Sunday, December 07, 2014

On Sunday, December 07, 2014 by முதல்வர் தளபதி in    
போலியோ நோய்    தடுப்பு   கருத்தரங்கு 





Saturday, December 06, 2014

On Saturday, December 06, 2014 by Unknown in ,    
சகாயம் அறையில் ஒட்டு கேட்கும் கருவியா?: எஸ்.எம்.எஸ். தகவலால் பரபரப்புமதுரை மாவட்டம், மேலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் குவாரி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரத்து 388 கோடி இழப்பு ஏற்பட்டதாக, 2011-ம் ஆண்டு கலெக்டராக இருந்த சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

அவருக்குப்பின் கலெக்டராக பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா இது குறித்து தீவிர ஆய்வு நடத்தினார். அப்போது பி.ஆர்.பி., உள்ளிட்ட 86 கிரானைட் குவாரிகளில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு மேலூர் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த பொதுநல வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த 3-ந்தேதி மதுரை வந்து விசாரணை தொடங்கினார். அவர் விசாரணை நடத்துவதற்காக, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் தனி அலுவலகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் தங்குவதற்கு அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. நேற்று 3-வது நாளாக அவர் பூமாலை வணிக வளாகத்தில் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், அவரது விசாரணைக்குழு அலுவலர்களில் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அதில், “உங்கள் குழு கண்காணிக்கப்படுகிறது. உங்களுக்கு ஆபத்து உள்ளது. விசாரணை அதிகாரியின் தங்கும் அறை, அலுவலகம் ஆகியவற்றில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து, சகாயம் தங்கும் சுற்றுலா மாளிகை அறை, பூமாலை வணிக வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகம் ஆகியவற்றில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஒட்டுக்கேட்பு கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. எனினும், சுற்றுலா மாளிகையில் அவர் தங்கியிருந்த அறைக்கு பதில் வேறு அறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவரது பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டன
On Saturday, December 06, 2014 by Unknown in ,    
பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க ஒன்றுகூடி போராட வேண்டும்: வைகோ பேச்சு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உசிலம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு வல்லரசு பார்வர்ட் பிளாக் கட்சி இளவரசு தலைமை தாங்கினார். ம.தி.மு.க. புறநகர் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார்.
இதில் முல்லைப்பெரியாறு அணை போராட்டக்குழுவை சேர்ந்த கம்பம் அப்பாஸ், உசிலை ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:–
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் 152 அடியாக உயர்த்தினால் தான் நமக்கு முழு வெற்றியாகும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது.
இது உண்மையல்ல. நீர்பிடிப்பு பகுதியில் பெரும் பணக்கார முதலாளிகள் கட்டப்பப்பட்டுள்ள சொகுசு விடுதிகளை காக்கவேண்டும் என்பதற்காக பொதுமக்களை கேடயமாக வைத்துக்கொண்டு தமிழக மக்களுக்கு எதிராக கேரள அரசு செயல்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சரியான வழியில் சென்று பெற்றுத்தந்த சகோதரி ஜெயலலிதா பாராட்டுக்குரியவர். ஆனால் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதில் கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் செயல்பட்டவர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததை வரவேற்கிறேன்.
தற்போது உள்ள சூழ்நிலையில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
ஆனால் தற்போது அமராவதி அணைக்கு ஆபத்து வந்து விட்டது. அமராவதிக்கு தண்ணீர் கொண்டு வரும் பாம்பாற்றின் குறுக்கே அணைக்கட்ட முடிவு செய்துள்ளனர். இதை தடுக்க நாம் ஒன்றுகூடி போராட வேண்டும் இதற்கான போராட்டத்திற்கு நான் தயாராகி விட்டேன்.
காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கர்நாடக அரசு நான்கு அணைகளை கட்டி நமக்கு போதிய தண்ணீர் தராமல் வஞ்சித்து வருகிறது. இதற்கிடையில் தற்போது புதிதாக 2 அணைகள் கட்ட கர்நாடக அரசு தீர்மானித்து உள்ளது.
இதற்கு மத்திய அரசும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. அது உண்மையானால் நமது தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமலும் 13 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை இழந்து 12 மாவட்டங்கள் பாலைவனமாக மாறி விடும்.
தமிழ்நாட்டில் உள்ள பெண்களும், இளைஞர்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் மதுவை ஒழிக்க வேண்டும். இந்த மதுவை எதிர்த்து பெரும் யுத்தம் நடத்த வேண்டி உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் முழு உண்மையையும் மத்திய அரசு வெளியிடவேண்டும் அப்படி வெளியிடவில்லை என்றால் மத்திய அரசை எதிர்த்து அறப்போட்டம் நடத்த உள்ளேன். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Friday, December 05, 2014

On Friday, December 05, 2014 by Unknown in ,    
Displaying DSC_0174.JPGDisplaying DSC_0188.JPGDisplaying DSC_0206.JPG மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் அஜித்குமார் (17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் அய்யனார் கோவில் அருகே உள்ள பிளாஸ்டிக் தொட்டியில் நேற்று குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அவர்கள் இருவரையும் வழிமறித்துள்ளனர். உடனே சுதாரித்துக் கொண்ட அஜித்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த கும்பல் முத்துராஜாவை சுற்றி வளைத்து அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே முத்துராஜா துடிதுடித்து இறந்தார்.அங்கிருந்து தப்பிச் சென்ற அஜித்குமார் ஊருக்குள் சென்று முத்துச்சாமியின் உறவினர்களிடம் தகவல் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த உறவினர்கள் முத்துராஜா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை எடுத்துக்கொண்டு பொட்டப்பாளையம் மெயின் ரோடு பகுதிக்கு வந்தனர். அங்கு அவருடைய உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின்முகுந்த் கோட்னிஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் புருசோத்தமன், ராமசாமி, உதவி கலெக்டர் சேக் முகைதீன் மற்றும் திருப்புவனம் தாசில்தார் காசி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் ஏற்பட வில்லை. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த தேவர் தேசிய பேரவை மதுரை மாவட்ட தலைவர் சித்தன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் அவர் அதிகாரிகளிடம் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பொட்டப்பாளையம் பகுதிக்கு ரேஷன் கடை தனியாக செயல்பட வேண்டும், இங்கு எப்போதும் போலீசார் இருக்கும் பொருட்டு ஒரு துணை போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.அதன் பின்னர் அவரது உறவினர்கள் முத்துராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 4 மணி நேரத்திற்கும் மேல் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொட்டப்பாளையம், பாட்டம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த கொலை தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரைச் செல்வன் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு குவிந்த முத்துராஜாவின் உறவினர்கள் சாதிய ரீதியான விரோத போக்குடன் இந்த படுகொலை நடைபெற்று உள்ளதாகவும் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு தங்கள் பகுதிக்கு தனி காவல் நிலையம் ,பாதை ,ரேசன் கடை ஆகியவை அமைத்து தருவதோடு பலியான வாலிபரின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும் அவரது தம்பிக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சுமார் 4 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .பின்னர் அப்பகுதிக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறை துணை ஆணையர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டவர்களின் சார்பில் பேசிய தேவர் தேசிய பேரவை நிறுவனர் திருமாறன் ,சுந்தர வள்ளி ஒச்சாத்தேவர் ,அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட  செயலாளர் கணேசன் ,இளைஞரணி  செயலாளர் ராஜ்குமார் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர் பின்னர் மறியல் கைவிடப்பட்டது ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை வாங்கிட மாட்டோம் என தெரிவித்தனர் .அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டத்தால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
On Friday, December 05, 2014 by Unknown in ,    

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு மூன்றாவது சுழற்சியில் ஆய்வு மேற்கொண்ட "நாக்' குழு, "ஏ கிரேடு' அந்தஸ்து வழங்கி உள்ளதாக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவைக் கூட்டம் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தலைமையில், பதிவாளர் என். ராஜசேகர் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் துணைவேந்தர் பேசியது:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3-வது சுழற்சியாக "நாக்' குழுவினர் மே மாதம் ஆய்வு மேற்கொண்டனர். பல்கலைக்கழகத்தின் மிகச்சிறந்த கல்விச் சூழலையும், சுற்றுச் சூழலையும் அங்கீகரித்து மீண்டும் "ஏ கிரேடு' அந்தஸ்து வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த அங்கீகாரத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் இந்த பெருமை சேரும். பல்கலைக்கழகத்தில் உள்ள 20 புலங்கள் மற்றும் 3 மையங்களில் 2014 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட கல்வித் தணிக்கையில் முன்னேற்றமான சூழல் தெரியவ வந்துள்ளது. இவற்றை மேம்படுத்துவதற்கான பயனுள்ள ஆலோசனைகளும் கிடைத்துள்ளன.
பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவியரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அவர்களது ஆய்வுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பல்கலை மானிய க்குழு உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகள் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் முதுநிலை ஆராய்ச்சி மாணவ, மாணவியருக்கான உதவித் தொகைகள் தாமதமின்றி வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, டாடா, கோத்தகிரி அறக்கட்டளை உள்ளிட்ட 9 வகையான அறக்கட்டளை நிதி ரூ.35.92 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2013-14-ம் கல்வியாண்டுக்கு, முதுநிலை, எம்பில் மாணவர்களுக்கான பிசி, எம்பிசி, டிஎன்சி கல்வி உதவித் தொகையும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில மின்கற்றல் போர்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் விரைவாக கிடைக்கவும், மாணவர்கள் பதிவு, தேர்வு நுழைவுச்சீட்டு, தேர்வு முடிவுகள் மற்றும சான்றிதழ்களை விரைவாக விநியோகம் செய்ய வழி கிடைத்துள்ளது. தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்காக தனி அறிவியல் ஆய்வுக்கூடமும் திறக்கப்பட்டுள்ளது. தொலைநிலைக் கல்வியில் சுற்றுலா மற்றும் விடுதி நிர்வாகத்துறை மையத்தில் பயிலும் மாணவர்களுக்காக தனி ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பிச்சுமணி, கண்ணன், ராஜராஜன், பெரியகருப்பன் உள்ளிட்டோரும், கல்விப் பேரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தலுக்கு அனுமதிமதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தலை நடத்திக் கொள்ள கல்லூரி முதல்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கல்விப் பேரவைக் கூட்டத்தில் ஆட்சிக் குழு உறுப்பினர் எம். ராஜராஜன் தெரிவித்தார்.
கல்விப் பேரவைக் கூட்டத்தில், உறுப்பினர் என். எழில் பேசுகையில், ஜனநாயக வழியில் செயல்படும் ஆட்சிக் குழு மூலம் பல்கலைக்கழக பதிவு பெற்ற பட்டதாரிகளுக்கான ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தேர்தல், மாணவர் பேரவை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், என்றார்.
இதற்கு பதிலளித்து ஆட்சிக்குழு உறுப்பினர் எம்.ராஜராஜன் பேசியது: பல்கலைக்கழகத்தில் பதிவுபெற்ற பட்டதாரிகளுக்கான ஆட்சிமன்ற உறுப்பினர் தேர்தல் தொடர்பாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் தேர்தல் நடத்தப்படும்.
கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி லிண்டால் தலைமையிலான குழு பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்படி,
கல்லூரியில் தேர்தல் நடத்துவதற்கான ஆரோக்கியமான சூழல் இருந்தால் தேர்தலை கல்லூரி முதல்வரே நடத்திக் கொள்ளலாம். அசாதாரண சூழல் நிலவும் கல்லூரிகளில் தேர்வில் ஒரு பாடத்தில் கூட தோல்வி அடையாமல் நன்றாக படிக்கும் மாணவர் ஒருவரை முதல்வரே பேரவைத் தலைவராக நியமித்துக் கொள்ளலாம் என கடிதம் மூலமாக அனைத்துக் கல்லூரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கல்லூரிகளில் இந்த அடிப்படையில் மாணவர் பேரவை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள கல்லூரிகளிலும் இதே முறையில் மாணவர் பேரவை தலைவர்களை முதல்வர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்.
On Friday, December 05, 2014 by Unknown in ,    
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை மேயர் விவி ராஜன்செல்லப்பா, ஆணையர் சி.கதிரவன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் அந்தக் கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த கட்டடத்துக்கு ஆணையர் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர். சுகாதாரமற்ற முறையில் கட்டடம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் புதிய கட்டுமானத்திலுள்ள கட்டடத்துக்கு சீல் வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
விழிப்புணர்வு முகாம்: புதூர் பகுதியில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேயர், ஆணையர் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடுகளை சுற்றிப்பார்த்து, டயர் போன்ற பொருள்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். சுகாதாரமற்ற கட்டடங்கள் கணக்கெடுப்புப் பணியையும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
On Friday, December 05, 2014 by Unknown in ,    
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் முத்துராஜா(22). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்தார். வியாழக்கிழமை மாலை முத்துராஜாவும், அவரது நண்பர் அஜீத்தும் அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், முத்துராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த முத்துராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்து தப்பிச்சென்ற அஜீத், இதுகுறித்து முத்துராஜாவின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள், கொலையாளிகளை கைது செய்யக்கோரி, முத்துராஜாவின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஸ், மானாமதுரை உதவி கண்காணிப்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சித்திரைச்செல்வம், பிரசாத், பாலு உள்ளிட்ட கும்பலைத் தேடி வருகின்றனர். போலீஸாரால் தேடப்படும் மூவரும், கடந்த 2011ஆம் ஆண்டு தேவர் ஜயந்திக்கு சென்று திரும்பியவர்கள் மீது விரகனூர் சுற்றுச்சாலை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
On Friday, December 05, 2014 by Unknown in ,    
வன்முறையை தூண்டியதாக எச்.ராஜா மீது வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் அப்துல்கபூர். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது: –
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, சென்னையில் 4.1.2014 அன்று நடைபெற்ற இந்து தர்ம பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில், பெரியார், இயேசு கிறிஸ்து, போப் ஆண்டவர், இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு இருபிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. அவரது, இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
ராஜாவின் பேச்சு, ‘யூ டியூப்‘பில் வெளியிடப்பட்டுள்ளது. ராஜா மீது வழக்கு பதிவு செய்யவும், ‘யூ டியூப்‘பில் உள்ள அவரது பேச்சு பதிவை நீக்கவும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எச்.ராஜா மீது இருபிரினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘மனுதாரரை போன்று எச்.ராஜா மீது கலிபூங்குன்றன் என்பவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153(ஏ) (இருபிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல்), 505(2) (பகைமையை உருவாக்கும் வகையில் பேசுதல்) ஆகியவற்றின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் 1.10.2014 அன்று வழக்குப்பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்தார்
On Friday, December 05, 2014 by Unknown in ,    







