Monday, September 29, 2014
உடுமலை, பொள்ளாச்சி ரோட்டில், உணவு வழங்கல் துறை தனிதாசில்தார் (கூ.பொறுப்பு) தயானந்தன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் வீ.மணிமுத்து, சந்திரசேகரன், தருமன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராகல்பாவி பிரிவி அருகே ரோட்டோரத்தில் 6 கேன்கள் கிடந்தன. அவற்றை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 160 லிட்டர் மண்எண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த மண்எண்ணெய் கேன்களை கைப்பற்றி கொண்டு வந்தனர். மேலும் அந்த மண்எண்ணெய் கேன்களை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாநகரில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
நள்ளிரவு வரை பெய்த இந்த பலத்த மழையால் இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், பாளையக்காடு, 2–வது ரெயில்வேகேட் பகுதியில் உள்ள ஒற்றைக்கண் பாலம் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நள்ளிரவு வரை பெய்த இந்த பலத்த மழையால் இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், பாளையக்காடு, 2–வது ரெயில்வேகேட் பகுதியில் உள்ள ஒற்றைக்கண் பாலம் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 40–வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 40–வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஆ.கிறிஸ்டினாள் மேரி சுகுணவதி வரவேற்றார். விழாவில் முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் கி.குமாரசாமி கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மாணவர்களின் கல்வி பயணத்தில் பட்டமளிப்பு விழா என்பது முக்கிய அடையாளமாக அங்கம் வகிக்கிறது. பட்டமளிப்பு என்பது முறைசார் கல்வியின் முடிவாகவும், தொழிற்பயணத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. உயர் கல்விக்கும் பட்டமே முதல் படியாகும். பட்டம் பெறல் எதிர்காலத்தில் உங்கள் செயல்கள் எதை சார்ந்து இருக்க வேண்டும் என்பதனையும், நீங்கள் ஏற்க வேண்டிய செயல்கள் எவை என்று உங்களுக்கு உணர்த்துவதாக அமைகிறது. எவ்வகை எதிர்காலம் நமக்கு முன்னாள் இருக்கிறது என்பதை நாம் அறிய இயலாது.
ஆனால் நம் முன் இருக்கும் அனைத்து சவால்களையும், சிக்கல்களையும் தீர நெஞ்சத்துடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் முயற்சியால் அனைத்து செயல்களும் வெற்றியாகட்டும். விண் கலங்களை விண்ணில் செலுத்தும் அளவிற்கு ஏற்றமிகு எதிர்காலத்தை தன்கையில் கொண்டுள்ள இந்தியாவில் வாழும் நீங்கள் அதன் ஏற்றத்தை மட்டும் எண்ணாமல் இந்தியாவில் நிலவும் ஏழ்மை, ஊட்டக்குறைபாடு, எழுத்தறிவின்மை மற்றும் நோய்கள் ஆகியவற்றை அறிந்து அவற்றை நீக்கிட மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் ஆராய வேண்டும். கல்வி என்பது நாகரீகத்தையும், காலசாரத்தையும் கடந்து தனிமனித பண்புகளையும், அறிவினையும் மேம்படுத்தும் கருவியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
537
விழாவையொட்டி பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் 537 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராமலிங்கம், வ.கிருஷ்ணன், கு.பரந்தமான், ம.சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
அண்ணா திமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக்கும் வகையிலும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்லடம் கல்லம்பாளைத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ஏ.கே.ராமமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட மகளிரணியினர் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் சித்ராதேவி, நகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி, நகர அவைத்தலைவர் ராயர்பாளையம் தங்கவேல் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கர்நா டகா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து, மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி., கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் நா.சக்திவேல், வளர்மதி கருணாகரன் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் குள்ளி செட்டியார் தெருவில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கருப்பு சட்டை அணிந்து, முதல்வர் ஜெயலலிதா விடுதலை ஆகும்வரை இது தொடரும் என கூறி அமைதியான முறையில் அறப்போராட்டம் இருந்தனர்.
