Saturday, October 11, 2014
காஞ்சீபுரம் அருகே பஸ்– லாரி மோதிய விபத்தில் 22 பேர் காயம் அடைந்தனர்
காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூர் அருகே உள்ள கணபதிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 40 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் நிறுவனத்தின் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை கணபதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார்.
காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரை–வேடல் கிராமத்துக்கு அருகே அந்த தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்னையில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது.
இதில் பஸ் டிரைவர் மணிகண்டன், சாலையை கடக்க முயன்ற வேடல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 55) இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தொழிலாளர்கள் நாகேந்திரன், சொக்கலிங்கம், அருள், சீனிவாசன், உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மாதவன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சிவக்குமார், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தொழிற்சாலை நிர்வாகத்தினர் காயம் அடைந்தவர்களை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
படுகாயம் அடைந்த பஸ் டிரைவர் மணிகண்டன், ஏழுமலை ஆகியோர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மார்த்தாண்டம் கொடுங்குளத்தில் விஷ பிராணிகளின் புகலிடமாக மாறி வரும் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மார்த்தாண்டம், கொடுங் குளத்தில் கொல்லக்குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த குளத்தில் குளித்து வந்தனர். மேலும், இந்த குளத்தில் உள்ள தண்ணீரை விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் மார்த் தாண்டம் சந்திப்பு பகுதியில் உள்ள சாக்கடை நீர் இந்த குளத்தில் தேங்க தொடங்கியது. அதன்பின்பு, இந்த குளத்து தண்ணீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவு துர்நாற்றம் வீசத்தொடங் கியது. இதனால், குடியிருப் புகள் மத்தியில் அமைந்திருந் தாலும், குளத்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத் துவதை நிறுத்தினர். அதன்பின்பு, இந்த குளத்தில் புல் பூண்டுகள் வளர தொடங்கின. ஆரம்ப நிலையிலேயே புல்பூண்டுகளை அகற்றி குளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குளத்தில் ஏராளமான புல்பூண்டுகள் வளர்ந்து புதர்காடாக மாறத்தொடங்கியது.
தற்போது இந்த புதர்களில் பாம்பு போன்ற பல்வேறு விஷ பிராணிகள் வசித்து வருகின் றன. மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப் பட்ட நிர்வாகத்தினர் இந்த குளத்தை சீரமைத்து, இதில் தேங்கும் நீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இந்த புதர்களில் பாம்பு போன்ற பல்வேறு விஷ பிராணிகள் வசித்து வருகின் றன. மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப் பட்ட நிர்வாகத்தினர் இந்த குளத்தை சீரமைத்து, இதில் தேங்கும் நீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்குமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் ஏராளமான வணிக நிறுவ னங்கள், தினசரி சந்தை, பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், அரசு– தனியார் அலுவலகங்கள், வங்கிகள் போன்றவை உள்ளன. இதனால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் அரசு மற்றும் தனியார் வாகனங் களில் மார்த்தாண்டம் வந்து செல்கிறார்கள். எனவே, மார்த்தாண்டம் நகரில் எப்போதும், வாகன நெருக் கடியும், பொதுமக்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும்.மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டமும், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகளின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது, பஸ் நிலையத்தில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை பல நேரங்களில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளை பார்த்து குரைப்பது, கடிக்க துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. மேலும், நாய்கள் தங்களுக்குள் சண்டை போட்டு வாகனங்களின் குறுக்காகவும், பயணிகள் மத்தியிலும் தாறுமாறாக ஓடுகின்றன. இதனால், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் அஞ்சி ஓடுகிறார்கள். மேலும், தாறுமாறாக ஓடும் நாய்கூட்டம் பல வேளைகளில் வாகனங்களின் குறுக்காக பாய்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போடும் போது விபத்துகள் நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் பஸ் நிலையத்தில் சுற்றி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் பஸ் நிலையத்தில் சுற்றி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குலசேகரம் அருகே ரப்பர் தோட்டத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.குலசேகரம் அருகே திருவரம்பு, குருவிகோடு பகுதியை சேர்ந்தவர் சுசீலா (வயது48). தோட்ட தொழிலாளி. இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். சுசீலா அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, 2 வாலிபர்கள் அங்கு வந்தனர்.அவர்கள் சுசீலாவின் அருகில் சென்று தங்களின் ஆசைக்கு இணங்கும்படி கூறி சில்மிஷம் செய்ததாக கூறப் படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த சுசீலா அலறினார்.அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழி லாளர்கள் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடினர்.இதுகுறித்து சுசீலா குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் அரமன்னம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சந்தோஷ் (19), பிரசாந்த் (21) ஆகியோர் தன்னிடம் சில்மிஷம் செய்ததாக கூறியுள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார், வாலிபர்கள் இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர். பிரசாந்தை போலீசார் தேடி வருகி றார்கள்.
அந்த புகாரின் பேரில் போலீசார், வாலிபர்கள் இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர். பிரசாந்தை போலீசார் தேடி வருகி றார்கள்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி இருசக்கர வாகனங்களை நிறுத்த உத்தரவிட்டார். இந்த உத்தரவை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்றினர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நடந்த வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைப்பதற்காக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேற்று காலை வந்தார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர், அந்த பஸ் நிலையம் முழுவதையும் அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த சுத்திகரிப்பு எந்திரத்துடன் கூடிய குடிநீர் தொட்டி பழுதடைந்திருப்பதையும், குடிநீர் குழாய் சேதம் அடைந்து இருப்பதையும் பார்த்து அவற்றை உடனடியாக சரிசெய்து, பயணிகளுக்கு தரமான குடிநீர் வசதியை செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமாருக்கு உத்தரவிட்டார்.பின்னர் அங்குள்ள கட்டண கழிவறைக்கு சென்றார். அந்த கழிவறையின் ஒரு பகுதியில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த கட்டண விவரத்தை, கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பெரிய எழுத்துக்களில் ஒட்டி வைக்க வேண்டும் என்று காசு வசூலிப்பவர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் கழிவறைக்கு சென்று வந்தவர்களிடம் எவ்வளவு காசு வசூலித்தார்கள்? என்று விவரம் கேட்டறிந்தார். பின்னர் கழிவறைக்குள் சென்று கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும் கழிவறைக்கு வெளிப்பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மண்குவியலை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
அதன்பிறகு பஸ் நிலையத்தின் கீழ் பகுதியில் குப்பைக்கூளங்கள் தேங்காமல் சுகாதாரமாக வைக்க நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பஸ் நிலையத்துக்குள் நகராட்சி கடைகள் அமைந்துள்ள கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது சில கடைக்காரர்கள் கடைக்கு முன்பகுதியில் ஆக்கிரமித்து பொருட்களை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவற்றை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் ஒரு வணிக வளாகத்தின் முன்பும், அங்குள்ள ரோட்டோரத்திலும் போக்குவரத்துக்கு இடையூறாக பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் மற்றும் பயணிகள் இருசக்கர வாகனங்கள் நிறுத்தியிருப்பதை பார்த்தார். அந்த வாகனங்களை பஸ் நிலைய வளாகத்துக்குள்ளேயே, அதாவது பஸ் நிலைய வாயிலின் வெளியே ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் பகுதியின் அருகில் தரை ஓடுகள் பதிக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தவும், தற்போது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் “நோ பார்க்கிங்’’ அறிவிப்பு பலகை வைக்கவும் போலீசாருக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இதனை உடனடியாக நிறைவேற்றும்படியும் கூறினார். மேலும் பஸ் நிலையத்துக்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை நோக்கியபடி வளர்ந்திருந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கலெக்டரின் இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்றும் விதமாக போலீசாரும், நகராட்சி அதிகாரிகளும், பஸ் நிலையத்துக்கு வெளியே ரோட்டோரமாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அனைத்தையும் நேற்று மதியத்தில் இருந்து பஸ் நிலையத்துக்குள் கலெக்டர் குறிப்பிட்ட இடத்தில் மாற்றி நிறுத்தச் செய்தனர். அதன்பிறகு பஸ் நிலையத்துக்கு வெளியே உள்ள சாலையில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இடையூறு எதுவுமின்றி சீராக சென்று வந்தன.
பஸ் நிலையங்களில் கலெக்டர் திடீர், திடீரென ஆய்வு நடத்தி பயணிகளுக்கு பயனுள்ள வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் முக்கடல் அணை 4 ஆண்டுகளுக்குப்பிறகு நிரம்பியுள்ளது. அதிகபட்சமாக அந்த அணைப்பகுதியில் 92 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் நாகர்கோவில் நகரம் உள்பட மாவட்டத்தின் ஒரு பகுதியில் பலத்த மழை பெய்தது. அதேநேரத்தில் மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் வெயிலும், மழை பெய்வதற்கான அறிகுறியும் மட்டுமே காணப்பட்டன.இதுபோல் நாகர்கோவிலில் நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் இருந்தது. பிற்பகலில் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. சுமார் 2.45 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை நேற்று முன்தினம் பெய்த மழையைப்போல் பலமாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமார் 10 நிமிடம் வரை மட்டுமே பெய்த சாரல் பின்னர் ஓய்ந்தது. எனவே நேற்றும் குமரி மாவட்டத்தில் சில இடங்களில் சாரல் மழை தொடர்ந்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டர்) வருமாறு:–பேச்சிப்பாறை– 4, பெருஞ்சாணி– 10.2, முக்கடல்– 92, இரணியல்–1, ஆணைக்கிடங்கு– 11, முள்ளங்கினாவிளை– 4, நாகர்கோவில்–34.4, பூதப்பாண்டி– 55.5, சுருளோடு– 52, கன்னிமார்– 61, ஆரல்வாய்மொழி– 18.6, பாலமோர்– 2.8, மயிலாடி– 17.6 என்ற அளவில் பெய்திருந்தது. இதில் அதிகபட்சமாக முக்கடல் பகுதியில் 92 மி.மீ. அளவு மழை பதிவாகியிருந்தது.நாகர்கோவில் பகுதிக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நேற்று முன்தினம் 24.15 அடியாக இருந்தது. அது நேற்று 25½ அடியாக உயர்ந்தது. 2010–ம் ஆண்டு வரை 25 அடி கொள்ளளவு கொண்டதாக முக்கடல் அணை இருந்தது. அந்த ஆண்டில் அணையின் ஷட்டர் பழுதடைந்ததின் காரணமாக சீரமைப்பு பணி நடந்தபோது ஒரு அடிக்கு சுவர் எழுப்பப்பட்டது. இதனால் தற்போது இந்த அணை 26 அடி கொள்ளளவு கொண்டதாக அமைந்துள்ளது என்றும், எனவே 26 அடிக்குப்பிறகுதான் உபரி நீர் மறுகால் வழியாக வெளியேறும் என்றும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தெரிவித்தார்.முக்கடல் அணை கடந்த 2009–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் முழு கொள்ளளவான 25 அடி கொள்ளளவை எட்டியிருந்தது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இந்த அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சூலூர் போலீஸ் நிலையம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு உள்பட அனைத்து பதிவுகளுக்கும் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சதாசிவம், அழகு கண்ணன், ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை 5.30 மணிக்கு சூலூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர்.
பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் பிரதான நுழைவு வாசலை பூட்டினார்கள். பின்னர் அங்கு அதிரடி சோதனை செய்தனர். இதில் அங்கு பதிவு செய்யப்பட்டு இருந்த கணக்கைவிட ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் அதிகமாக இருந்தது. அதன்பேரில் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து அங்கு வேலை செய்து வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணத்துக்கடவு பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் மடிக்கணினி திருடிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தனியார் கல்லூரிகள்
கிணத்துக்கடவு பகுதியில் பல்வேறு தனியார் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கல்லூரி மாணவர்கள் வைத்தி ருக்கும் மடிக்கணினிகள் திருட்டு போனது. இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசில் புகார் அளிக்கப் பட்டது.
புகாரை தொடர்ந்து இன்ஸ் பெக்டர் முருகேசன், சப்– இன்ஸ்பெக்டர் செல் வநாயகம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் மடிக் கணினிகளை திருடிய திருச்சி மணப்பாறையை சேர்ந்த கணேஷ் (வயது 23) என்பவரை கைது செய்தனர். இவர் பகல் நேரங்களில் ஜோசியம் பார்ப் பது போன்று சென்று மாண வர்கள் தங்கி உள்ள வீடுகளை நோட்டமிட்டு, பின்னர் அவர் கள் இல்லாத நேரத்தில் சென்று மடிக்கணினி களை திருடி உள்ளார். இவர் தற் போது கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள் ளார்.
குண்டர் சட்டத்தில் கைது
கணேஷ் மீது ஏற்கனவே கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், மதுக்கரை போலீஸ் நிலை யத்தில் 5 வழக்குகளும் என மொத்தம் 11 வழக்குகள் உள்ளன. அனைத்து வழக்கு களும் மடிக்கணினி திருடிய வழக்குகள் ஆகும்.
தொடர்ந்து மடிக்கணினி களை திருடி வந்த கணேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகருக்கு, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், இது குறித்து கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் நேற்று மடிக்கணினிகளை திருடிய கணேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் கிணத்துக்கடவு போலீ சார் கோவை மத்திய சிறைச் சாலை அதிகாரிகளிடம் வழங் கினார்கள்.
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2013–14–ம் ஆண்டிற்கு எந்தவித பாகுபாடு மற்றும் உச்சவரம்புகள் இன்றி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை கால முன்பணம் வழங்காததை உடனடியாக வழங்க வேண்டும், பணிமனையில் முழுமையாக தொழில்நுட்ப பணிகளை ஒப்பந்த முறைக்கு கொண்டு வருவதை தடுப்பதுடன், ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள் ளாச்சி கூட்செட் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி பாபு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. ஜேசுமாணிக்கம் முன்னிலை வகித்தார். முன்னதாக எச்.எம்.எஸ். மோகன்ராஜ் வரவேற்று பேசினார். இதில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த மணி முருகன் நன்றி கூறினார்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...




