Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in , , ,    
ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, ரஜினி, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் சங்கர், படத்தின் நாயகன் விக்ரம் கலந்து கொண்டனர். இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
        
'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்டு படத்தின் நாயகன் விக்ரமை பாராட்டினார். விழாவில் அவர் பேசியதாவது,“நிச்சயமாக 
இந்தவிழா ஒரு இசை வெளிட்டு விழாவைப் போல இல்லாமல், ஒரு வெள்ளிவிழா போல நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போது படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.



ஷங்கர் சினிமாவில் 20 ஆண்டுகளாக பயணம் செய்கிறார். அவரின் முதல் படத்திலிருந்து அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் மேலே மேலே தான் சென்றுகொண்டிருக்கிறார். இந்த ஐ படம், அவர் இதுவரை இயக்கிய படங்களில் உச்சகட்டமாக அமைந்திருக்கிறது. இதற்கு மேல் அடுத்த படியாக அவர் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. இன்னும் அவரிடம் நிறைய இருக்கிறது. அவர் விரைவில் இந்தப் படத்தை வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.  

ஹாலிவுட்டில் பல விஷயங்கள் செய்கிறார்கள், நம்மிடம் திறமைசாலிகள் இல்லையா? ஏன் நாம் தமிழ் சினிமாவில் அதை செய்யக்கூடாது என்று நினைத்து, பல முயற்சிகளை செய்கிறார். தமிழ் சினிமாவை, இந்திய சினிமாவை ஹாலிவுட் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார் ஷங்கர். பணம், நேரம் இதை எல்லாம் பார்க்காமல் உழைக்கும் உண்மையான சினிமா இந்தியன் அவர் தான்.

அவருக்கு பக்கபலமாக நம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இருக்கிறார். ரகுமான் அவர் தாயாரிடம் சென்று,‘எந்த ட்யூன் போட்டாலும் ஷங்கர் வேண்டாம் என்கிறார்’ என்று சொல்லி அழுததாக நான் கேள்விப்பட்டேன். அந்த அளவுக்கு ஷங்கர் அவரிடம் வேலை வாங்குவார் என்று எனக்கு தெரியும்.  

இந்த படத்தின் நாயகன் சீயான் விக்ரம். ‘ஓ போடு’ சீயான், இனி ‘ஐ’ சீயான் என அழைக்கப்படுவார். தன் உடலை வருத்திக்கொள்ளும் ஒரு நடிகர் அவர். விக்ரமைப் போல கதைக்காக தன்னையே தியாகம் செய்யும் நடிகர், தமிழில் இல்லை, இந்தியாவில் இல்லை, ஹாலிவுட்டில் இல்லை, ஏன் இந்த உலகத்திலேயே இல்லை. ஒரு சீனியர் நடிகன் என்ற முறையில் விக்ரமை என் இதயத்தில் இருந்து பாராட்டுகிறேன்.

‘ஷங்கர் - விக்ரம்’ இந்த காம்பினேஷன் தொடர்ந்து பல படங்களைக் கொடுக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” இவ்வாறு ரஜினி பேசினார். 
ஷங்கரிடம் வாய்ப்பு கேட்ட அர்னால்டு!

பலு தூக்கும் வீரர்கள் சாகசங்களை செய்யும் நிகழ்ச்சி நடந்தது முடிந்ததும், இருக்கையை விட்டு எழுந்து உற்சாகமாய் வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, அவர்களை வாழ்த்தினார். அவர்களுடன் மேடைக்கு வந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்த இளைஞர்களைப் பார்க்கும்போது என் இளமைக்காலங்கள் எனக்கு ஞாபகம் வருகிறது. இங்கு வந்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் ஷங்கர் என்னை வியக்க வைக்கிறார். அவரது அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறேன்.

ரசிகர்கள் இல்லாமல் சினிமா இல்லை. ஆகவே ரசிகர்கள் தான் முக்கியம், என் படங்களை இந்தியா முழுக்க ஆஸ்கர் ரவிசந்திரன் இந்தியா முழுக்க வெளியிடுகிறார், அவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நடிகர் விக்ரம் என்னை ஆச்சரியப்படுத்துகிறார். அவரது உழைப்பு அபாரமானது, வெற்றிக்கு வாழ்த்துகள் என்றார். பேசிமுடித்தவர், விழா தாமதமாக தொடங்கிய காரணத்தாலோ என்னவோ, இசை வெளியிட்டு நிகழ்வுக்கு முன்பாகவே அரங்கை விட்டு வெளியேறினார்.
பசி ஒரு பிரச்சனை இல்லை - வியக்க வைத்த விக்ரம்

          பலுதூக்கும் இளைஞராக காட்டுமஸ்தான உடலைக் கொண்டு நடித்திருக்கும் விக்ரம், இப்படத்தில் வரும் இன்னொரு வயதான கதாபாத்திரத்திரற்கு 25 முதல் 30 கிலோ வரை தன் எடையை குறைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என விக்ரமிடம் கேட்டபோது, “பசி ஒரு பிரச்சையே இல்லை, சினிமாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். 


