Wednesday, October 15, 2014
On Wednesday, October 15, 2014 by Unknown in Tiruppur
கிராம சபை கூட்டம் -குடிமங்கலம் ஒன்றியம் ஆமந்தகடவு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி வளாகம்தலைமை:கு கோவிந்தராஜ் , திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ,உடுமலை கோட்டாட்சியர் குணசேகரன் ,வட்டாட்சியர் சைபுதீன் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் திரளான பொது மக்கள் பங்கேற்றனர் .

திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்றும் மதுரை – கன்னியாகுமரி – கொல்லம் செல்லும் தேசிய சாலைகளை இணைக்கும் சாலையாக உள்ளது.
இதில் காரியாபட்டி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் இருந்தது. அதிக வாகனங்கள் சென்றதால் ரயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மழை பெய்யும் போது மழைநீர் தேங்காமல் இருக்க பக்கவாட்டில் துளை அமைக்கப்பட்டு அதன் வழியே மழைநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாமல் மண் தேங்கி துளையை அடைத்துவிட்டது.
தற்போது கடந்த சில தினங்களாக மழை பெய்து முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. பள்ளம் இருப்பதை தெரிந்தவர்கள் ஓரமாக செல்கின்றனர். தண்ணீர் சற்று அதிகமாக இருக்கும் போது வாகனங்களின் புகை போக்கி வழியாக தண்ணீர் சென்று விடுகிறது. இதனால் வாகனம் ஓடாமல் நின்றுவிடுகிறது.
அப்போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி தள்ளி செல்கின்றனர். சிலர் தண்ணீரீல் விழுந்து விடுகின்றனர். இந்த நிலையை போக்க ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையின் கீழ் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணியில் நெல் வணிக வளாகம் மற்றும் பூ மார்க்கெட் உள்ளது. இதன் முன்பு, சாலையோரத்தில் 8–க்கும் மேற்பட்ட கடைகள் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
ஆனால் இந்த கடைகள், மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற வில்லை என்று கூறப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த கடைகளை அப்புறப்படுத்த முடிவு செய்தது.
இன்று காலை, நகரமைப்பு அதிகாரி ரெங்கநாதன், உதவி ஆணையாளர்கள் தேவதாஸ், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் ‘‘புல்டோசர்’’ மூலம் அந்த கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளினர்.
அப்போது கடை உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அண்ணாநகர் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன.

மதுரை அருகே திருமங்கலத்தில் கடந்த 2002–ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, புலவர் செவந்தியப்பன் உள்பட 9 பேர் விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதாக அவர்கள் மீது கியூ பிரிவு போலீசார் பொடா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. பல கட்ட விசாரணைக்கு பின் நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விசாரித்து பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 2002–ம் ஆண்டு திருமங்கலம் பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் விடுதலை புலிகளை பற்றி பேசியதை தான் இங்கும் பேசினேன். இதனால் எங்கள் மீது அப்போதைய அ.தி.மு.க. அரசு பொடா வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து நான் திரும்பியபோது என்னை கைது செய்தனர். அதை நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்தோம். பொடா கோர்ட்டில் நானே வாதாடினேன். இதை தொடர்ந்து நீதிபதி சகாரியா தலைமையில் மறு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அவர் ஆய்வு செய்து வைகோ மற்றும் அவரது சகாக்கள் மீது பொடா வழக்கு போட எந்த முகாந்திரமும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு இந்திய வரலாற்றில் முக்கியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு
பணம் அனுப்பப்படுகின்றது. இதில் பலமுறை கள்ள நோட்டுகள் வருவதாக ரிசர்வ்
வங்கி புகார் கூறி வருகிறது.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் 50–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதனால் மதுரையில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 2 வாலிபர்கள் ஒரு கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்று கைதானார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவா? என தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை வங்கியில் இருந்து சமீபத்தில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தில் 3 ஐந்நூறு ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரி மதுரை குற்றப்பிரிவு போலீசில் மீண்டும் புகார் செய்தார். தொடர்ந்து மதுரை வங்கிகளில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகள் வருவதால் இவை எங்கிருந்து வருகின்றன. எவ்வளவு நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளன என்பது ‘மர்ம’மாக உள்ளது.
இதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்கள்யான் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து கொண்டுள்ளது.
இந்த விண்கலத்தை அனுப்புவதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக
பணியாற்றினார்கள். இந்த விண்கலம் அனுப்புவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள்
குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜெயச்சந்திரன், பால்பாண்டி ஆகியோர் மதுரையில்
நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளக்க மளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:–
மங்கள்யான் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு உலகளவில் இந்தியா குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த விண்கலத்தை அனுப்புவதற்காக இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பாடுபட்டுள்ளனர். அடுத்ததாக சந்திரயான்2 விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த விண்கலம் சந்திரனில் இறங்கும் படி வடிவமைக்கப்படுகிறது. சூரியனைப்பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா என்ற திட்டமும் உள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் நிறைய இளைஞர்கள் இந்த துறையை போட்டி போட்டு தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் மங்கள்யான் போல பல்வேறு விண்கலங்களை அனுப்புவதற்கு நமக்கு நிறைய விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். அதாவது, இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வம் இளைஞர்களிடம் வளர வேண்டும். அதன் மூலம் உலகம் நமது நாட்டை திரும்பிப் பார்க்க வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகில் இந்தியா தனி முத்திரை பதிக்க இளைஞர்கள் விண்வெளி ஆராய்ச்சித்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:–
மங்கள்யான் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு உலகளவில் இந்தியா குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த விண்கலத்தை அனுப்புவதற்காக இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பாடுபட்டுள்ளனர். அடுத்ததாக சந்திரயான்2 விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த விண்கலம் சந்திரனில் இறங்கும் படி வடிவமைக்கப்படுகிறது. சூரியனைப்பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா என்ற திட்டமும் உள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் நிறைய இளைஞர்கள் இந்த துறையை போட்டி போட்டு தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் மங்கள்யான் போல பல்வேறு விண்கலங்களை அனுப்புவதற்கு நமக்கு நிறைய விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். அதாவது, இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வம் இளைஞர்களிடம் வளர வேண்டும். அதன் மூலம் உலகம் நமது நாட்டை திரும்பிப் பார்க்க வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகில் இந்தியா தனி முத்திரை பதிக்க இளைஞர்கள் விண்வெளி ஆராய்ச்சித்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...


