Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
அரவக்குறிச்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயந்தி நேரில் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கிறது. அதன்படி நாகம்பள்ளி ஊராட்சி மலைக்கோவிலூரில் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அதே போன்று நவமணி நகர் பகுதியில் தனி நபர் கழிப்பறை அமைக்கும் திட்டத்தை பார்வையிட்டார். அப் போது அங்கிருந்த பொது மக்களிடம் கழிப்பறையை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
அதே போன்று தங்கள் குழந்தைகளையும் கழிப் பறையை பயன்படுத்தும் பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து மலைக் கோவிலூரில் உள்ள அங்கன் வாடி மையத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்குவதை பார்வையிட்டார். அப் போது குழந்தைகளின் எடையை பராமரிக்கும் பதிவேடுகளை ஆய்வு செய்து, சரியான எடை யில் குழந்தைகள் இருக்கும் அளவிற்கு இணை உணவுகள் வழங்கி குழந்தைகளை நல்ல முறையில் கண்காணிக்க வேண் டும் என்று அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தர விட்டார்.
ஆய்வு
அதே போன்று மலைக்கோவிலூரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது எடை அளவு, இருப்பு சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து தடா கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு படித்து வரும் மாணவ–மாணவிகளின் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள மாணவ– மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை ஆய்வு செய் தார்.இதே போன்று கொடை யூர் ஊராட்சி கரப்பாளை யம் கிராமத்தில் ஊரக உட்கட்டமைப்பு திட்டத் தில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தில் கட்டப்ப ட்டு வரும் தடுப் பணை யை பார்வை யிட்டார்.
அப்போது அந்த பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க அந்த பகுதியில் உள்ள ஆழ் குழாய் கிணறுகளை சீரமைக்க கோரி வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் நுகர்வு பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அதிகாரி லியாகத், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி செந்தமிழ்செல்வி, அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தண்ட பாணி, தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு இழப் பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து குளித்தலை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இறந்தார்

திருச்சி மாவட்டம் தொட் டியம் ஒன்றியம் பவுத்திரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது42) கடந்த3.8.2010 அன்று சொந்த வேலை காரண மாக முசிறிக்கு சென்றார். பின்னர் அன்று இரவு முசிறி யில் இருந்து பவுத்திரம் செல்வதற்காக அரசு பஸ்சின் முன் படிக்கட்டில் ஏறினார்.அப்போது அரசு பஸ் டிரை வர் திடீரென்று பஸ்சை எடுத்த தால் பஸ் படியில் இருந்து செல்வம் கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரம் செல்வத்தின் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வம் இறந்தார்.

முறையீட்டு மனு

இதைத்தொடர்ந்து இழப்பீடு தொகை கேட்டு செல்வம் மனைவி மேகலா கடந்த 5.6.2012 அன்று குளித்தலை சப்-கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்ப பிள்ளை விபத்தில் இறந்து செல்வம் குடும்பத்திற்கு தமிழக போக்குவரத்து கழகம் ரூ. 6 லட்சத்து 45 ஆயிரம் இழப் பீட்டு தொகை வழங்க வேண் டும் என்று கடந்த 24.7.2013-ந் தேதி தீர்ப்பளித்தார். ஆனால் பல மாதங்கள ஆகியும் இழப்பீடு தொகை வழங்க வில்லை. இதைத் தொ டர்ந்து மேகலா முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த குளித் தலை சப்-கோர்ட்டு நீதிபதி ஐயப்பப்பிள்ளை வட்டியுடன் சேர்த்து ரூ. 7 லட்சத்து 35 ஆயிரத்து 477 இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இந்த தொகைக்காக அரசு பஸ்சை ஜப்தி செய்ய கடந்த 5.9.14-ந்தேதி உத்தரவிட் டார்.

ஜப்தி

நீதிமன்ற உத்தரவின்படி குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்த அரசு பஸ்சை ஒன்றை நேற்று காலை 12 மணிக்கு கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவரது மனைவி லட்சுமி(வயது 45). தங்கவேல் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். லட்சுமி வீட்டை பூட்டிவிட்டு ஆடு மேய்ப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுவிட்டார். மதியம் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 400 மதிப்பிலான 51 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் குளித்தலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
புதிய தொழில் முனை வோரை ஊக்குவிக்கும் விதமாக 25 சதவீதம் மானியத்தில் தொழிற் கடனுதவிகள் வழங்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்மையத்தின் பொதுமேலாளர் ஏகாம் பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தொழில்முனைவோர்

படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர் களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் வளர்ச்சித் திட்டம் (நீட்ஸ்) என்ற புதிய திட்டத்தை அறி வித்து செயல்படுத்தி வரு கிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப் ளமோ), இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு 1 மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கி கள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.

25 சதவீதம் மானியம்

இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சத வீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானி யமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படு கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு ( டிப்ளமோ) இளங் கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரி வினர்களான மகளிர், பட்டிய லினத்தோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகி யோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏது மில்லை.

ரூ.1 கோடி வரை...

இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.5 லட்சத்திற்கு மேல் அதிகபட்ச மாக ரூ.1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் தொடங் கலாம். பொதுப் பயனாளி தனது பங்காக திட்ட மதிப் பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட் டில் 5 சதவீதம் செலுத்த வேண் டும்.

