Friday, June 18, 2021

On Friday, June 18, 2021 by Tamilnewstv in    

 திருச்சி

             மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு


                     இன்று 18/ 6 /2021 வெள்ளிக்கிழமை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்


               காலை 10 மணியளவில் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார் பள்ளியில் மாணவர்களுக்கு செயற்கை விண்ணப்பம் வழங்கி என்ன பாடப்பிரிவு வேண்டும் வேண்டுகிற பாடப்பிரிவு கிடைக்கிறதா எவ்வளவு கட்டணம் என்பது போன்ற விவரங்களை கேட்டறிந்தார் தலைமையாசிரியரிடம் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதா மாணவர்களுக்கு பாடப் பிரிவு எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது சுயநிதி பாட பிரிவுகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது போன்ற விபரங்களை கேட்டறிந்தார் பின்னர் ஆசிரியர்களிடம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் என கேட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்

                       அடுத்து திருச்சி மரக்கடை சையதுமுதர்ஷா  மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்கள் சேர்க்கை நடைமுறையை கேட்டறிந்தார் பள்ளியில் உள்கட்டமைப்பு கழிவறை போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தார் மேலும் அங்கு நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார் அதன்பின்னர் திருச்சி ஏர்போர்ட்  ஆபர்ட் மார்சல் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் செயற்கை குறித்தும் எத்தனை ஆசிரியர்கள் பணி செய்கின்றனர் என்பதையும் ஆய்வு செய்தார்

            இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அதிகாரி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்

Wednesday, June 16, 2021

On Wednesday, June 16, 2021 by Tamilnewstv   

 திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக திறப்பு விழா


                    மெயின்கார்டு கேட் காமராஜர் விளைவு அருகில் அமைந்துள்ள கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு  அலுவலகத்தை திறந்து வைத்தார்


அதனைத் தொடர்ந்து  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அலுவலகத்திற்கு அருகில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன்  ராஜசேகர்  பாலமுருகன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் வட்ட கிளை கழக செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Saturday, June 05, 2021

On Saturday, June 05, 2021 by Tamilnewstv in    

  தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இந்த சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனை படியும் , இந்து சமய ஆணையர் அவர்களின் அறிவுரைப்படியும் , இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்  இணையவழியில்  குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் அர்ச்சகர் சுந்தர் பட்டர் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டது .


 முதல் நாளான இன்று ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ  ஆய்வு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் புலவர் கிருஷ்ணா மற்றும்  Dr ஜெயவித்யா ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கினார் , 


முதல் வகுப்பான இன்று தமிழ்நாடு , வெளி மாநிலம் , மற்றும் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளும் பக்தர்களும் கலந்து கொண்டனர்

, ஆன்மிக வகுப்பை துவக்கி வைத்த இணை ஆணையர் திரு செ .மாரிமுத்து ஆன்மிக வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00  மணி முதல் 6.00 வரை நடைபெறும் என்று கூறினார் .*

On Saturday, June 05, 2021 by Tamilnewstv in    

திருச்சியில் நகல் எரிப்பு போராட்டம்


ஜீன் 5−ந் தேதி  2020 ஆண்டு மத்திய அரசு கொன்டு வந்த 3−வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற கோாி கடந்த 6−மாத காலமாக டெல்லியில் பனி,வெயில்,மழை என பாராது தொடா் போராட்டம் நடத்தி வரும் அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சட்டம் இயற்றி ஓராண்டான 


இன்று நாடு முழுவதும் 3−வேளாண் சட்ட நகல் எாிப்பு போராட்டத்திற்க்கு அறைகூவல் விட்டு இருந்தது .அதன் அடிப்படையில் இன்று திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் வட்டம் அயிலாப்பேட்டையில் திருச்சி மாவட்ட அகில இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளா்


 அயிலை சிவசூாியன் தலைமையில் நகல் எாிப்பு போராட்டம் நடைபெற்றது, நடைபெற்ற போராட்டத்தில் சி.பி.ஐ ஒன்றிய செயலாளா் வீரமுத்து,சி.பி.எம் ஒன்றிய செயலாளா் வினோத்மணி,தமிழ் நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள்,பிரகாசமூா்த்தி,நடராஜன்,துரை ,கோப்பு அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

Friday, June 04, 2021

On Friday, June 04, 2021 by Tamilnewstv in    

திருச்சி  கொரோனா பேரிடர் கால நிவாரணப் பொருட்களை வழங்கிய திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்    

 திருச்சி முன்னாள் முதல்வர் திமுக தலைவர் டாக்டர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8,9அ வார்டுகளில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

திருச்சி ஈபி ரோடு தாரநல்லூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் டாக்டர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் 200 மேற்பட்ட நபர்களுக்கு மேல் கொரானா பேரிடர் கால நிவாரணப் பொருட்களை திமுக கிழக்கு சட்டமன்ற வழங்கினார். 


அப்போது அங்கிருந்த முதியோர் ஒருவர் உயர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வை மங்கிய நிலையில் இருந்த ஒரு முதியவருக்கு இனிகோ இருதயராஜ் திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் கூறி மேல் சிகிச்சை செய்வதற்கான ஆலோசனைகளை கூறி மேல் சிகிச்சை நடவடிக்கை உதவிகளை தான் செய்வதாக முதியவருக்கு மனிதநேயத்துடன் இனிகோ இருதயராஜ் தெரிவித்தார்.


