Tuesday, September 30, 2014
உடுமலை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மடத்துக்குளம் நால்ரோட்டில் அதிமுகவினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் பாசன சங்க தலைவர் ராஜ்குமார் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதே போல் கணியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பேரூர் கழக செயலாளர் காஜாமொய்தீன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த அதிமுகவினர் பங்கேற்றனர். அதே போல் மெட்ராத்தி, காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
திருப்பூர்: திருப்பூர் குமாரானந்தபுரம் ராம் நகரை சேர்ந்தவர் லட்சுமி (22). இவர், கடந்த மூன்று மாதமாக அப்பகுதியில் தங்கி பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் லட்சுமி அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூரில்
மனவளர்ச்சி குன்றிய வாய்பேச முடியாத இளம்பெண்ணை நள்ளிரவில் வீட்டுக்குள் அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து, அதே பகுதியில் வசித்து வருபவர் 30 வயது இளம் பெண். இவர், சற்று மனவளர்ச்சி சரியில்லாமலும், வாய்பேச முடியாமலும் இருந்ததாக தெரிகிறது. அதனால் திருமணமாகாமல் இருந்துள்ளார். இவர், குடியிருக்கும் அதே காம்பவுண்டில் உள்ள எதிர் வீட்டில் வசித்து வருபவர் சலீம் (38). இவர், அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் அயர்னிங் கான்டிராக்டராக வேலை பார்க்கிறார். சலீமிற்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சலீமின் மனைவி மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டு விசேஷசத்திற்காக சிவகாசி சென்றுள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு அந்த இளம்பெண்ணை, சலீம் கட்டாயப்படுத்தி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலை அந்த இளம்பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையை விட்டு எழாமல் மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, அவரிடம் விசாரித்த போது சலீம் வீட்டில் நடந்ததை கூறி அழுதுள்ளார். அதனை தொடர்ந்து, இளம்பெண்ணின் தாயார் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சலீம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பாதிப்புக்குள்ளான இளம்பெண் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தண்டனையை கேட்டு ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்தார்“ என்று அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பெங்களூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
சொத்து குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடினேன். இந்த வழக்கில் சாட்சிகள் பலமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது. அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது சரியே. காரணம் இந்த வழக்கில் தொடர்புடைய சொத்துகளின் இன்றைய மதிப்பு அதைவிட அதிகமாக உள்ளது. அதன் அடிப்படையில் இந்த அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27–ந் தேதி காலையில் தனிக்கோர்ட்டு கூடியதும் ஜெயலலிதா உள்பட 4 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து தண்டனை விவரங்கள் 3 மணிக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். பின்னர் 4 மணிக்கு தண்டனை விவரங்களை அறிவித்தார். தண்டனையை கேட்டு ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார் என்பது அவரது முக பாவனையில் அறிய முடிந்தது.
அவர் மவுனமாக இருந்தார். யாரிடமும் பேசவில்லை. தீர்ப்பு முழு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை. அது மொத்தம் 1,136 பக்கங்களை கொண்டுள்ளது. தீர்ப்பு நகல் வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்து உள்ளேன். அது கிடைத்ததும் தீர்ப்பை முழுவதுமு£க படிப்பேன். ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக அறிந்தேன். அது பற்றி எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை.
ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அதை முழுவதுமாக படித்த பிறகே கோர்ட்டில் எனது கருத்தை தெரிவிப்பேன். தீர்ப்பை படிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும். அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து எனக்கு அதிக நெருக்கடி இருந்தது. ஆனால் நான் அதற்கெல்லாம் பணியவில்லை. நான் எனது பணியை ஆற்றினேன்.
நான் எந்த தவறும் செய்யவில்லை. நேர்மையாக பணியாற்றினேன். ஆனால் என் மீது தி.மு.க. பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது. இது எனது மனதை பாதித்தது. ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்துவிடலாமா? என்று கூட ஆலோசித்தேன். ஆனால் இந்த வழக்கில் ஆஜராகி திறமையாக செயலாற்றி குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு தண்டனை பெற்று தந்துள்ளேன். என் மீது கூறப்படும் தவறான தகவல்களை நான் கண்டுகொள்வது இல்லை.
என் மீது குற்றச்சாட்டுகளை கூறியவர்கள்(தி.மு.க.) இப்போதாவது என்னை பற்றி புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன். எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. என் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எனக்கு எந்த பயமும் இல்லை.
