Showing posts with label திருப்பூர். Show all posts
Showing posts with label திருப்பூர். Show all posts

Friday, September 30, 2016

On Friday, September 30, 2016 by Unknown in    

திருப்பூர், பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, ‘ பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் வருவாய் கிராம அளவிலான பயிர் அறுவடை அடிப்படையில் இழப்பீடு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் கட்டாயம் இந்த திட்டத்தில் இணைக்கப்படுவர். கடன் பெறாதவர்கள், கரீப் பருவத்தில் காப்பீட்டுத்தொகையில் 2 சதவீதமும், ரபி பருவத்தில் 1.5 சதவீதமும் செலுத்தி பயிர்க்காப்பீடு செய்யலாம். வர்த்தக மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீட்டு தொகையில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். மீதமுள்ள காப்பீட்டு கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்தும். இழப்பீட்டு தொகை முழுவதும் காப்பீட்டு நிறுவனமே வழங்கும்.இந்த காப்பீட்டுத்திட்டத்தில் பருவம் தொடங்கும் முன் மழை பொய்த்தாலும், விதைப்புக்கு பிறகு மழை பொய்த்து போனாலும், காப்பீடு தொகையில் 25 சதவீதம் வரை இழப்பீடு பெறலாம். அறுவடைக்கு பின், தானியங்களை உலர வைக்க வேண்டிய பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு கிடைக்கும்’ என்றார்.கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குமார், வேளாண்மை இணை இயக்குனர் ரங்கநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அல்டாப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

On Friday, September 30, 2016 by Unknown in    

உடுமலை,உடுமலை அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–பூட்டு உடைப்பு

உடுமலையை அடுத்துள்ள கண்டியகவுண்டன்புதூர் பொன்மயில் நகரைச்சேர்ந்தவர் அசோக் (வயது40) விவசாயி. இவர் கடந்த 26–ந்தேதி குடும்பத்துடன் ஆந்திரமாநிலம் மந்த்ராலயாவில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் குடியிருக்கும் சிதம்பரசாமி என்பவர் அசோக் வீட்டின் வழியாக நேற்றுமுன்தினம் வந்தபோது அசோக்கின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சிதம்பரசாமி உடுமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.இதையொட்டி உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்ட தகவல் அசோக்கிற்கு தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து அவர் ஆந்திராவில் இருந்து புறப்பட்டு நேற்று உடுமலைக்கு வந்து சேர்ந்தார்.13 நகைகள் திருட்டுஅவர் வந்து பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறந்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அசோக் உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை உடுமலை போலீசார் தேடி வருகின்றனர்

On Friday, September 30, 2016 by Unknown in    

ஊத்துக்குளி,பனியன் கழிவுகளில் இருந்து பஞ்சு தயாரிக்கும் தொழில் செய்ய வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் வாலிபர் தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டார்.இந்த பரிதாப சம்பவம் பற்றி கூறப்படுதாவது:–வங்கியில் கடன்

திருப்பூர் பூலுவப்பட்டி தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துராமன் மகன் ராம்கணேஷ் (வயது27). இவர் ஊத்துக்குளி அருகே உள்ள பள்ளகவுண்டம்பாளையத்தில் பனியன் கழிவுகளில் இருந்து பஞ்சு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் 9 பேர் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.ராம்கணேஷ் திருப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.28 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இன்னும் ரூ.7 லட்சம் கடன் கட்ட வேண்டி இருந்தது. கடந்த 4 மாதங்களாக வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை ராம்கணேஷ் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் வங்கியில் இருந்து அதிகாரிகள் வந்து ஏன் கடன் தவணையை கட்டவில்லை என்று ராம்கணேசிடம் விசாரித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை

இதனால் மனம் உடைந்த காணப்பட்ட ராம்கணேஷ் நேற்று பள்ளகவுண்டம்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் தனது காலில் மின்சார வயர்களை சுற்றிக்கொண்டு மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ராம்கணேசின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

On Friday, September 30, 2016 by Unknown in    

திருப்பூர், பருத்தி பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதிராணியை சந்தித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் மனு கொடுத்தார்.கலந்தாய்வு கூட்டம்

இந்தியாவில் பருத்தி பஞ்சு விலை சீராக்கும் வகையில் மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதிராணி தலைமையில் நேற்று டெல்லியில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், பொதுச்செயலாளர் விஜயகுமார், நிப்ட்–டீ கல்லூரி தலைவர் முருகானந்தம், நூற்பாலை அதிபர்கள் சங்கமான சைமா, டாஸ்மா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதுபோல் ஆந்திரா, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த நூற்பாலை அதிபர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பருத்தி பஞ்சு விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மந்திரியிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக கலந்தாய்வு செய்யப்பட்டது.பஞ்சு விலை

கூட்டம் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறும்போது, ‘வரும் காலங்களில் பருத்தி பஞ்சு விலை சீராக இருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஜவுளித்துறை மந்திரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பருத்தி பஞ்சு விலை உயர்வு காரணமாக அடிக்கடி நூல் விலை அதிகரித்து அதனால் பின்னலாடை துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவித்தோம்.பருத்தி பஞ்சு தட்டுப்பாடு காரணமாக நூல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு பின்னலாடை தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. நூல் விலையை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும். இந்திய நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தி பஞ்சு தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். உள்நாட்டு தேவைக்கு போக மீதம் உள்ள பருத்தியை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதுதொடர்பாக மத்திய மந்திரி தலைமையில் இந்திய பருத்தி ஏற்றுமதி கழகம், மத்திய செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு மீண்டும் நூற்பாலை அதிபர்களுடன் கூட்டம் நடத்தி தகுந்த முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் என்றார்.மேலும் பருத்தி பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

On Friday, September 30, 2016 by Unknown in    

🔴🔵 *முதல்வர் குறித்து தேவையற்ற வதந்தியை பரப்ப வேண்டாம்!- எச்சரிக்கை பதிவு!!*

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து யாரும் தேவையற்ற வதந்தியை பரப்ப வேண்டாம். இப்படி... அப்படி... தகவல் வருகிறதே என்று யாரும் குழுவில் பதிந்து விளக்கம் கேட்க வேண்டாம். இப்போது வரை முதல்வர் நலமுடன் உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தேவையற்ற வதந்தியை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காதீர். காவல்துறையும் கண்காணித்து வருகிறது. எல்லா செய்தியும் எப்படி பதிவு செய்யப்படுகிறதோ, அதைப்போல முதல்வர் குறித்து தகவல் வந்தால் உடனடியாக  பதிவு செய்யப்படும். எனவே உங்கள் ஒவ்வொரு பதிவிலும் கவனம் தேவை. 💥

On Friday, September 30, 2016 by Unknown in    

இந்து முன்னணியை தடைசெய் !

இன்றுதிருப்பூரில் ஆர்ப்பாட்டம் !

மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் சமூக அமைதிக்கும்,கடைகளுக்கு அச்சுறுத்தலாக கலவரத்தை ஏற்படுத்தும் இந்து முன்னணியை தடை செய்ய வலியுறுத்தி !

நாள் : 30.09.16 வெள்ளிக்கிழமை.
நேரம் : மாலை 3 மணி.
இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில்,திருப்பூர்.

On Friday, September 30, 2016 by Unknown in    

திருப்பூர் : -

திருப்பூரில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வில் போட்டியிடுவதற்காக சீட்டு வழங்காததால் முன்னாள் மாநகராட்சியின் திமுக எதிர் தலைவர் சுப்பிரமணி சுயேர்ச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு.

திருப்பூர் 32 வது வார்டை சேர்ந்தவர் செங்கப்பள்ளி சுப்பிரமணி இவர் 40 ஆண்டுகளாக திமுக வில் இருந்து வருகிறார்.கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகாவின் சார்பில் 32 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அதனை தொடர்ந்து மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகுத்தார்.இந்நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக திருப்பூர் மாவட்ட திமுக வில் விருப்பமனு அளித்து இருந்தார்.இந்நிலையில் நேற்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் செங்கப்பள்ளி சுப்பிரமணியத்தின் பெயர் இல்லாத நிலையில் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டகாகவும் கடந்த முறை தனக்கு சீட்டு வழங்கி 32 வது வார்டு பகுதியில் அநேக மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாகவும் தற்பொழுது திமுக வில் தனக்கு சீட்டு கொடுக்காமல் மற்ற ஒருவருக்கு சீட்டு வழங்கி உள்ளதால் தான் திமுக வின் சார்பில் போட்டியிடும் வேட்ப்பாளரை எதிர்த்து சுயெர்ச்சையாக போட்டியிடப்போவதாகவும் அதில் தான் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.