கனவு கதாபாத்திரமாக எல்லா நடிகர்களுக்கும் ஒரு விஷயம் இருக்கும். ஆனால் ‘ஐ’ படத்தில் நான் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒரு கேரக்டரை ஷங்கர் எனக்கு கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்க முடியவில்லையே என படம் பார்க்கிற நடிகர்கள் வருத்தப்பட கூடும். அப்படி ஒரு கதாபாத்திரம். அந்நியன் படத்திலேயே என்னை வித்தியாசமாக காண்பித்தவர் அவர். என் உயிர் நண்பன் பாலா கூட அந்நியன் படம் பார்த்துவிட்டு,“நான் கூட உன்னை இந்த அளவுக்கு பயன்படுத்தவில்லை” என்று சொன்னார்.

நான் மெலிந்து இருந்த நாட்களில் யாரையும் சந்திகாமல், வீட்டை விட்டு வெளியே போகாமல் தான் இருந்தேன். பல விழாக்களை தவிர்ந்துவிட்டேன். என் ரசிகர்கள் என்னை சந்திக்க வந்தபோது கூட புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என் ரசிகர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்” என்றார்.
‘ஐ’ டைட்டில் காரணம் சொன்ன ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் பேசும் போது, “இந்தப் படத்திற்கு அழகன் என்றோ அல்லது ஆணழகன் என்றோ தான் டைட்டில் வைத்திருக்க வேண்டும். இது இரண்டுமே ஏற்கெனவே வந்துவிட்ட காரணத்தால் வேறு டைட்டில் தேடினோம். எனக்கு ‘ஐ’ என்ற எழுத்து மேல் ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. ‘ஐ’ என்றால் என்ன என்று தேடினால், அதற்கு அழகு என்று பொருள் இருப்பதை தெரிந்துகொண்டோம். அதனால் தான் இந்த டைட்டிலை வைத்தோம்” என்றார்.

படத்தில் ஏமி ஜாக்சனின் அழகைப்பார்த்து ‘மெரசலாகிட்டேன்...’ என்று பாடுகிறார் விக்ரம். ’ஐ’ படத்தின் டிரெய்லரைப் பார்ப்பவர்கள் சொல்லப்போவதும் அதே வார்த்தையைத் தான்...
“மெரசலாகிட்டேன்!”
On Wednesday, September 24, 2014 by Unknown in , ,    
மிழ்த்திரையுலகில் முத்தத்திற்கு பெயர் போன நடிகர்களில் சிம்பு குறிப்பிடத்தக்கவர். நயன்தாராவுடன் சிம்பு அடித்த லிப்-லாக் ஃபோட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை பத்தவைத்தது. அதேபோல கன்ண்ட நடிகை ஹர்ஷிகாவுடன் சிம்பு கிஸ் அடித்த வீடியோ யூடியூபில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.அந்த வீடியோவில், சிம்பு ஹர்ஷிகாவை இழுத்து அணைத்து முத்தமிடும் காட்சி ஒரு நிமிடத்திற்கு இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருதுகள் வழங்கும் விழாவில் இந்த லிப்-லாக் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது. கிஸ் அடிக்கும்போது அணிந்திருக்கும் உடையிலேயே சிம்புவும் ஹர்ஷிகாவும் சேர்ந்து நின்று ஒரு ஃபோட்டோவையும் எடுத்து டுவிட்டரில் பதிவேற்றியிருக்கிறார்கள்.
On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
மதுரை அருகே காதல் தகராறில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் பரசுராம்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் சிவரஞ்சன் (வயது28). ஐ.டி.ஐ. படித்துள்ளார். தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் நிலம் வாங்கி விற்பனை உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதூர் ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், இவருக்கும் காதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பெண் வீட்டாருடன் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் காஞ்சரம்பேட்டை அருகில் உள்ள சின்னப்பட்டி–வெளிச்ச நத்தம் ரோட்டில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சிவரஞ்சன் பலத்த வெட்டுக் காயங்களுடன் பிணமாக நேற்று கிடந்துள்ளார். அவரை யாரோ ‘மர்ம’ மனிதர்கள் வெட்டி படுகொலை செய்து உடலை வீசி சென்று உள்ளனர்.