கிரானைட் குவாரி அதிபர்கள் மீது ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் பொதுமக்கள் புகார்மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து நேற்று 2-வது நாளாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினார். அப்போது, தங்கள் விளை நிலங்கள் மற்றும் வீடுகளை கிரானைட் அதிபர்கள் அபகரித்து விட்டதாக பொதுமக்கள் அவரிடம் புகார் கூறினர்.

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கிரானைட் குவாரி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தில் ரூ.16 ஆயிரத்து 388 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து அப்போதைய கலெக்டர் சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து கலெக்டராக பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா இது குறித்து தீவிர ஆய்வு நடத்தினார். அப்போது பி.ஆர்.பி., உள்ளிட்ட 86 கிரானைட் குவாரிகளில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு மேலூர் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த பொதுநல வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நேற்று முன்தினம் மதுரை வந்தார்.

மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் அவருக்கான தனி அலுவலகத்தில் நேற்று முன்தினம் அரசுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, நேற்று காலை தனி அலுவலகத்துக்கு மேலூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் தங்களது குறைகளை கூறுவதற்காக மனுக்களுடன் வந்தார்கள். ஒவ்வொருவராக சென்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் மனுக்களை நேரில் கொடுத்தனர்.

அப்போது, “கிரானைட் குவாரி அதிபர்களால் எங்கள் விளை நிலங்கள், வீடுகளை இழந்துவிட்டோம். அவற்றை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்று ஏராளமானோர் தெரிவித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், கிரானைட் முறைகேடுகள் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொதுமக்கள் இழந்துள்ள வீடு, நிலங்கள் குறித்தும் கோர்ட்டில் தனது அறிக்கையை கொடுக்க இருப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, விசாரணையின் போது பல்வேறு அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்பதால், விசாரணை அதிகாரி சகாயத்திற்கும், அவருடைய குழுவினருக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன