Tuesday, March 31, 2020

On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 31

திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு அவசர கால விமான சேவை -
மலிண்டோ விமானம் மூன்று நாட்களுக்கு இயக்கம்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விமானங்களும் மூடப்பட்டு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் கடந்த 24ம் தேதி முதல் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையங்களில் இயங்காத நிலை இருந்து வருகிறது இந்த நிலையில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் மலிண்டோ விமானத்தில் சேவை மட்டும் அவசரகால சேவையாக வரும் ஏப்ரல் 1, 2,4 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து சிறப்பு சேவை இயக்கப்பட இருக்கிறது இந்த விமானம் மலேசியாவில் இருந்து ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 10 35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 11 25 மணிக்கு மலேசியா நோக்கி செல்லும் எனவும் இதேபோன்று ஏப்ரல்
2மற்றும் 4ம் தேதிகளில் காலை 9.35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு காலை 10.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
கரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் தீவிர ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் காவல்துறை வாகனங்களில் ரோந்து வரும் காவலர்கள் தேவையின்றி யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுரை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இதையும் மீறி பலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வீதிகளில் உலா வருகின்றனர்.

 தேவையின்றி சுற்றுபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அதையும் மீறி இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உலா வந்தது. இதையடுத்து காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்த வகையில் இன்று திருச்சி மாநகரில் சுமார் 300 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு ஊரடங்கு உத்தரவை மீறியது, ஹெல்மெட் அணியாமல் வந்தது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 250-க்கும் மேற்பட்ட வழக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருச்சி கே.கே. நகரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.

Sunday, March 29, 2020

On Sunday, March 29, 2020 by Tamilnewstv in    
உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வகையில் கரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இதன் ஒரு கட்டமாக வரும் ஏப்ரல் 21ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில்  பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிலர் அத்துமீறி கூடுவதும், வாகனங்களில்  வெளியே செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சிறிய சாலைகள் மற்றும் ஊரக பகுதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கவும், கண்காணிக்க வும் டிரோன் கேமராக்களை காவல்துறையினர்  பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
 திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக டிரோன் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமரா மூலம் கிடைக்கும் காட்சிகளை கொண்டு  சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று  கூட்டத்தை கலைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
On Sunday, March 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 29

திருச்சியில் 2,115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

இதன்படி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் 3வது நாளான நேற்று மட்டும் 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 428 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 180 இருசக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து தற்போது வரை மத்திய மண்டலத்தில் மொத்த. ஆயிரத்து 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,115 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, திருச்சி மாவட்டம், முசிறியில் வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தபட்டவர், விதிமுறைகளை மீறி பிறருடன் கிரிக்கெட் விளையாடி வெளியில் சுற்றி திரிந்ததால், மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முசிறி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான தனிப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
On Sunday, March 29, 2020 by Tamilnewstv   
திருச்சி மார்ச் 29

கரோனோ பீதியில் தலைமறைவாக விடுதியில் பதுங்கி இருந்த சிங்கப்பூர் ரி்ட்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனோ தனிப்பிரிவில் அனுமதி.

தமிழகம் முழுவதும் கரோனோ பீதியில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் தான் இந்த வைரஸ் அதிகம் பரவி வருகிறது என்பதை உணர்ந்த அந்த அந்த மாநில நிர்வாகம் தன் மாநிலத்திற்குள் கடந்த 2 மாதங்களாக வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களை தேடி கண்டுபிடித்து தனிமைப்படும் பணியில் வேகமாக செயல்படுத்தி வருகிறார்கள்.


சமீபத்தில் புதுக்கோட்டையை அடுத்த பனியம்பட்டி வடகாட்டை சேர்ந்த சக்தி கண்ணன் என்பவர் கடந்த மார்ச் 22ம் தேதி சிங்கபூரிலிருந்து திருச்சி வந்திருக்கிறார். ஆனால் வீடு திரும்ப வில்லை. விமானநிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் சக்திகண்ணனை தேடி புதுக்கோட்டை மாவட்ட சுகாதரா ஊழியர்கள் தேடி சென்ற போது வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டது அதிர்ச்சியடைந்தனர்.


