Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
சென்னை, செப்.13- 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தே.மு.தி.க. எனும் அரசியல் இயக்கம் தொடங்கி, 9 ஆண்டுகள் முடிவுற்று செப்டம்பர் 14-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) தே.மு.தி.க. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என்னுடைய எண்ணங்களை செயல் வடிவமாக்கிய நீங்கள் அனைவரும் இந்த இனிய நன்நாளை மிக்க மகிழ்ச்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு, தனித்தன்மையோடு வளர்ந்து வருகிறது.

சாதி, மதம், இனம், மொழி போன்ற பேதங்களை பயன்படுத்தாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக பாடுபட்டு வரும் இயக்கமாகும். செப்டம்பர் 14 (நாளை) மற்றும் 15 ஆகிய இருதினங்கள் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் 10-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments: