Sunday, February 01, 2015

On Sunday, February 01, 2015 by Unknown in ,    
தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை: ஐ.ஜி. வலியுறுத்தல்
கேரளாவில் தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிரடிப்படை ஐ.ஜி. கூறினார்.
தமிழகம் மற்றும் கேரள எல்லையில் ஊடுருவியுள்ள மாவோயிஸ்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் கேரள மாநிலத்தின் அட்டப்பாடி வனத்துறை அலுவலகத்திற்கு அவர்கள் தீ வைத்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் மாவோயிஸ்டுகள் கேரளா, தமிழகத்தில் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் கேரளாவின் கண்ணனூர் கல்குவாரி மற்றும் உணவு விடுதிகளில் தாக்குதல் நடந்தது. இதனால் இரு மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் (ஜனவரி) போலீசார் குருக்கி மலை, பங்கிதமால் மலைப்பகுதிகளை கண்காணித்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் சிலர் நடமாடுவது கண்காணிப்பு காமிராவில் பதிவானது. எனவே தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் தடுப்பது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. சங்கர் ஜீவால் தலைமை தாங்கினார்.
தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி.க்கள் ஆனந்த்குமார், சோமானி, அமீத்சான், அறிவுச்செல்வம், போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயேந்திர பிதாரி, மகேஸ்வரன், சரவணன், மகேஷ், அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஐ.ஜி. சங்கர் ஜீவால், கேரளாவில் தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்கவும், அவர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்

0 comments: