Friday, August 28, 2015

On Friday, August 28, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டம் தெற்கு வெங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாரமன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 இப்பகுதியில் வேளாண்மை துறையினருடன் பொதுமக்கள் இணைந்து முனைப்புடன் பார்த்தீனியச் செடிகளை ஒருங்கிணைந்த களை நிர்வாகத்தை கடைபிடித்து அழிக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
     விருதுநகர் மாவட்டத்தில், விளைநிலங்கள், தோட்டங்கள், பயிரிடப்படாத நிலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் பார்த்தீனியச் செடிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை வேரோடு அகற்றுவதற்கு வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செடிகளை அகற்றும் போது தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதவாறு கைகளில் துணிகள் அல்லது கையுறைகள் அணிந்து அகற்ற வேண்டும் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.    விளைநிலங்களில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். உளுந்தில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த குளோபிரிட் 5 மில்லி அளவில் விதையில் போட்டு நேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும்.  இதே மருந்தை வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதற்கு 100 மில்லி முதல் 125 மில்லி வரையில் தெளிக்க வேண்டும். அதேபோல், வயல் வரப்புகளில் களைகள் பரவாமல் தடுக்க களைக் கொல்லி தெளிக்கவும் விவசாயிகளை அவர் கேட்டுக் கொண்டார்.ஆய்வின்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வம்,  வேளாண்மைத் துறை துணை இயக்குநர் ஜோசப் மரியரெக்ஸ், துணை வேளாண்மை அலுவலர் குருபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: