Tuesday, October 28, 2014
வெள்ளகோவில் நகராட்சி 14வது வார்டைச் சேர்ந்த தீத்தாபாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தார் நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விசைத்தறி பாவு நூல் ஓட்டக் கூடியவர்களாகவும், விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் ஏழ்மை நிலையில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
எனவே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் இந்த பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பத்தார் திங்களன்று இப்பகுதி விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணனுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜை நேரில் சந்தித்து நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரினர்.
செங்கப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் மோசடியில் சிக்கியுள்ள நகைகளை மீட்டுத்தர பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆர்.பழனிச்சாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனுக் கொடுத்தனர்.
செங்கப்பள்ளி கூட்டுறவு சங்கச் செயலர் சோமசுந்தரம், நிர்வாகப் பொறுப்பில் இருந்த தலைவர் சின்னசாமி உள்ளி்டவர்களால் நடைபெற்ற மோசடி காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 20ம் தேதி முதல் மாநில அமைச்சர், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பல தடவை சந்தித்து முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த சங்கத்தில் நகைகள் சிக்கியிருக்கும் காரணத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஏற்கனவே நகைகளைத் திரும்ப அளிப்பதாக உறுதியளித்த பிறகு, கூட்டுறவு துணைப் பதிவாளரும், சங்கத் தலைவரும் அந்த நகைகளை திரும்ப அளிக்காமல் மறுத்து வருகிறார்கள்.
கடன் பெற்றோர் உண்மையான அசல் அதற்குண்டான வட்டியை செலுத்த தயாராக இருக்கிறார்கள். எனவே எங்களது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Monday, October 27, 2014
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றின் துணை ஓடைகளான சங்கிலி பள்ளம் மற்றும் ஜம்மனை பள்ளம் ஓடைகளில் காலை 6 மணி முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் ஓடை அருகில் இருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை புகுந்தது. இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி, மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டன. திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் வருவாய் துறை அதிகாரிகளுடன் சங்கிலிப்பள்ளம், ஜம்மனை பள்ளம் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி, ஆணையாளர் மா.அசோகன், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் தட்டான் தோட்டம், டை யமண்ட் தியேட்டர், சந்தைப் பேட்டை பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மழை வெள்ளம் வீடுகளுக்குள் மேலும் புகாதவாறு ஓடைகளில் அடைப்புகளை நீக்கவும் உத்தரவிட்டனர். மேலும் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கே.வி.ஆர் நகர் மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர மேயர் அ.விசாலாட்சி உத்தரவிட்டார்.
இது குறித்து திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் சங்கிலி பள்ளம், மற்றும் ஜம்மனை பள்ளம் ஓடைகளில் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே தூர்வாரி நீரோட்டம் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. இதனால் இந்த ஓடைகளில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள போதும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் தாழ்வான சில பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து விடும் என்பதால் அதிகாலை 4 மணி முதல் மக்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காங்கயம்புதூர் பள்ளி, கே.ஜி.கல்யாண மண்டபம், செல்லப்பபுரம் பள்ளி, எச்.எம்.எஸ்.மஹால், செம்மேடு, கருப்பகவுண்டம்பாளையம் உள்ளிட்ட 10 இடங்களில் 3069 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக் கு காலையில் இட்லி மதியம் சாப்பாடு, தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்ப்ட்டுள்ளவர்களுக்கும், ஓடைகளின் கரையில் வசிப்பவர்களுக்கும் மழைக்கால நோய்தடுப்பு சிகிச்சை மற்றும் நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மழை நீர் அதிகம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் 11 ஜே.சி.,பி. இயந்திரங்கள் மூலம் வடிகால்கள் அமைத்து மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுவது தடுக்கப்பட்டு வருகிறது. குப்பைகள் அள்ளுவது, சாக்கடை அடைப்புகளை நீக்குவது, வெள்ளம் புகுந்த வீடுகள், வீதிகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு தெளிப்பது போன்ற சுகாதார பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும் தேவையான அளவு அனைத்து வசதிகளும் தயார் படுத்தப்பட்டு எந்த ஒரு அவசர நிலையிலும் மக்களுக்கு உதவ மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. பொதுமக்கள் மழை வர துவங்கிய உடனேயே தாழ்வான பகுதிகளை விட்டு, அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பள்ளிகளில் வந்து தங்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர பொறியாளர் எம்.ரவி,உதவி பொறியாளர் தமிழ்செல்வன், உதவி ஆணையாளர்கள், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சென்று இருந்தனர்.
விடிய விடிய பெய்த மழையால் பல வீடுகளில் முன்புறம் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. திருப்பூர் நகரில் மையப்பகுதியில் ஓடும் ஜம்மனை ஆறு, சங்கிலிபள்ளம் ஓடை ஆகியவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக ஆற்றின் கரை ஓரங்களில் உள்ள வெள்ளியங்காடு முத்தையன்கோவில், ஜம்மனை பள்ளம், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், நேருஜிநகர், பி.கே.ஆர்.காலனி, பெரியதோட்டம், சத்யாநகர் பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள 100–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு இருந்தவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
பெரும்பாலான வீடுகள் சேதம் அடைந்தன.இந்த வெள்ளப்பெருக்கில் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம், கல்லாங்காடு பகுதியில் உள்ள தரைபாலங்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. காங்கயம் ரோடுபுஷ்பா நகர் பகுதியில் உள்ள பாலத்தில் வெள்ளநீர் அளவுக்கு அதிகமாக வந்ததால், தண்ணீர் செல்வதற்காக அந்த பாலத்தின் இணைப்பு சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து, வெள்ளநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், மேயர் அ.விசாலாட்சி, மாநகராட்சி ஆணையாளர் மா.அசோகன், துணைமேயர் சு.குணசேகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை சங்கிலிப்பள்ளம் கரையோர பகுதிகளில் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லாதவாறு ஓடையில் இருக்கும் அடைப்புகளை எடுக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். இதுதவிர சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள பாலங்களில் மின்விளக்குகள் அமைத்து தொடர்ந்து வெள்ளத்தை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மழை வெள்ளத்தால் பதிக்கப்பட்ட குடும்பத்தினரை அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடங்களிலும், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இன்னும் 2 நாள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்திரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 2,448 ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.இதில் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பல்வேறு பள்ளிகளில் நடந்த முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைதொடர்ந்து, பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற நவம்பர் 10ம் தேதிவரை, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி நடைபெறும். பெயர் சேர்க்க படிவம் 6ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7ம், விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8ம், பட்டியல் பதிவை இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகிய படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊராட்சி சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்ட பிறந்த தேதி சான்று அல்லது பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ் நகல்கள் அல்லது பெற்றோரின் உறுதிமொழி சான்றுகளை, படிவம் 6 வுடன் இணைத்து, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 2015 ஜனவரி 1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தியடைபவர்கள் புதிதாக பெயர் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். தொழிலாளர்கள் நலன் கருதி, விடுமுறை நாளான நேற்று, மாவட்டம் முழுவதுமும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை நடந்த இந்த முகாமில், இளைஞர்களும், பொதுமக்களும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், படிவம் பெற்று, பூர்த்தி செய்து வழங்கினர். குறிப்பாக, புதிதாக பெயர் சேர்ப்பதற்காக, விண்ணப்ப படிவம் 6, அதிக அளவில் பெற்று பூர்த்தி செய்து வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் நவம்பர் 2ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, நவம்பர் 10 வரை, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் படிவங்கள் பெறப்படும்.
இந்த படிவங்களை பரிசீலானை செய்து 2015 ஜனவரி 5ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, புதிதாக பெயர் சேர்க்கும் வாக்காளர்களுக்கு, ஜன., 25 முதல் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் குமார்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பல்லடம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வஞ்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, காமநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமினை ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் அமராவதி ஆற்றில் கலக்கும் போது காட்டாற்று வெள்ளம் உருவாகும் அபாயம் உள்ளது.
இது குறித்து உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாசியர் (ஆர்.டி.ஓ) சாதனைக்குறள், தாசில்தார்கள் சைபுதீன் (உடுமலை), சண்முகவடிவேல் (மடத்துக்குளம்) ஆகியோர் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் அமராவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறித்தி உள்ளனர். மேலும் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றில் இறங்க வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்தும் உள்ளனர்.