நான் எனது வக்கீல் பணியை 1975–ம் ஆண்டு தொடங்கினேன். கிரிமினல் வழக்குகளை கையாண்டு வருகிறேன். அரசு பிளீடராகவும், கூடுதல் சிறப்பு வக்கீலாகவும், அரசு சிறப்பு வக்கீலாகவும் பணியாற்றி உள்ளேன். கடந்த காலங்களில் தண்டுபாளையா உள்ளிட்ட முக்கியமான வழக்குகளில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளேன்.
முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா, தற்போதைய சட்டசபை சபாநாயகர் காகோடு திம்மப்பா உள்ளிட்ட முக்கியமான அரசியல் தலைவர்களின் வழக்குகளில் ஆஜராகி இருக்கிறேன். எனது வக்கீல் பணியில் இதுவரை ஆயிரக்கணக்கான வழக்குகளை கையாண்டு உள்ளேன். அதில் இந்த சொத்து குவிப்பு வழக்கும் ஒன்று என்று நான் கருதுகிறேன்.“
இவ்வாறு அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறினார்.

தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவையின் பட்டியலை கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் அனைத்தும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
31 அமைச்சர்கள்
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் பதவியை இழந்ததும், பழைய அமைச்சரவை கலைந்தது. தற்போது புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுள்ளார். அவர் கடந்த அமைச்சரவையில் இருந்த போது நிதி உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தார்.
அவற்றோடு, ஜெயலலிதா கவனித்து வந்த துறைகளும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது முதல்-அமைச்சரோடு சேர்த்து 31 அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். புதிய அமைச்சரவைப் பட்டியலையும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளையும் கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஓ.பன்னீர் செல்வம்
1) ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் - பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை. நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவு சீட்டுகள், பொதுப்பணிகள், சிறு பாசனம் உள்ளிட்ட பாசன திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள்.
2) நத்தம் ஆர் .விஸ்வநாதன் மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு(மொலாசஸ்).
3) ஆர்.வைத்திலிங்கம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் - வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்.
எடப்பாடி பழனிச்சாமி
4) எடப்பாடி கே.பழனிச்சாமி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்.
5) பி.மோகன் ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் - ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சு காகித கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.
6) பி.வளர்மதி சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், சத்துணவு அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இரவலர் காப்பு இல்லம், மாற்றுத் திறனாளிகள் நலன் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவு.
7) பி.பழனியப்பன் உயர் கல்வித் துறை அமைச்சர் - தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில் நுட்பவியல்.
8) செல்லூர் கே.ராஜு கூட்டுறவுத் துறை அமைச்சர் - கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்
செந்தில் பாலாஜி
9) ஆர்.காமராஜ் உணவுத் துறை அமைச்சர் - உணவு நுகர்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுப்பாடு
10) பி.தங்கமணி தொழில் துறை அமைச்சர் - தொழில்கள், ஸ்டீல் கட்டுப்பாடு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள், சிறப்பு முயற்சிகள்.
11) வி.செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சர் - போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து, இயக்கூர்திச் சட்டம்.
12) எம்.சி.சம்பத் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் - வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம்.
13) அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வேளாண்மைத் துறை அமைச்சர் - வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.
கோகுல இந்திரா
14) எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு.
15) டி.கே.எம். சின்னய்யா கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் - கால்நடை பராமரிப்பு.
எஸ்.கோகுல இந்திரா கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் - கைத்தறி மற்றும் துணிநூல்.
17) எஸ்.சுந்தரராஜ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் - விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன்.
18) பி.செந்தூர் பாண்டியன் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்.
சண்முகநாதன்
19) எஸ்.பி.சண்முகநாதன் சுற்றுலாத்துறை அமைச்சர் - சுற்றுலா, சுற்றுலா வளர்ச்சிக்கழகம்.
20) என்.சுப்ரமணியன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் - ஆதி திராவிடர் நலன், மலை வாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்.
21) கே.ஏ.ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சர் மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம்.
