Sunday, September 21, 2014
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பாஜக வேடம் கலைந்து விட்டது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
“இலங்கை ராஜபக்சே அரசு இன ஒழிப்பு கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசு இலங்கை நட்பு நாடு, எனவே அங்கு நடக்கும் உள்நாட்டு போரில் தலையிட முடியாது என்று கூறியது.
இதனையே இப்போது பதவியில் இருக்கும் பாஜக அரசும் சொல்கிறது. உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஐ.நா. சபை மூலம் இலங்கையில் நடைபெற்ற இன ஒழிப்பு பற்றி விசாரணை நடத்த முயற்சி மேற்கொண்டும் இலங்கை அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்கி வருகிறது. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் தலைவர்கள் மாநாட்டில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் பங்கேற்றுள்ளார்.
இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த மாநாட்டில் பாஜக அரசின் பிரஜைகள் பங்கேற்றதன் மூலம் இலங்கை விவகாரத்தில் பாஜக வின் வேடம் கலைந்து விட்டது.“ இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
காஷ்மீரின் ஓர் அங்குலத்தை கூட இந்தியாவிற்கு விட்டுத்தர முடியாது என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் முல்தான் நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சி விரைவில் ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அப்பொழுது காஷ்மீர் முழுவதையும் முழு கட்டுபாட்டில் கொண்டு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.
காஷ்மீர் பாகிஸ்தானின் அங்கம் என்று தெரிவித்த அவர் காஷ்மீரின் ஓரு அங்குல நிலத்தை கூட இந்தியாவிற்கு விட்டுத்தர முடியாது என்றும் கூறினார். 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பிலாவல் மாலிக் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அவரின் காஷ்மீர் தொடர்பான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிலாவல் பூட்டாவின் தந்தை ஆஷிப்அலி சர்தாரி பாகிஸ்தான் ஜனாதிபதியாகவும் அவரது தாயார் பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் பிரதமராக 2 முறையும் பதவி வகித்துள்ளனர். பிலாவல் தாத்தா ஜுல்பிக்கர் அலி பூட்டோவால் 1967 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சி தொடங்கப்பட்டது
இலங்கை அதிபர் ராஜபக்சே ஐ.நா.வில் உரையாற்றுவதைக் கண்டித்து, திமுக வரும் 25 ஆம் தேதி நடத்தும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்று தொல். திருமாவளவன் கூறினார்.
இது குறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மனித உரிமை மீறல் குற்றத்துக்கு ஆளாகியுள்ள ராஜபக்சே ஐ.நா.வில் செப்டம்பர் 25 ஆம் தேதி பேச உள்ளார். ஐ.நா.வில் அவர் உரையாற்றுவது, சர்வதேசப் புலனாய்வு விசாரணை நடத்துவதற்கு தடையாக இருக்கும்.
எனவே, ராஜபக்சே பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று இந்திய அரசு உடனடியாக வலியுறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி செப்டம்பர் 23 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும் செப்டம்பர் 25 ஆம் தேதியை தமிழர்கள் துக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
கருப்புச் சின்னங்கள் அணிவது, கருப்புக் கொடிகளை ஏற்றுவது போன்ற வகையில் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் டெசோ அமைப்பின் தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் போராட்ட அறிவிப்பை வரவேற்று ஆதரிப்பதுடன் கருப்புக் கொடி ஏற்றுவது, கருப்பு ஆடை அணிவது ஆகிய நடவடிக்கைகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்“ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்திற்கு அருகில் மின்மாற்றி ஒன்றை நிறுவுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனையடுத்து அருகில் வேறு இடத்தில் நிலத்தைத் தோண்டியபோது, அங்கேயும் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடுத்தடுத்து நான்கு இடங்களில், தோண்டிய இடங்களில் எல்லாம், மனித எலும்புகள் காணப்பட்டதையடுத்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட காவல்துறையினர், நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் தனது காதலியைக் கொடூரமாக கொலை செய்து, அவரின் மூளை, இதயம், நுரையீரல் பகுதியை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த டாமி என்னும் 46 வயது பெண் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்து, தனது 33 வயது காதலர் ஜோசெப் தன்னுடைய வீட்டினுள் அத்துமீறி நுழைய முயல்வதாக புகார் அளித்தார்.
இதையடுத்து ஜோசெபிடம் பேசிய காவல் துறையினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இச்சம்பவம் நடந்து சில மணி நேரத்திற்கு பிறகு, டாமியின் தோழி அவசர உதவிக்கு அழைத்து டாமியை தொடர்பு கொள்ள இயலவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்து அவரின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், டாமி உடல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததையும், அவரது உடலில் இருந்து மூளை, இதயம், நுரையீரல் பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்ததையும் அறிந்தனர்.
