Saturday, April 18, 2020
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - பிரிண்டர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை
திருச்சி மாவட்ட பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரசாத், செயலாளர் மோகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் மத்திய, மாநில அரசு அறிவித்திருந்த 21 நாள் ஊரடங்கில் நாங்களும் பங்கேற்று, தற்போது வரை அச்சங்களை திறக்காமல் உள்ளம். ஊழியர்கள் பணிக்கு வராமல் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன.
அதில் பணியாற்றும் ஊழியர்கள் வருமானமின்றி பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.. அச்சகங்களில் ஊழியர்கள் தினக்கூலியாகவும், வார கூலியாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். அமைப்புசாரா நல வாரியங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது போல் அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அச்சகங்களுக்கு வாங்கப்பட்ட ஆர்டர்கள் வருடாந்திர வேலைகள் மற்றும் வரும் ஆண்டிற்கான பள்ளி, கல்லூரி பிரிண்டிங் ஆர்டர்கள் என அனைத்து பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
அரசு சிறு குறு நிறுவனங்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் அச்சகம் செயல்பட ஆவணம் செய்ய வேண்டும். அச்சகங்களில் அரசு அறிவித்தபடி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணியாற்றுவோம் என்றனர்.
அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - பிரிண்டர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை
திருச்சி மாவட்ட பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரசாத், செயலாளர் மோகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
திருச்சி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன.
அதில் பணியாற்றும் ஊழியர்கள் வருமானமின்றி பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.. அச்சகங்களில் ஊழியர்கள் தினக்கூலியாகவும், வார கூலியாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். அமைப்புசாரா நல வாரியங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது போல் அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அச்சகங்களுக்கு வாங்கப்பட்ட ஆர்டர்கள் வருடாந்திர வேலைகள் மற்றும் வரும் ஆண்டிற்கான பள்ளி, கல்லூரி பிரிண்டிங் ஆர்டர்கள் என அனைத்து பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
அரசு சிறு குறு நிறுவனங்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் அச்சகம் செயல்பட ஆவணம் செய்ய வேண்டும். அச்சகங்களில் அரசு அறிவித்தபடி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணியாற்றுவோம் என்றனர்.
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
திருச்சி அருகே மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய குழாய்கள் அமைப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மக்கள் நீதி மய்யம் சார்பில், மஞ்சம்பட்டி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் தற்காலிக காய்கறி சந்தையில் மாவட்ட செயலாளர் மருத்துவர். ஹரிஹரன் தலைமையில் பொதுமக்கள் கைகளை சுத்தும் செய்துக்கொள்ளும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு சோப்பு, தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரோட்டரி சங்கம் இணைந்து மேற்கொண்ட இந்த பணியினை மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் தமிழ்கனி துவக்கி வைத்து கைகளை சோப்பு போட்டு குழாயில் சுத்தம் செய்துகொண்டார். அதனைத்தொடர்ந்து அம்மா உணவக ஊழியர்கள், நகராட்சி தூய்மை காவலர்கள், காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் நீதி மய்யம், ரோட்டரி சங்கம் ஆகியோர் செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையும் இணைந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு பொடியினை அளித்தனர்.
திருச்சி அருகே மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய குழாய்கள் அமைப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மக்கள் நீதி மய்யம் சார்பில், மஞ்சம்பட்டி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் தற்காலிக காய்கறி சந்தையில் மாவட்ட செயலாளர் மருத்துவர். ஹரிஹரன் தலைமையில் பொதுமக்கள் கைகளை சுத்தும் செய்துக்கொள்ளும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு சோப்பு, தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் மணல் சரிந்து சம்பவ இடத்திலேயே பலி.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சின்னசேலம் பட்டியை சேர்ந்த தியாகராஜன் என்பவரது விவசாய நிலத்தில் ஆள் வைத்து பிரபு என்பவர் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இரவு அந்நிலத்தில் பொன்னம்பலம் பட்டியைச் சேர்ந்த சிங்காரவேலன் என்பவரை கொண்டு மணல் திருடும் பணியில் பிரபு ஈடுபட்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்து அதில் சிக்கிய சிங்காரவேலன் சம்பவ இடத்திலேயே பலியானார். புதை மணலில் சிக்கி உயிரிழந்த சிங்காரவேலனின் பிரேத உடலை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அவருடைய வீட்டில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஜம்புநாதபுரம் போலீஸாருக்கு தகவல் தர சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்கள் வைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட பிரபு என்பவரை கைது செய்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சின்னசேலம் பட்டியை சேர்ந்த தியாகராஜன் என்பவரது விவசாய நிலத்தில் ஆள் வைத்து பிரபு என்பவர் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இரவு அந்நிலத்தில் பொன்னம்பலம் பட்டியைச் சேர்ந்த சிங்காரவேலன் என்பவரை கொண்டு மணல் திருடும் பணியில் பிரபு ஈடுபட்டு இருந்தார்.
