Tuesday, October 05, 2021

 கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!!


 பொதுநல வழக்கறிஞர் திரு. வேங்கை ராஜா அவர்கள் மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.


பின்னர் மாண்புமிகு. நீதிபதி அவர்கள் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்து வழக்கறிஞருடன் பொதுநலவழக்குகள் குறித்தும் பொதுநல வழக்குகள் தொடுப்பவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்த என்ன என்ன பாதுகாப்பு உள்ளது என்பதனை வலியுறுத்தியும் ஆலோசனை நடத்தப்பட்டது. பிறகு இயற்கை வளங்களைக் காப்பது குறித்தும் இயற்கை வளங்களை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மூலிகைகளைப் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக புரியும் வண்ணம் எடுத்துரைப்பது பற்றியும், பொதுமக்களின் பாதுகாப்பு ஆலோசனைகள் நடத்தப்பட்டது.


மேலும்  பொது நலன் பாதுகாப்பு பொதுமக்களின் பாதுகாப்பு இயற்கை வளங்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் விளக்கங்கள் மாண்புமிகு நீதிபதி அவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது


Thursday, September 30, 2021

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு உற்சாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர்  வைகோ தஞ்சாவூர் செல்வதற்காக திருச்சி வருகை தந்தார்.


ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் கழகங்களின் சார்பில், திருச்சி - மதுரைசாலை சாரநாதன் பொறியியல் கல்லூரி  அருகில் வரவேற்பு  கொடுக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு, நம் தலைவரின் திருமுகம் காண ஏராளமானோர் குவிந்தனர்


 இந்நிகழ்வில்,திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக, வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன்,திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர்மணவை தமிழ்மாணிக்கம்,திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர்,மாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர்   ரொஹையா  ஷேக் முகமது தலைவரின் நேர்முக உதவியாளர் அடைக்கலம் , மைக்கேல் ராஜ் அரசியல் ஆய்வு உறுப்பினர் பாலுச்சாமி தெற்கு மாவட்ட அவைத்தலைவர்


மற்றும்திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட ,ஒன்றிய,நகர நிர்வாகிகள்,திருச்சி மாநகர பகுதிக்கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் - தொண்டர்கள்  அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

 பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது



பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் 29 ம் தேதி நேற்று மாலை கொண்டாடப்பட்டது. 

இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது 


இதில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். 


இதில் பொதுநல வழக்கறிஞர்  வேங்கை ராஜாவிற்கு சால்வை அணிவித்தும் மலர் மாலை அணிவித்தும் மகிழ்ச்சியுடன் நண்பர்கள் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் 


தனது பிறந்தநாளுக்கு நேரிலும் தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார் இந்த பிறந்தநாள் விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது எனவும் கூறினார்

Monday, September 27, 2021


 திருச்சி பெட்டவாய்த்தலை செல்லும் வழியே உள்ளே தனியார் திருமண மண்டபத்தில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி சமுதாய வளைகாப்பு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் தலைமையில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கோகிலா கோபாலன் அவர்கள் ஏற்பாட்டில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில்  அந்தநல்லூர் ஒன்றிய குழுத்தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் கூறுகையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி அனைவருக்கும் வளைகாப்பு  ஜாதி மதம் பேதமின்றி அனைத்து சமுதாய கர்ப்பிணி பெண்களுக்கும் அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது மேலும் கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்



 மாமிசங்களை அதிக அளவு உட்கொள்ளக்கூடாது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அரசு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளையும் எப்பொழுது தங்களுக்கு தேவைப்பட்டாலும் உடனடியாக செய்து தரப்படும் என்று தெரிவித்தார் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உதவிகளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அணுகி பயன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து பெண்களுக்கும் சுகப்பிரசவம் பிரசவிக்க வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று திருமண மண்டபம் கர்ப்பிணி பெண்களுக்கு என்று கேட்டவுடன் இலவசமாக அனுமதி அளித்த திருமண மண்ட உரிமையாளருக்கும் நன்றி தெரிவித்தார்

Wednesday, September 15, 2021

 பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர்டி. குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இதில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்பி.சந்திரசேகரன் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சின்னதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சுருளி என்கிற நீலகண்டன், மதுரை பாண்டியன், மணிகண்டம் ஒன்றிய நிர்வாகிகள் ஜோதி பாண்டியன் ,மாயி பாலு ,வினோத் மண்ணச்சநல்லூர் ஒன்றியசெயலாளர் பாட்ஷா கணேசன், மாரியப்பன், ஈச்சம்பட்டி போஜன், மண்ணச்சநல்லூர் பழனியாண்டி,ஜோசப், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thursday, September 09, 2021

On Thursday, September 09, 2021 by Tamilnewstv in    

 இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்


பெண் காவலர் சபியா படுகொலையை கண்டித்து திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது பாருக், தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ரஸ்தா செல்வம், முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் குடந்தை ரஹ்மத்துல்லாஹ், ஜமயத்துல் அஹ்லில் குராண் வல்ஹாதிஸ் (JAQH) மாவட்ட தலைவர் எம்.பி.முஹம்மது,  ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் கண்டன உரையில் டெல்லியில் நடைபெற்ற பெண் காவலர் சபியாவின் படுகொலைக்கு நீதி வேண்டும் கற்பழிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட்டு மரண தண்டனை விதிக்க வேண்டும் இந்த வழக்கை உரிய முறையில விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிகையை வழியுருத்தினர் 

மேலும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை பத்திரிகையாளரை சந்தித்தது உண்டா பாஜக ஒன்றிய அரசு பதவியேற்றதில் இருந்து இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாகிவிட்டது இந்தியவின் சுதந்திர போரட்டத்திற்க்கு முக்கிய பங்கு வகித்தது முஸ்லீம்கள் என்பதை மறந்துவிட்டார்கள் இந்திய தாய்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றால் பாஜக ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்பினால் தான் முடியும்  என கண்ட ஆர்பட்டத்தில் பேசினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்.பகுதி செயலாளர்.