இந்த நிலையில் அமராவதி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அமராவதி அணையின் நீர் மட்ட உயரம் 90 அடியாகும். மொத்த கொள்ளளவு 4 ஆயிரத்து 47 மில்லியன் கன அடியாகும். நேற்று காலை நிலவரப்பட்டி நீர் மட்ட உயரம் 82.67 அடியாக உயர்ந்து. அணைக்கு வினாடிக்கு 1532 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 3 ஆயிரத்து 400.25 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடி. மொத்த கொள்ளளவு 1935 மில்லியன் கன அடியாகும். அணையின் நேற்றைய நீர் மட்ட உயரம் 39.73 அடியாகும். அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 836 கனஅடி தண்ணீரும், பாலாறு மூலம் வினாடிக்கு 10 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. அணையில் 1114 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1185 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டர் மழையும், நல்லாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.பல்லடம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள சங்கிலிப்பள்ளம் ஓடையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் நேரம் ஆக, ஆக தண்ணீர் வரத்து குறைந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் சங்கிலிப்பள்ளம் ஓடையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன்காரணமாக வெள்ளியங்காடு முத்தையன்கோவில், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், நேருஜிநகர், பி.கே.ஆர்.காலனி, பெரியதோட்டம், சத்யாநகர் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள 50–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு இருந்தவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம், கல்லாங்காடு பகுதியில் உள்ள தரைபாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. காங்கயம் ரோடு, புஷ்பாநகர் பகுதியில் உள்ள பாலத்தில் வெள்ளநீர் அளவுக்கு அதிகமாக வந்ததால், தண்ணீர் செல்வதற்காக அந்த பாலத்தின் இணைப்பு சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து, வெள்ளநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், மேயர் அ.விசாலாட்சி, துணைமேயர் சு.குணசேகரன் ஆகியோர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லாதவாறு ஓடையில் இருக்கும் அடைப்புகளை எடுக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். மேலும் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை சங்கிலிப்பள்ளம் கரையோர பகுதிகளில் தொடர்ந்து நேரில் சென்று கண்காணித்து வருகின்றனர். இது தவிர சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள பாலங்களில் மின்விளக்குகள் அமைத்து தொடர்ந்து வெள்ளத்தை கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறனர். அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுடன் மாநகரா ட்சி மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் சென்று இருந்தனர்.
இதன்காரணமாக வெள்ளியங்காடு முத்தையன்கோவில், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், நேருஜிநகர், பி.கே.ஆர்.காலனி, பெரியதோட்டம், சத்யாநகர் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள 50–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு இருந்தவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம், கல்லாங்காடு பகுதியில் உள்ள தரைபாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. காங்கயம் ரோடு, புஷ்பாநகர் பகுதியில் உள்ள பாலத்தில் வெள்ளநீர் அளவுக்கு அதிகமாக வந்ததால், தண்ணீர் செல்வதற்காக அந்த பாலத்தின் இணைப்பு சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து, வெள்ளநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், மேயர் அ.விசாலாட்சி, துணைமேயர் சு.குணசேகரன் ஆகியோர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லாதவாறு ஓடையில் இருக்கும் அடைப்புகளை எடுக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். மேலும் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை சங்கிலிப்பள்ளம் கரையோர பகுதிகளில் தொடர்ந்து நேரில் சென்று கண்காணித்து வருகின்றனர். இது தவிர சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள பாலங்களில் மின்விளக்குகள் அமைத்து தொடர்ந்து வெள்ளத்தை கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறனர். அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுடன் மாநகரா
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தாராபுரம் ரோடு, சங்கிலிப்பள்ளம் ஓடை, வெள்ளியங்காடு முத்தையன் கோவில் ஓடை மற்றும் பி.கே.ஆர் காலனி அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் மழையினால் ஏற்பட்ட வெள்ளநீரை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அருகில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி ஆணையாளர் மா.அசோகன்,துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி மற்றும் உறுப்பினர்கள், அரசு துறை, மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளன
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...















