Monday, October 20, 2014
சுல்தான்பேட்டை ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் 501 நிர்வாகிகள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையானதை யொட்டி மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றி மலைக்கோவில் சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்க்கபப்ட்டது.இந்த கழ்ச்சியில் மாவட்ட பேரவை தலைவர் நாச்சிமுத்து, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திருமலைசாமி, தலைவர் ஜெயச்சந்திரன் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி பேரவை செயலாளர் எஸ்.பி.ரங்கசாமி, வாரப்பட்டி ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் பிரபுராம் பிரபனேஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் யு.ஆர்.கிருஷ்ணன் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மண்டல பொறுப்பாளர்கள் ரத்தினசாமி, தியாகராஜன், பழனிசாமி, ஆறுமுகம், மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் சமுதாயப் பணியாற்றி வரும் நபர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தபேலா இசைக் கலைஞர் ஆறுமுக நாயனார், பார்க் விரிவாக்க நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மங்கயர்க்கரசி, ஆன்மிக பணியாற்றி வரும் ஆர்.வி.எஸ்.ஆறுமுகம், விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆர்.பிரபாகரன் ஆகிய 4 பேருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது .
இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மண்டலச் செயலர் மார்ட்டின், மாவட்ட உதவி ஆளுநர் டாக்டர் பிரிசில்லா ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். பட்டுக்கோட்டை பாஸ்கர் சிறப்புரையாற்றினார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க ஆலோசகர் டாக்டர் எஸ்.சுந்தரராஜன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், நாகராஜ் ஆகியோர் நன்றி கூறினர். சக்கரபாணி, ஆனந்த், சரவணகுமார், குமரன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற்றதை யொட்டியும்,மேலும் வழக்கிலிருந்தும் அவர் முழுமையாக விடுதலையாக வேண்டியும்,சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு யாகங்கள் நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அவர் தலைமையில் கொழுமம் காசி விஸ்வநாதர் கோவிலில் 108 சங்கு வைத்துஅபிஷேகம், சிறப்பு யாகம் செய்து மேலும் கோட்டை மாரியம்மன் கோவில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் திருக்கோவிலிலும் கடத்தூர் அருள்மிகு அர்ச்சனேஸ்வரர் அங்கப்பிரதட்சனம் திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வர் கோவிலிலும் பாலபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் சந்தன அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் சிறப்பு வழிபாடுகள் செய்தார். இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் ஒன்றிய செயலாளர் மெட்ராத்தி அண்ணாதுரை, மாவட்ட பேரவை செயலாளர் வாசுதேவன், ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், குமரலிங்கம் பேரூர் கழக செயலாளர் வரதராஜ் குமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் சிவக்குமார் துணைத்தலைவர் சிவலிங்கம் அமராவதி பாசன சபைத்தலைவர் எஸ்.ராஜ்குமார் திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் .பழனிச்சாமி துணைதலைவர் தண்டபாணி கொழுமம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி மயில்சாமி, கடத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராசு, மடத்துக்குளம் வீட்டு வசதி சங்க தலைவர் ஏசுதுரை நீலம்பூர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடகைக் கட்டணம் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி முதல் 18 கிலோ மீட்டர் தூரம் வரையில் குறைந்தபட்ச வாடகை ரூ.25–ம், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12–ம், காத்திருத்தல் கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50–ம் வசூலிக்க வேண்டும். இரவு நேர கட்டணமாக (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) மேற்கண்ட கட்டண விகிதங்களில் வாடகை கட்டணம் கணக்கிட்டு மொத்த தொகையில் கூடுதலாக 50 சதவீதம் வசூல் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே சென்னை மாநகரில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகை திருத்தி அமைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மற்றும் இதர மாவட்டங்களுக்கு ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி நிர்ணயம் செய்து இயக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாடகை ஆட்டோ ரிக்ஷா கட்டணம் நேற்று (சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. எனவே ஆட்டோ ஓட்டுபவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களில் தற்போது பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் மீட்டர் கட்டணமானிகளில் புதிய கட்டணத்தை திருத்தி அமைக்க 45 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட கட்டண விகிதத்தை எழுதப்பட்டோ, அல்லது அச்சடிக்கப்பட்டோ வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பார்வையில் படும்படியாக ஒட்டப்பட வேண்டும்.

Sunday, October 19, 2014
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் கட்டுப்பாட்டை காட்ட வேண்டும், எல்லையில் இரு நாடுகளும் துப்பாக்கி சூட்டை நிறுத்திக் கொள்ளவேண்டும் மற்றும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் துப்பாக்கி சூடு தொடர்பாக சீனா வெளியுறவுத் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ பேசுகையில் “நிலைமையை சீனா மிகவும் கவனத்துடன் கவனித்து வருகிறது. அண்டைய மற்றும் நண்பர்களான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு பக்கங்களிலும் கட்டுப்பாட்டை காட்டுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இருநாடுகளும் துப்பாக்கி சூட்டை நிறுத்த வேண்டும். பிரச்சனையை தீர்க்க இருநாடுகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.” என்றார். மேலும், ஹாங் பேசுகையில், தெற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை பாதுகாக்க அவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். என்று கூறினார்.

கடந்த 1–ந் தேதி முதல் காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் ஆத்திரமூட்டும் வகையில் தொடர் தாக்குதல்கள் நடத்தியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயம் அடைந்தனர். இந்தியாவும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்தது. இதில் அந்த தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா விடுத்த எச்சரிக்கை காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் பாகிஸ்தான் அமைதியை கடைப்பிடித்து வருகிறது. ஆனாலும், அவ்வபோது பாகிஸ்தான் வேலையை காட்ட ஆரம்பிக்கிறது. இந்தியா பதிலடி கொடுக்கிறது.
இந்நிலையில் 'பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதலை முன்னெடுக்க முடியாது' என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் எல்லை நிலவரம் குறித்து பேசிய சுர்தாஜ் அஜிஸ், பாகிஸ்தானை குற்றம் சாட்ட, எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டத்திற்கு இந்திய அரசின் சதியே காரணம், சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக, எல்லைப் பிரச்சனையை சுயநலத்திற்காகப் பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதலை முன்னெடுக்க முடியாது. அத்தகைய நடவடிக்கையில் பாகிஸ்தானின் பதிலடி தெரியும். எல்லையில் ராணுவம் முழு எச்சரிக்கையுடன் உள்ளது. சரியான பதிலடி கொடுக்கும் திறன் ராணுவத்திற்கு உள்ளது. இருநாடுகள் இடையில் நல்ல நட்புறவு இருந்தால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க சாத்தியம் உள்ளது. என்று கூறியுள்ளார்.

அந்நாட்டு சட்டத்தின்படி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்களது சொத்துமதிப்பை ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்க வேண்டும். இந்த ஆண்டு சொத்துமதிப்பை தெரிவிக்க உறுப்பினர்களுக்கு கூடுதலாக 15 நாட்கள் தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்திருந்தது. தேர்தல் ஆணையம் உறுப்பினர்கள் சொத்து மதிப்பை தெரிவிக்க அக்டோபர் 15-ம் தேதியை இறுதி நாளாக அறிவித்தது. ஆனால் 210 உறுப்பினர்கள் தங்களது சொத்து மற்றும் பொறுப்புக்களை தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து தாக்கல் செய்யாத நபர்களை பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் கலந்துக் கொள்ள முடியாத வண்ணம் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. எனினும், உறுப்பினர்கள் தங்களது கடமையை நிறைவேற்றும் போது அவர்கள் உறுப்பினராக செயல்பட முடியும். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிரதமர் நவாஸ் செரீப்பின், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...