வெளிவருகிறது இவர்களுக்கு  எதுஇந்த பணம் எங்கிருந்து இருக்க பணம் வருகிறது
கோடிக்கணக்கில் செலவு செய்து கூட்டங்கள் நடைபெறுகிறது இவர்களுக்கு பணம் எப்படி கிடைக்கிறது ஏதேனும் வெளிநாட்டு பணம் வருகிறதா என்று ஒன்னும் புரியவில்லைஇவை அனைத்தும் காவல்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் வெகுவிரைவில் நீதியின் பிடியில் சிக்குவார்கள்

....................................................................................

பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பெரகம்பி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (36), இவரது மனைவி லதா (33). இருவருக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதே பகுதியில் வீடு கட்டி வசித்துவந்தனர். இந்நிலையில் 2018 ஏப்ரல் 24ஆம் தேதியன்று அதிகாலை கணவன் மனைவி இருவரும் வீட்டின் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.


அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், கணவன் மனைவி இருவரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் லதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிய ரமேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கே ரமேஷ் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிறுகனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். மேலும் கொலைசெய்யப்பட்ட அன்று வீட்டிலிருந்த 7 பவுன் நகை, 3,000 ரூபாய் பணம், ஒரு இருசக்கர வாகனமும் திருடு போயிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு திருடுபோன ரமேஷின் இருசக்கர வாகனம், சிறுகனூர் அருகே வேப்பூர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. ஓட்டிவந்த பழனிச்சாமி என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

தகவலறிந்த சிறுகனூர் காவல் துறையினர், பழனிச்சாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பழனிச்சாமியும் அவரது நண்பரான பெரம்பலூர் சத்திரமணி பகுதியைச் சேர்ந்த கிஷாந்த் (21) ஆகிய இருவரும் சேர்ந்து ரமேஷ் - லதா தம்பதியை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலைசெய்தது

ரமேஷ் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் மீது கொண்ட ஆசை காரணமாக இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். இருவரும் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்றுவந்தனர். இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்கு விசாரணையை முடித்த சிறுகனூர் காவல் துறையினரை, திருச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் இன்று பாராட்டி கௌரவித்தார்

Tuesday, February 25, 2020

On Tuesday, February 25, 2020 by Tamilnewstv in ,    
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம், லங்கோரா பகுதியைச் சேர்ந்தவர் நர்பத் சிங் ராஜபுரோகித். (34).

இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்  பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 கடந்த ஜனவரி 27-ஆம் தேதி ஜம்மு விமான நிலையத்திலிருந்து இந்த சைக்கிள் பயணத்தை இவர் தொடங்கினார். உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, வழியாக தமிழகம் வந்துள்ளார்.
 இந்த வகையில் திருச்சிக்கு வருகை தந்த அவரை திருச்சியில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பளித்தனர். 12 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் நோக்கத்தோடு இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

பேட்டி: பிரதீப்குமார்
On Tuesday, February 25, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா



ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா

தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பதிருவிழா வரும் 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வரும் 27-ந் தேதி தொடங்கி வருகிற 6ம் தேதி வரை நடைபெறும்.
தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான 5-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில்; நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து  சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
9ம் திருநாளான 6-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன்,  ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில்  ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தண்ணீர் நிரப்பும் பணி
ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளம் ஐந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வரும் 5-ந்தேதி மாசி தெப்ப உற்சவம் நடைபெறுவதால் தெப்பக்குளத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
On Tuesday, February 25, 2020 by Tamilnewstv in ,    

மக்கள் பணத்தில் செயல்படுகிறதா அறம் மக்கள் நல சங்கம் ?
                  

நேற்று சென்னை மகாபலிபுரம் ரோட்டில் உள்ள ஒர் 7 ஸ்டார் ரெசார்ட்ல் தமிழகம் முழுவதும் உள்ள டாப் லீடர் கள் இக்கூட்டத்தில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர் தகவல் இதற்கு  அறம் மக்கள் நல சங்கம் சார்பில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து உள்ளனர். இந்தப் பணம் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது ? இதுதான் அனைத்து பொது மக்களுக்கும் ஓர் மில்லியன் டாலர் கேள்வி? அறம் மக்கள் நல சங்கம் சார்பில் போன மாதம் 23 அல்லது 24 ஆம் தேதி தஞ்சையில் இதேபோல் கூட்டம் நடத்தினார்.

