Wednesday, January 28, 2015

On Wednesday, January 28, 2015 by Unknown in ,    
ரூ.1¼ கோடி மோசடி புகார்: ஸ்ரீரங்கம் பா.ஜ.க. வேட்பாளர் சுப்பிரமணியத்துக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?திருச்சி ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தல் வருகிற 13–ந்தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சுப்பிரமணியன் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு திருச்சி மாவட்டத்தில் 3 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளது. இங்கு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு நவீன கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க சென்னை பிரிசிஷன் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இக்கல்லூரி ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி மேற்கண்ட நிறுவனம் மாணவ–மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்தது. பயிற்சி முடித்தபின் ஒப்பந்தத்தின்படி சுப்பிரமணியன் அந்நிறுவனத்துக்கு பயிற்சி கட்டணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த நிறுவனம் பா.ஜ.க. வேட்பாளர் சுப்பிரமணியம், கல்லூரி முதல்வர்கள் கண்ணன், சீத்தாராமன், கிறிஸ்துராஜ் ஆகியோர் மீது திருச்சி மாநகர் குற்றப்பிரிவில் புகார் செய்தது. போலீசார் இவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு சுப்பிரமணியம் மற்றும் கல்லூரி முதல்வர்கள் 3 பேர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் முன் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவித்து பிரிசிஷன் கம்ப்யூட்டர் நிறுவன பொதுமேலாளர் பாஸ்கர் என்பவரும் மனு செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் சுப்பிரமணியத்துக்கு சொந்தமான 3 கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி கொடுத்தோம். அதன்படி எங்களுக்கு கொடுக்க வேண்டிய 1 கோடியே 13 லட்சத்தை தராமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று மாலை 4 மணிக்கு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது. அதன்பிறகே பா.ஜ.க. வேட்பாளருக்கு முன் ஜாமீன் கிடைக்குமா என்பது தெரிய வரும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சுப்பிரமணியன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில் இந்த வழக்கு இவருக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என கருதப்படுகிறது.

0 comments: