Wednesday, September 24, 2014
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார்.
மதுரை ரயில் நிலைய பாதுகாப்பு வசதிகளை செவ்வாய்க்கிழமை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு கருதி ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை செயல்பாட்டில் உள்ளது.
ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் நபர்கள் மற்றும் பொருள்கள் கண்டறிய இது மிகவும் உதவும். ரயில்நிலையத்தின் பிரதான வாசலில் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக் கருவியும் பார்சல் பரிசோதனை கருவியும் உள்ளன. தற்போது மேலும் ஒரு பார்சல் ஸ்கேனர் கருவியும் மற்றும் வாகனங்களை அடியில் பரிசோதிக்கும் 2 கருவிகளும் கூடுதலாக வழங்கப்பட உள்ளன. இந்த கருவிகள் விரைவில் நிறுவப்படும். மேலும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்கவைக்கும் நவீன கருவிகளும் வழங்கப்பட உள்ளன என்றார்.
முன்னதாக அவர் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கருவிகள் செயல்படுவதை பார்வையிட்டார்.
ரயில் நிலையத்தில் மொத்தம் உள்ள 68 சிசிடிவி கேமிராக்களில் 4 காமிராக்கள் செயல்படாமல் உள்ளதை அவர் கண்டறிந்தார். அவற்றை உடனடியாக சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து
ரயில்வே பாதுகாப்பு படையில் உள்ள ஒவ்வொரு வீரரையும் அழைத்து அவர்களது பணிகுறித்து கேட்டறிந்தார். மேலும் ரயில்வே பாதுகாப்பு படை வழக்குகள் குறித்த ஆவணங்களையும் அவர் பார்வையிட்டார்.

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளி களை கைது செய்ய, வழக்கு
விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண் டும் என்று உறவினர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.மதுரை
சின்னசொக்கி குளம் ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால்முகமது, கடந்த சில நாட்களுக்கு முன்பு
சிலரால் கொடைக்கானலுக்கு கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக
பூங்கொடி, கணேசன் உள்பட சிலர் கைது செய்யப் பட்டனர்.சங்கர் உள்பட சிலர் நீதிமன்றங்களில்
சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தபோது, கொலைக் கான காரணங்கள்
தெரிய வந்தது. இதன் அடிப்படை யிலும் சிலர் கைது செய்யப் பட்டனர்.இந்த நிலையில் ஜமால்
முகமது கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்ய வழக்கு
விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண் டும் என்று அவரது உற வினர் முகமது முஸ்தபா வலியுறுத்தி
உள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இணை இயக்குனர் ஆகியோருக்கு
அவர் மனு அனுப்பி உள்ளார். அதில் எனது மாமா ஜமால் முகமதுவை ஒரு கும்பல், பணம் பறிக்கும்
நோக்கத்தில் கொடைக்கானல் மலைக்கு அழைத்து சென்று கொலை செய்ததாக தல்லாகுளம் போலீசார்
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆனால் அவரது கொலைக்கு முன்பாக, அவர் நிர்வாகம் செய்து வந்த
அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 64 சென்ட் நிலத்தை போலி
ஆவணங்கள் மூலம் மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர் எழுதி வாங்கிய தாக தெரிய வருகிறது.
எனது மாமா கொலை வழக் கில் போலீசார் முக்கிய குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை.அவர்கள்
இந்த வழக்கை திசைதிருப்பும் நோக்கில், சங்கர் என்ற நபரை கோர்ட்டில் சரண் அடைய செய்து
விசாரணையை நீர்த்து போகச் செய்யும் முயற்சி நடக்கிறது. எனவே வழக்கின் புலன் விசாரணையை
மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.)க்கு மாற்றி னால்தான் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும்.மாமா
(ஜமால் முகமது) வின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யும்போது மதுரை அரசு ஆஸ்பத்திரி யின்
தடய அறிவியல் நிபுணர் கள் உடன் இருக்கவும், இறந்துபோன மாமாவின் உடல் பாகங்களை, உரிய
விஞ்ஞானபூர்வமான பரி சோதனைகள் செய்து கொலை தொடர்பான உரிய உத்தரவை பிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.இதேபோல்
ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் பஷீர்ஆகமது, ஜாக் அமைப் பின் மாநில தலைவர் இமாம் உசேன்
மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகிகள், இன்று மாவட்ட கலெக்டரிடம்
ஒரு மனு கொடுக்க வந்தனர்.அந்த மனுவில், ஜமால் முகமது கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள்
பிடிக்கப்படாமல் உள்ளனர்.இந்த கொலையில் அரசியல் வாதிகள், செல்வந்தர்கள் போன்றோருக்கு
தொடர்பு உள்ளது. எனவே வழக்கு விசாரணையை சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத் துள்ளார்
Tuesday, September 23, 2014
Monday, September 22, 2014
சென்னை, திருவல்லிகேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் தூண்டித்துவிட்டார்.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், உடனடியாக சென்னை பெருநகர காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவுப்படி, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் திருவான்மியூரில் உள்ள அஜித் வீட்டில் நள்ளிரவு சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் அங்கு எந்த வெடி பொருளும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவையை அடுத்துள்ள சின்ன கோட்டக் குப்பத்தில், இளைஞர் ஒருவர் மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
புதுவையை அடுத்த சின்ன கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகன் 30 வயதுடைய குணசீலன்.
கட்டிட தொழிலாளியான இவர் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். இவர் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே செலவழித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு குணசீலன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் மதுகுடிக்க தனது தாய் 52 வயதுடைய தனலட்சுமியிடம் பணம் கேட்டார்.
அப்போது ஏற்கனவே அதிகமாக மது குடித்துள்ளதால் எனவே மீண்டும் குடிக்க வேண்டாம் என்று தனலட்சுமி அறிவுரை கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து பணம் கேட்டு குணசீலன் நச்சரித்துள்ளார்.
ஆனால் தனலட்சுமி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குணசீலன் அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து தனலட்சுமியை சரமாரியாக தாக்கினார்.
இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். இதைப் பார்த்ததும் குணசீலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தனலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு மருதத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டக் குப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட குணசீலனை தேடி வருகிறார்கள்.

புனேவில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிக்க மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ரூ. 2,500 மற்றும் பீர் பாட்டிலை லஞ்சமாக பெற்றதால் கைது செய்யப்பட்டார்.
பொது இடத்தில் போதையில் மக்களை தொந்தரவு செய்த புகாரில் கைதான நபரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ. 2,500 மற்றும் பீர் பாட்டிலை லஞ்சமாக பெற்ற எரவாடா காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மோரேவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட பின் குற்றம் சாற்றப்பட்ட நபர், தன் மீது பிரகாஷ் பொய் புகார் பதிவு செய்ததாகவும், மேலும் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க அவருக்கு ரூ.2,500 மற்றும் ஒரு பாட்டில் பீர் வாங்கி கொடுக்க வேண்டுமெனவும் கூறியதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார்.
இதன் பேரில், பிரகாஷின் நடவடிக்கைகளை கவனமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், அவர் லஞ்சம் பெற்றதும் அவரை கைது செய்தனர்.
புவி வெப்பமடைந்துவருவதால் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் வேண்டும் எனக் கோரி ஞாயிறன்று உலகின் பல நகரங்களிலுமாக கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரணிகள் நடத்தப்படவுள்ளன.
நியுயார்க்கில் இன்னும் இரண்டு நாட்களில் பருவநிலை தொடர்பான உலக மாநாடு ஆரம்பிக்கவுள்ள சூழலில் இந்தப் பேரணிகள் நடக்கின்றன.
இந்த மாநாட்டில் உலக நாடுகளிடம் இருந்து உறுதியான நடவடிக்கைகள் அதிகம் வராது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு இறுதியில் பாரீஸில் நடக்கவுள்ள உலக மாநாட்டில் பருவநிலை சம்பந்தமான ஒரு புதிய உலகளாவிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அரசியல் ஆதரவை ஒன்றுதிரட்ட முடியும் என்று தாம் நம்புவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இன்று நடப்பவற்றிலேயே மிகப் பெரிய ஊர்வலம் நியுயார்க்கில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபலங்கள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு ஐநா தலைமைச் செயலர் பான் கி மூனும் நியுயார்க் ஊர்வலத்தில் பங்கேற்பார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...