Wednesday, September 17, 2014
திருப்பூர் மாநகராட்சி 45 -வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பானை ஆதரித்து இந்திய யூனியன் காயிதே மில்லத் முஸ்லிம் லீக் தலைவர் தாவூத் மியான்கான், மாநில அமைப்பு செயலாளர் அஜீம் பாஷா ஆகியோர் பெரியகடை வீதி, டூம்லைட் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணா தி.மு.க.நிர்வாகிகளுடன் திறந்த ஜீப்பில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகி சு.கேசவன், இந்திய யூனியன் காயிதே மில்லத் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஷாஜகான், காதர்பேட்டை ஜின்னாபாய், ஷாலீக்அலி, தலைமை கழக பேச்சாளர்கள் எம்.ஜி.குணசேகரன், டி.ஏ.பாலகிருஷ்ணா, சாரதா உள்ளிட்ட பாலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தில்ஓட்டு கேட்டு திருப்பூர் ,பாப்பான் நகர் , வ.உ.,சி..நகர் , மூர்த்தி நகர், கொடிக்கம்பம், பகுதிகளில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அ.தி.மு.க ,.வினர் நூற்றுகணக்கான இரு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று பிரச்சாரம் செய்தனர். நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர் ஜான், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், பட்டுலிங்கம்,ஒன்றிய தலைவர் சாமிநாதன்,பூளுவபட்டி பாலு, கவுன்சிலர்கள் முத்து, முருகசாமி, சபரி, கணேஷ், சத்யா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ கட்சி நிர்வாகிகள் ஹரிஹரசுதன், வேலுமணி, நீதிராஜன், மதுரபாரதி, ,பாரதி பிரியன், பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர்,செப்.17[
திருப்பூரில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 17 அமைச்சர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை யொட்டி பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் முதல் முறையாக சந்தித்த இடமான ரெயில் நிலையம் அருகில் உள்ள புஷ்பா தியேட்டர் அருகில் ரவுண்டாணாவில் அமைக்கபபட்டிடிருந்த அவரது திருவுருவ படத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன்,சமுக நலத்துறை அமைச்சர் ப.வளர்மதி,உயர்க்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்,உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி,கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, கைத்தறி மற்றும் துணி நூல்துரை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஏன்.சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், செய்தித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுசுழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம்,பிற்படுத்தப்பட்டோதிருப்பூரில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 17 அமைச்சர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாமன்ற உறுப்பினர்கள் உமா மகேஸ்வரி வேலுசாமி, சிணசாமி, சி.பி.வசந்தமணி, கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் நா.சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் ச
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனுக்கு ஆதரவாக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனநதன் தலைமையில் அ.தி.மு.க., வினர், பொதுமக்கள் இரு சக்கர வாகன பேரணியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடினர். திருப்பூர் பார்க் ரோடு எம்.ஜி. ஆர் சிலை அருகில் துவங்கிய இந்த பேரணியை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்து இரு சக்கர வாகனத்தில் சென்றார். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வேட்பாளர் எம்.கண்ணப்பன் உள்ளிட்டோர் பேரணியில் வாகனம் ஒட்டி சென்றனர். திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் வீதி, புதுமார்க்கட் வீதி, காமராஜர் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் இந்த பேரணி சென்றது. இதில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், தம்பி மனோகரன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், மார்க்கெ
தாம்பரம்,
தாம்பரத்தில் நகை பாலீஷ் போடுவது போல நடித்து 10 பவுன் தங்க நகைகளை அபேஸ் செய்த வடநாட்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை பாலீஷ்
சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் 4–வது தெருவைச் சேர்ந்தவர் பஷீரா (வயது 45). இவரது உறவினர் ரெஜினாபேகம் (48). 2 பேரும் கடப்பேரி எம்.இ.எஸ் சாலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த வடநாட்டு வாலிபர்கள் 2 பேர் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர்.
இருவரும் கொலுசுகளை கழற்றி பாலீஷ் போட கொடுத்தபோது அதை பாலீஷ் போட்டு புதிது போல மாற்றி கொடுத்தனர். உடனே அவர்கள் தங்க நகைகளுக்கும் பாலீஷ் போடுவோம் என கூறினர். இதைத் தொடர்ந்து இருவரும் 10 பவுன் தங்கச் சங்கிலிகளை பாலீஷ் போட கொடுத்தனர். நகைகளை வாங்கி பாலீஷ் போடுவது போல ஒரு சட்டியில் போட்டு நீண்ட நேரம் மஞ்சள்நிற பொடியை போட்டு கிளறினர்.
10 பவுன் நகை மோசடி
இதன் பின்னர் தங்கச்சங்கிலிகளை கண்இமைக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்ட அவர்கள், ‘சட்டியில் நகைகள் உள்ளன. சிறிது சூடுபடுத்தி அதன் பின்னர் குளிர்ந்தவுடன் எடுத்து விடுங்கள் நகை புதிதாக இருக்கும்’ என கூறி கூலியாக ரூ.600 வாங்கிக் கொண்டு வடநாட்டு ஆசாமிகள் கம்பி நீட்டி விட்டனர்.
அவர்கள் சென்றபின்னர் சட்டியை சூடுபடுத்தி குளிரவைத்து சட்டிக்குள் கைவிட்டு பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது தொடர்பாக தாம்பரம் போலீசில் புகார் செய்தனர். தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்,
மனைவி, மகளை கொன்ற வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதி, புழல் ஜெயிலில் மர்மமான இறந்து கிடந்தார்.
ஆயுள்தண்டனை கைதி
சென்னை அடையாறு பேங்கர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ் (வயது 50). இவர் கடந்த 2011–ம் ஆண்டில் தனது மனைவி, மகளை எரித்துக் கொலை செய்த வழக்கில் கடந்த 10.9.2014 இரட்டை ஆயுள்தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கைதிகளுடன் சேர்ந்து வரிசையில் நின்று இரவு உணவை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்றார்.
இரவு 7 மணிக்கு புழல் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடைபட்டது. சிறை போலீசார் அனைத்து கைதிகளையும் சிறையில் அடைப்பதற்காக பார்த்த போது அசோக்ராஜை மட்டும் காணவில்லை.
மர்மச்சாவு
உடனே சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜேந்திரன், சூப்பிரண்டு அன்பழகன், கூடுதல் சூப்பிரண்டு ருக்மணி மற்றும் சிறை போலீசார் அசோக்ராஜை தேடிப்பார்த்தனர். அவரை காணவில்லை. அப்போது சிறை அறையில் இருந்து ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே மர்மமான முறையில் அசோக்ராஜ் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து புழல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நல்ல ஆரோக்கியமாக இருந்த கைதி அசோக்ராஜ் திடீரென எப்படி இறந்தார்? சக கைதிகள் சேர்ந்து தண்ணீர் தொட்டியில் அமுக்கி அவரை கொலை செய்து விட்டார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் பாகிஸ்தான் உளவாளி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலுக்கு அனுப்புவது பற்றி இன்று நீதிபதி அறிவிப்பார்.
பாகிஸ்தான் உளவாளி
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான தமீம் அன்சாரியை தேசிய புலனாய்வு போலீசார் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கல்பாக்கம் அனுமின் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய இடங்களின் புகைப்படங்கள் அடங்கிய சி.டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தன்னைப்போல் உளவாளிகள் 3 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக அவர் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த வருடம் மண்ணடியில் ஜாகீர் உசேனை போலீசார் கைது செய்தனர். இவர் மீது உளவு பார்த்தல் மற்றும் கள்ள நோட்டு வழக்குகள் உள்ளன.
இவருக்கு உடந்தையாக இருந்ததாக முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
அருண் செல்வராசன்
இதையடுத்து விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மற்றொரு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண் செல்வராசனை தேசிய புலனாய்வு போலீசார் கடந்த 10–ந் தேதி கைது செய்து பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அருண் செல்வராசனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேசிய புலனாய்வு போலீசார் கடந்த 12–ந் தேதி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.
கோர்ட்டில் ஆஜர்
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண் செல்வராசன் கோர்ட்டில் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி மோனி, அருண் செல்வராசனிடம் போலீஸ் விசாரணைக்கு செல்ல விருப்பமா? என்று கேட்டார்.
அதற்கு அருண் செல்வராசன் எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார். எத்தனை நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்படும் என்பது குறித்து நாளை (அதாவது இன்று) தெரிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். இதையடுத்து அருண் செல்வராசனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து அரசு தரப்பு வக்கீல் பிள்ளை கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மனு கொடுக்கப்பட்டிருந்தது. எத்தனை நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்படும் என்பதை இன்று (புதன்கிழமை) நீதிபதி தெரிவிப்பார். மேலும் அருண் செல்வராசனிடம் விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. அதிகாரிகளும் மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
கருங்கல் அருகே மிடாலம் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் நிலவி வருவதால், கடற்கரையோர மக்கள், உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கடல் சீற்றம்
குமரி மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த ஓரிரு தினங்களாக கடல்சீற்றம் நிலவி வருகிறது. கடலில் ராட்சத அலைகள் தோன்றி, தடுப்பு சுவர் இல்லாத இடங்களிலும், தடுப்புசுவர் பழுதடைந்த பகுதிகளிலும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், கடற்கரையோர சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கருங்கல் அருகே மிடாலம், மேல்மிடா லம் பகுதியில் நேற்றும் கடல் சீற்றம் தொடர்ந்து நீடித்தது. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் 1986-ம் ஆண்டு தடுப்பு சுவர் கட்டப்பட்டது. தற்போது, இந்த தடுப்புச்சுவர் சேத மடைந்த நிலையில் காணப் படுகிறது.
உறவினர் வீடுகளில் தஞ்சம்
இந்த பகுதியில் கடந்த ஓரிரு தினங்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கடலரிப்பு ஏற்பட்டு பல வீடுகள் இடியும் நிலையில் உள்ளன.