தற்போது சென்னையில் அரசுக்கு எதிராக எனக்கூறி தற்போது மாமபல்லபுரத்தில் கூட்டம் நடத்தி உள்ளனர்.. இந்த பணத்துக்கு அறம் மக்கள் நல சங்க தலைவர் ராஜா ( எ ) அழகர்சாமி மற்றும் எஸ்ஆர்கே ரமேஷ்குமார் என்கிற ரமேஷ் அவர்களுக்கு வெளிச்சம்.. கோடிக்கணக்கில் செலவு செய்ய வெளிநாட்டிலிருந்து ஏதும் நிதி வருகிறதா என தெரியவில்லை.

 இதை காவல்துறையினர் மற்றும் மத்திய புலனாய்வு துறை ஆராய வேண்டும். தமிழகம் முழுவதும் எல்பின் நிறுவனம் சார்பில் கூட்டம் நடத்த தடை விதித்து இருப்பதால் சென்னை தலைமை இடத்தை தேர்ந்தெடுத்து கூட்டம் நடத்தினார். காவல்துறை டிஜிபி ஐயா அவர்கள்  செயற்குழு பொதுக்குழு என்ற பெயரில் ELFIN நிதி நிறுவனம் நடத்தும் கூட்டத்தை ஆராயவேண்டும்.


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

Monday, February 24, 2020

On Monday, February 24, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

                

குடியுரிமை திருத்தம், குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணி போராட்டத்திற்கு அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்புக் கொடுத்த திருச்சி மாநகர காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார்

                 
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்திருக்கிறது இது மிகுந்த வேதனை அளிக்கிறது, இத்தகைய வன்முறை வெடித்தது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் அவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

மோடி அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குடி மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் மக்களின் உணர்வுகளை மதித்து குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக  அறிவிக்க வேண்டும்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு இந்த நாளை சிறுமிகளின் பாதுகாப்பு நாள் என்று அறிவித்திருப்பது வரவேற்கிறோம், ஆனால் இந்த நாளை சிறுமிகளின் பாதுகாப்பு நாளாக அறிவித்தால் மட்டும் போதாது இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று அறிவித்த முதல்வர் அவர்கள் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உரிமைகளை ரத்து செய்வதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது, அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிற உரிமைகளை ரத்து செய்யாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது நகைச்சுவையாக வேடிக்கை கூடிய ஒன்றாகும்

குடிசையிலே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல்  மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பது வெட்கக் கேடானது

டிரம்பின் வருகையால் இந்திய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு விடுமா என்ற கேள்விதான் எழுப்ப விரும்புகிறேன்

சி ஏ ஏ என்பிஆர் எதிர்ப்பு என்பது மோடி அரசின் எதிர்ப்பு என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் இது இந்து சமூகத்திற்கு எதிராக என்பது பார்ப்பது திசை திருப்பக்கூடிய அரசியலாகும்.
On Monday, February 24, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி


 திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு



திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு,திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன்,தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில்

 திருச்சி, கரூர்,அரியலூர் ஆகிய மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலங்களாக இணைக்க வேண்டும்,
ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது,உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு,

தான் தி.மு.க வில் இணைந்தது முதல் மாவட்ட செயலாளராக பணியாற்றியது வரையிலான நினைவுகளை பகிரிந்து கொண்டு புதிய மாவட்ட செயலாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.அதில்,மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின்பு
பல அவமானங்களை சந்தித்துள்ளேன்.அதனால்  தான் தற்போது முதன்மை செயலாளர் என்கிற நிலைக்கு வந்துள்ளேன்.

கட்சிக்குள் ஜாதியை பார்க்காதீர்கள்.கட்சி வளர்ச்சிக்கு கட்சி தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.சிறுபான்மை மற்றும் ஆதிதிராவிட கட்சி தோழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

என்ன வருத்தங்கள் இருந்தாலும் அதை பிறகு பார்த்து கொள்ளலாம்.சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்.

நான் மாவட்ட செயலாராக பொறுப்பேற்ற பிறகு மாவட்ட செயலாளராக கட்சிகாரர்கள் என்னை அங்கீகரிக்கவே 8 ஆண்டுகள் ஆனது.

தி.மு.க விலிருந்து ம.தி.மு.க பிரிந்த பின்பு ஏன்  ம.தி.மு.க விற்கு செல்லவில்லை என பலர் கேட்டார்கள்.அப்போதே  கருணாநிதி,அவர் மகன்,அவர் பேரன் என யார் இருந்தாலும் அவருக்கு ஆதரவாக தான் இருப்போம் என கூறினேன்.தற்போது அது உண்மையாகி உள்ளது என கூறினார்.