22) முக்கூர் என்.சுப்ரமணியன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் - தகவல் தொழில் நுட்பம்
23) ஆர்.பி உதயகுமார் வருவாய்த் துறை அமைச்சர் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியாளர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம், உள்ளிட்ட கடன் நிவாரணம் மற்றும் சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
ராஜேந்திர பாலாஜி
24) கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம், சிறப்புப் பணிகள் செயலாக்கம், தேர்தல் அறிக்கை அமலாக்கம்.
25) பி.வி.ரமணா பால்வளத் துறை அமைச்சர் - பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி
26) கே.சி.வீரமணி பள்ளிக் கல்வி துறை அமைச்சர் - பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப்பண்பாடு.
27) எம்.எஸ்.எம்.ஆனந்தன் வனத்துறை அமைச்சர் - வனம்.
28) தோப்பு என்.டி.வெங்கடாசலம் சுற்றுச்சுழல் துறை அமைச்சர் - சுற்றுச் சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு.
29) டி.பி.பூனாச்சி கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் - கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்.
30) எஸ்.அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றபட்டவர்கள் மற்றும் வக்ப் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன்
31) டாக்டர்.சி.விஜய பாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.

பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.
பெங்களூர் சிறையில் ஜெயலலிதா
இதேபோல், அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் அ.தி. மு.க.வின் சட்டப்பிரிவு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. வக்கீல்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் டெல்லி மேல்-சபை உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
15 பக்கங்களை கொண்ட ஜாமீன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வழக்கில் தண்டனை விதிக் கப்பட்டு இருக்கும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக இருந்தவர். ‘இசட்’ பிரிவு பாதுகாப்புடன் மிகமிக முக்கிய பிரமுகர் அந்தஸ்தில் இருப்பவர். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார். எனவே அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். பெங்களூரில் உள்ள சூழ்நிலைகள் அவரது உடல் நிலைக்கு ஒவ்வாது என்பதால், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.
ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். நாட்டை விட்டும் வெளியேற மாட்டார்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தவறான குற்றச்சாட்டு
சென்னையில் வருமானவரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சொத்துகள் சட்டவிரோதமானது அல்ல என்றும், அவர் குற்றம் அற்றவர் என்றும் கூறப்பட்டு உள்ளதாகவும், இதை பெங்களூர் தனிக்கோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை என்றும், அதை சுட்டிக்காட்டி தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் மற்றொரு மனுவில் கோரப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தவறானது என்றும், சட்டப்படிதான் அவர் சொத்துகள் வாங்கியதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இன்று விசாரணை
கர்நாடக ஐகோர்ட்டுக்கு வருகிற அக்டோபர் 5-ந் தேதி வரை தசரா விடுமுறை ஆகும். இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் விடுமுறை கால கோர்ட்டு கூடுகிறது.
எனவே ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. நீதிபதிகள் ரத்தினகலா, அப்துல் நசீர், ரவிக்குமார் ஆகிய 3 பேரில் யாராவது ஒருவர் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வரலாம் என்று கருதப்படுகிறது.
ஒருவேளை இன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், தசரா விடுமுறை முடிந்து மீண்டும் 6-ந் தேதி ஐகோர்ட்டு கூடும் போதுதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதேபோல், இந்த வழக்கில் தண்டனை பெற்று உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கோருவது உள்பட தலா 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
ராம் ஜெத்மலானி
ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையின் போது, அவரது சார்பில், டெல்லி மேல்-சபை எம்.பி. யும் பிரபல வக்கீலுமான ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடுகிறார். இதற்காக நேற்று அவர் அவசரமாக பெங்களூர் வந்தார்.

இந்தியாவில் இருக்கும் எல்லா தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது என்றும் இந்தியாவில் அது வளர்க்கப்படுவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
”இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் உள்ளார்ந்த அடிப்படை தத்துவங்களின் அடிப்படையில் இயங்கி வருகின்றனர். அகிம்சைதான் எங்களின் அடிப்படை தத்துவமாக உள்ளது. இந்தியாவில் நிலவும் அனைத்து தீவிரவாதமும் ஏற்றுமதி செய்யபப்ட்டவையே. இந்தியாவில் எந்த தீவிரவாதமும் வளர்ந்தது கிடையாது.சமீபத்தில் நான் சி.என்.என் க்கு அளித்த பேட்டியில், இந்திய முஸ்லீம்கள் அல்கொய்தாவின் திட்டத்தை தோற்கடிப்பார்கள் என கூறியிருந்தேன் என்று வெளியுறவு கவுன்சில் நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி ஒன்றிற்கு பேட்டி அளித்த மோடி தெரிவித்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பணையகைதிகளை கொலை செய்தது குறித்து பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வக்கிரமானது. பத்திரிகையாளர் தலை துண்டிக்கப்பட்டு அது தொலைக்காட்சிகளில் காட்டப்படுவதை உங்களால் கற்பனை செய்து முடிகிறதா. நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இது நமக்கு மிகப்பெரிய சவாலானது. இந்தியா 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தில் நல்லது மோசமானது என்ற எந்த வேறுபாடும் பார்க்க முடியாது. தீவிரவாதம் என்பது தீவிரவாதம் தான் என்று தெரிவித்தார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார்.