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
முசிறி அருகே விழுப்புரத்திற்கு நடந்து சென்ற கூலித் தொழிலாளர்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்கள்.நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில் இருந்து விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஐந்து பேர் விழுப்புரத்திற்கு நடந்து சென்றனர்.
இவர்களை கண்ட சமூக ஆர்வலர்கள் உணவு வாங்கிக் கொடுத்து விழுப்புரத்துக்கு அழைத்து சென்று உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அருகே உள்ள திருக்கோயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (65) ,விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் மனைவி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்டம் ,பவுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர் .தற்போது வைரஸ் பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லதம்பி வேலை வாய்ப்பின்றி சிரமப்பட்டு உள்ளார். போக்குவரத்து தடை செய்யபட்ட நிலையில் விழுப்புரம் அருகே உள்ள சொந்த ஊரான திருக்கோயிலூர் சென்றுவிட கூலித் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து 5 பேரும் நடை பயணமாகவே விழுப்புரத்திற்கு செல்ல தீர்மானித்து பயணத்தை தொடங்கினர். சுமார் 150 கிலோ மீட்டர் நடை பயணத்திற்கு தயாரான தொழிலாளர்கள் மனதில் இருந்த நம்பிக்கை அளவிற்கு உடலில் தெம்பில்லாமல் மிகுந்த சோர்வுடன் திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டையில் நடந்து சென்றுள்ளனர். இவர்களை பார்த்த போலீசார் அதே பகுதியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் சமுக தொண்டு நிறுவணத்தின் உதவியுடன் உணவு வாங்கிக் கொடுத்து ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து விழுப்புரம் அருகே உள்ள திருக் கோவிலூர் கிராமத்தில் கொண்டு விடுவதற்கு ஏற்பாடு செய்தனர். கூலித் தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழி இல்லாத நிலையில் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய தா.பேட்டை போலீசார் மற்றும் வாசவி கிளப் குழுவினர்களுக்கு கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
Friday, April 17, 2020
On Friday, April 17, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி
மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவில் பணியாற்றி வருகின்ற மருத்துவர் ரோஹைய கூறுகையில்
மேலும் ஒரு ஊரடங்கு உத்தரவை மக்கள் சந்தித்து விடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்
ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை பிரதமர் மோடி நீடிப்பு செய்துள்ளார்
மே 3ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிந்தபின்பு மக்கள் வெளி உலகத்திற்கு வரும்பொழுது ஊரடங்கு உத்தரவில் வீட்டிலிருந்து தங்களுடைய எதிர்ப்பு சக்தியை உணவுகள் மூலமாக மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே மக்கள் வெளி நடமாட்டத்திற்கு வரும் பொழுது கொரோனா நோய்தொற்று அவர்களை தாக்காமல் இருக்கும் என்பதற்காக மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மேலும் நியாயவிலைக்கடை அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கும் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக ஒருவார காலத்திற்கு உரிய உணவுகள் இதனால் வரை வழங்கியுள்ளோம் மேலும் தொடர்ச்சியாக வரும் 20 ஆம் தேதி அன்று ஆயிரம் நபர்களுக்கு இலவசமாக ஒரு வார காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்க உள்ளோம் என்றும்
தலைவர் வைகோ அவர்களின் புதல்வர் துரை வைகோ அவர்கள் தொடங்கிய இந்த குழு தமிழகமெங்கும் தொடர்ச்சியாக நாங்கள் சேவை செய்து வருகிறோம் மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவிற்கு பின்பு மேலும் ஒரு ஊரடங்கு உத்தரவை சந்திக்கக்கூடாது என்பதே எங்கள் நோக்கம் என்று மதிமுகமாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொஹைய தெரிவித்தார்