Thursday, September 29, 2016

On Thursday, September 29, 2016 by Unknown in    

பாரதீய ஜனதா பிரமுகர் கடைக்கு தீ வைப்பு சம்பவத்தால் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாலை மறியல் போராட்டம்திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோட்டில் உள்ள பாரதீய ஜனதா கட்சி பிரமுகரின் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதா அமைப்பாளர்கள், தொண்டர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. உடனடியாக அங்கு 50–க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அங்கு திடீரென பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு சில கடைகளும் அடைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் அங்கு திரண்ட பாரதீய ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த கோரியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காங்கேயம் கிராஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் உறுதி

மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களையும் எழுப்பினார்கள். அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் அறிவுறுத்தலின்படி அந்த பகுதியில் உள்ள கடைகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட ஆரம்பித்தது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

On Thursday, September 29, 2016 by Unknown in    

தாராபுரம்தாராபுரம் அருகே கோழிப்பண்ணையிலிருந்து வெளியேறும் கோழி இறகுகளால் 5 கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் கோழிப்பண்ணையை மூடக்கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோழிப்பண்ணை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கரைப்புதூரில் தனியாருக்கு சொந்தமான முட்டை கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளின் இறகுகள் காற்றில் பறந்து சென்று அருகே உள்ள விளை நிலங்களில் விழுந்து கிடப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆடு,மாடுகள் கோழி இறகுகளை சாப்பிட்டு விடுவதால் இறந்துபோகின்றன. சுகாதாரகேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் ஒன்று திரண்டு சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணையை மூடக்கோரி கோழிப்பண்ணை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கரைப்புதூர் கிராம மக்கள் கூறியதாவது:–5 கிராம மக்கள் அவதி

எங்கள் கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக தனியார் கோழிப்பண்ணைகள் சில அமைக்கப்பட்டன. அப்போது கிராம மக்கள் இதற்கு எதிர்ப்புதெரிவிக்கவில்லை. காரணம் கறிக்கோழிக்காக அமைக்கப்படும் பண்ணை என்று நினைத்து விட்டோம். ஆனால் இந்த கோழிப்பண்ணைகளில் முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒரு பண்ணையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இந்த பகுதியில் இதுபோல் 4 கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழிகளிலிருந்து விழும் இளம் இறகுகள் காற்றில் பறந்து வருகிறது. அவ்வாறு பறந்து வரும் இறகுகள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கரைப்புதூர், சிறுகிணறு, மணல்திட்டுப்பாளையம், கொத்தனூர், எஸ்.ஆலாம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் விழுந்து விடுகிறது. இதனால் காடுமுழுவதும் கோழி இறகுகளாக பரவிக்கிடக்கிறது. விவசாயம் செய்ய முடிவதில்லை. மேய்ச்சலின் போது ஆடு, மாடுகள் தெரியாமல் இறகுகளையும் சேர்த்து சாப்பிட்டு விடுகின்றன. இதனால் அவைகள் இறந்துபோகின்றன. கோழி இறகுகளை சாப்பிட்டு இதுவரை 2 மாடுகளும், 4 ஆடுகளும் இறந்து உள்ளன. காற்று மாசடைந்து விட்டதால், இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளது, நீர் நிலைகள் மாசடைந்து விட்டதால் தொற்று நோய்கள் பரவி வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் குழுந்தைகள் அபூர்வா (வயது 12) மற்றும் அபர்ணா (4) ஆகியோருக்கு மர்ம காய்ச்சல் வந்து கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள கோழிப்பண்ணைகளால் 5–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த கோழிப்பண்ணையை உடனே மூடவேண்டும் என்று கோழிப்பண்ணைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

