Saturday, October 18, 2014

On Saturday, October 18, 2014 by farook press in ,    
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி விஜயமங்கலம் ரோட்டில் தியானேஸ்வரன்(வயது 26) என்பவர் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஆலைக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பை மாற்றி உயர் அழுத்த மின் இணைப்பு வழங்க மின்வாரியத்தினர் பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் தியானேஸ்வரன் தனது அரிசி ஆலைக்கு உயர் அழுத்த மின்இணைப்பு அனுமதிக்க கேட்டு திருப்பூர் அவினாசி ரோடு குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த செயற்பொறியாளர் சுப்பிரமணியம் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பை மாற்றி கொடுப்பதாக கூறியுள்ளார்.அவ்வளவு தொகை தன்னால் கொடுக்க முடியாது என்று தியானேஸ்வரன் கூறவே, இருவரும் பேரம் பேசி முடிவில் ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பை மாற்றி கொடுக்கிறேன் என்று சுப்பிரமணியம் கூறியுள்ளார். ஆனால் தியானேஸ்வரனுக்கு லஞ்சம் கொடுப்பதில் சிறிதும் விருப்பம் இல்லை. இதனால் அவர் இதுகுறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
உடனே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூ.20 ஆயிரத்துக்கு ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை தியானேஸ்வரனிடம் கொடுத்து, அதை செயற்பொறியாளர் சுப்பிரமணியத்திடம் கொடுக்கும்படி கூறினார்கள். அதன்படி நேற்று காலை தியானேஸ்வரன் போலீசார் கொடுத்த பணத்துடன் திருப்பூர் அவினாசி ரோடு குமார்நகரில் உள்ள திருப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றார்.அங்கு தனது அலுவலக அறையில் இருந்த செயற்பொறியாளர் சுப்பிரமணியத்திடம் ரசாயன பொடி தடவிய 20 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுக்களை தியானேஸ்வரன் கொடுத்தார். அதை சுப்பிரமணியம் வாங்கி தனது மேஜை டிராயரில் வைத்ததாக தெரிகிறது. உடனே அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் பொறியாளர் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் சுப்பிரமணியத்திடம் லஞ்சஒழிப்பு போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். இதைதொடர்ந்து பொறியாளர் சுப்பிரமணியத்தின் மீது ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் திருப்பூர் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் சுப்பிரமணியத்தை ஆஜர்படுத்தி அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
On Saturday, October 18, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுதிருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடகைக் கட்டணம் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி முதல் 18 கிலோ மீட்டர் தூரம் வரையில் குறைந்தபட்ச வாடகை ரூ.25–ம், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12–ம், காத்திருத்தல் கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50–ம் வசூலிக்க வேண்டும். இரவு நேர கட்டணமாக (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) மேற்கண்ட கட்டண விகிதங்களில் வாடகை கட்டணம் கணக்கிட்டு மொத்த தொகையில் கூடுதலாக 50 சதவீதம் வசூல் செய்துகொள்ளலாம்.ஏற்கனவே சென்னை மாநகரில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகை திருத்தி அமைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மற்றும் இதர மாவட்டங்களுக்கு ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி நிர்ணயம் செய்து இயக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாடகை ஆட்டோ ரிக்ஷா கட்டணம் இன்று(சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. எனவே ஆட்டோ ஓட்டுபவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களில் தற்போது பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் மீட்டர் கட்டணமானிகளில் புதிய கட்டணத்தை திருத்தி அமைக்க 45 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட கட்டண விகிதத்தை எழுதப்பட்டோ, அல்லது அச்சடிக்கப்பட்டோ வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பார்வையில் படும்படியாக ஒட்டப்பட வேண்டும்.
On Saturday, October 18, 2014 by farook press in ,    
பல்லடம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 கிளை மாநாடுகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம் வருமாறு: பல்லடம் 4, 5வது வார்டு - எஸ்.காஜா, பல்லடம் 6வது வார்டு - அங்குராஜ், 15வது வார்டு - வி.எம்.இஸ்மாயில், சிடிசி - கிருஷ்ணசாமி, வடுகபாளையம் - ஏ.கிருஷ்ணசாமி, பகத்சிங் நகர் - செல்வராஜ், கிடாத்துறை புதூர் - சென்னியப்பன், வி.அய்யம்பாளையம் (வடக்கு) - ஏ.இ.சுப்பிரமணி, வி.அய்யம்பாளையம் (தெற்கு) - ஈஸ்வரமூர்த்தி, கரடிவாவி - முருகசாமி, காளிவேலம்பட்டி (மாதர்) - பரிமளா, காளிவேலம்பட்டி - ரவிராஜ், ராசக்கவுண்டன்பாளையம் - பழனிசாமி, சின்னியகவுண்டம்பாளையம் - ஜெயபிரகாஷ், உப்பிலிபாளையம் - பழனிசாமி, காமநாயக்கன்பாளையம் - வைஸ் சுப்பிரமணியம், கணபதிபாளையம் - முருகசாமி, செல்வலட்சுமிநகர் - ஜெயராமன், டெக்ஸ் கலாஸ் - ஜாகீர் உசேன், பல்லடம் 14, 16 வார்டுகள் - ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாடுகளில் பல்லடம் ஒன்றியக்குழுச் செயலாளர் ப.கு.சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பரமசிவம், வி.பழனிச்சாமி, ஆஸாத், ஆர்.பால்ராஜ், ஆர்.ஜி.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

