Wednesday, December 24, 2014

மானிய திட்டத்தில் இணைவோருக்கு ரூ.568 வைப்புத்தொகை, வங்கியில் முதலிலேயே எரிவாயு நிறுவனத்தால் செலுத்தப்பட்டுவிடும். சமையல் எரிவாயு மானியம் பெற 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது என மதுரையில் இன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமையல் எரிவாயு மானியத் திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தங்களை இணைத்து கொள்ளும் நுகர்வோர்கள், ஆதார் எண்ணை கியாஸ் நிறுவனம் மற்றும் வங்கியில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 1–ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் பல பிரச்சினைகளை சந்தித்ததால், அரசு முழுமையாக ஆராய்ந்து சில மாற்றங்களை செய்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட சமையல் எரிவாயு நேரடி மானியத்திட்டம் முதல் கட்டமாக 54 மாவட்டங்களில் கடந்த மாதம் 15–ந் தேதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக இந்தியன் ஆயில் துணை பொது மேலாளர் உஜ்ஜல் சட்டோ பாத்யாயா, முதன்மை மேலாளர்கள் வெற்றி செல்வக்குமார், மதிவாணன் (மதுரை வட்டாரம்) ஆகியோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டம் ஜனவரி 1–ந்தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாத நுகர்வோர்கள் மானிய தொகையை நேரடியாக தங்களது வங்கி கணக்கு மூலம் பெறலாம் என்றாலும் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன் அதனை பயன்படுத்தி மானியத்தை பெறுவது அவசியம்.
வங்கி கணக்கு மூலம் மானியம் கிடைக்க ஏற்பாடு செய்யாதவர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இம்மூன்று மாத காலத்தில் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் பெறலாம். இந்த கால அவகாசம் முடிந்த பிறகு மேலும் 3 மாத கால இருப்பு அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த 3 மாத காலத்தில் அவர்கள் சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கி கொள்ளலாம்.
இதே நேரத்தில் இம்மூன்று மாத காலத்திற்குள் சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தில் நுகர்வோர் இணைந்து விட்டால் அவர்கள் பயன்படுத்திய கியாஸ் சிலிண்டருக்குரிய மானியத்தொகை அவர் களது வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.
இத்திட்டத்தில் இணைந்த பிறகு முதன் முதலில் ஒரு சிலிண்டருக்கு பதிவு செய்தவுடன் நுகர்வோர் வங்கி கணக்கில் நிரந்தர முன்வைப்பு தொகையாக ரூ.568 செலுத்தப்பட்டு விடும். நுகர்வோர் தங்களது முதல் கியாஸ் சிலிண்டரை சந்தை விலையில் வாங்குவதற்கு இந்த நிரந்தர முன் வைப்புத்தொகை உறுதி செய்கிறது. இதுகுறித்த அறிவிப்பு இத்திட்டத்தில் இணையும் நுகர்வோருக்கு தனியே அறிவிக்கப்படும்.
நவம்பர் 15 முதல் இத்திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இணைந்த பிறகு முதல் சிலிண்டருக்கு பதிவு செய்தவுடன் அறிவித்தபடி நிரந்தர முன்பணம் என்று ஒருமுறை மட்டும் செலுத்தப்பட்டு விடும். இதற்கு முன் சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தில் சேர்ந்தவர்கள் நிரந்தர முன்பணமாக ரூ.435 பெற்றுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் எந்தவொரு நிரந்தர முன் பணமும் செலுத்தப்பட மாட்டாது. மற்றவர்களுக்கு ரூ.568 நிரந்தர முன்பணமாக செலுத்தப்பட்டுவிடும்.
ஜனவரி 1–ந்தேதி முதல் சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தில் சேர்ந்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சந்தை விலையில் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி ஆகும். அவற்றுக்குரிய மானிய தொகை நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.
இத்திட்டத்தில் இணைந்திடாத எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு கருணை காலமான 3 மாதத்தின்போது அதாவது ஜனவரி 1–ந்தேதி முதல் மார்ச் 31–ந்தேதி வரை தற்போதுள்ளபடியே தொடர்ந்து மானிய விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும்.
திட்டத்தில் இணைந்திடாத எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு நிறுத்திவைப்பு காலமான 3 மாதத்தின்போது அதாவது ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஜூன் 30–ந்தேதி வரை சந்தை விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும். ஆனால் அவர்களுக்குரிய மானிய தொகை எண்ணைய் விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த காலக்கட்டத்திற்குள் அவர்கள் இந்த திட்டத்தில் இணைந்துவிட்டால் நிறுத்தப்பட்டிருந்த மானிய தொகை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.
இத்திட்டத்தில் சேர்ந்திடாத வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 1–ந் தேதிக்கு பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு வாடிக்கையாளரும் இணைந்தால் இணைந்த தேதியில் இருந்து தகுதிக்கு தகுந்தபடி நிரந்தர முன்வைப்புத்தொகை மற்றும் மானியம் அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
மதுரை-நெல்லை-தூத்துக்குடி ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் முடிந்து
சோதனை அடிப்படையில் மின்சார என்ஜின் பொருத்திய ரெயில்கள் இயக்கப்பட்டு
வருகின்றன.இந்நிலையில், ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் ரெயில்களை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயக்க ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வருகிற 29–ந்தேதி முதல் அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்கள் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்பட உள்ளன.
இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஓம் பிரகாஷ் நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுரை-தூத்துக்குடி-நெல்லை ரெயில் பாதையில் மின்சார ரெயில்கள் இயக்குவதற்கு பாதுகாப்பு கமிஷனர் ஒப்புதல் கொடுத்துள்ளார். எனவே, வருகிற 29–ந்தேதி முதல் அந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்.
அதன்படி, நெல்லை-சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12631/ 12632), திருவனந்தபுரம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 16723/16724), கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 12633/12634), தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 12693/12694), திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வ.எண். 22627/22628), குருவாயூர்-தூத்துக்குடி சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 16127/16128) ஆகிய ரெயில்கள் வருகிற 29–ந்தேதி முதல் இரு மார்க்கங்களிலும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்.
அதேபோல, நெல்லை, தூத்துக்குடி, மதுரை ரெயில் பாதையில் இயக்கப்படும் 10 வாராந்திர மற்றும் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்
தாராபுரம், : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பாலப்பம்பட்டியைச் சேர்ந்தவன் வடிவேல் (28). கடந்த சில ஆண்டுகளாக தாராபுரத்தில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தான்.
அப்போது இவனுக்கும் தாராபுரம் உடுமலைரோடு குமரன்நகரைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மனைவி கவிதா (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்த வெள்ளியங்கிரி கவிதாவை விட்டு பிரிந்து விட்டார். பிறகு வடிவேல் கவிதாவோடு தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளான்.
அப்போது அதே பகுதியில் அருகே குடியிருந்த செல்வராஜ் என்பவரது மனைவி ரேமாவுடன் (28) வடிவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13.6.2014 அன்று இரவு ரேமா வீட்டில் தனியாக இருந்தபோது, வடிவேல் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளான். இதற்கு அவனது கள்ளக்காதலி கவிதாவும் உடந்தையாக இருந்துள்ளாள். ரேமா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வடிவேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேமாவை குத்திவிட்டு கவிதாவோடு தலைமறைவாகி விட்டான். இதில் அதிர்ஷ்ட வசமாக ரேமா உயிர் பிழைத்துக் கொண்டாள்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார் இருவரையும் கைது செய்தனர். நேற்று வழக்கை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்ரீராமஜெயம் விசாரித்து வடிவேலுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும். கவிதாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அப்போது இவனுக்கும் தாராபுரம் உடுமலைரோடு குமரன்நகரைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மனைவி கவிதா (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்த வெள்ளியங்கிரி கவிதாவை விட்டு பிரிந்து விட்டார். பிறகு வடிவேல் கவிதாவோடு தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளான்.
அப்போது அதே பகுதியில் அருகே குடியிருந்த செல்வராஜ் என்பவரது மனைவி ரேமாவுடன் (28) வடிவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13.6.2014 அன்று இரவு ரேமா வீட்டில் தனியாக இருந்தபோது, வடிவேல் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளான். இதற்கு அவனது கள்ளக்காதலி கவிதாவும் உடந்தையாக இருந்துள்ளாள். ரேமா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வடிவேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேமாவை குத்திவிட்டு கவிதாவோடு தலைமறைவாகி விட்டான். இதில் அதிர்ஷ்ட வசமாக ரேமா உயிர் பிழைத்துக் கொண்டாள்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார் இருவரையும் கைது செய்தனர். நேற்று வழக்கை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்ரீராமஜெயம் விசாரித்து வடிவேலுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும். கவிதாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
வெள்ளகோவிலில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்தில் வாரத்தில் ஒரு நாள் (புதன்கிழமை) மட்டும் தேங்காய் பருப்பு வியாபாரம் நடைபெறும். வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் தேங்காய் பருப்பை விற்பனை கூட அதிகாரிகள் டெண்டர் மூலம் விற்பனை செய்து விவசாயிகளுக்கு பணத்தை கொடுப்பார்கள்.