On Thursday, September 29, 2016 by Unknown in    

திருப்பூர் அருகே ஊத்துக்குளி டவுன் பகுதி சாலையோரத்தில் குளத்துப்பாளையம் பகுதியைச்சேரந்த மாடசாமி(49)என்பவர் மர்மமானமுறையில் இறந்துகிடந்தார்.இவரை ஊத்துக்குளி காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி விசாரித்துவருகின்றனர்.காவல் துறைவிசாரனையில் கடந்த14/7/2016தினம் அன்று ஊத்துக்குளி அரசுமருத்துவமனையில் ஆஸ்த்துமா நோய்க்கு சிகிச்சைபெற்றுவந்துள்ளார் அதன் பிறகு 21/7/16தினம் அன்று மருத்துவமனையில்லிருந்து எவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார் பின்னர் இன்று காலை அதே மருத்துவமனைக்குசென்று சிகிச்சைமேற்கொண்டுள்ளார் ஆனால் நோய் முற்றியதால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டதாக தகவல் தெரிகிறது பிணத்தை கைப்பற்றி திருப்பூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

On Thursday, September 29, 2016 by Unknown in    

திருப்பூர்திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் ஓட்டுப்பெட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சி தேர்தல்திருப்பூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 17 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 170 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2,295 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என்று 2,747 பதவிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 17–ந்தேதி மற்றும் 19–ந்தேதி ஆகிய 2 நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 26–ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.ஊரக பகுதியில் 1,636 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இதில் இரட்டை உறுப்பினர் கொண்ட 714 ஊராட்சி வார்டுகள் உள்ளன. ஊரகப்பகுதியை பொருத்தவரை ஒரு வாக்காளர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும். 714 ஊராட்சி வார்டுகளை சேர்ந்தவர்கள் மட்டும் 5 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.ஓட்டுப்பெட்டிகள்

இதனால் பழைய முறைப்படி, வாக்குச்சீட்டுகளும், அவற்றை போட இரும்பு பெட்டிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. சாதாரணமாக ஒரு வார்டில் 5 வேட்பாளர்கள் இருந்தால் கோத்ரெஜ் வகை பெட்டியில் 500 வாக்குச்சீட்டுகளும், டான்சி வகை நடுத்தர பெட்டியில் 1200 வாக்குச்சீட்டுகளும் போட முடியும். இதுவே டான்சி வகை சிறப்பு பெட்டியாக இருந்தால் 10 வேட்பாளர்கள் ஒரு வார்டில் போட்டியிட்டால் கூட ஒரு பெட்டியில் 1600 வாக்குச்சீட்டுகள் போட முடியும்.இதனால் வார்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே எந்த வகையான ஓட்டுப்பெட்டிகளை அந்த வார்டில் பயன்படுத்துவது என்று நிர்ணயிக்க முடியும். திருப்பூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பயன்படுத்த, 3,183 கோத்ரெஜ் வகை இரும்பு பெட்டிகளும், 2,168 டான்சி வகை நடுத்தர பெட்டிகளும், 1,900 டான்சி வகை சிறப்பு பெட்டிகளும் என்று 7,251 ஓட்டுப்பெட்டிகள் கையிருப்பில் உள்ளன.கூடுதல் பெட்டிகள்

கிராம பகுதிகளை பொருத்தவரை கட்சி பாகுபாடு இன்றி ஏராளமானோர் சுயேட்சையாக போட்டியிடுவார்கள். அதே நேரம் சில பகுதிகளில் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போட்டியின்றியும் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு வேளை பல்முனை போட்டி ஏற்பட்டு, அதிக வேட்பாளர் போட்டியிட்டால், ஓட்டுப்பெட்டிகள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், கூடுதல் பெட்டிகளை இருப்பு வைக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதற்காக, நெல்லை மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக 1,526 கோத்ரெஜ் வகை ஓட்டுப்பெட்டிகள் வந்தன.இதைத்தொடர்ந்து வேலூரில் இருந்து நேற்று 250 ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டன. இவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டபின்னர், எந்த வார்டுக்கு எந்த வகை பெட்டியை பயன்படுத்துவது என்று கணக்கிட்டு சம்பந்தப்பட்ட வார்டுக்கு தேவையான ஓட்டுப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.