சக்திகண்ணன் ஊர் திரும்பியதை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்ட பெற்றோர் அவரை தேட ஆரம்பித்து கடைசியில் தேடிக்கண்டுபிடித்து கொடுங்கள் என போலீசிடம் புகார் செய்திருக்கிறார்கள். இதனால் சக்திகணேசனை தேடும் படலம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டோன்மென்ட் போலீசார் வழக்கம் போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அப்போது ஒரு இளைஞன் சிவந்த கண்களுடன் தடுமாறியபடி நடந்து சென்று கொண்டு இருப்பதை பார்த்து தடுத்து விசாரித்த போது.. அவன் நான் மெடிக்கல் வந்தேன், மொபைல சார்ஜ் போடனும் என்று மாற்றி மாற்றி பேச சந்தேகம் அடைந்த போலீஸ் அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது.

அவர்  மார்ச் 22ம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தாகவும், வீட்டிற்கு சொல்லாமல் திருச்சி ஜங்சன் – மத்திய பேருந்து நிலையம் சாலையில் உள்ள அபூர்வா விடுதியில் 503 எண் அறையில் தங்கி இருப்பதாவும் என்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்த தங்கியிருப்பதாக தகவல் சொல்லவும் அதிர்ச்சியடைந்த கண்டோன்மென்ட் போலீஸ் உடனே அவரை பிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சொல்லி அவனுடைய பெற்றோருக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கு இடையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்து விடுதிகளும், ஓட்டல்கள் கட்டாயம் மூடி சொல்லி உத்தரவு இருக்கும் நிலையில் திருச்சி அபூர்வா விடுதி எப்படி நடத்திக்கொண்டிருக்கிறார்கள், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை எப்படி தங்க வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து மாநகர போலீஸ் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது.

தற்போது சக்தி கண்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனோ தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர்..
On Sunday, March 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 28

திருச்சி ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏக்கள்
1கோடி கொரோனா நிவாரண நிதி  - எம்.பி.திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் அதிமுக எம்.பி.குமார் ஆகியோர் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.

இந்தியாவிலும்
கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு (144) அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தற்போது
1.70 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் சார்பிலும் 9,000 கோடி ரூபாய் நிதி தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர்
தன்ஆர்வலர்களுக்கு
நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு
அழைப்பும் விடுத்துள்ளார். இதே போல் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவும் நிதி கோரி அழைப்பு விடுத்தார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொரோனா நிவாரண நிதிக்கு 1கோடியை திமுக எம்.எல்ஏ.க்கள் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,

 திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ்பொய்யாமொழி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்

ஆகியோர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா
25லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடி ரூபாயை கரோனா நிவாரண நிதிக்கு  வழங்கினர். இது தவிர திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளும் தலா 20 லட்சம் ரூபாய் வீதம்
60லட்சம் ரூபாயையும்,
இதே போல் அதிமுகவின் முன்னாள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவின் திருச்சி மாநகர மாவட்ட செயலாளருமான ப.குமார் தனது 3 மாத ஓய்வூதியமான ரூ 1,05000த்தை வழங்கியுள்ளனர்.

Saturday, March 28, 2020

On Saturday, March 28, 2020 by Tamilnewstv in    
துபாய் சென்று திரும்பிய எல்பின் சகோதரர்கள் மீது கொரோனா ஆய்வு நடத்த வலியுறுத்தல்


https://tamilnadunewstv.blogspot.com/2020/03/blog-post_52.html 
 24.3.2020   (தொடர்ச்சி)

திருச்சி: துபாய் சென்று திரும்பிய எல்பின் சகோதரர்கள் அரசு விதிமுறைகளை மீறி அன்னதானம் வழங்கியதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு போலி நிறுவனம் எல்பின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் சிறந்த முறையில் வணிகம் செய்த 400 பேர் துபாய் சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்நிறுவனத்தின் சார்பில் செயல்படும் அறம் மக்கள் நல சங்க தலைவர் ராஜா, பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோரது தலைமையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து மார்ச் மூன்றாம் தேதி முதல் துபாய் சென்றனர்.

கொச்சின், திருவனந்தபுரம், மும்பை, சென்னை விமான நிலையங்கள் வழியாக இவர்கள் பயணம் செய்தனர்.
 மார்ச் 3ஆம் தேதி முதல் சுமார் ஒரு வார காலம் துபாயில் தங்கியிருந்து சுற்றிப் பார்த்துவிட்டு அதே வழித்தடத்தில் நாடு திரும்பினர்.
 இந்நிலையில் உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவையும் தாக்க தொடங்கியது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக தான் இந்த நோய் இந்தியாவிற்குள் நுழைந்தது உறுதிசெய்யப்பட்டது.
 இதைத்தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளின் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வீட்டிலேயே தங்கி இருக்க அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. வீடுகள்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறு தங்கியிருக்கும் வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
 இப்படி பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு தாக்குதலை கட்டுப்படுத்தி வருகிறது.
 ஆனால் இந்த அறம் மக்கள் நல சங்கம் சார்பில் துபாய் சுற்றுலா சென்று வந்தவர்கள் கண்காணிக்க படவில்லை. மருத்துவ பரிசோதனைக்கும் மேற்கொள்ளப்படவில்லை.