விவசாயிகள் கொண்டு வரும் தேங்காய் பருப்பை வாகனங்களில் இருந்து இறக்கவும், ஏற்றவும் தேங்காய் பருப்பு சுமைதூக்குபவர்கள், இறக்கு கூலியாக 100 கிலோ மூட்டை ஒன்றுக்கு விவசாயிகளிடம் இருந்து ரூ.6–ம், எடைக்கூலியாக ரூ.9.50 காசும், ஏற்றுவதற்கு கூலியாக ரூ.6.50 காசும் வியாபாரிகளிடம் இருந்து வாங்கி வந்தனர்.
இந்த கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என தேங்காய் பருப்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு வியாபாரிகள் கூலி உயர்வு தர முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறினர். இதனால் கடந்த 2 மாதங்களாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். வேலை நிறுத்தத்தால் தேங்காய் பருப்பு வியாபாரம் நடைபெறவில்லை. இது தொடர்பாக 3 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் கூலி உயர்வு பிரச்சினையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மீண்டும் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ., ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் முருகானந்தன், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தேங்காய் பருப்பு சுமைதூக்குவோர் தொழிற்சங்க தலைவர் வீரக்குமார்(அ.தி.மு.க), தி.மு.க. தொழிற்சங்க தலைவர் தெண்டபாணி, தேங்காய் பருப்பு வியாபாரிகள் சங்க தலைவர் சாமிமுத்து, அ.தி.மு.க. நகர செயலாளர் டீலக்ஸ் மணி, நிலவள வங்கி துணைத்தலைவர் ராஜலிங்கம், அ.தி.மு.க. பிரதிநிதி முருகேசன், சேகர், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இறக்கு கூலியாக 100 கிலோ மூட்டைக்கு ரூ.8ம், எடைக்கூலியாக ரூ.10–ம், ஏற்றுக்கூலியாக ரூ.10–ம் கொடுப்பது என முடிவானது. இந்த கூலி உயர்வு வருகிற 1–ந்தேதி முதல் 2016 வரை அமலில் இருக்கும்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் 1–ந் தேதியில் இருந்து வேலைக்கு திரும்புகிறார்கள். எனவே விவசாயிகள் தங்களது விளை பொருளான தேங்காய் பருப்பை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வரலாம் என்று என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அமாவாசை தினத்தன்று இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் அங்குள்ள விநாயகர் கோவிலில் ஆனைமலையை அடுத்த ஓடையகுளத்தை சேர்ந்த மந்திரம்மாள் (வயது 70) என்பவர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தார். அப்போது பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மந்திரம்மாள் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதே போல் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பஸ் ஏற சென்ற பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரத்தை சேர்ந்த அன்னபூரணி (50) என்பவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது. இதைதொடர்ந்து மந்திரம்மாள், அன்னபூரணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பஸ் ஏற சென்ற பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரத்தை சேர்ந்த அன்னபூரணி (50) என்பவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது. இதைதொடர்ந்து மந்திரம்மாள், அன்னபூரணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அங்கு அவினாசி போலீசாரும் குழந்தைகள் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் மற்றும் மரியாலயா அமைப்பின் நிர்வாகி கரோலின் ஆகியோர் வந்து குழந்தையை அவர்களிடமிருந்து பெற்று உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தை, குழந்தைகள் நலப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தை 1½ கிலோ எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக டாக்டர்கள் கூறினார்கள். தற்போது குழந்தைகள் நல அமைப்பின் பராமரிப்பில் உள்ள அந்த குழந்தை சிகிச்சை முடிந்து 1 வாரம் கழித்து மாவட்ட சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு தொட்டில் குழந்தையாக தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
பொங்கலூர் அருகே உள்ள குருநாதம்பாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது34). இவருக்கு சொந்தமான நல்லாந்தோட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மின்சார வயரை 2 நாட்களுக்கு முன்பு இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து திருநாவுக்கரசு அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து வயர் திருடிய மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வயர் திருட்டில் ஈடுபட்ட சோமனூரை சேர்ந்த பழனிசாமி(வயது48), பொங்கலூரை அடுத்துள்ள வலையபாளையத்தை சேர்ந்த பத்துகாசான் என்கிற வெள்ளியங்கிரி ஆகிய 2 பேரை து செய்தனர். மேலும் இருவரிடம் இருந்தும் திருடப்பட்ட வயரையும் பறிமுதல் செய்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து வயர் திருடிய மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வயர் திருட்டில் ஈடுபட்ட சோமனூரை சேர்ந்த பழனிசாமி(வயது48), பொங்கலூரை அடுத்துள்ள வலையபாளையத்தை சேர்ந்த பத்துகாசான் என்கிற வெள்ளியங்கிரி ஆகிய 2 பேரை து செய்தனர். மேலும் இருவரிடம் இருந்தும் திருடப்பட்ட வயரையும் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...




