Saturday, December 13, 2014

On Saturday, December 13, 2014 by Unknown in ,    
 Displaying 42.jpgDisplaying 43.jpgDisplaying 44.jpgDisplaying 46.jpg
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் ,கல்லூரிகள் மட்டும் அல்லாது மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிற இடமாக ரேஸ்கோர்ஸ் மைதானம் விளங்குகிறது .ஆனால் இங்கு விளையாட்டில் பங்கேற்க வரும் வீரர் மற்றும் வீராங்கனை களுக்கு அடிப்படை வசதிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது .குடிநீரை கூட வெளியில் விலைக்கு வாங்கி சமாளித்துக் கொண்டாலும் கழிப்பறையின் நிலையை காண சகிக்கவில்லை .கழிப்பறைக்குள் கால் வைக்க முடியாதபடி கழிவுகள் பரவிக் கிடக்கிறது .கழிப்பறையை பயன்படுத்தும் ஆண்களுக்கு உபயோகப்படுத்த ஒரு சொட்டு நீர் கூட இல்லாததால் பெரும்பாலான ஆண்கள் மைதானத்தின் கேலரி பின்புறத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர் .ஆண்கள் நிலை இப்படி என்றால் பெண்கள் நிலையோ இன்னும் பரிதாபமாக உள்ளது .ஆனால் இதனை சரி செய்யாமல் இங்கு நடைபெறுகிற நிகழ்சிகளில் எத்தனையோ முறை கலந்து கொண்டுள்ள அமைச்சர்களும் ,நாடாளுமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற உறுப்பினர்கள் பல கோடி ரூபாய் விளையாட்டு துறைக்கு ஒதுக்கி உள்ளதாக புராணம் பாடுவதை ஏற்க முடியுமா ?

மேலும் இந்த அளவிற்கு மோசமாக உள்ள கழிப்பறையை உயர் பதவியில் உள்ள இவர்கள் பயன்படுத்திட தயாரா ?இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் இதே மைதானத்தின் மெல்லோட்ட சங்கத்தில் நீண்ட நெடுங்கால உறுப்பினர்களாக அமைச்சர் செல்லூர் ராஜு,எம் பி கோபாலகிருஷ்ணன் போன்றோர் எல்லாம் இருந்தும் அடிப்படை பிரச்சனையான கழிப்பறை பிரச்சனைக்கு எந்த வித தீர்வும் ஏற்படவில்லை என்பதே விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் ஏக்கம் ஆகும்

0 comments: