Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
காந்தி ஜெயந்தி தினத் தன்று மது விற்றதாக நீலகிரி மாவட்டத்தில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத் தில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் சங்கர் உத்தர விட்டு இருந்தார்.
இதன்படி மதுக்கடைகள் மற்றும் பார் கள் மூடப்பட்டு இருந்தன. இருப்பினும் ஊட்டி, குன் னூர், கோத்தகிரி, குந்தா, கூட லூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று காந்தி ஜெயந்தி தினத் தன்று விற்பனை செய்ததாக 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மதுவிலக்கு போலீசார் கூறியதாவது:- நீலகிரி மாவட் டத்தில் காந்தி ஜெயந்தி தினத் தன்று மது விற்றதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கூடலூரில் முஸ்தபா என்பவரிடம் இருந்து 33 மது பாட்டில்கள் உள்பட மொத் தம் 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் கடையடைப்பு போராட் டமும்,கூடலூரில் கூட்டு பிரார்த்தனையும் நடை பெற்றது
அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் நேற்று கடைய டைப்பு போராட்டம் நடை பெற்றது. இதனால் அனைத்து கடைகளும் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட் டன. ஆனால் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பந்தலூர் வியா பாரிகள் சங்கம் சார்பில் உண் ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
இதில் வியாபாரிகள் முன் னேற்ற நல சங்க தலைவர்அசரப் தலைமை தாங்கினார். செய லாளர் ராமானுஜம், பொருளா ளர் கிருஷ்ணகுமார், உப்பட்டி வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்புசாமி, வக் கீல் ஜெயசீலன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்
நெலாக்கோட்டையில் அ. தி.மு.க. சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற் றது.போராட்டத்திற்கு பந்தலூர் ஒன்றிய செயலாளர் அபு தலைமை தாங்கி னார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இந்திராணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பவுலோஸ்குட்டி, வக்கீல்கள் பொன் ஜெயசீலன், பேபி, உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார் கள்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய லலிதாவை விடுதலை செய்யக் கோரி அ.தி. மு.க. தொண்டர் கள் சிலர் மொட்டை யடித்துக் கொண்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவு பெற்றது.
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கூடலூரி¢ல் அனைத்து மத பிரதிநிதிகளின் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், நெலாக் கோட்டை மசூதி இமாம் உஸ் மான் தாரினி, முத்து மாரியம் மன் கோவில் அர்ச்சகர் கதிரே சன், கிறிஸ்தவ ஆலய போதகர் ஜெயராஜ் ஆகியோர் பிரார்த் தனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி. மு.க. மாவட்ட செயலாளரும், தாட்கோ தலைவருமான கலைச்செல்வன், ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், அவை தலைவர் தேனாடு லட்சுமணன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் ஆவின் வாரிய இணைய தலைவர் மில்லர் தலைமையில் நடை பெற்றது.

இதில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அனூப், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ராணி, நகர செயலாளர் ராஜா தங்கவேல், ஒன்றிய செயலாளர் பத்ம நாபன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
அந்தியூர் பஸ்நிலையத்திற்கு தினமும் 500–க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் அந்தியூர் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால் தங்களது தேவைகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லுதல் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கும் வெளியூர் கல்லூரிகளுக்கு அந்தியூர் பஸ்நிலையத்தில் இருந்து செல்கின்றனர் கர்நாடக மாநிலத்திற்கு அந் தியூரில் இருந்து மைசூர் பகுதிக்கு எளிதாக செல்ல பர்கூர் மலைப்பாதையை பயன் படுத்திவருகின்றனர் அதனால் அந்தியூர் பஸ்நிலை அனைத்து கிராமக்களும் கூடுவதால் எப்போதும் பரபரப்பாவே காணப்ப டும் இங்கு உள்ள பஸ்நிலையத்தில் நடைபாதை மிகவும் பழுது அடைந்து விட்டது அதனால் முதியவர்கள் கம்பு ஊன்றி கூட செல்லமுடியாத நிலையில் உள்ளது சிறுவர்கள் பஸ்வந்தவுடன் ஓடி பஸ்ஏறும் ஆர்வத்திலும் இருக்கையை பிடிக்கவேண்டும் என்ற வேகத்லும் செல்லும் பொழுது பல சமையங்களில் அந்த ஆப்த்தான பள்ளதில் கால் இடரி விழுந்து விடுகின் றனர் இரவு நேரத்தில் மின்சப்பாளை நிறுத்தம் என்றால் முதியவர் முதல் பெரியவர்கள் சிறியவர்களின் நிலையும் தட்டுதடுமாரி சென்று பஸ்ஏற வேண்டிய நிலையுள்ளது வாரத்திற்கு 2 பேராவது கிழேவிழுந்து கயாம் ஏற்படுத்திகொள்கின்றனர் சில சமயங்கிளல் பஸ்சில் இருந்து இறங்கும்பொழுது விழுந்து கால்முறிவுகளும் ஏற்பட்டுவருகின்றன மேலும் அதன் கீழ் சார்கடைநீர் செல்வதால் எப்போழுதும் துர்நாற்றம் வீசிகொண்டே இருக்கும்
On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஈரோடு நகரம் ஜவுளி மற்றும் மஞ்சளுக்கு பெயர் பெற்ற நகரம் ஆகும். மேலும் ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் என்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் பள்ளிக்கூடங்கள் என பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே ஈரோட்டுக்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மஞ்சள் மற்றும் ஜவுளி வியாபாரிகள், மாணவ–மாணவிகள் வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஈரோடு ரெயில் நிலையம் வந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இந்த ரெயில் நிலையம் கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் தென்னக மாவட்டங்களின் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது. எனவே ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் 120–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஈரோடு வழியாக பயணிக்கிறார்கள்.
பயணிகளின் வசதிக்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் மொத்தம் 4 நடைமேடைகள் உள்ளன. இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த ரெயில் நிலையத்தில் 15–க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சுற்றி வருகிறார்கள். இவர்கள் அந்தந்த நடைமேடைகளில் நின்று கொண்டு ரெயில் ஏறும் மற்றும் இறங்கும் பயணிகளிடம் பிச்சை எடுக்கிறார்கள்.
சில மனநோயாளிகள் குறிப்பாக பெண்களிடம் திடீரென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு ஓவென்று சிரித்துவிட்டு அங்கிருந்து ஓடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை பெண்கள் தங்களுடைய குடும்பத்தினரிடமோ மற்ற சக பயணிகளிடமோ சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள். சிலர் ரெயில் தண்டவாளத்தின் நடுவில் நின்று கொண்டு ரெயில் வரும்போது அதனுடன் மல்லு கட்டுவதுபோல் போஸ் கொடுக்கிறார்கள். அப்போது அவர்களின் உயிர்களை காப்பாற்ற சில பயணிகள் சத்தம் போட்டு அவர்களை விரட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து ரெயில் நிலைய நடைமேடையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் கூறியதாவது:–
மனநோயாளிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது. இது எங்களுக்கும் தெரியும். ஆனால் சில நேரங்களில் மன நோயாளிகள் ரெயில் ஏற வரும் பெண் பயணிகளை இடிப்பது போன்று வருவது, நெஞ்சு பகுதியில் கை வைப்பது போன்ற அருவருக்கத்தக்க, கூசத்தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அப்போது பெண் பயணிகளோ அல்லது உறவினர்களோ இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் எங்களிடம் கூறுகிறார்கள். உடனே நாங்கள் நடைமேடைகளில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கும் மனநோயாளிகளை சத்தம் போட்டால் மற்ற பயணிகள் அவர்கள் மீது அனுதாபப்படுகிறார்கள். எங்கள் (போலீஸ்) மீது கோபப்படுகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் பயணிக்கு குறிப்பிட்ட மனநோயாளியை நாங்கள் ஏன் திட்டுகிறோம் என்பது தெரியும். ஆனால் மற்ற பயணிகளுக்கு இது புரிய வாய்ப்பில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் 3–வது நடைமேடையில் ஒரு குடும்பத்தினர் தன்னுடைய 3 வயது குழந்தையுடன் வந்திருந்தனர். அப்போது அந்த குழந்தை அங்கு உட்கார்ந்து இருந்த மனநோயாளியிடம் சென்று விட்டது. என்ன காரணத்தினாலோ அவர் அந்த குழந்தையை திடீரென்று தனது காலால் ஓங்கி உதைத்து தள்ளிவிட்டு எதுவும் நடக்காது போல் உட்கார்ந்திருந்தார்.
ஓங்கி உதைத்ததில் அந்த குழந்தை நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் விழப்போனது.
இதனை கவனித்த அந்த குழந்தையின் தந்தை கீழே விழாமல் தடுத்து குழந்தையை பிடித்து விட்டார். உடனே அவர் இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு வந்து எங்களிடம் கூறினார்.
நாங்கள் அந்த மனநோயாளி இருந்த இடத்தை நோக்கி சென்றோம். ஆனால் எங்களை கண்டதும் நாங்கள் சத்தம் போட்டு திட்டுவதற்கு முன்பே அந்த மனநோயாளி ஓவென்று அழுது கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டார். இதுபோன்ற நடவடிக்கைகளால் மனநோயாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதா? அல்லது ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதா? என்பதில் எங்களுக்கு சில சமயங்களில் சிரமம் ஏற்படுகிறது.
இவ்வாறு அந்த போலீஸ் கூறினார்.
எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மனநோயாளிகளை மீட்டு காப்பகத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
அறச்சலூர் அருகே வாய்க்காலில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
அறச்சலூர் நடுவீதியை சேர்ந்தவர் அன்புராஜ். அவருடைய மகன் அருண்குமார் (வயது 17). அறச்சலூரில் உள்ள ஒரு இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் சரஸ்வதிபூஜை என்பதால், கடையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது கடையில் உள்ள தள்ளுவண்டியை கழுவுவதற்காக அருண்குமார் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார்.
வாய்காலுக்கு சென்றவர் மாலை வரை கடைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் ஊழியர்களுடன் வாய்க்காலுக்கு சென்று பார்த்தார்.
வாய்க்கால் கரையில் தள்ளுவண்டி நின்றது. அருண்குமாரின் உடைகள் கிடந்தன. அருண்குமாரை காணவில்லை. இதனால் அவர் வாய்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் அருண்குமாரின் பெற்றோருக்கும், அறச்சலூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்து, அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருண்குமாரை தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அறச்சலூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊத்தங்காடு என்ற இடத்தில் வாய்க்கால் தண்ணீரில் அருண்குமார் பிணமாக மிதந்தார். இதுபற்றி அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டார்கள். அருண்குமார் வாய்க்காலில் இறங்கியபோது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகனின் உடலை பார்த்து அருண்குமாரின் பெற்றோர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஈரோட்டில் கட்டிடத்துக்குள் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதி அக்ரகாரம் வீதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் விரிவாக்க கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் கட்டிட பணியாளர்கள் வேலைக்காக வந்தனர். அப்போது கட்டிடத்தின் உள்ளே பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பகுதியில் துணியால் போர்த்தப்பட்ட நிலையில் ஒரு அழகிய பச்சிளம் பெண் குழந்தை கேட்பாரின்றி கிடந்தது.
அந்த குழந்தை ஆதரவின்றி கதறி அழுது கொண்டிருந்தது. அதைப்பார்த்த அவர்கள் ஓடிச்சென்றனர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடினார்கள். குழந்தை அழுது அழுது முகம் சிவந்து கிடந்தது. அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகி இருந்தது. தொப்புள்கொடி ஈரம் கூட காயாமல் இருந்தது.
வெறும் தரையில் கை-கால்களை அடித்துக்கொண்டு அந்த குழந்தை அழுதது பரிதாபமாக இருந்தது. இரக்க மனது கொண்ட சில பெண்கள் குழந்தையை கையோடு எடுத்து அணைத்துக்கொண்டனர். அதன் பிறகே குழந்தை அழுகையை நிறுத்தியது. யாராவது அக்கம்பக்கத்தில் நிற்கிறார்களா? என்று பொதுமக்கள் தேடிப்பார்த்தனர். ஆனால் யாரையும் காணவில்லை. அதைத்தொடர்ந்து சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு மூலம் குழந்தை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவ அதிகாரிகள் குழந்தையை பெற்றுக்கொண்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். குழந்தைக்கு உடை அணிவித்து நன்றாக கவனித்து வருகிறார்கள
இதற்கிடையே தகவல் அறிந்து கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின்பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும், குழந்தையை வீசிச்சென்றவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? வெளியூரில் இருந்து வந்து குழந்தையை யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டு சென்று விட்டார்களா? குழந்தை தவறான நடத்தை மூலம் பெறப்பட்டதா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீதியில் வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை.குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
வெள்ளகோவில்,
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் இருந்து தாராபுரம் வரை 100 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் 6–ந்தேதி நடக்கிறது.
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமலிங்கம், நகராட்சி தலைவர் கந்தசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துக்குமார், நகர அ.தி.மு.க. செயலாளர் டீலக்ஸ் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:–
அ.தி.மு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி 6–ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். இந்த மனித சங்கிலி போராட்டம் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தொடங்கி 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாராபுரம் வரை நடைபெறும். இந்த போராட்டத்தில் காங்கயம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1½ லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டும். வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருக்கும் வணிகர்கள் கடைகளை அடைக்க வேண்டாம். தொழிலாளர்களை மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுப்பி வையுங்கள்.
ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், ஒன்றியக்குழு தலைவர்கள், வார்டு செயலாளர்கள், ஆகியோர் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளும் பொதுமக்களை திரட்டி கலந்து கொள்ள செய்ய வேண்டும். இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மளிகைகடை வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், டீக்கடை உரிமையாளர்கள், சுமை தூக்குவோர் சங்கத்தினர், மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
திருப்பூர் அருகே சக்திவாய்ந்த செம்பு குடம் இருப்பதாக கூறி, ரியல் எஸ்டேட் அதிபரிடம் நூதன முறையில் ஏமாற்ற முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் தாராபுரம் சாலை பழனிச்சாமி காம்பவுண்ட் சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 49). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த தொழில் மூலம் திருப்பூர் கள்ளிப்பாளையம் காலனி செட்டிபாளையம் பகுதியைச்சேர்ந்த ராமசாமி(40) என்பவர் நண்பரானார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த மணிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படவே, 2 மாதங்களுக்கு முன் சக்தி வாய்ந்த செம்புத்தகடு ஒன்று உள்ளது அதை வாங்கி வைத்துக்கொண்டால், தொழிலில் லாபம் ஏற்படும் என ராமசாமி, மணியிடம் தெரிவித்தார். இதை நம்பி, செம்புத்தகடை வாங்கி வைத்து கொண்ட மணிக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து சம்பவத்தன்று, பூஜை செய்து வைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த செம்புக்குடம் ஒன்று தனது நண்பர் ஒருவரிடம் உள்ளதாகவும், அதை வாங்கி வைத்துக்கொண்டால் தொழிலில் மேலும் வளர்ச்சியடையலாம் எனவும் ராமசாமி கூறியுள்ளார். இதை நம்பிய மணியை, நேற்று முன்தினம் இரவு காங்கயம் ரோடு பள்ளக்காட்டு புதூரில் உள்ள ஒரு வீட்டிற்கு ராமசாமி உள்ளிட்ட சிலர், காரில் வந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு வைத்து இருந்த ஒரு செம்பு குடத்தை காண்பித்து இது சக்தி வாய்ந்த செம்பு குடம் என்று கூறி அதற்கு ரூ.10 ஆயிரம் தருமாறு மணியிடம் கேட்டுள்ளனர். செம்பு குடத்தை பார்த்ததும் அது சக்தி வாய்ந்தது இல்லை என்பதை அறிந்து கொண்ட மணி அதற்கான பணத்தை தர மறுத்துள்ளார
அதைத்தொடர்ந்து, ராமசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் மணியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடம் இருந்த, ரூ.2 ஆயிரத்தை பறித்துள்ளார்கள். இது குறித்து, திருப்பூர் ரூரல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது, அங்கு மூணாறு சிவன்மலை பகுதியை சேர்ந்த வீராச்சாமி(60), தேனி ஒயிட்ஹவுஸ் நகர் கருப்புசாமி(35), தேனி அல்லிநகரம் குட்டைத்தளம் தெருவைச்சேர்ந்த சுரேஷ் பாண்டி(31), தேனி என்.ஆர்.டி நகரைச் சேர்ந்த சாந்தி(40), திருப்பூர் அங்கேரிபாளையம் ஆசிரியர் காலனியைச்சேர்ந்த கேசவன்(46), அனுப்பர்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பார்த்திபன்(48), திருப்பூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி(40), திருப்பூர் திருவள்ளுவர்நகர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த கோபால்(47), திருப்பூர் பெருமாநல்லூர் எஸ்.டி.கே நகரைச்சேர்ந்த பாண்டியராஜன்(45), விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் முருகேசன்(51), திருப்பூர் காமராஜர் நகர் நாகராஜன் (56) உள்ளிட்ட 11 பேர் கொண்ட கும்பலை திருப்பூர் ரூரல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த கும்பல் வேறு யாரிடமாவது நூதன முறையில் பணத்தை ஏமாற்றியுள்ளார்களா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
திருப்பூர்,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்ராட். இவர் திருப்பூர் வளையங்காடு வாசுகி நகர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது 3 வயது மகள் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதன்பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், அதே பகுதியை சேர்ந்த திருப்பூர் அரசு பள்ளியில் படித்து வரும் 17 வயது மாணவன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதைதொடர்ந்து பள்ளி மாணவனை கைது செய்த போலீசார் பொள்ளாச்சியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் மாணவனை சேர்த்தனர்.