 மேலும் இந்நிகழ்ச்சியின் போது தலைமை கழகம் அறிவிப்பின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நிவாரண பொருட்கள் பொதுமக்கள் பெற்றுச் சென்றனர் 

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் மலைக்கோட்டை பகுதியைச் சார்ந்த மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடைபெற்றது

நடைபெற்ற நிகழ்ச்சியில்  14  வட்டச் செயலாளர் சிலம்பரசன் 8 வட்ட செயலாளர்  தசரதன் மற்றும் நிர்வாகிகள் 9அ வட்டச் செயலாளர் சண்முகம் நிர்வாகிகள் ஜம்புலிங்கம் கணேசன் நவம் கந்தன் மோகன் தீனதயாளன் சக்திவேல் குமார் பரிமனம்  மருத்துவர்விஜயலட்சுமி, ராஜ்குமார் பிரபாகரன் பரமசிவம் பெரியசாமி தேவராயன் பிரதீப் திராவிட பண்ணை முத்து தீபக் செல்வராஜ் அருண் ஸ்ரீதர் தினேஷ் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

On Friday, June 04, 2021 by Tamilnewstv in    

 திருச்சி தெற்கு   முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 ஆவது பிறந்த நாள் விழா


          திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி  கலைஞர்நகர்   பாலக்கரை  மலைக்கோட்டை பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் கொரோனாவல்  வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  இனிகோ இருதயராஜ் அவர்களின் ஏற்பாட்டில்நடைபெற்றது.

                         


      தெற்கு மாவட்டகழக பொறுப்பாளரும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உணவுப் பொருட்களையும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

               இந்நிகழ்வில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன், ராஜசேகர், பாலமுருகன்,  அரங்கநாதன்,  செந்தில், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டனர்

On Friday, June 04, 2021 by Tamilnewstv in    

 திருச்சி திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் படத்திற்கு மலர் தூவி EB ரோட்டில் வீடற்றொர்  தங்கும் இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உணவு, நலத்திட்ட உதவி வழங்கினார்.


முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தலைமையில் இன்று ஜூன் 4,  EB ரோட்டில்   அமைந்துள்ள நகர்புர வீடட்ற்ரோருக்கான தங்கும் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு காலை  உணவு, இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுமார் 100 க்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் வந்து உணவு உபசரிப்பு செய்தார். 

அதனை முன்னிட்டு சுமார் 100 பேருக்கு வேட்டி , துண்டு, சேலை ஆகியவை வழங்கினார். மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.மகளிர் அணி பொறுப்பாளர் லீலா வேலூ மேலும் இந்நிகழ்வில் திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நிர்வாகிகள் 15வது வார்டு வட்டச்செயலாளர் மனோகரன் மற்றும்  மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வட்டச் செயலாளர்கள் சண்முகம், சிவகமார் தசரதன் சங்கர் சரவணன் முபாரக் குமரேசன் சிலம்பரசன் மற்றும் திமுக கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Thursday, June 03, 2021

On Thursday, June 03, 2021 by Tamilnewstv in    

 திருச்சி

"ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட்" சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.


கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக மக்களை தாக்கி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வற்ற ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.  பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது


அதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடி வாழ்ந்து வருகின்றனர். அப்படி கஷ்டப்படும் 100 மேற்பட்ட ஏழை எளிய நபர்களுக்கு திருச்சியைச் சேர்ந்த ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் சார்பில் நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.


திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் 120 பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், பிஸ்கட், சேமியா அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் தினேஷ்பாபு, காவல்துறை உதவி ஆய்வாளர் மதியழகன், தர்கா ஜமாத் தலைவர் ஜாகீர் உசேன், என்டிஎஃப் மாநிலச் செயலாளர் ஆல்பா நசீர், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இலியாஸ், ஆசிரியர் காஜாமைதீன், எஸ்டிபிஐ முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் இப்ராஹிம், தலைவர் முகமது ரசூல், பொருளாளர் சாகுல் ஹமீது, அறங்காவலர்கள் சையது முஸ்தபா, அப்துல்லா, பாஸ்கர், ஜோ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

நலிவடைந்த பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நிவாரண பொருட்களை  பெற்று சென்றனர்.

On Thursday, June 03, 2021 by Tamilnewstv in    

 சோழா ரோட்டரி கிளப் சார்பில் மருத்துவ உபகரணங்களை EVR பள்ளியில் அரசு மருத்துவமனை டீன் இடம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.


திருச்சி இ. ஆர் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி சோழா ரோட்டரி சங்கம் சார்பில் உறவின் உயிர் காப்போம் என்ற தலைப்பில் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 100 யூனிட் ஆக்சிஜன் செரி யூட்டிகள், 75 யூனிட் ப்ளோ மீட்டர், 175 யூனிட் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் கருவி மற்றும் முக கவசம்கள் உள்ளிட்டவைகளை,திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா அவர்களிடம் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வழங்கினார்.


நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி சோழா ரோட்டரி சங்க தலைவர் ஜோசப் பாக்கியராஜ், செயலாளர் அமலச்சந்திரன்/ திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ். இணை இயக்குனர் லட்சுமி, நோடல் ஆபீசர் முத்துக்குமார் மற்றும் சிறப்பு திட்டங்கள் இயக்குனர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.