Friday, March 27, 2020
On Friday, March 27, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு, எம்எல்ஏக்கள் பரமேஸ்வரி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 195 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மக்கள் சந்தேகங்களையும், புகார்களை தெரிவிக்கலாம்.
இந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கியது முதல் தற்போது வரை 195 புகார்கள் வந்துள்ளது. இதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. திருச்சி- மதுரை சாலையில் உள்ள கள்ளிக்குடி புதிய காய்கறி வணிக வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்த 78 ஆண்கள், 34 பெண்கள் என 112 வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர் அனுமதிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அவர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் கடந்த 22ம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 86 பயணிகள் வந்தனர். இதில் 22 பயணிகளுக்கு சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஈரோட்டைச் சேர்ந்த 24 வயது பயணி மட்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது நல்ல உடல் நிலையுடன் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே விமானத்தில் வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4,120 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இந்த வகையில் 2,262 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. மீது ஆயிரத்து 498 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி விரைவில் நிறைவு பெறும். இவர்கள் அனைவரும் வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியே வந்தால் பாஸ்போர்ட் முடக்கப்படும். குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 36 சமுதாயக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடிய மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், தனியார் பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி அனைவரும் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
On Friday, March 27, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று திருச்சி அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரோடு பயணம் செய்த நாகை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு தொற்று இல்லை. எனினும் அவர்கள் வீடுகளில் வைத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றின் பயங்கரம் புரியாமல் மக்கள் இன்னும் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் பலர் வீதிகளில் உலா வருகின்றனர்.
கிராமப்புறங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கரோனா வைரஸ் தாக்குதலின் விளைவு தற்போது தெரியாது. தொற்று ஏற்பட்டால் தான் அதன் வீரியம் தெரியவரும். மருத்துவமனைக்கு செல்வோர் மற்றும் காய்கறி வாங்குவோர் மட்டுமே இருசக்கர வாகனங்களில் வரலாம். தேவையற்ற காரணங்களுக்காக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் வெளியில் வரவேண்டும். தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அந்த வாகனத்தை திரும்ப பெற முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 127 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் செயல்படும் காய்கறி கடைகள் பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு மாற்றப்பட உள்ளது. வரும் திங்கள்கிழமை முதல் காந்தி சந்தை பொன்மலை ஜி கார்னரில் செயல்படும். இங்கு பொதுமக்களும் வந்து காய்கறிகளைவாங்கி செல்லலாம். இதேபோல் திருச்சி மாவட்டத்தில் செயல்படுமா 6 உழவர் சந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு மாற்றப்படும். இங்கு திறந்தவெளியில் செயல்படும் உழவர் சந்தையில் மக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம். திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்றப்படும். திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நேந்திரம் வாழை தார்கள் அறுவடை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக புகார் வந்தது. இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு அவற்றை அறுவடை செய்யவும், வாகனங்களில் கேரளாவுக்கு ஏற்றிச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
On Friday, March 27, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 27
தன்வந்திரி யாகம் என்றால் கொடிய நோய்களில் இருந்து விடுபடவும் நோய்களினால் தாக்கம் ஏற்படாமல் இருக்கவும் நடத்தும் யாகம் ஆகும் தற்பொழுது கொடிய வைரஸ் காரணத்தால் நோய் ஏற்பட்டு வருகிறது மக்கள் கொடிய நோய்த் தாக்குதல் பாதிப்படையாமல் இருக்கவும் நோய்த் தாக்குதலில் இருந்து விடுபடவும் சிறப்பு யாகம் நடைபெற்றது
திருச்சி ஸ்ரீரங்கத்தில்
கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை
தன்வந்திரியாகம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை காக்கவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் தன்வந்திரியாகம் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் நடத்தப்பட்டது. இதற்க்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து இருந்தார். இதில் கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தன்வந்த்ரி யாகம் பற்றி தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் விளக்கம் அளித்தார்

ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் நடமாடிய, வைத்திருந்த 1289பேர் கைது - 802ஆட்டோக்கள் மற்றும் டூவீலர்கள், 22நான்கு வாகனங்கள் பறிமுதல்.
கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு பிறபிக்கப்படுவததாக அறிவித்துள்ளார்.