அவர்களும் தாமாக முன்வந்து எவ்வித பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை. அவர்கள் வீடுகளிலும் தங்கியிருக்க அறிவுறுத்தப் படவில்லை.
மேலும் இந்த அமைப்பினர் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

அன்னதானம் நிகழ்ச்சியிலும் கையுறை, முக கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகார் அரசுக்கு சென்றவுடன் அன்னதானம் வழங்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பினரும் அன்னதானம் வழங்குவதை நிறுத்திக் கொண்டனர். ஆனால் வீட்டினுள்ளேயே இருக்காமல் வெளியில் நடமாடியது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து இவர்கள் 400 பேரையும் அடையாளம் கண்டு வீட்டிலேயே இருக்க தற்போது உத்தரவிட்டுள்ளார்.  தொடர்ந்து அவர்கள் மருத்துவர் துறையினரின் கண்காணிப்பில் வீட்டில் தங்கியுள்ளனர். ஆனால் இவர்கள் இத்தனை நாட்கள் பலருடன் பழகி, தெருக்களிலும் நடமாடி உள்ளனர். மாவட்ட ஆட்சியருக்கு தாமதமாக புகார் சென்றாலும், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மேலும் இவ்வாறு வெளிநாடு சென்று திரும்பியவர்கள் விதியை மீறி நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்தவகையில் இந்த 400 பேரது பாஸ்போர்ட்களையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் இது பலருக்கும் முன்னுதாரணமாக அமையும்  என்றும் சமூக ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மருத்துவ கண்காணிப்பில் வைத்ததற்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு துறை சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட நிர்வாகம் காவல்துறை அதிகாரிகள் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
On Saturday, March 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 28

திருச்சியில் உழவர் சந்தைகள், காந்தி சந்தை மாற்றம்.

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உழவர் சந்தைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்ப்பதற்காக இத்தகைய முடிவு அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக அனைத்து தரப்பு மக்களும் திருச்சி காந்தி சந்தையில் காய்கறி வாங்குவதற்காக குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டத்தில் காந்தி சந்தை நிரம்பி வழிந்தது.

 இதைத் தொடர்ந்து காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும். கடைக்காரர்கள் மட்டுமே அந்த காய்கறி செல்லவேண்டும் வாங்கி செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதனால் வேறு வழியின்றி உழவர் சந்தைகளை மாற்று இடத்தில் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது .
இந்த வகையில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தையை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றி ஆட்சியர் சிவராசு  உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உழவர்சந்தை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 25 கடைகள் முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள், வியாபாரிகள் தங்களது காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகளை வாங்கும் வகையில் அதற்கென்று கட்டங்கள் வரையப்பட்டுள்ளது. அதில் வரிசையாக மக்கள் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 30 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர திருச்சி காந்தி சந்தை வரும் 30ம் தேதி முதல் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
On Saturday, March 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 28

திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண்

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் பேராசிரியரை மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்த வணக்கம் சோமு என்பவர் ஒரு தலை காதல் காரணமாக  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலை 8மணியளவில் ஆண்டார் வீதி பகுதியில் பேரரசிரியர் பணிக்கு சென்ற போது  காரில் கடத்தினார். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அவரை பாதி வழியில் போலீசாரால் மீட்கப்பட்டார். ஆனால் வணக்கம் சோமு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வணக்கம் சோமுவை தேடி வந்தனர். இந்நிலையில் 7மாத தலைமறைவுக்கு பின் இன்று அவர் கோட்டை காவல் நிலையத்தில் சரண்டைந்தார். கொரோனா பீதி காரணமாக சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளை தவிர மற்ற விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சரண் அடைந்தால் சிறை செல்ல வேண்டியது இருக்காது என்பதால் வணக்கம் சோமு திடீர் என கோட்டை காவல் நிலையத்தில்  சரண்டைந்ததாக தெரிகிறது.