திருப்பூர் மாநகர் மாவட்டட அண்ணா தி.மு.க.மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அறிஞர் அண்ணாவின் 106வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன் எம்.சி.தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் கலைமகள் எம்.கோபால்சாமி எம்.சி.வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந் தன் பேசியதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை இன்று பட்டி தொட்டி எங்கும் அண்ணா தி.மு.க.கொண்டாடி வருகிறது.அவரத ு கொள்கைகளையும், கனவுகளையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் உரிமை அண்ணா தி.மு.க.இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற இடைதேர்தலில் தேர்தலில் தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா நிறுத்திய அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ள்ளனர். தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என அவர் நிறுத்திய அனைத்து வேட்பாளர்களையும் எதிர் அணியினர் டெபாசிட் இழக்கும் அளவில் அமோக வெற்றியை தந்துள்ளனர். மூன்றாவது முறையாக முதல்வர் ஆனபிறகு தமிழக மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றியுள்ளார்.அவரது ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.இதுபோன்று வருகி ன்ற 2016 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234. தொகுதிகளிலும் முதல்வர் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்
மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி பேசியதாவது:-
அண்ணாவின் தத்துவங்கள், அவரது கருத்துக்கள் இப்பொழுதும் மெய் சிலிர்க்க வைக்கும்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம், தம்பி எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.ஒன்றே குலம்,ஒருவனே தேவன், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.என்பது போன்ற தத்துவங்கள் கேட்க, கேட்க சிந்திக்க வைக்கும். நிலச்சுவான்கள், மிட்டா மிராசுதார்கள் தேர்தலில் போட்டியிட்ட நிலைகளை மாற்றி சாதாரண மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தவர் அண்ணா. 1967 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சி மீது நம்பிக்கை இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். குண்டடிபட்ட எம்.ஜி.ஆர் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டார்.அந்த தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றனர்.அவரது மறைவுக்கு பின்னால் முதல்வர் ஜெயலலிதா ஆள்வதற்கு மட்டுமே பிறந்தவர்கள் அண்ணா திமுகவினர் என்பதை மாற்றி காட்டினார். இன்று அவரது உருவம் பதித்த அண்ணா தி.மு.க. கொடி பறக்காத இடமே இல்லை என்று கூறும் வகையில் முதல்வர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை கட்டி காத்து வருகிறார். எனவே, வருகின்ற காலங்களில் இதுபோன்று ஆதரவை அவருக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
கூட்டத்தில் தலைமை பேச்சாளர் கோபி காளிதாஸ், கருப்பசாமி எம்.எல்.ஏ, துணை மேயர் சு.குணசேகரன் வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்.
சார்பு அணி செயலாளர்கள் கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே,என்.சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ், ஜெகதாம்பாள்,கருணாகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், அட்லஸ் லோகநாதன்,எஸ்பி.என்.பழனிசாமி, உஷா ரவிக்குமார், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், ரா ஜேஷ்கண்ணா, கண்ணபிரான், சடையப் பன், சாகுல் ஹமீது, அண்ணா தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசாமி, நகர நிர்வாகிகள் ராஜேந்திரன், சரவணா, ரவிகுமார் உள்ளிட்டவர்கள், அவினாசி நகர செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி, கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம்,பிரியா சக்திவேல், உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார் , அசோக்குமார், ராஜ்குமார், நீதி ராஜன், பி.லோகநாதன்,சுந்தராம்பாள் கேசவன், கோமதி, மும்தாஜ் ரசூல்,பரமராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தவும், சிகிச்சைக்கான உபகரணங்கள், மருந்துகளை தேவைக்கேற்ப வைத்திருக்கவும், லஞ்ச ஊழலைக் களையவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சனியன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்க தெற்கு மாநகரத் தலைவர் ஆறுக்குட்டி தலைமை வகித்தார். இதில் ஏழை மக்களின் ஒரே ஆதாரமாகத் திகழும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள், சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லாமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக இம்மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பியும், அனைத்து மருத்துவ வசதிகளையும் உறுதிப்படுத்த கோரிக்கை விடப்பட்டது
இத்துடன் திருப்பூர் மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்தும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவர் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர் போல் சித்திரித்து தலை மற்றும் உடலில் கட்டுப் போட்டு படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். பலரும் தங்கள் தலையிலும், கைகள், உடலிலும் கட்டுப் போட்டுக் கொண்டு மருத்துவமனை சீர்கேட்டைக் களைய ஆவேச முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், மாநகரச் செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்பட பெருந்திரளான இளைஞர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக ஞானசேகரன் நன்றி கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்யும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகளை காவல் துறை குற்றவாளிகளைப் போல் பாவிக்கக் கூடாது. இடம்பெயரும் தொழிலாளர்களுக்கான சட்டத்தை அரசு நிர்வாகம் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் சிஐடியு மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளியன்று வடமாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு இங்கே தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்துத் தெரிவித்தனர். சீனிவாசன் இந்தியில் அவர்களிடம் சிஐடியு செயல்பாடு குறித்து விளக்கிக் கூறினார்.
இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சமமான கூலி வழங்க வேண்டும், கூலி வழங்குவதில் காலதாமதம் செய்வது, பாரபட்சம் காட்டுவது கூடாது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, தங்குமிட வசதி, மருத்துவ வசதி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை அனைத்து மாவட்டங்களிலும், திருப்பூர் மாவட்டத்திலும் முறையாக அமல்படுத்த வேண்டும். வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை காவல் துறையினர் பல்வேறு வகையிலும் துன்புறுத்துவது, சந்தேகக் கண்ணோடு பார்ப்பது என அணுகுமுறை உள்ளது. வடமாநிலத் தொழிலாளர்களை பாரபட்சமாகவோ, குற்றவாளிகளைப் போலோ காவல் துறை பார்க்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் யாரேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அனைவரையும் குற்றவாளிகளாக நினைக்கக் கூடாது. இந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும். ஜனஸ்ரீ பீம யோஜனா காப்பீட்டுத் திட்டத்தில் இத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பது என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அக்டோபர் 5ம் தேதி மிகப்பெருமளவில் வடமாநிலத் தொழிலாளர்களைத் திரட்டி அவர்கள் கோரிக்கை குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
---------------
ஜெயலலிதாவுக்கு தண்டனை
தலித் விடுதலை இயக்கம் வரவேற்பு
திருப்பூர், செப்.27-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 4 ஆண்டு தண்டனை வழங்கியிருப்பது நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாக தலித் விடுதலை இயக்க இணைப் பொதுச் செயலாளர் ச.கருப்பையா சனியன்று தெரிவித்தார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,கழகம் சார்பில், முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு கர்நாடகா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து, மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில் ஈடுபட்டனர். அங்கு சுப்பிரமணியசுவாமி உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.இதில் 500க்கும் மேற்பட்ட கழகத்தினர் கைதாகி காங்கயம் ரோட்டில் உள்ள காயத்திரி திருமண மஹாலில் போலீசாரால் சிறைவைக்கப்பட்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி., கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் நா.சக்திவேல், வளர்மதி கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், தம்பி மனோகரன், கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், கலைமகள் எம்.கோபால்சாமி எம்.சி.,உஷா ரவிக்குமார்,எஸ்பி.என்.பழனிசாமி , டி.பார்த்திபன், எம்.ஹரிஹரசுதன், சி.கண்ணபிரான், பி.கே.எஸ்.சடையப்பன்,மாமன்ற உறுப்பினர்கள் கே.செல்வம், பிரியா சக்திவேல், நீதிராஜன், பெரிச்சிபாளையம் ஈஸ் வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,பரமராஜன், பங்க் ரமேஷ்,வளர்மதி கூட்டுறவு ராமச்சந்திரதேவர், முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன்,பாரதிபிரியன் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், மகளிர் அணி நிர்வாகிகள் ருக்குமணி, கோமதி சம்பத்,சுந்தராம்பாள் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தீவிர விசுவாசியும், அண்ணா தி.மு.கழக தொண்டருமான திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சைக்கிள் பூபதி என்பவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அளித்த தீர்ப்பை கேட்டு தனது பெருவிரலை அறுத்துக்கொண்டார்.அவரை அண்ணா தி.மு.கழக மூத்த நிர்வாகிகள் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...