பல இடங்களிலும் காரணமின்றி சுற்றிதிரிந்த நபர்கள் திருப்பி அனுபப்பட்டனர். சில இடங்களில் ‘தட்டி’ அனுப்பப்பட்டனர். எனினும் நண்பர்களாக சேர்ந்து கொண்டு சுற்றித்திரிந்த நபர்களை கைது செய்த போலீசார் சில இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்தினர். அந்த வகையில் திருச்சி, தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மத்தியமண்டலத்தில் ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் அவசியமின்றி சாலைகளில் நடமாடிய 1289பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 802ஆட்டோக்கள் மற்றும் டூவீலர் வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கல பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வகையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடிய பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி சந்தை ஆகிய இடங்களில் உள்ள கட்டடங்கள், தரை உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
உயரமான கட்டடங்களுக்கு தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தூய்மை படுத்தப்படுகிறது.
இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் தீயணைப்புத்துறை வீரர்களால் பீய்ச்சி அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடிய பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி சந்தை ஆகிய இடங்களில் உள்ள கட்டடங்கள், தரை உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் தீயணைப்புத்துறை வீரர்களால் பீய்ச்சி அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
On Friday, March 27, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 27
திருச்சி மத்திய சிறையில்
விசாரணைக் கைதிகள், ஆயுள் கைதிகள் மற்றும் குண்டாசில் உள்ள கைதிகள் என
1600 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்
சிறைவாசிகள் இன்று முதல் வரும் 14.4.2020 வரை தங்களது குடும்பத்தினருடன் நேர்காணல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூட்டமாக நேர்காணல் புரிவது சிறைவாசிகள் உடல்நலம் மற்றும் நேர்காணல் காணவரும உறவினர்களின் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதனை மேற்கொண்டுள்ளதாக கூறும் சிறை நிர்வாகம் காணொளி காட்சி மூலம் சிறைவாசிகள் தங்கள் உறவினர்களுடன் நேர்காணல் நடத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.
திருச்சி மத்திய சிறையில் சிறைவாசி பின் உறவினர்கள் நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது - சிறைவாசிகள் தங்கள் உறவினர்களுடன் காணொளி காட்சி மூலம் நேர்காணல் நடத்தலாம்.
திருச்சி மத்திய சிறையில்
விசாரணைக் கைதிகள், ஆயுள் கைதிகள் மற்றும் குண்டாசில் உள்ள கைதிகள் என
1600 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்
சிறைவாசிகள் இன்று முதல் வரும் 14.4.2020 வரை தங்களது குடும்பத்தினருடன் நேர்காணல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூட்டமாக நேர்காணல் புரிவது சிறைவாசிகள் உடல்நலம் மற்றும் நேர்காணல் காணவரும உறவினர்களின் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதனை மேற்கொண்டுள்ளதாக கூறும் சிறை நிர்வாகம் காணொளி காட்சி மூலம் சிறைவாசிகள் தங்கள் உறவினர்களுடன் நேர்காணல் நடத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.
Thursday, March 26, 2020
On Thursday, March 26, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி மார்ச் 26
மருத்துவமனையில் வாலிபருக்கு கொரனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த ஈரோட்டை சேர்ந்த ராஜ்குமார் (24) என்பவர் வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக திருச்சி அரசு மருத்துவமனையின் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது.
அதில் அவருக்கு கொரனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரன் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 26 பேர் கண்டறியப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பை தொடர்ந்து கொரனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் வாலிபருக்கு கொரனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த ஈரோட்டை சேர்ந்த ராஜ்குமார் (24) என்பவர் வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக திருச்சி அரசு மருத்துவமனையின் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது.
On Thursday, March 26, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி பெரிய கம்மாளத் தெருவில் கன்னிகா பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறும்.
தற்போது ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த ஆண்டு விழா நடத்த திருச்சி மாநகர போலீசில் அனுமதி கேட்டனர். அப்போது நிர்வாகத்தினர் 30 பேருக்கும் குறைவான உபயதாரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போலீசார் அனுமதி அளிததனர்.
ஆனால் அம்மன் வீதி உலா நடைபெற்ற போது 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இப்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

On Thursday, March 26, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி:
திருச்சி அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து விதமான வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டண வசூல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
திருச்சி சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி- புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் அருகில் உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -தஞ்சை சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடி, திருச்சி- மதுரை ரோட்டில் விராலிமலை அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -கரூர் ரோட்டில் முக்கொம்பு அருகே உள்ள சுங்கச்சாவடி ஆகியவை வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
திருச்சி அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
திருச்சி சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி- புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் அருகில் உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -தஞ்சை சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடி, திருச்சி- மதுரை ரோட்டில் விராலிமலை அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -கரூர் ரோட்டில் முக்கொம்பு அருகே உள்ள சுங்கச்சாவடி ஆகியவை வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...