இதுதொடர்பாக சிவரஞ்சனின் தாய் சரஸ்வதி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். காதல் தகராறில் தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பாக ஆத்திக்குளத்தைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயராஜ், அவரது சகோதரி மகன் ஜீவா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிவரஞ்சனிடம் செல்போன் மூலம் ஜீவா பேசி உள்ளார். அப்போது காதல் விவகாரம் தொடர்பாக சமரசம் செய்ய வரும்படி கூறினாராம். அதன் பிறகு சிவரஞ்சனை அழைத்து சென்ற ஜீவா மற்றும் சிலர் அவருக்கு மது கொடுத்து மயக்கி உள்ளனர்.

பின்னர் அவரை வெட்டி கொலை செய்து தென்னந்தோப்பில் வீசி உள்ளனர். இந்த கொலையில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயராஜ் நேரடியாக ஈடுபட்டுள்ளாரா? அல்லது கூலிப்படை வைத்து கொலை நடந்ததா? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
இன்றைய பெண்களின் வித்தியாசமான ஆசைகள்18 வயது முதல் 25 வயது வரையுள்ள பெண்களிடம் எடுக்கப்பட்ட ‘கல்யாண ஆசைகள்’ பற்றிய கருத்துக்கணிப்பில் அவர்கள் தங்களது வித்தியாசமான விருப்பங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நண்பர்போலவும், திறந்த மனதோடும் பழகும் கணவர் தேவை என்று 80 சதவீத பெண்கள் தெரிவித்திருக்கிறார்கள். கணவரிடம் அதிகபட்ச அன்பு, செக்ஸ், ஆண்மை நிரம்பிய குணம் போன்றவைகளை எதிர்பார்க்கும் பெண்கள் 5 சதவீதம் மட்டுமே!

மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் பேசும் அளவுக்கு கணவர் நடந்துகொள்ளவேண்டும். சுதந்திரம்தர வேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காதவராக இருக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா இளம் பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள்.

ஐந்து நிமிடம் பார்த்து, அடுத்த மாதமே திருமணம் செய்துகொண்டு, அவரோடு அவசர அவசரமாக தேனிலவுக்கு புறப்பட்டு செல்லும் மனநிலை தங்களுக்கு இல்லை. குறைந்தது 6 மாதமாவது பழகிய பின்பே அவர் தங்களுக்கு தகுதியானவரா என்று கண்டுபிடிக்க முடியும்.

அதற்கான வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று 90 சதவீத பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எவ்வளவு நல்லவரனாக இருந்தாலும், ‘நாங்கள் பார்த்து பேசி முடிவு செய்துவிட்டோம்.

நீ ஒத்துக்கொள் என்பதுபோல் பெற்றோர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ என்று, 68 சதவீத பெண்கள் அதிரடியாக சொல்கிறார்கள். பத்து சதவீத பெண்கள், வாழ்க்கையில் திருமணம் அவ்வளவு முக்கியமில்லை என்கிறார்கள்.

அவர்கள் பெரும்பாலும் வட இந்திய நகரங்களில் போய் தனியாக வேலை பார்த்த அனுபவம் பெற்றவர்கள். ‘அங்கு நிறைய பெண்கள் கல்யாணமே செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

அப்படி தம்மாலும் வாழ முடியும் என்று நம்புவதாக’ அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். திருமணம் முடிந்த பின்பும் தங்கள் வருங்கால கணவரின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என்று 40 சத வீத பெண்கள் சொல்கிறார்கள்.

ஆனால் தாங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை கணவர் தங்களுக்கு தரவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  30 வயதிற்கு பிறகு அது போதுமே என்கிறார்கள். 40 சதவீத பெண்கள் திருமணத்தில் ஆடம்பர அலங்காரங்கள் அவசியம் என்கிறார்கள்.