இதனால், கடற்கரையோர பகுதி மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள் ளனர். எனவே, இந்த பகுதியில் கடலரிப்பை தடுக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிடாலம் பங்கு அருட் பணியாளர் ஜாண்ராபின்சன், ஊர்தலைவர் சிவில் ஆகியோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
கடல் சீற்றம்
குமரி மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த ஓரிரு தினங்களாக கடல்சீற்றம் நிலவி வருகிறது. கடலில் ராட்சத அலைகள் தோன்றி, தடுப்பு சுவர் இல்லாத இடங்களிலும், தடுப்புசுவர் பழுதடைந்த பகுதிகளிலும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், கடற்கரையோர சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கருங்கல் அருகே மிடாலம், மேல்மிடா லம் பகுதியில் நேற்றும் கடல் சீற்றம் தொடர்ந்து நீடித்தது. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் 1986-ம் ஆண்டு தடுப்பு சுவர் கட்டப்பட்டது. தற்போது, இந்த தடுப்புச்சுவர் சேத மடைந்த நிலையில் காணப் படுகிறது.
உறவினர் வீடுகளில் தஞ்சம்
இந்த பகுதியில் கடந்த ஓரிரு தினங்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கடலரிப்பு ஏற்பட்டு பல வீடுகள் இடியும் நிலையில் உள்ளன.
இதனால், கடற்கரையோர பகுதி மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள் ளனர். எனவே, இந்த பகுதியில் கடலரிப்பை தடுக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிடாலம் பங்கு அருட் பணியாளர் ஜாண்ராபின்சன், ஊர்தலைவர் சிவில் ஆகியோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் செறுவள்ளி நாராயணன் நம்பூதிரி தலைமையில் நடத்தப்பட்ட அஷ்ட மங்கல்ய தேவ பிரசன்ன உத்தரவு படியான பரிகார பூஜைகள் நேற்று திருவனந்தபுரம் பத்ம நாப சாமி கோவிலில் தொடங்கியது.
அருள் வாக்கு கேட்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடத்தப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள், கட்டுமான பணிகள் தொடர்பாக செறுவள்ளி நாராயணன் நம்பூதிரி தலைமையில் கடந்த ஜூன் 18– ந் தேதி முதல் 3 தினங்கள் சபரிமலை சன்னிதானத்தில் தேவபிரசன்னம் (தெய்வ அருள் வாக்கு கேட்டல்) பார்க்கப்பட்டது. அப்போது கேரளாவில் உள்ள பிரபல கோவில்களில் பரிகார பூஜைகள் நடத்த அருள் வாக்கு கூறப்பட்டது.
பரிகார பூஜை
அதன் படி நேற்று பரிகார பூஜைகள் தொடங்கியது. திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் காலை 9.30 மணியளவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் எம்.பி.கோவிந்தன் நாயர் தலைமையில், முதலில் அக்ரக சாலை கணபதி கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேய சாமியின் ஆசிர் வாதத்துடன், நாலம்பலகத்தினுள் சென்று, நரசிங்க சாமியை வழிபாடு நடத்திய பின், பத்மநாபனுக்கு துளசி மாலை சாத்தி, பால் பாயாசம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்பலத்தை சுற்றி வலமாக வந்து கிருஷ்ண பகவானை தொழுது வணங்கி வழிபாடு நடத்திய பின், தர்ம சாஸ்தா கோவிலுக்கு சென்று, நீராஞ்சனம் வழிபாடு நடத்தப்பட்டது. பரிகார பூஜையின் போது பத்மநாபனுக்கு பால்பாயாசம் படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நரசிங்க மூர்த்திக்கு புஷ்பாஞ்சலியும், கணபதிக்கு ஹோமமும் நடத்தப்பட்டது. ஆஞ்சநேய சாமிக்கு வெண்ணை முழுக்காப்பும், தர்ம சாஸ்தாவிற்கு நீராஞ்சனம் வழிபாடுகளும் நடத்தப்பட்டது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் எம்.பி.கோவிந்தன் நாயர் தலைமையில் உறுப்பினர்கள் சுபாஷ் வாசு, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.கெ. குமாரன், கமிஷனர் வேணுகோபால் ஐ.ஏ.எஸ், தலைமை பொறியாளர் ஜோலி உல்லாஸ், சபரிமலை செயல் அதிகாரி ஜெயகுமார், பத்மநாபசாமி கோவில் செயல் அலுவலர் கெ.என். சதீஷ், பாதுகாப்பு அதிகாரி ஜெ. சுகுமாரபிள்ளை, சபரிமலை முன்னாள் மேல் சாந்தியும், பத்மநாபசாமிகோவில் சாந்தியுமான கோசால விஷ்ணுவாசுதேவன் நம்பூதிரி, ஆகியோர் சிறப்பு பரிகார பூஜை வழிபாடுகளை நடத்தி வழிபட்டனர்.
மேலும் 15 கோவில்களில்
பரிகார பூஜையின் தொடர்ச்சியாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு கிழ் செயல்படும் 10 கோவில்களிலும் மேலும் 5 கோவில்களிலும் பரிகார பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என்று சபரிமலை அய்யப்பன் கோவில் மக்கள் தொடர்பு அதிகாரி முரளி கோட்டைக்ககம் தெரிவித்தார்.
நடை திறப்பு
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. 21– ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம், களபாபிஷேகம், உட்பட பூஜைகள் நடைபெறும்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...