 ரஃபயுதீன், கமால், நாசர், பாஷா, மகபூப் பாஷா, முகமது ஜாகீர், ராஜாமுகமது, இஸ்லாமிய அழைப்பாளர். ஷாகுல் ஹமீது. உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில்  மாவட்ட செயலாளர் கலீலுர் ரஹ்மான் நன்றி கூறினார்

Wednesday, September 08, 2021

 தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் 


தமிழ்நாடு அரசுத் துறையின் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் மொ.சிராஜூதீன், தலைமையில் நடைபெற்றது


1/01/2020 ஜனவரி முதல் வழங்க வேண்டிய 11% அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கியவாறு 1/7/2021 முதல் வழங்குதல் 

2015 நவம்பர் முதல்நாளதுவரை வழங்க வேண்டியபஞ்சப்படி நிலுவையை போக்குவரத்து ஓய்வுதியர்க்கு தாமதமின்றி வழங்க வேண்டும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை போக்குவரத்து ஓய்வூதியர்க்கு அமல் படுத்த வேண்டும் மாநில அரசு ஓய்வூதியர் மின்வாரிய ஓய்வூதியர்க்கு மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்படும் செலவுத் தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனம் வழங்குவதையும் மருத்துவ காப்பீட்டு திட்டதில் உள்ள இடர்பாடுகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் செந்தமிழ்செல்வன், சண்முகம், கிருஷ்ணன், பஷீர், டெரன்ஸ், உள்ளிட்டோர் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்

Tuesday, September 07, 2021

 திருச்சி இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி கரூர் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் அந்தநல்லூர் திருச்சி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அந்தநல்லூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குழுமணி திருச்சிராப்பள்ளி மாவட்டம் நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் கோவிட் நோய்த்தடுப்பு மற்றும் 75வது சுதந்திர ஆண்டு விழா கொண்டாட்டம் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது


நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஒன்றிய குழுத்தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் துரைராஜ் கள விளம்பர அலுவலர் இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் திருச்சிராப்பள்ளி தேவி பத்மநாபன் ஆதிசிவன் ஊராட்சி மன்ற தலைவர் முத்தரசநல்லூர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் கூறுகையில் சத்துணவு பெற்று வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் சிப்ஸ்  போன்றவைகள் சத்துணவில் கொடுக்கப்பட்டால் விவசாயிகளின் பிரச்சினை இன்று இரவு குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்தது போல் இருக்கும் என்று தெரிவித்த முதல்வரிடம் கூறவேண்டும் தெரிவித்தார்


ஒன்றியக் குழுத் தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில் தமிழக முதலமைச்சர் சத்துணவு பெரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் அவசியம் என்று முதல்வர் அவர்கள் தமிழகத்தில் பதவி ஏற்ற பிறகு குழந்தைகளுக்கு சத்துணவு வாழைப்பழம் அவசியம் என்று தெரிவித்துள்ளார் என்று கூறினார்


இந்நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் கள விளம்பர உதவியாளர் இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் திருச்சிராப்பள்ளி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் தேவி பத்மநாபன் கள விளம்பர அலுவலர் இந்திய அரசு மக்கள் தொடர்புகளை அலுவலகம் திருச்சிராப்பள்ளி நோக்க வரை ஆற்றினார் துரைராஜ் ஒன்றிய குழுத்தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தலைமை வகித்தார் ஆதிசிவன் ஊராட்சி மன்ற தலைவர் முத்தரசநல்லூர் ஊராட்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முன்னிலை வகித்தார் 


மருத்துவர் சுப்பிரமணி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லியோ பீமாராவ் வட்டார மருத்துவ அலுவலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குழுமணி திருமதி சகுந்தலா வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருமதி புவனேஸ்வரி மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சீனிவாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருமதி கோகிலா குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், அந்தநல்லூர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் சுரேஷ் கண்ணன் ஊராட்சி செயலாளர் முத்தரசன் ஊராட்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நன்றி உரையாற்றினார்

 திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர்  கண்டன ஆர்ப்பாட்டம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் 
டெல்லியில் காவலர் சபியா கொல்லப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில்
திருச்சி மாவட்ட தலைவர் குலாம்ரசூல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.


 கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு டெல்லியில் பெண் காவலர் சபியா சமூக விரோதிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரின் உடல் உறுப்புகளை வெட்டியெறிந்த கயவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக கோரியும் 
சபியா கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்ட கலந்து கொண்டனர்.


சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பள்ளி மாணவி தவ்பீக் சுல்தானா பற்றி கேட்டதற்கு பேட்டியளித்த
பேச்சாளர் ஜமாத்உஸ்மாயின்  அவர்கள் என்னவென்று தெரியாமலே திகைத்து நின்றார்அருகில் இருந்த மாவட்டத் தலைவர் குலாம் முஹம்மத் கூறுகையில் எத்தனையோ முறைகள் நாங்கள் கேட்டோம் இன்றும் தவ்ஹீத் சுல்தானா அதற்கு முறையாக நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தார் தமிழகத்தில் திருச்சியில் சிறுமியை தவ்ஹீத் சுல்தானா கொலை வழக்கு தமிழகத்தையே திரும்பிப்பார்க்க செய்தது இன்றும் யாராலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது


பேட்டி : 
ஜமாத்உஸ்மாயின்
பேச்சாளர்