On Saturday, October 18, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள சக்தி ஆட்டோ காம்போனன்ட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 16.66 சதவிகிதம் போனஸ் வழங்க உடன்பாடு காணப்பட்டது.
சக்தி நிறுவனத் தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டு போனஸ் வழங்குவது குறித்து நிர்வாகத்துக்கும் சிஐடியு நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்கனவே மூன்று கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற நான்காவது கட்டப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தரப்பில் முதுநிலைத் துணைத் தலைவர் (மனிதவளம்) முத்துவேலப்பன், துணைப் பொது மேலாளர் (தொழில் உறவு மற்றும் நலம்) கே.ஆர்.ராஜேந்திரன், துணை மேலாளர் எஸ்.சுரேஷ்குமார் (தொழிலாளர் நலப்பிரிவு) ஆகியோர் பங்கேற்றனர்.
சிஐடியு சார்பில் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மகாலிங்கம், பொதுச் செயலாளர் ஜெ.கந்தசாமி, பொருளாளர் வி.காமராஜ், துணைத் தலைவர் ஆர்.பழனிச்சாமி, துணைச் செயலாளர் கே.கண்ணையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் நடப்பு ஆண்டு தொழிலாளர்களுக்கு 16.66 சதவிகிதம் போனஸ் வழங்குவதென்று முடிவு காணப்பட்டது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.66 சதவிகிதம் உயர்வு ஆகும். ஒரு தொழிலாளிக்கு சராசரியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாகக் கிடைக்கும். நிரந்தரத் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் இதில் பயனடைவார்கள். 
பயிற்சி பழகுநர் (அப்பரன்டிஸ்) மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் வழங்கவும் இருதரப்பு உடன்பாடு காணப்பட்டது. இதன் மூலம் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் பயனடைவர் என்று சிஐடியு சங்கச் செயலாளர் ஜெ.கந்தசாமி தெரிவித்தார்.

Friday, October 17, 2014

On Friday, October 17, 2014 by Unknown in ,    




On Friday, October 17, 2014 by farook press in ,    


On Friday, October 17, 2014 by farook press in ,    
On Friday, October 17, 2014 by farook press in ,    
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

தையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரது சார்பிலும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அவசரமாக ஜாமீன் வழங்கத் தேவையில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் வயது மற்றும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.
இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமியும் உச்ச நீதிமன்றம் வந்தார். ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (17ஆம் தேதி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோகூர், பி.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வு முன்னர் நடைபெற்றது.
வாதத்தின்போது சுப்பிரமணியன் சுவாமி, " நீதிமன்றம் அதிமுகவினர் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அதிமுகவினர் தமிழக்த்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக நீதிமன்றத்தையும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் அவமதித்து வருகின்றனர்.கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கன்னடர் என்பதாலேயே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததாகவும் அவதூறு பரப்புகின்றனர். நான், சென்னைக்கு சென்றால் எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.
ஜெயலலிதா, அவரது கட்சித் தொண்டர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்தால் மட்டுமே வன்முறைகள் முடிவுக்கு வரும். இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், "ஜெயலலிதா முக்கிய பதவி வகித்தவர் என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க சொல்லித்தான் வாதம் செய்தோம். தண்டனைக்கு தடை தடை விதிக்கக் கோரி வாதாடவில்லை. சிறையில் இருப்பதால் மருத்துவ வசதிகளை ஜெயலலிதாவால் பெற முடியவில்லை. ஜாமீன் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என்றார்.
அப்போது நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைத்தால் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, தண்டனையை நிறுத்தி வைப்போம் என நினைக்க வேண்டாம் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.
ஜெயலலிதா தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்தார். அதை கருத்தில் கொண்டால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் 20 ஆண்டுகள்கூட இழுத்தடிப்பார்.