ஒபாமா - மோடி சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறுகையில், கெம் சோ ( எப்படி இருக்கிறீர்கள்) என்ற குஜாரத்தி மொழியில் ஒபாமா, மோடியை வரவேற்றார். மோடி ஆங்கிலத்தில் அதற்கு மிக்க நன்றி ஜனாதிபதி அவர்களே என்று பதிலளித்தார்.
பின்னர் ஒபாமாவுக்கு, நரேந்திர மோடி கீதையின் சிறப்பு பதிப்பு ஒன்றையும், மகாத்மா காந்தியின் விளக்கம் அடங்கிய புத்தகத்தையும் பரிசளித்தார். பின்னர் இரு தலைவர்களும் தங்கள் பதவி ஏற்கும் முன் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இரு தலைவர்களும் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே தங்கள் பிரச்சாரத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர். தங்கள் ஆட்சி அமைக்கும் போது இரு தலைவர்களும் தலைநகரத்துக்கு வெளியே உள்ள நகரத்தை சேர்ந்தவர்கள். என்று சையது அக்பரூதின் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் சென்றனர். ஒபாமா, மோடிக்கு விருந்த அளித்த போது வெள்ளை மாளிகை முன்பு அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் கலாச்சர நிகழ்ச்சிகள் நடனங்கள் ஆடினர்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார்.
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, நரேந்திர மோடியை சந்தித்தார். பின்னர் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் விருந்து அளித்தார். மோடி நவராத்ரி நோன்பில் இருப்பதால் அவர் சூடன தண்ணீர் மட்டுமே அருந்தினார்.
இந்த விருந்து நிகழ்ச்சிக்கு பிறகு டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ”அதிபர் ஒபாமாவுடன் அருமையான சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்” என்று தெரிவித்துள்ளார். ஒபாமா - மோடி சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறுகையில், கெம் சோ ( எப்படி இருக்கிறீர்கள்) என்ற குஜாரத்தி மொழியில் ஒபாமா, மோடியை வரவேற்றார். மோடி ஆங்கிலத்தில் அதற்கு மிக்க நன்றி ஜனாதிபதி அவர்களே என்று பதிலளித்தார்.
பின்னர் ஒபாமாவுக்கு, நரேந்திர மோடி கீதையின் சிறப்பு பதிப்பு ஒன்றையும், மகாத்மா காந்தியின் விளக்கம் அடங்கிய புத்தகத்தையும் பரிசளித்தார். பின்னர் இரு தலைவர்களும் தங்கள் பதவி ஏற்கும் முன் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இரு தலைவர்களும் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே தங்கள் பிரச்சாரத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர். தங்கள் ஆட்சி அமைக்கும் போது இரு தலைவர்களும் தலைநகரத்துக்கு வெளியே உள்ள நகரத்தை சேர்ந்தவர்கள். என்று சையது அக்பரூதின் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் சென்றனர். ஒபாமா, மோடிக்கு விருந்த அளித்த போது வெள்ளை மாளிகை முன்பு அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் கலாச்சர நிகழ்ச்சிகள் நடனங்கள் ஆடினர்.
காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் சீக்கிய அமைப்பை சேர்ந்த சிலர் வெள்ளை முளிகை முன்பு போரட்டத்திலும் ஈடுபட்டனர். சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இரண்டு முறை பாதுகாப்பு விதி முறைகள் மீறப்பட்ட காரணத்தால் பிளயர் இல்லம் மற்றும் வெள்ளை மாளிகையில் யூகிக்க முடியாத அளவு பாதுகாப்பு இருந்தது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...