காரணம், ‘வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம் செய்கிறோம். அதனால் அலங்காரத்திற்கு நிறைய பணம் செலவிடலாம்’ என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்தவேண்டியதில்லை என்று 58 சதவீத பெண்கள் சொல்லும்போது, 42 சதவீத பெண்கள் ‘அந்த விஷயத்தில் பெற்றோர் எடுக்கும் இறுதி முடிவை ஏற்றுக்கொள்கிறோம்’ என்றுகூறி, ஆடம்பரத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக இருக்கிறார்கள்.

மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்றுதான் பெரும்பாலான பெண்கள் கூறியிருக்கிறார்கள். காரணம், மது அருந்துபவர்கள் அளவுக்குள் அடங்கிக் கொள்ளமாட்டார்கள்.

எல்லை மீறிப்போய்விடுவார்கள் என்ற பயம் பெண்களிடம் இருக்கிறது.   டீன்ஏஜ் பெண்களில் 58 சதவீதம் பேர் தங்களுக்கு சமையல் தெரியும் என்றிருக்கிறார்கள். ஆனால் தங்களை சமையல் அறைக்குள்ளே போட்டுவிடக்கூடாது என்ற பயத்தில், ‘சமையல் அவ்வளவாக தெரியாது’ என்று கூறி விடுகிறார்களாம்! 
On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
மதுரையில் நடந்த மாவட்ட கூடைப்பந்து போட்டியில் தேம்பாவனி அணிக்கு முதல் பரிசு
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் 13 அணிகள் மோதின. இந்த போட்டிகளை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலை வர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தொடங்கி வைத்தார்.
கூடைப்பந்தாட்ட இறுதி போட்டியில் தேம்பாவனி அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. பசுமலை பிகாசஸ் அணிக்கு 2–ம் பரிசும், மதுரை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணிக்கு 3–ம் இடமும், கோபாலன் மெமரி அணிக்கு 4–ம் இடமும் கிடைத்தன.
வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை மதுரை மாநகராட்சி கமிஷனர் கதிரவன், கூடைப்பந்து கழக தலைவர் ராஜ்சத்யன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் தேவதாஸ், மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், கூடைப்பந்தாட்ட கழக மாவட்ட நிர்வாகிகள் வசந்தவேல், பேட்ரிக், ஒருங்கிணைப்பாளர்கள் செல்லப்பா, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Wednesday, September 24, 2014 by Unknown in ,    

மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு ஒன்றேகால் கிலோ தங்கம் கடத்தி வந்தவரை போலீஸார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
  மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை மாலை கொழும்பிலிருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
  பின்னர், சுங்கத்துறையினர் நடத்திய சோதனையின் போது சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அப்துல்வஹாப்(40) என்பவர் கொண்டு வந்த டேபிள் ஃபேன், ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களில் சிறிய சிறிய கட்டிகளாக தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் 12 கட்டிகளாக இருந்த ஒன்றேகால் கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.   
   இதன் மதிப்பு சுமார் ரூ. 33 லட்சமாகும். இவர் துபையிலிருந்து கொழும்பு வந்து, அங்கிருந்து மதுரைக்கு வந்துள்ளார்.
 இதையடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் அப்துல்வஹாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகன் வடிவேல் முருகன் (வயது23). இவர் டிப்ளமோ படித்து முடித்து வேலை தேடி வந்தார்.
மேலும் தனது அப்பாவிற்கு உதவியாக ஓட்டல் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு 8 மணியளவில் ஓட்டல் வேலை பார்த்து கொண்டிருந்த வடிவேல் முருகன் திடீரென்று வீட்டுக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.
On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது‘ என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி கூறுகையில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை சரியல்ல என்ற அடிப்படையில் தான் தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்வது சரியான நடைமுறைதான் என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எனவே தனி நீதிபதி ஆசிரியர் நியமனத்துக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஆசிரியர் பணிக்கு 16 ஆயிரம் பேரின் சான்றிதழ் ஏற்கனவே சாரிபார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் பணி நியமனத்துக்கு தடை விதித்து இடைக்கால நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதனால் அவர்களுக்கு பணி வழங்க முடியவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது
On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் மாணவி மீனா மீது ஆசிட்டை வீசினார். அப்போது மீனாவுக்கும், தடுக்க சென்ற மாணவி அங்காள ஈஸ்வரிக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் திராவக வீச்சால் காயம் அடைந்த மாணவிகள் இருவரும் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் காயம் அடைந்த மீனாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அங்காள ஈஸ்வரிக்கு தோள் பட்டையில் சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் திராவக வீச்சில் ஈடுபட்ட வாலிபர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர். அந்த வாலிபருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.