எனவே, ஜாமீன் வழங்கியத்தில் இருந்து 6 வாரத்துக்குள், அதாவது டிசம்பர் 18 ஆம் தேதிக்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஒரே ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது. மீறினால் ஜாமீன் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது வரும். குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 18 ல் கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும்.அதேபோல், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
ஜெயலலிதா உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் ஜெயலலிதா கருத்துகள் வெளியிடக் கூடாது" என்றனர்.
இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் சுசில்குமார் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு டிசம்பர் 18 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். வழக்கையும் அன்றைய தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் உடல் நலக்குறைவை காரணம் காட்டியே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் வழங்கப்பட்டுள்ள 2 மாத காலத்திற்கும் ஜெயலலிதா வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்றும், சாதாரண நபர் போன்று வெளியில் செல்லக்கூடாது என்றும், டாக்டர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.மேலும் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தண்டனை வழங்கியதை தொடர்ந்தும், கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததை தொடர்ந்தும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என்றும், அதிமுகவினர் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தாமல் ஜெயலலிதா பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.முன்னதாக ஜெயலலிதாவுக்காக ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் பாலி நாரிமனும் இது தொடர்பான உத்தரவாதத்தை அளித்தார்.இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு வெளியேயும், ஜெயலலிதாவின் இல்லம் அமைந்திருக்கும் போயஸ் கார்டன், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திலும் திரண்டிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இன்றைய தினம் அதிமுகவின் 43 வது ஆண்டு விழா கொண்டாட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஜெயலலிதா சிறையில் இருப்பதால், அக்கட்சியினர் காலையில் உற்சாகமின்றியே காணப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பகல் 12.15 மணி அளவில் ஜாமீன் கிடைத்ததாக தகவல் கிடைத்த பின்னரே அதிமுகவினரிடம் உற்சாகம் காணப்பட்டது.ஜாமீன் உத்தரவாதத்தை நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவிடம் ஜெயலலிதா வழக்கறிஞர்கள் வழங்க உள்ளனர். இந்த உத்தரவாதத்தை ஏற்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா ஜாமீனில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்த பின்னரே ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் ஜாமீனில் விடுதலை ஆக முடியும். ஒருவேளை குன்ஹா இல்லையென்றாலும், சம்பந்தப்பட்ட நீதிமன்ற அலுவலகமே, தேவையான ஜாமீன் உத்தரவாத ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்கலாம். எனவே ஜெயலலிதா இன்று மாலை அல்லது நாளை விடுதலை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறதஇந்நிலையில் சிறையில் இருந்து வெளிவரும் ஜெயலலிதாவை விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சென்னை வரும் ஜெயலலிதா நேரடியாக தனது போயஸ்கார்டன் இல்லத்திற்கு செல்வாரா அல்லது உடல் நலக்குறைவுக்காக மருத்துவமனைக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.உடல்நலக்குறைவை காரணம் காட்டியே ஜாமீன் பெறப்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

On Friday, October 17, 2014 by farook press in ,    
திருப்பூர் சிறு விசைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், விசைத்தறி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற போனஸ் பேச்சுவார்த்தையில் இந்த ஆண்டு 16.60 சதவிகிதம் போனஸ் தொழிலாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
திருப்பூரில் புதன்கிழமை இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிறு விசைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் முருகேசன், செயலாளர் சந்திரபோஸ், பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோரும், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், விசைத்தறி தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி, நிர்வாகிகள் என்.பாலகிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.
இதில் கடந்த ஆண்டு விசைத்தறி தொழிலாளர்களுக்கு 16.50 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 0.10 சதவிகிதம் அதிகரித்து 16.60 சதவிகிதம் போனஸ் தொகையை பட்டுவாடா செய்வதென்று இருதரப்பினர் ஏகமனதாக முடிவு செய்தனர்.