Sunday, March 08, 2020

On Sunday, March 08, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் 3ம் ஆண்டு  துவக்க விழா மற்றும் மகளிர் தின விழாவை கல்லூரி மாணவிகள் கொண்டாடினர்.

திருச்சி கேகே நகர் வயர்லெஸ் சாலையில் செயல்பட்டு வரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் தங்கி பயன்பெற்று வருகின்றனர். திருச்சி, கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல் பட்டுவரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டாக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமயபுரம் ராமகிருஷ்ணா கல்லூரி துணை பேராசிரியர்கள்  ரேவதி, கீர்த்தனா, காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டு முதியவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். விழாவில் சமயபுரம் கே.ராமகிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு  முதியவர்களுடன் கலந்துரையாடி முதியவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி ஒருவருக்கொருவர்  பகிர்ந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
On Sunday, March 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி

திருச்சி வேர்கள் அறக்கட்டளை மற்றும் துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம்  சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது .

 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  திருச்சி வேர்கள் அறக்கட்டளை துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம், திருச்சி சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை, Dr. அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை, ஹாசினி ஸ்கின் கேர் ஹாஸ்பிட்டல் மற்றும் உயிர்த்துளி இரத்தவங்கி ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் துரைசாமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை திருச்சி தெற்கு மாவட்ட  பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

 இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

இம்முகாமில்  கண் மருத்துவர், தோல் அழகியல் மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.

மேலும் இம்முகாமில் அறக்கட்டளையை சார்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் இரத்ததானம்  செய்தனர்..

Saturday, March 07, 2020

On Saturday, March 07, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரம் தலைமை அலுவலகம் அமைத்து பொது மக்களை ஏமாற்றி வரும் நிறுவனம்தான் எல்ஃபின். 


இந்த நிறுவனத்தை பற்றி முழு விவரம் தெரிந்த புதுக்கோட்டை சத்தியமூர்த்தி அனுப்பியுள்ள வீடியோவில், 

 தஞ்சை போலீசார் திறம்பட செயல்பட்டு பிரசன்னா வெங்கடேஷ்  மற்றும் கிங்ஸ்லி ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

ஆனால் தற்போது பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி   வழக்கில் இருந்து தப்பித்த சத்யபிரியா என்பவரும் துபாயில் உள்ளார்கள் உலக அளவில் காட்மண்டு  காவல்துறைக்கு அடுத்து தமிழக காவல்துறை இடம்பெற்றுள்ளது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற தைரியத்தில் எல்பின் அதிபர் அழகர்சாமி ( எ )ராஜா, Srk (எ) ரமேஷ் குமார் தஞ்சாவூர் போலீசாரின் தீவிர நடவடிக்கையால் 

தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளனர். எங்களுக்கு தெரிந்த வரைக்கும் 



இவர்கள் தங்களது  தொழிலை ஒரு லட்சம் தந்தா 3 லட்சம் என்றும் 3 லட்சம் தந்தால் 9 லட்சம் என்றும் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். திறம்பட செயல்பட்டு வரும் தமிழக காவல்துறையை  கீழ்த்தரமாகவும் , இழிவாகவும் எல்பின் நிறுவனர் ராஜா எப்படி இவ்வளவு தைரியமாக பேசுகிறார் என்று தெரியவில்லை. 


தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில்  தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும் டுவிட்டர் மூலம் இவர்கள் உண்மையாக திறம்பட செயல்படும் காவல்துறைக்கு எதிராக பேசிய ஆடியோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  .


  •  சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில் ஒரு தனிநபர் ஒன்றை வாங்கி மூன்றாக தருவதாக கூறுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளார். இந்த எல்பின் நிறுவனத்தினர் அரசின் சட்டத்தை மதிக்காமல் ஒன்றுக்கு மூன்றாக தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் சம்பாதித்து அந்தப் பணத்தில் துபாய் உல்லாசப் பயணம் என கூறி மக்களை அழைத்துச் சென்று மூளை சலவை செய்து வருகின்றனர். டாப் பைவ் லீடர்ஸ் , பாபு, சாகுல், இளங்கோ, பால்ராஜ், அறிவுமணி தற்போது 6 வதாக இலுப்பூர் ஐ சேர்ந்த ராஜப்பா அனைவருக்கும் சிறப்பு கவனிப்பு தற்போது துபாயில். இது இல்லாமல் 800 லீடர்களுக்கு ஸ்பெஷல் கிப்ட் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த பணங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டதா ? அல்லது வேறு வெளிநாடுகளில் இருந்து துபாய் வந்ததா ? என தெரியவில்லை.


திறம்பட செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக காவல்துறையினர்  எல்பின் சகோதரர்கள் இந்தியா வந்தவுடன் இவர்கள் மீதான பழைய வழக்குகளை தூசிதட்டி பொது மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என புதுகை சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் மோசடி வழக்கில் உள்ள சத்திய பிரியா 

வெளிநாட்டில் தொடர்ச்சியாக தங்கி வருவதாகவும் தன்னை காவல்துறை கைது செய்யாமல் இருக்க எல்பின் சகோதரர்கள் பேரம் பேசி வருவதாகவும் அவர்களுடைய வட்டாரத்தில் தெரிவித்துள்ளார் 

உண்மைத்தன்மையை காவல்துறை அதிகாரிகள் தான் விசாரணை செய்ய வேண்டும் தொடர்ச்சியாக எல் பின் சகோதரர்கள் காவல்துறைக்கு எதிராக ஆடியோ போன்ற ஆதாரங்கள் வெளியிட்டும் சமீபத்தில் தஞ்சை காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி அவர்கள் துபாய் எப்படி அழைத்து சென்றார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது

எல் பின் சகோதரர்கள் திருச்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் திருச்சி அல்லது சென்னை போன்ற இடங்களில் கோடிக்கணக்கான செலவில் எல்பின் நிறுவனத்தின் இன்வெஸ்ட்மெண்ட் சந்திப்பு பெரிய அளவில் ஏற்பாடு செய்யப் போவதாக கூறியுள்ளனர்  


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை  பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள்  ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம்   )

தமிழகம் முழுவதும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தஞ்சையில் தற்போது காவல்துறையால் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் திருச்சியில் மட்டும் தொடர்ச்சியாக கூட்டம் நடத்துவது எப்படி சென்னை நட்சத்திர ஓட்டல்களில் எதனடிப்படையில் கூட்டம் நடத்தப்படுகிறது என்பது பொதுமக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது அதற்கு தீர்வு காவல்துறை தான் பதில் அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து
On Saturday, March 07, 2020 by Tamilnewstv in    
தென்னிந்திய அளவிலான மாடலிங் போட்டி கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் 10 நாட்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.

இதில் தென்னிந்திய அளவில் இருந்து சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்த அஜ்மீர் கான் (22) என்ற பொறியியல் பட்டதாரி கலந்து கொண்டார். மொத்தம் ஆறு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இதில் அதிக புள்ளிகளைப் பெற்று அஜ்மீர் கான் வெற்றி பெற்றார்.
திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று தனது வெற்றி குறித்து அஜ்மீர் கான் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் இந்த வெற்றியை சாதாரணமாக பெறவில்லை. மிகவும் கடின உழைப்புக்குப் பின்னர் வெற்றி பெற்றேன். எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். மிஸ்டர் இந்தியா பட்டம் வெல்வதே எனது இலக்காகும். உலக அளவில் இப்போட்டியில் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன். இதற்கு முன்பு மிஸ்டர் மதராசபட்டினம் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த இயற்கை  அலங்காரத்திற்கான பரிசைப் பெற்றேன். அதேபோல் தமிழக ஸ்டைல் ஐகான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன். எனது வெற்றிக்கு ஃபேஷன் கோரியோகிராபர் பிரகாஷ் பிள்ளை மிகவும் பெரிய அளவில் உறுதுணையாக இருந்தார் என்றார்.
On Saturday, March 07, 2020 by Tamilnewstv in    
திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.


திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் கூறுகையில், ஏப்ரல் 2ஆம் தேதி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப் படும். அனைத்து கட்டுமான பொருட்கள் தயாராக இருப்பதால், உடனடியாக அவற்றை கோர்க்கும் பணி தொடங்கும். இரண்டு ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் காசி விசுவநாதர் கோவில் பகுதியில் ஒரு பகுதி உடைக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது. அதையும் மாற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக சன்னியாசிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் தலைவராக இருக்கிறேன். பாபர் மசூதியை நான் இடிக்கவில்லை. மக்களாக இணைந்து இடித்தார்கள். அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றார். திமுக தேர்தல் வியூலத்திற்கு பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, சுப்பிரமணியசாமி பதில் கூறுகையில், பிரசாந்த் கிஷோர் யார் என்பது எனக்கு தெரியாது. ஒரு அரசியல் தலைவராக இருந்தால் எனக்கு தெரியும். ஆனால் இந்த தேர்தலில் திமுக தோற்க வேண்டும். அதற்கான முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்வோம்
 என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் மாற்றம் ஏற்படும். அது குறித்த விபரத்தை தற்போது வெளியிட முடியாது. அவர் சமுதாய ரீதியாக வலுவாக உள்ளார் என்றார்.
 தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்துவது நல்ல விஷயம். அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் கடல் நீரை குடிநீராக மாற்றி விட்டு ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நிறைவேற்றலாம் என்றார்.

Friday, March 06, 2020

On Friday, March 06, 2020 by Tamilnewstv in    

On Friday, March 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா


108 பந்தங்களுடன்.... ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் தெப்பத் திருநாள் ஸ்ரீநம்பெருமாள் பந்தக் காட்சியுடன் நிறைவு பெற்றது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா
தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நிறைவடைந்தது பின்னர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பதிருவிழா வரும் 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வரும் 27-ந் தேதி தொடங்கி வருகிற 6ம் தேதி வரை நடைபெறும்.
தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான 5-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில்; நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து  சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
9ம் திருநாளான 6-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன்,  ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில்  ஊழியர்கள் செய்திருந்தனர்


On Friday, March 06, 2020 by Tamilnewstv in    

On Friday, March 06, 2020 by Tamilnewstv in    
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.


திருச்சி அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் பிரான்சிஸ் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சுந்தர்  ஈஸ்வர்  மாவட்டச் செயலாளர்  முரளிதரன் மற்றும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


 இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை தொடங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் கனவு திட்டமான தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட இரண்டாவது தலைநகரை உருவாக்கிட தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்ள படுகிறது. எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் இளைஞரணி சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மத்திய தொழிற் பணிகளிலும், தமிழக அரசின் வேலைவாய்ப்பு களிலும் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இந்த கூட்டத்தில் இளைஞர் அணி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

பேட்டி:
சமத்துவ மக்கள் கட்சி
மாநில இளைஞரணி செயலாளர்.

 பிரான்சிஸ் அந்தோணிராஜ்