தகுதியுள்ள படித்த இளை ஞர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமை யிலான தேர்வுக் குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப் படுவார்கள். மேற்குறிப்பிட்ட தகுதிகளையுடைய, தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
சூளகிரி அருகே உள்ள கொதமகுந்தியை சேர்ந்தவர் ஜாகீர். இவரது மனைவி அக்தர் (வயது 22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அக்தர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
உடுமலை அருகே ஊருக்குள் சுற்றிவரும் சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சிறுத்தைப்புலி
உடுமலை அருகே உள்ள அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி ஒன்று சுற்றி வருகிறது. கன்றுக்குட்டி, நாய்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடி வரும் சிறுத்தைப்புலி இரவு நேரங்களில் ஊருக்குள் சாவகாசமாக ரோட்டை கடந்து செல்வதை பொதுமக்கள் பார்த்து உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற பகுதிக்கு அருகில் சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக கூண்டு ஒன்றையும் வைத்துள்ளனர். கூண்டு வைத்து 3 நாட்கள் மேலாகியும் சிறுத்தைப்புலி சிக்கவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் நேற்று இந்த பகுதிக்கு திடீரென்று வந்து சிறுத்தைப்புலியினை பிடிக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மேலும் சில பகுதிகளில் கூண்டுகள் வைத்து விரைவில் சிறுத்தைப்புலியை பிடிக்க நடவடிக்க எடுக்க வேண்டும். பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று டாம் டாம் மூலமும், பிளக்ஸ் பேனர்கள், துண்டுபிரசுரங்கள் மூலம் மக்களை எச்சரிக்கவேண்டும்.
விரைவில் அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாலை வேளையில் விவசாய பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிப்படைய கூடும். எனவே சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடனடியாக புதர்மறைவான பகுதிக்கு மாற்றி வைக்க உத்தரவிட்டார்.
ஆய்வின்போது உடுமலை ஆர்.டி.ஓ. குணசேகரன், தாசில்தார் சைபுதீன், மாவட்ட வன அலுவலர் தன்ராஜ், அமராவதி வனச்சரக அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகரில் ஓடும் பஸ்களில் கைக்குழந்தைகளுடன் சென்று பணம், நகைகளை திருடிய 2 பெண்களை போலீசார் குழந்தைகளுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓடும் பஸ்சில் தொடர் திருட்டு
திருப்பூர் மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக ஓடும் பஸ்சில் நகை–பணம் திருட்டு போவது அதிகரித்து வந்தது. இந்த சம்பவங்களை தடுத்து, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் ஆலோசனையின் பேரில் துணை கமிஷனர் சுந்தரவடிவேல் உத்தரவிட்டார்.
அதன்படி, திருப்பூர் உதவி கமிஷனர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பயணிகள் போல் கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரில் டவுன் பஸ்களில் பயணம் செய்து கண்காணித்து வந்தனர்.
2 பெண்கள் குழந்தைகளுடன் கைது
இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள புஷ்பா பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ்சில் ஏறி போலீசார் பயணம் செய்தனர். அப்போது கைக்குழந்தைகளுடன் ஏறிய 2 பெண்கள், ஒரு பயணியிடம் இருந்து பணத்தை திருடிவிட்டு குமார்நகர் பஸ்நிறுத்தத்தில் இறங்கி ஓடினார்கள். உடனே போலீசார் அந்த 2 பெண்களையும் விரட்டி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மதுரை வண்டிப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவிகள் கவுசல்யா(22), அருணா(30) என்பதும், இவர்களின் குழந்தைகள் ஜமுனா, சந்தோஷ் என்பதும் தெரியவந்தது. மேலும், கவுசல்யாவும், அருணாவும் குழந்தைகளுடன் பஸ்களில் ஏறி, பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி, அவர்களிடம் இருந்து நகை–பணத்தை திருடியுள்ளனர். வடக்கு போலீஸ் நிலைய பகுதியில் ஒரு பஸ் பயணியிடம் 14¾ பவுன் நகை, அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய பகுதியில் ஒரு பஸ்பயணியிடம் ரூ.25 ஆயிரம், திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய பகுதியில் 3 பயணிகளிடம் ரூ.4¾ லட்சத்தையும், 13½ பவுன் நகையையும் திருடி சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கவுசல்யா, அருணா ஆகிய 2 பேரையும் குழந்தைகளுடன் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகே காமராஜர் ரோட்டில் சம்பவத்தன்று நள்ளிரவில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று அவர் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு அரிமா சங்க தலைவர் வி.பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.ஆர்.துரைசாமி முன்னிலை வகித்தார். முகாமை பி.குணசேகரன் தொடங்கி வைத்தார். சங்க முன்னாள் தலைவர்கள் ஏ.லோகநாதன், என்.முருகேசன் ஆகியோர் பேசினர். சங்க செயலாளர் வி.வெங்கிடுசாமி நன்றி கூறினார். முகாமில் இணைச்செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் கே.பி.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
முகாமில் 84 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்படடு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கண் அறுவைசிகிச்சை தேவைப்பட்ட 23 பேருக்கு உடுமலையிலும், 9 பேருக்கு கோவையிலும் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. இதுதவிர 19 பேருக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.