இதையடுத்து உடனடியாக டாமியின் காதலர் ஜோசெப்பின் வீட்டிற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு ரத்தக்கறை பதிந்த பொருட்களையும், கத்தியையும் கைப்பற்றினர்.
உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்
ரூ.1,00,000 கோடி மதிப்பை விரைவில் எட்டுவற்கான வாய்ப்புகள் உள்ளன என்று
இந்திய தொழில் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ) தமிழக தலைவர் ரவிசாம்
பேசினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில் பின்னலாடை தொழிலின் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ‘கிளஸ்டர்’ எனப்படும் ஒருங்கிணைந்த தொழில் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 13 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒருங்கிணைந்த தொழில் மையத்தின் தொடக்க விழா ஏஞ்சல் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் வேலுச்சாமி வரவேற்றார். ஒருங்கிணைந்த தொழில் மையத்தின் தலைவர் நாராயணன், முதன்மை ஆலோசகர் வைத்தியநாதன், தொழில் அதிபர் பங்கேரா ஆகியோர் தொழில் முனைவோர்களுக்கு நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய தொழில் நுட்ப விவரங்களை விளக்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சி.ஐ.ஐ. தமிழக தலைவர்
ரவிசாம் பேசியது:
திருப்பூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 5 மாதங்கள் தான் ஆகிறது. இந்நிலையில் 13 பின்னலாடை நிறுவனங்கள் ஒன்றிணைந்து
‘கிளஸ்டர்’ அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. நிறுவனத்தில் உண்டாகும் உற்பத்திக் குறைபாடுகள், பிழைகளை களைந்து மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டு அதன் மூலமாக செலவுகளை குறைத்து, உற்பத்தியை பெருக்குவதற்கு இந்த மையம் உதவிகரமாக அமையும்.
திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி மதிப்பு ரூ.18,000 கோடி மதிப்பில் உள்ளது.
இந்த ஏற்றுமதியை ரூ.1,00,000 கோடி மதிப்புக்கு உயர்த்துவதற்காக தொழில்துறையினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு
பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றனர். இந்திய தொழில் வளர்ச்சியிலும், தமிழக தொழில் வளர்ச்சியிலும் திருப்பூரின் பின்னலாடை தொழில் முக்கிய பங்களிப்பு செலுத்து வருகிறது. எனவே, ரூ.1,00, 000 கோடி மதிப்புக்கான வளர்ச்சி நிலை எட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை. சி.ஐ.ஐ.அமைப்பில் இடம் பெற்று 6 மாதங்களுக்குள் திருப்பூரில் கிளஸ்டர் ஏற்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது ஆகும் என்றார்.
இந்த கருத்தரங்கில் ‘கிளஸ்டர்’ அமைப்பில் இணைந்துள்ள நிறுவன பிரதிநிதிகளுக்கு வங்கி கணக்கு பரிமாற்றம், உற்பத்தி பணிகளில் செய்ய வேண்டிய பணிகள், செலவுகளை மிச்சப்படுத்தும் நுணுக்கங்கள், சந்தையில் பொருள்களை விற்பனை செய்யும்போது மேற்கொள்ள வேண்டியவை குறித்த பல்வேறு குறிப்புகள் தெரிவிக்கப்பட்டன.
அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ் கார்ப்பரேசன், ஆர்ம்ஸ்ட்ராங் நிட்டிங் மில், பி.எஸ் அப்பேரல், கரோனா நிட்வேர், சிபிசி பேஷன்ஸ் ஆசியா பிரைவேட் லிமிடெட், தன்வர்ஷினி எக்ஸ்போர்ட்ஸ், எஸ்டீம் நிட்வேர், கீதாலயா அசோசியேட்ஸ், கந்தன் நிட்ஸ், எம்.எஸ்.கார்த்திகேயன் கார்மெண்ட்ஸ், ராகம் எக்ஸ்போர்ட்ஸ், எஸ்.ஆர்.ஜி அப்பேரல், வார்ஷா இண்டர்நேஷனல் ஆகிய 13 நிறுவனங்கள் இந்த கிளஸ்டர் குழுவில் இணைந்துள்ளன

குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் c .மாசிலாமணி மூங்கில் தொழுவு ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமது வாக்கினை பதிவு செய்த காட்சி உடன் மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி உடன் ,தமது வாக்கினை பதிவு செய்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் c .மகேந்திரன் அவர்களும் உள்ளனர்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...