முசிறி அருகே தொட்டியத்தில் கொரோனோ விழிப்புணர்வு ஓவியம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் கரோனா வைரஸ் ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முசிறி அருகே தொட்டியத்தில் வாணப்பட்டறை மைதானம், காவல் நிலையம் அருகே கொரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டுள்ளது. வீட்டில் தனித்திருப்போம், விழித்திருப்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஓவியம் வரைந்து தொட்டியம் காவல்துறையும், பேரூராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் கரோனா வைரஸ் ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முசிறி அருகே தொட்டியத்தில் வாணப்பட்டறை மைதானம், காவல் நிலையம் அருகே கொரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டுள்ளது. வீட்டில் தனித்திருப்போம், விழித்திருப்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஓவியம் வரைந்து தொட்டியம் காவல்துறையும், பேரூராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது
On Friday, April 17, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
முசிறி, தொட்டியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார்
திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட்டியம் பகுதிகளில் 144 தடை உத்தரவு காரணமாக சிரமப்பட்டு வரும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை முசிறி தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார்.
முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணிபுர்pயும் தூய்மைபணியாளர்கள், திருநங்கைகள், சுயஉதவி குழுவினர்கள் உள்ளிட்ட 95 நபர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை முசிறி தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார். அப்போது அங்கிருந்தவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பேரூராட்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
On Friday, April 17, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப் 17
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வகையில் முக்கிய சாலைகள், மக்கள் நெருக்கடி மிகுந்த சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திருச்சி என்.எஸ்.பி ரோடு, பெரிய கடை வீதி, மேல பொலிவார் ரோடு, காந்தி மார்க்கெட், வெல்லமண்டி, வெங்காய மண்டி, வான பட்டறை மாரியம்மன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு கை தெளிப்பான் மற்றும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் சாலைகளின் இருபுறங்களிலும் கிருமிநாசினி தெளித்தனர். பல இடங்களில் அமைச்சரே நேரடியாக கிருமி நாசினி தெளித்தார்.
On Friday, April 17, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆகிய ஜி வி மணிமாறன்
அவர்கள் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார் வங்கி நேரத்தை காலை பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை குறைக்கப்பட வேண்டும்
மத்திய நிதி அமைச்சகம் நிவாரணத் தொகையை அந்தந்த பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அப்படி வரவு வைக்கப்பட்ட தொகையை அவரவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று எங்களுடைய பணியாளர்கள் 90 சதவீதம் மேல் எங்களுடைய வங்கிப் பணியாளர்கள் விநியோகம் செய்து விட்டார்கள் அதை ஏற்றுக்கொண்டு ஸ்டேட் லெவல் பேங்கர்ஸ் கமிட்டி 15. 4 .2020 சுற்றறிக்கை அனுப்பி இருந்தது நிவாரண தொகையை அனைத்து பயனாளிகளுக்கும் கிடைத்து விட்ட காரணத்தால் காலை நேரம் 10 மதியம் 2 மணி வரை செயல்படும் என்று அறிவித்திருந்தது
மேலும் அந்தந்த வங்கியின் மேலாளர்கள் தங்களுக்கு வருகைத் தந்துள்ள பணியாளர்களை வைத்து விரைவில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் தற்போது 40 சதவீதத்திற்கு பெண்கள் வேலை செய்துவருகின்றனர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வாகனத்தில் வந்து செல்கின்றனர் பெண்கள் அவர்கள் வீட்டிற்கு விரைவாக பத்திரமாக சென்று விடவேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்
இந்த ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்த காலத்திலிருந்து கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக தினமும் 50 நபர்களுக்கு மேல் உணவு வழங்கி வருகிறோம் தற்போது இன்று மனநலம் குன்றிய நபர்களுக்கு கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கனரா வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ராஜகோபால் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட செயலாளர் தியாகராஜன், தலைவர் ராஜசேகர் மற்றும் அறிவழகன் ஆகியோர் உதவிகளை வழங்கினர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...